குறட்டை புலியின் சவாலுக்கு, ஒரு பெண் சிங்கத்தின் பதில்..

மிக நேசித்த ஒருவர், ஒரு கட்டத்தில் "யார் நீ" கேட்க நேரிடும் சூழலை தந்து, கவிதை எழுத பதிவர்களுக்கு சவால் விடுத்த "குறட்டை புலி" அவர்களின் கவிதை போட்டிக்கான கவிதை இது.
      

இருந்தவள் பேசுகிறேன்...

யார் நீ
என்ற
உன் கொடூர கேள்விக்கு
என்ன பதில் சொல்வேன்?

உன் உறவு என
சொல்லிக்கொள்ளவும்
இயலாது.
உன் மனப்புத்தகத்தில்
என்னைப்பற்றிய
அத்துணை  வரிகளையும்
அழித்து விட்டாய்.

வேறு யாரையும்
வைத்தும் என்னை
அடையாளம்
காட்ட முடியாது.
ஏனெனில்
யாரோடும்
நானில்லை.
என்னோடும்
யாருமில்லை.

இருப்பென்று
ஏதுமில்லை
இருந்த இதயத்தை
உனக்கென்று
தந்து விட்டாயிற்று.

முள்ளில் விழுந்த
சேலையைப்போல
என்னிலிருந்து
உன்னை கவனமாய்
பிரித்து போன பின்
எனக்கென்று
தனி அடையாளம்
ஏதுமில்லை.

நிலைமை
இப்படி இருக்க
"யார் நீ"
என்ற
உன் கொடூர கேள்விக்கு
என்ன பதில் சொல்வேன்?

வேண்டுமெனில்
இவ்வாறு சொல்லலாம்..
"உன்னால்
இறந்து போனவள்"

-பாரதி.


டிஸ்கி: கவிதை எழுதும் கவிதைக்கு அழைத்த குறட்டை புலிக்கு நன்றி. வேறு யாராவது இதே சூழல் கொண்டு கவிதை எழுதினால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். ரசிக்க வருகிறோம்.

பஸ்கி: எங்கள் வலைப்பூவில் வெளியாகும் முதல் காதல் கவிதை இது.


படம்:
http://marabinmaindanmuthiah.blogspot.com/2010_04_01_archive.html

27 கருத்துரைகள்:

தினேஷ்குமார் said...

ஹையா வட

தினேஷ்குமார் said...

எங்கள் வலைப்பூவில் வெளியாகும் முதல் காதல் கவிதை இது.

வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் said...

ஓஹோ இது தொடர் வியாதியா ..................

பரவட்டும் பரவட்டும் ............................

'குறட்டை' புலி said...

"யார் நீ ?" என்ற தலைப்பில் இப்படியும் ஒரு உள்ளக்குமறலை வேதனையை வெளிப்படுத்த முடியுமா? அருமை. ஆனால்," யார் நீ ?" என்ற கேள்விக்கு இந்த கேள்வியால் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் கண்டிப்பாக நீங்கள் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த குறட்டை புலியின் வேண்டுகோளை ஒரு சவாலாக ஏற்று கவிதை வழங்கியதற்கு மிக்க நன்றி !

Unknown said...

nice

Unknown said...

காதல் கவிதையுமா, நடத்துங்க நடத்துங்க :-) நல்லா இருக்கு கவிதை

Arun Prasath said...

அட முதல் கவிதையாம்ல... ரைட் ரைட்

THOPPITHOPPI said...

//குறட்டை புலியின் சவாலுக்கு, ஒரு பெண் சிங்கத்தின் பதில்..//

கவிதையின் தலைப்பிலேயே உள்குத்தா?

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆஹா...அருமை....
நாமும் ஒன்னு எழுதிட வேண்டியதுதான்

Chitra said...

கவிதை நல்லா இருக்குது... அடிக்கடி எழுதுங்க!

Unknown said...

வாழ்த்துக்கள்!

NKS.ஹாஜா மைதீன் said...

சும்மா நச்சுனு இருக்கு...

ரிஷபன்Meena said...

”இளைஞன்” படம் வெளியாகிறதே என்று பயந்து கிடக்கும் சூழ்நிலையில் பெண்சிங்கத்தை நினவை படுத்துறீங்களே

செல்வா said...

//முள்ளில் விழுந்த
சேலையைப்போல
என்னிலிருந்து
உன்னை கவனமாய்
பிரித்து போன பின்
எனக்கென்று
தனி அடையாளம்
ஏதுமில்லை.//

இந்த வரிகள் எனக்கு பிடிச்சிருக்குங்க !

செல்வா said...

//டிஸ்கி: கவிதை எழுதும் கவிதைக்கு அழைத்த குறட்டை புலிக்கு நன்றி. வேறு யாராவது இதே சூழல் கொண்டு கவிதை எழுதினால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். ரசிக்க வருகிறோம்.//

நான் எழுதலாம்னு நினைச்சேன் , ஆனா இப்போதைக்கு நாம தமிழுக்கு ஆத்திட்டு இருக்குற சேவை போதும் , கவிதை எழுதி ஆத்த வேண்டாம்னு விட்டுட்டேன் . ஹி ஹி ஹி

ஆர்வா said...

அட.. அட.. சவால்ல செஞ்சுரி போட்டுட்டீங்களோ?

சசிகுமார் said...

தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

போளூர் தயாநிதி said...

//முள்ளில் விழுந்த
சேலையைப்போல
என்னிலிருந்து
உன்னை கவனமாய்
பிரித்து போன பின்
எனக்கென்று
தனி அடையாளம்
ஏதுமில்லை.//
nalla aakkam

அன்புடன் நான் said...

கவிதை வெகு அழகு... பாராட்டுக்கள்

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

ஆயிஷா said...

கவிதை நல்லா இருக்கு.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஆமினா said...

முதல் கவிதை மாதிரியே தெரியலையே :))

செமையா இருக்கு பா...

வாழ்த்துக்கள்

வினோ said...

கவிதையா செம....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது என்னதுங்க அது கொறட்ட புலி? கிலோ எவ்வளவு, எங்கே கெடைக்குது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ..... கொறட்ட புலிங்கறது ஒரு பதிவர் பேரா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது கவிதைங்களா... ஒகே ரைட்டு.........!

ஹேமா said...

கவிதை முடித்த விதம் ரசித்தேன் பாரதி!

Anonymous said...

Kavitha...,Kavitha....,
super...,
-your students

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்