சென்னை சங்கமம் - ஒரு மாறுபட்ட அதிரடி விமர்சனம்.

விஜய் நடித்த காவலன் போன்று வெளிவருமா, வராதா என்ற சந்தேகங்களைத் தாண்டி, பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ளது சென்னை சங்கமம். தமிழ் மையம் மற்றும் முத்தமிழர் கலைக்கூடத்தின் கூட்டுத்தயாரிப்பில்  மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டது இந்த படம்.

சி.பி.ஐ. ரெய்டு வரும் ஆரம்ப காட்சிலேயே ரசிகர்களை அதிர வைத்து, சீட்டின் நுனியில் உட்கார வைப்பது படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.

சென்ற வருடம் வெளியாகி சக்கைப்போடு போட்ட "ஸ்பெக்ட்ரம்" படத்தின் இரண்டாம் பாகமோ என ஆரம்பக்காட்சிகள் நினைக்க வைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் திரைக்கதையின் திசை மாறுவது ஆறுதல் அளிக்கிறது. தனது முந்தைய நான்கு படங்களில் கதாநாயகன் வேடத்தோடு, இயக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்த ஜிகத் பஸ்பர் இந்த படத்தில் இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருப்பது கூடுதல் பலம்.

கிராமத்து கலைப்பண்பாடுகளை, பட்டணத்து மக்களுக்கு மறு அறிமுகம் செய்ய எண்ணுகிறாள் கதாநாயகி. கதாநாயகியின் லட்சியம் நிறைவேறியதா என்பதை சுவையான சம்பவங்களோடு காட்சியாக்கி இருக்கிறார் இயக்குநர்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள திரைக்கதைக்கு, தன்னுடைய அழுத்தமான நடிப்பால் மேலும் மெருகூட்டியுள்ளார் கதாநாயகி பனிமொழி. முந்தைய படங்களில் இவர் அலட்டலாக நடித்துள்ளார் என ஊடகங்கள் விமர்சித்ததால் இந்த முறை முகபாவங்களில் அதிக கவனம் செலுத்தியிருப்பது நன்றாகத் தெரிகிறது.

"திருவிழா, நம்ம தெரு விழா" என்ற பாடலில், கிராமத்து நாட்டமையாக வரும் இளைஞர், துள்ளாட்டம் போட்டியிருக்கும் காட்சிகளில் ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.

பாட்டின் முடிவில், "இளைஞர் இங்க வந்து, வழக்கிருக்கிற வீட்டில் கை நனைப்பது ,பஞ்சாயித்து தீர்ப்புபடி தப்பு" என பழைய நாட்டமை பயலலிதா கனல் கக்குவது திரைக்கதையில் நல்ல திருப்பம்.

இறுதிக்காட்சிக்கு முன்பு வரும் "ஆட்சி, ஆட்சி" என்ற பாடல், ஆடுகளம் படத்தின்  "யாத்தே யாத்தே"  பாடலை நினைவுறுத்தினாலும், ரவை முத்து பாடல்வரிகளில் சிலிர்க்க வைக்கிறது. "ஞாயிறு போற்றுதும்,ஞாயிறு போற்றுதும்" பாடல் மெலடியாக மனசை வருடுகிறது.
  
வரமணியின் பிண்ணனி இசை தேவையான இடங்களில் மட்டுமே ஓங்கி
ஒலிப்பது நிறைவாக உள்ளது.

வசனம் ஜொலித்திருக்கும் இடங்கள்:


"தமிழ்ப்புத்தாண்டு நம்ம புத்தாண்டு.. அத நாம தானே கொண்டாடனும்.."

"ஐயாயிரம் கலைஞர்களுக்கு ஒரு மாச சாப்பாடு இது".
மற்றும்
இடையிடையே "மதுரைக்கார குரலில்" ஒலிக்கும் பின்புல எதிர்ப்பு வசனங்கள்.
பிளாஷ்பேக்கில் வரும் நாரா வாடியாவின் உரையாடல்கள்.

மொத்தத்தில் பொங்கல் ரேசில்,  கிராமத்து ஆடுகளத்தில், சிறுத்தையாய் சீறி, கலாச்சாரக் காவலனாய் மாறியிருக்கிறது இளைஞனின் தயாரிப்பில் வந்துள்ள சென்னை சங்கமம்.

ஏ   சென்டர்களில் 100.5 நாட்கள், பி   சென்டர்களில் 75.5 நாட்கள், சி சென்டர்களில்  55.5 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 57.5

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று.

34 கருத்துரைகள்:

ரஹீம் கஸ்ஸாலி said...

நான்தான் முதல் ஆள்

ரஹீம் கஸ்ஸாலி said...

அரசியல்,சினிமான்னு ஒரு ஆளையும் விடல போல....கடைசியில நம்ம சி.பி.செந்தில்குமாரையும் கலாய்ச்சிட்டீங்க போங்க....

சக்தி கல்வி மையம் said...

எப்படியப்பூ...
இப்படியெல்லாம் யோசிக்கிரீங்க..
ஆட்ஸ்ஆப்...

Chitra said...

nice. :-)

எல் கே said...

ஒருத்தரையும் விடறது இல்லை

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தங்கள் இருப்பிடம் சென்னை தானோ? எதுக்கும் அக்கம் ம்பக்கம் பார்த்தே பதிவு எழுதுங்க. ஆட்டோ வந்திடப் போகுது

மாணவன் said...

ஆட்டத்த ஆரம்பிச்சுட்டீங்களா????

நடத்துங்க நடத்துங்க நல்லாருக்குங்க...

செம்ம கலக்கல்....

THOPPITHOPPI said...

கலக்கல்

தினேஷ்குமார் said...

என்ன சகோ நீங்களுமா

தினேஷ்குமார் said...

என்னால் முடிந்தது ஓட்டுக்கள் மட்டும் போட்டுடுறேன் சகோ

தினேஷ்குமார் said...

இன்டலி 11 தமிழ்மணம் 8 தமிழ் பத்து 3

அந்நியன் 2 said...

அதான் எல்லாம் எழுதி முடிச்சாச்சே அப்புறம் எதற்கு விகடன் விமர்சனக்குழு மற்றும் குமுதம் ரேங்....?

ஓகே..ஓகே...விஜய் காத்தாடின்னு சொல்லுங்கள்.

Prabu Krishna said...

ஹா ஹா ஹா ஹா ஹா
படம் பாக்க தேவையே இல்லை.

சூப்பர். அடுத்த ரிலீஸ் அனேகமா ஜெயில்ல இருக்குமோ

Vijay Periasamy said...

பட்டையை கிளப்பும் விமர்சனம் .. மிகவும் அருமை .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது டாகுடர் படமா?

ம.தி.சுதா said...

இம்முறை ஆரம்ப மாதமே படவேட்டை ஆரம்பமாகிறத போல இருக்கே..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல விமர்சனம் :-))))

அஞ்சா சிங்கம் said...

அட கொடுமையே போட்டு தாக்குங்க .......................

பாலா said...

கதாநாயகியின் அண்ணன் கஞ்சா சிங்கம் வடகறியை பற்றி ஒன்னுமே சொல்லலயே?

விமர்சனம் சூப்பர்

middleclassmadhavi said...

நக்கலு.. டக்கரு..

ஆர்வா said...

அடடே.. இந்த உள்குத்துகூட சூப்பரா இருக்கே..

அருண் பிரசாத் said...

மேட்டுபாளையத்துக்கு ஒரு ஆட்டோ ரெடி பண்ணுங்கப்பா.....

கூடவே ஆம்புலன்சும் 108 free service

Jana said...

அருமை :)

செல்வா said...

/இறுதிக்காட்சிக்கு முன்பு வரும் "ஆட்சி, ஆட்சி" என்ற பாடல், அடுகளம் படத்தின் "யாத்தே யாத்தே" பாடலை நினைவுறுத்தினாலும், ரவை முத்து பாடல்வரிகளில் சிலிர்க்க வைக்கிறது. "ஞாயிறு போற்றுதும்,ஞாயிறு போற்றுதும்" பாடல் மெலடியாக மனசை வருடுகிறது.
//

வைர முத்த ரவை முத்து ஆக்கிட்டீங்க , உலக மகா நக்கல்டா சாமி !!

செல்வா said...

//ஏ செண்ட்டர்களில் 100.5 நாட்கள், பி செண்ட்டர்களில் 75.5 நாட்கள், சி செண்ட்டர்களில் 55.5 நாட்கள் ஓடலாம்.//

அட பாவமே , இப்படி கூடவா ஆரம்பிச்சிட்டீங்க ?

ஆனந்தி.. said...

இதுக்கு பேரு தான் கொழுப்ஸ்...:))))

Unknown said...

ஹி ஹி அய்யோ பாவம், ஆட்டோ வரப்போகுது, பார்த்து சூதானமா இருங்க அப்பு :-)

சசிகுமார் said...

வித்தியாசமான விமர்சனம் பாரதி வாழ்த்துக்கள்

Denzil said...

உங்க விமர்சனம் பார்த்துட்டுதான் படம் பார்க்கப்போறது. நல்ல விமர்சனம். நன்றி.

போளூர் தயாநிதி said...

நடத்துங்க நடத்துங்க நல்லாருக்குங்க...

சென்னை பித்தன் said...

//ஆனந்த விகடன் மார்க் - 57.5

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று.//
நீங்கள் தரும் மார்க்/ரேங்க் என்ன சொல்லுங்க.

ஆமினா said...

ரொம்ப நேரமா எந்த படம்னு மண்டைய போட்டு குழப்பிட்டு இருந்தேன்....

இதுக்கு பேரு தான் உள்குத்தா? :)

குறையொன்றுமில்லை. said...

நல்ல விமர்சனம்.

பாண்டியன் said...

இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா?
சூப்பர்

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்