இந்த வார செய்தி:
இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 3.20 வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. 9927 சி.பி.ஐ. வழக்குகள் நிலுவையில் உள்ளன. (தாமதமாகும் நீதி அநீதியாம்)
சீனாவில் குற்ற வழக்குகள் 3 மாதங்களிலும், சிவில் வழக்குகள் 6 மாதங்களிலும் முடிக்கப்படுகின்றன. வழக்கு பற்றிய அனைத்து வழக்குகளும் கணிணிமயமாக்கப்படுவதால் விரைவில் வழக்குகள் முடிக்கப்படுகின்றன.
கொசுறு:
சீனாவில் ஒருவர் நீதிபதியாக ஆக வேண்டுமென்றால் அவர் வழக்கறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தேசிய நீதித்துறை தேர்வில் வெற்றி பெற்று, உரிய பயிற்சிகளை முடித்தால் 23 வயதில் ஒருவர் நீதிபதியாகி விட முடியும்.
விடை தெரியா விஷயம்:
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடக்குமா இல்லை +2 மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைப்பெறுமா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
இந்த வார தமிழன்:
துபையிலிருந்து ஒலிபரப்பாகும் மலையாள வானெலியான ஏஷியா நெட்டில் தினசரி ஒரு மணி நேர தமிழ் நிகழ்ச்சியில், கடந்த 4 ஆண்டுகளில் இரண்டே இரண்டு ஆங்கில சொற்களை மட்டுமே பயன்படுத்தியுள்ள ஆசிஃப் மீரான் அவர்களை இந்த வார தமிழனாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
திரு. ஆசிஃப் மீரான் அவர்களின் வலைப்பூ சாத்தான் குளத்து வேதம்.
இந்த வார தகவல்:
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (TNPSC) நடத்தும்
VAO எனும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான தேதி பிப்ரவரி 20 என
http://www.tnpsctamil.in/2011/01/blog-post_08.html
அறிவிக்கப்பட்டுள்ளதால், தட்டச்சு தேர்வுகள் பிப்ரவரி 26, 27 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதர் ஒரு நூல்:
ஒரு மனிதர் நேரம் கிடைக்கும் போதெல்லாம், லண்டனிலுள்ள பிரிட்டிஷார் நூலகத்திற்கு சென்று பல்வேறு நூல்களைப் படித்தார். அவ்வாறு படித்து 28 நோட்டுப்புத்தகங்களில் குறிப்புகளை எழுதி வைத்தார். அந்த குறிப்புகளை வைத்து அவர் எழுதிய ஒரு புத்தகம், உலக மதங்களின் வேதப்புத்தகங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப்படிக்கப்படுகிறது.
அந்த புத்தகம்: கேபிடல். அந்த மனிதர்: காரல் மார்ஸ்.
இந்த வார வலையுலக அரட்டை:
ganesukumar@twitter.com
உடம்புக்கு எந்த நோவுன்னாலும் முதலில் நெத்தியில் விபூதி வைத்துவிடும் அப்பத்தாவிடம் நாத்திகம் பேச மனம் வருவதில்லை.
kolaaru@twitter.com
வலியில் "அம்மா" எனக் கதறும் நாம், வலி தீர்ந்ததும் "அப்பா" எனப் பெருமூச்சு விடுவதன் உளவியல் என்ன?
இந்த வார அரசியல்:
மன்மோகன் சிங்: ஹலோ, நீரா ராடியாவா? மத்திய அமைச்சரவையில் ஏதோ மற்றம் அப்படினு சொன்னாங்க, என்ன மாற்றம்-னு சொன்னீங்கனா நல்லாயிருக்குங்க..
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்பதால், ராசா அப்பழுக்கற்றவராகி விட்டார், சி.பி.ஐ. விசாரணை புஸ்வாணமாகி விட்டது. - ஜெயலலிதா. (சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்...)
இந்த வார கவிதை:
"அம்மாவென அழைத்தது குழந்தை
அடுத்த நிமிடம் விழுந்தது அடி
கால் மீ மம்மி"
-வசீகரன் அவர்களின் குட்டியூண்டு ஹைக்கூ தொகுப்பிலிருந்து.
இந்த வார விருது :
பொங்கல் விடுமுறை நாட்களில், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்காமல், உயிர் வாழ முடியாது என்ற நிலையிலுள்ள தமிழர்களுக்காகவே, வழக்கமான மின்தடையை செய்யாமல்,தை முதல் மூன்று நாட்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கிய தமிழ்நாடு மின்வாரியத்திற்கு இந்த வார பொங்கல் விருது வழங்கப்படுகிறது.
14 கருத்துரைகள்:
ஒவ்வொரு தலைப்பிலும் அருமையான செய்திகள். பல சுவையான சங்கதிகளுடன் இந்த முறை படங்கள் காணவில்லை.ஒரு கருத்தை தொடர்ந்து சங்கிலியாக விசயங்களை வரிசைப்படுத்தினால் இன்னும் மெருகேற்றலாம்.முயற்சி செய்யுங்கள்.விரைவில்.. உங்களுக்கான விமர்சனத்தில் சந்திப்போம்...
கதம்பமாக செய்திகளை கொத்து புரோட்டா போட்டு விட்டீர்கள்.....அருமை
வலையுலக அரட்டை ரசிக்கும் படியாய் இருந்தது. நன்று.
//VAO எனும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான தேதி பிப்ரவரி 20 என//
நான் இனிமேதான் படிக்க ஆரம்பிக்கணும்
நல்லதொரு கலவையாக இருக்கிறது...
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
valiyullga arattai aanantha vigadanil irrunthu suttathaa;
karal marks [i don't know right spelling hehe hehe] materr superbbbbbbbbbb
தொகுப்புகள் அருமை
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்!!!
கதம்பச்செய்திகள் சுவாரஸ்யம்.. அருமை........
arumaiyaana thagavakal super......
ஒவ்வொரு தலைப்பிலும் அருமையான செய்திகள். பல சுவையான சங்கதிகளுடன் தொகுப்புகள் அருமை
பல்சுவைத் தொகுப்பு.
இந்த படிப்பில எனக்கு கவிதை மிகவும் பிடித்துள்ளது வாழ்த்துக்கள்
அருமையான தொகுப்பு
எல்லாம் வாசித்தேன்.குட்டிக்கவிதை ரசித்தேன் பாரதி !
Post a Comment