அறிவு மதி, தங்கர் பச்சான், பாரதி ராஜா, வைரமுத்து, வாலி, கமலஹாசன், யுக பாரதி என பிடித்த பிரபலங்கள் அணி வகுத்ததால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாகி விட்டது, ரொம்ப நாளாகி விட்டது, இப்படி தளும்ப தளும்ப விகடன் வாசித்து.
பொங்கல் கொண்டாடும் சூழலில் இன்றைய தமிழனின் மன, மான நிலை பற்றி ஏதேனும் பதிவு, நீங்கள் எழுதுவதாக இருந்தால்,விகடனில் உள்ள தங்கர்பச்சானின் கட்டுரையை படிக்காதீர்கள். படித்தீர்கள் எனில் அதன் தாக்கம் கண்டிப்பாக உங்கள் பதிவில் தெரியும். கிட்டத்தட்ட எல்லாம் விஷயங்களையும் நோக்கி சவுக்கு வீசியிருந்தார் தங்கர்.
ஆனால் ரசித்த பிரபலங்களின் வார்த்தைகளை அலசி ஆராய குழப்பம் தான் மிச்சம் இருந்தது.
குழப்பம் 1 :
இணையத்தில் எழுதும் எழுதும் எழுத்தாளர்களிடம் வாசிப்பு பழக்கம் மிகமிகக் குறைவு, இணையத்தில் வம்பு வழக்குகளும், கிசுகிசுக்களும் அதிகமாகிவிட்டன என்று சாட்டை வீசும் அதே நாஞ்சில் நாடன், அடுத்து இலக்கியவாதிகள், தமிழ் எழுத்தாளர்கள் குடித்து விட்டு சச்சரவுகள், சர்ச்சைகளை உண்டாக்குவதை இயல்பு என்று நியாயப்படுத்துகிறார்.
குழப்பம் 2:
நான் பாட்டெழுத அரை மணி நேரமே எடுத்துக்கொள்வேன், அதுவும் தயாரிப்பாளர் தந்த செக் செல்லுமா என சரி பார்ப்பதற்கு என்று தன்னைத்தானே வாரிக்கொண்ட வாலி, இயக்குனர் ஷங்கர் தனக்கு அர்த்தமில்லாத பாடல்கள் மட்டுமே எழுத வாய்ப்பு தந்ததாக சலித்துக்கொள்கிறார். செக் செல்லுமா அப்படினு செக் பண்றவருக்கு எந்த பாட்டு எழுதினா என்னா-னு மத்தவங்க நினைக்க மாட்டாங்களா?
குழப்பம் 3:
இன்றைய மாணவர்கள் டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானி, போலீஸ் அதிகாரி ஆவற்கு தான் விரும்புகிறார்கள், யாராவது விவசாயம் பார்க்கப்போகிறேன் என்று சொல்வதுண்டா என வினவும் அதே தங்கர்பச்சான்; "நான் என் பிள்ளைகளை ஊருக்கு போய் நிலங்களைக் கவனித்து, நல்லபடியாக இருங்கள் என சொல்லத் தயாராக இல்லை" என்றும் சொல்லும் போது; மெய்யாலுமே கண்ணைக் கட்டுகிறது.
குழப்பம் 4:
இது தான் உச்சக்கட்ட,மண்டையிடி குழப்பம்.
"இங்கே எங்கேய்யா இருக்கான் தமிழன்? தேர் இஸ் நோ தமிழன் இன் தமிழ் நாட்".
"தமிழ் நாட்டில் மட்டும் தான் 50 பெர்சன்ட் தமிழன், 50 பெர்சன்ட் அதர் பீப்பிள் இருக்கான்"
அரசியல் எனக்கு சரி வராது. இன்னிக்கும், ஐ லவ் மை பீப்பிள். ஐ லவ் மை சாயில். ஐ லவ் மை லாங்குவேஜ்"
இப்படி தன்னுடைய லாங்குவேஜை லவ்வோ லவ்வுனு லவ்வும் பாரதி ராஜா அவர்களின் வார்த்தைகள் தான் அந்த உச்ச கட்ட மண்டையிடி முரண்பாடு.
போன வார சீனா அய்யா எங்க வலைப்பூவில பின்னூட்டம் போட வந்ததற்கே இந்த வாரம் வரைக்கும் எங்களுக்கு உடம்பு நடுங்குது, ஆனா இங்கிலீஷ் மீடிய தமிழனாக மாறிவிட்ட பாரதி ராசாவின் பேச்ச கேட்கும் போது தான், நாங்க எவ்வளவோ பரவாயில்லை அப்படினு மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.
***********************************************************************************
அதெல்லாம் சரி உங்களுக்கு விகடன் பிடிக்குமா? விகடன் வாங்கியவுடன் முதலில் எதை படிப்பீர்கள்?
***********************************************************************************
வீர வணக்கங்கள்.
35 கருத்துரைகள்:
நன்று
ரொம்ப நல்லாருக்கு :-)))))))
ரொம்ப நல்லாருக்கு :-)))))))
நான் அது இதுன்னு இல்ல விகடன் எடுத்தா 1 மணி நேரம் படிப்பேன்
அருமையான பதிவு ...
பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்..
விகடனை நல்லா படிக்கிறீங்கன்னு தெரியுது...
//அதெல்லாம் சரி உங்களுக்கு விகடன் பிடிக்குமா//
ரொம்பவே பிடிக்கும்....
கொடிகாத்த குமரனுக்கு வீர வணக்கங்கள்...
என் விருப்ப பத்திரிகையில் முதலிடம் வகிப்பது விகடன்தான்.
//அதெல்லாம் சரி உங்களுக்கு விகடன் பிடிக்குமா? விகடன் வாங்கியவுடன் முதலில் எதை படிப்பீர்கள்?//
ஒரு காலத்தில் பிடித்திருந்தது. இப்போது வாங்குவதே இல்லை.
இப்போ நீங்க விகடனை குறை சொல்லுறீங்களா... இல்ல, கருத்துக்களை சொன்ன பிரபலங்களை குறை சொல்லுறீங்களா?
எப்போதுமே (இப்பவும்) விகடனைக் கண்டால் முதலில் தலைவர் சுஜாதாவையே தேடுவேன்!
அருமை பாரத்பாரதி, இப்படி ஒரு பதிவை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை
பதிவை எழுதியவருக்கு எனது வாழ்த்துக்களை சொல்லுங்க
இப்படிதான் இரண்டு நாளைக்கு முன்னே தமிழ்ல தான் எழுதினேன் ஒரு கவிதை "ஆன்ம குடில் " என்னும் தலைப்பில் பதிவுலகில் யாருக்கும் புரியலன்னு சொல்லிட்டாங்க அப்ப நம்ம தமிழ் எங்கே போகிறது நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம் ...
http://marumlogam.blogspot.com/2011/01/blog-post_09.html
//செக் செல்லுமா அப்படினு செக் பண்றவருக்கு எந்த பாட்டு எழுதினா என்னா-னு மத்தவங்க நினைக்க மாட்டாங்களா? //
// "நான் என் பிள்ளைகளை ஊருக்கு போய் நிலங்களைக் கவனித்து, நல்லபடியாக இருங்கள் என சொல்லத் தயாராக இல்லை" என்றும் சொல்லும் போது; மெய்யாலுமே கண்ணைக் கட்டுகிறது.
/
உங்கள் குழப்பம் நியாயமானது தான் !!
Vikatanil padam mattume paarpen
சத்தியமா எனக்கு விகடன், குமுதம் புடிக்கவே புடிக்காது :-)
:)
i think u had taken a good knot to discuss
நல்ல பதிவுங்க..
in cine field the ARTICIANS R MORE ANGRY AND MORE FEELINGS..PARTICULARLY THANGARPACHAAN IS A SHORT TEMPER IN NATURE.. SO.. LEAVE IT.
அற்புத பதிவு
ஆனந்த விகடனில் ஐயா நாஞ்சில் நாடான் அவர்கள் சாடி இருப்பது ஒருவகையில் சரியாக இருக்கலாம் . உண்மையினை பெரும்பாலான மக்கள் ஏற்பதுமில்லை . அதற்க்கு ம்திப்பளிப்பதுமில்லை . போற்றுவதுமில்லை என்ற கரங்களினால் அவர் சாடி இருக்கலாம் அவர் சமுக பார்வை உள்ளவர் அவரை இந்த சமுகம் பாராட்ட வேண்டும் .இன்றைய இளைஞ்சர் பற்றி கூறுவது பற்றி நம் தெளிவாக சிந்திக்க வேண்டும் அவர்களை நல்வழிப்படுத்த சொல்லியிருக்கலாம் . உங்களின் ஆக்கம் பரட்டுக்குரியன்.
தமிழால் வயிறு கழுவிக்கொண்டு தமிழுக்கே துரோகம் செய்யும் கும்பல். வாலி, பாரதிராஜா (மனோஜ் அப்பா சின்னப்பன்), விகடன் குழுமம்.
-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)
ஆனந்த விகடனா...
ரொம்ப புடிக்கும். ஆனா உங்க அளவுக்கு பைத்தியம் புடிக்க வைக்க தெரியாதுங்கோ....
என்னையே குழப்பிட்டீங்க
எஸ்.ராவுக்காகவே விகடன் வாங்கிய காலம் உண்டு..நல்ல பதிவு.
தங்கர் பச்சானும் பாரதி ராஜாவும், போட்டி போட்டு நுங்கு எடுத்து இருக்காங்களே.... சரியா போச்சு!
ஹா,ஹா,ஹா,ஹா...
உண்மையில் ரசித்தப் படித்தேன் பலரத பின்பக்கம் தெரிகிறது...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..
ammam...maram kothi paravai enna achu
வரதராஜலு .பூ said...
//அதெல்லாம் சரி உங்களுக்கு விகடன் பிடிக்குமா? விகடன் வாங்கியவுடன் முதலில் எதை படிப்பீர்கள்?//
ஒரு காலத்தில் பிடித்திருந்தது. இப்போது வாங்குவதே இல்லை........
நானும் தான் ...................
ஒரு காலத்துல முதல் அட்டை முதல் கடைசி அட்டை வரை. இப்போ? விகடன் வாங்கி வருஷங்களாயிருச்சு. "சினிமா பத்திரிக்கையா?"ன்னு மலையாள நண்பர்கள் கேட்டது சரிதானோன்னு தோணுது. இவங்களோட சிறப்பு புத்தகங்கள் (உம்:மோட்டார் விகடன்) நல்லாயிருக்கு.
விகடன் படிக்கவில்லை!படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!
என்னுடைய வாசிப்பு பழக்கத்திற்கு , அடித்தளம் போட்டதே விகடன் தான் ..
உங்களுடைய குழப்ப list ன் நோக்கம் , எங்களை குழப்புவதற்கா? ஹி.. ஹி ..
தமிழ் வாழ்க.
உண்மைகளை உறைக்கும் பதிவு !
நான் ஆனந்த விகடனின் தொடர்வாசகன்!
Post a Comment