கலாச்சாரக்காவலர்கள் மன்னிக்கவும்.


விலைவாசி உயர்ந்திருக்கிறதே என்று அரசியல்வாதிகளிடம் கேட்டால், மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறதோ இல்லையோ, மக்களிடம் சில கொடுமைகளை தாங்கும் சக்தி உயர்ந்திருக்க்கிறது.

ந்த வகையில் இன்னும் ஒரு மாற்றமும், இன்றைய தமிழ்ச்சூழலில் நிகழ்ந்திருக்கிறது. காதலிக்கும் வயது குறைந்திருக்கிறது.

முன்பெல்லாம் சில பிஞ்சுகள் மட்டுமே பழுத்தன. இப்பொழுதெல்லாம் பழுத்த பின் தான், பிஞ்சுகளாகவே மாறுகின்றன.

வகுப்பறையில் ஒரே டெஸ்கில் அமர்ந்திருப்பவருக்கும் ஐவரில், ஒரு மாணவி திசை மாறும் போது, அது தொற்று நோயாக, மற்ற நால்வருக்கும் பரவுகிறது.

பின் இப்படி இருந்தால் தான் "கெத்து" என்று மாறி விடுகிறது. சனி,ஞாயிறு ஆகிய நாள்களில், இளவரசனும்; இளவரசியும் "நகர் வலம்"
போக, பர்தா கொடுத்து உதவும் தோழிகளும் உண்டு.

நூறு ரூபாய் கொடுத்து, அப்பன் ஆத்தா வாங்கிக்கொடுக்கும் செயினை விட, சுடிதாரை விட, எவனொ ஒருவன் வாங்கிக்கொடுக்கும், ஐந்து ரூபாய் "பைவ் ஸ்டார்" உசத்தியாய் தெரிகிறது, அந்த சாக்லேட்டின் காகிதம் கூட பாதுகாக்கப்படுகிறது. மற்ற மாணவிகளிடம் காட்டி, பெருமையடிக்க காரணமாகிறது. அந்த பெருமைக்கு இன்னும் ஒருத்தி ஆசைப்படும் போது, அந்த தொற்றுநோய்க்கான பலி எண்ணிக்கை உயருகிறது.

முன்பெல்லாம் பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தனர், இப்போதோ வயிற்றில் எரிமலையைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

டகங்கள் இதற்கு காரணம் என்ற "வழக்கமான" காரணமும் உண்மைதான். முன்பெல்லாம் திரைப்படங்கள், கல்லூரிக்காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டன. பரிமாண வளர்ச்சியின் படி, இப்பொழுதோ "பள்ளியில் காதல்" என்பது தான் திரைப்பட களமாகி இருக்கிறது.

ந்த வலைப்பூவில் இப்படியொரு பதிவா என சவுக்கு வீச தயாராகும், கலாச்சாரக்காவலர்களே மன்னியுங்கள். நாங்கள் வரம்பு தாண்டி பதிவெழுதுகிறோம் என்று கண்டிக்க வேண்டாம். "குறைந்து விட்ட காதலிக்கும் வயது" என்பது தான் இந்த பதிவுக்கான எல்லை.

யினும் யாரேனும் உங்களிடம் கேட்கக்கூடும், ஒரு கேள்வியை..

நோட்டிற்குள் மயில் தோகையை வைத்து, குட்டி போடுமா என பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய வயதில்; அவர்களே "குட்டி" போடுகிறார்களே.. அதற்கு என்ன பதில் உங்களிடம் இருக்கிறது. (தமிழகத்தில் இது மூன்றாம் நிகழ்வு.)

Reference பதிவுகள்:

1.குறட்டை புலி - மாணவி பிரசவம்;யாருக்கும் வெட்கமில்லை!

2.எங்கே செல்லும் இந்த பாதை - நட்பு- பயோடேட்டா.

3.கோமாளி - செல்லத்திற்கு ஒரு கடிதம்.
(கடைசி சில பத்திகள்)


47 கருத்துரைகள்:

Madurai pandi said...

கசப்பான உண்மை !! ஒத்துக்கொள்ள தான் வேண்டும்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

மாணவன் said...

ஒன்றும் சொல்வதற்கில்லை.........

Unknown said...

உண்மை! இது ஒரு தொற்று நோய் போலப் பரவுகிறது குறிப்பாக பெண்களிடம் மட்டுமே இப்படி!

Anonymous said...

இந்த அவலங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்...

அனைவருக்குமான கேள்வி இது...

மேலும்... படிக்க வாருங்கள்...
sleepingtiger007.blogspot.com

Speed Master said...

காதல் இங்க இல்லை கவர்ச்சியும் காமமும் மட்டுமே உள்ளது

Anonymous said...

இந்த அவலங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்...

அனைவருக்குமான கேள்வி இது...

மேலும்... படிக்க வாருங்கள்...
sleepingtiger007.blogspot.com

January 21, 2011 3:38 PM

Unknown said...

இங்கு காமமே காதலாய் மாறுகிறது, பயங்கர கொடுமையான விசயமிது :-(

svramani08 said...

சமூக அக்கறையுள்ள இது போன்ற பதிவுகளை
அதிகரிப்பதன் மூலமே குறைந்த பட்சம் பதிவுலகில் வருகிற
பல்புகளையும் மொக்கைகளையுமாவது நம்மால் தவிர்க்கமுடியும்.
அதற்காகவாவது தொடர்ந்து எழுதவும்.வாழ்த்துக்கள் .

Anonymous said...

சமூக அக்கறையுள்ள இது போன்ற பதிவுகளை
அதிகரிப்பதன் மூலமே குறைந்த பட்சம் பதிவுலகில் வருகிற
பல்புகளையும் மொக்கைகளையுமாவது நம்மால் தவிர்க்கமுடியும்.
அதற்காகவாவது தொடர்ந்து எழுதவும்.வாழ்த்துக்கள் .

svramani08 said...

சமூக அக்கறையுள்ள இது போன்ற பதிவுகளை
அதிகரிப்பதன் மூலமே குறைந்த பட்சம் பதிவுலகில் வருகிற
பல்புகளையும் மொக்கைகளையுமாவது நம்மால் தவிர்க்கமுடியும்.
அதற்காகவாவது தொடர்ந்து எழுதவும்.வாழ்த்துக்கள் .

சென்னை பித்தன் said...

கவலை தரும் ஒரு ஆபத்தான நிலைதான்.இதற்கு அணை போட வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் உள்ளது.

Unknown said...

வருத்தத்துக்குரிய செய்தி

அஞ்சா சிங்கம் said...

எல்லாம் காலத்தின் கட்டாயம் ..........
காதலிக்கும் வயதுதான் குறைந்திருக்கிறது .
கல்யாண வயது கூடி இருக்கிறது ........

தமிழ் உதயம் said...

மிக அக்கறையான பதிவு. தேவையானதை தான் பகிர்ந்துள்ளீர்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>>இந்த வலைப்பூவில் இப்படியொரு பதிவா என சவுக்கு வீச தயாராகும், கலாச்சாரக்காவலர்களே மன்னியுங்கள். நாங்கள் வரம்பு தாண்டி பதிவெழுதுகிறோம் என்று கண்டிக்க வேண்டாம். "குறைந்து விட்ட காதலிக்கும் வயது" என்பது தான் இந்த பதிவுக்கான எல்லை.


100% சரி

எல் கே said...

எதற்கு இப்படி ஒரு தலைப்பு என்றுப் புரியவில்லை. நீங்கள் சொல்லி உள்ள விஷயங்கள் பெரும்பாலானோர் அறிந்ததே. ஊடகங்கள் இன்று அவர்களின் பசிக்கு அனைவரையும் இரையாக்குகின்றன. இந்த மாதிரி விஷயங்களை தட்டிக் கேட்டால் அது தனிமனித சுதந்திரம் , நாகரீகம் என்று சிலர் சண்டைக்கு வரக்கூடும் :(

Unknown said...

காதலும், கத்திரிக்காயும் என்று தான் முதலில் இந்த பதிவுக்கு பெயர் வைக்கப்பட்டது, பின் பயத்தின் காரணமாக அந்த தலைப்பு மாற்றப்பட்டது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

இதில் கலாச்சாரம் எங்கு வருது?.

வயதுக்கு வந்ததன் அடையாளமே எதிர்பாலின ஈர்ப்பு..

அது தவிர்க்க முடியாது..

பெற்றோரும் , ஆசிரியரும் கூட வயது வந்த பிள்ளைகளுக்கு பாலியல் வகுப்பு எடுத்து நல்லது தீயதை சொல்லித்தரலாம்...

அந்தந்த வயதின் பொறுப்புகள் கடமைகள் பிள்ளைகள் அறிந்தே இருக்கணும்...

அதிலும் இக்காலத்தில் இணையம் தொலைபேசி என எளிதாக எதிர்பாலின நட்பு அமைய வாய்ப்பிருப்பதால் கண்டிப்பாக அறிவுறுத்தப்படவேண்டும் தோழமையோடும் நம்பிக்கையோடும்...

பிள்ளைகளின் நடவடிக்கைகள் பெற்றோர் கண்காணிக்கவேண்டும்.. நடவடிக்கையில் மாறுதல் ஏற்படும்போது ( தனியே நேரத்தை செலவழித்தல் , பேச்சை குறைத்தல் , படிப்பில் கவனம் செலுத்தாமை , தொலைபேசி அழைப்புகள் )கூடுதலாய் கவனிக்கணும்..

MANO நாஞ்சில் மனோ said...

காமம் காமம் காமம்தான் ஒன்லி....

Praveenkumar said...

மிகவும் கொடுமையான மற்றும் வருத்தத்திற்குரிய கலாச்சரா சீரழிவுகள். தங்களது விழிப்புணர்வு கட்டுரைகள் தொடரட்டும் நண்பரே..!

அன்புடன் நான் said...

நோட்டிற்குள் மயில் தோகையை வைத்து, குட்டி போடுமா என பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய வயதில்; அவர்களே "குட்டி" போடுகிறார்களே.. அதற்கு என்ன பதில் உங்களிடம் இருக்கிறது. (தமிழகத்தில் இது மூன்றாம் நிகழ்வு.)//

காலமும் கெட்டுபோச்சி... காதலும் கெட்டுபோச்சி.....
பெற்றவர்கள் தான் மிக கவனமா இருக்கனும்.... சில ஊடகங்களை முற்றிலும் தவிர்க்கணும்..... நன் பார்வைக்குள்ளே வைத்திருக்க வேண்டும்.....

பகிர்வு நல்லப் பார்வை.

அந்நியன் 2 said...

காதல்...காதல்..காதல் !!!
யார் மீது யாருக்கு காதல் ?

காலத்தின் மீது காதல் கொள்ளுங்கள் கஷ்ட்டமின்றி வாழ்வீர்கள்.
பூலோகத்தில் பெற்றோரை காதலியுங்கள் பூரிப்புடன் சிறப்பிர்கள்.

படிக்கின்ற வயதில் பிடிக்கின்ற சனியனை நீ காதல் கொண்டால்,உற்றோர்கள் உன் பெற்றோரை காரி துப்பையிலே அவர்கள் கண்ணீருக்கு யார் ஆறுதல் சொல்லுவா ?

அழகில் உருவாகும் சின்னஞ்சிறிய காதல் இன்னொரு அழகை காணும் வரைதான்.
இதுக்குப் பெயர்தான் காதலா ?

மோகத்தில் பூக்கும் பிஞ்சு காதல்,தாகம் தீர்ந்ததும் பறந்து விடும்,விளைவு யாருக்கு ஆணுக்கா அல்லது பெண்ணுக்கா ?

படிக்கின்ற வயதில் காதல் எதற்கு ?

காதல் பூப்பதற்கு சமயம் வேண்டாம்,உங்களின் சாயமே போதும் நெருப்பில் அழிவதற்கு.
காதலில் இருக்கும் உங்களின் வேகம் அது உங்களை மணவறைக்கு அழைத்து செல்லுமா அல்லது மண்ணறைக்கு அழைத்து செல்லுமா என்று, யாரிடமும் கேட்டாலும் பதில் ஒன்றுதான் மண்ணறை.

காதல் என்பது உண்மையானது அது உயிர் உள்ள உறவு,ஆனால் உருவமற்றது பிறர் கண்ணுக்கு தெரியாது அப்பேற்பட்டக் காதல் நாம் படிக்கும் போது யாரையும் பிடிக்கக் கூடாது,அதனால் யாரும் அழிந்திடவும் கூடாது அதுதான் நாம் இப்பொழுது எடுக்க வேண்டிய சத்தியம்.

அருமை தோழர் தோழிகளே காதல் என்பது தவறு கிடையாது காதலிக்கப் படாமல் யாரும் கிடையாது,கத்திக் கொண்டிருக்கும் நானும் காதல் திருமணம் புரிந்தவன்தான் ஆனால் சில நிபந்தனையின் பேரில்,இன்றோ வாழ்வில் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி வாழ்கிறோம்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இராமல் நமக்கு நாமே சில தகுதிகளை உருவாக்கிக் கொண்டு காதலிக்கணும் காரணம் வாழவேண்டிய பெண்ணை இவன் கடைசி வரை வைத்து காலம் தள்ளுவான் என்ற நம்பிக்கை பெண் வீட்டாருக்கு வரவேண்டும் அதற்க்கு நாம் அதற்க்கான தகுதியை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

காதலில் சிக்கி தவிக்கும் பனிரெண்டு வயது பெண்ணே,வேண்டாம் இந்த விழையாட்டு உணர்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் உனது உணர்வுகள் எல்லை தாண்டியதும் உன் மூச்சைக் கூட நிறுத்த தோணும் எச்சரிக்கை வேணும்.

நல்லதொரு பதிவை இட்டு சின்னஞ் சிறுசுகளின் அறியாமையை அருமையாக விளக்கி உணர்ச்சிப் பூர்வமாக எழுதியதற்கு வாழ்த்துக்கள் !

இப்படி சமூக சிந்தனையை தூண்டும் பதிவை தொடர்ந்து எழுதுவிர்களானால் என்னைப் போன்ற பல நண்பர்களுக்கு படிக்கிரதர்க்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆஜராகிட்டேன்

ஆனந்தி.. said...

இப்ப கொஞ்சநாளா lkg terror boys பசங்க சொல்றமாதிரியான எஸ் எம் எஸ் கள் வருது கவனிச்சிங்களா பாரத்..பாரதி..?? அந்த குட்டிஸ் வகுப்பு ஆசிரியரை சூப்பர் பிகர்ரு சொல்றமாதிர்யான வாசகங்களுடன் ..இந்த மாதிரி நிறைய அபத்த sms இப்போ வருது...நீங்க சொன்னது வெகு சரி..பிஞ்சிலேயே பழுத்துருதுங்க...என் பையன் third ஸ்டாண்டர்ட் படிக்கும்போது அவனுடன் கூட படித்த ஒரு குட்டிவாண்டு செகண்ட் ஸ்டாண்டர்ட் குட்டி பாப்பா கு ஐ லவ் யு னு எழுதி கொடுத்துருக்கான்...பார்த்துக்கோங்க...இது ஊடகங்களின் வேலையா...இல்லை...பெற்றோர்கள் இன்னும் சரியா குழந்தைகளை ஹான்டில் பண்ணலையான்னு யோசிக்க வேண்டிய விஷயம்...ரொம்ப sensitive விஷயம் தான் பா...

Jana said...

சினிமா இதற்கு மிகப்பெரியதாக்கம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கவலைக்கிடமான விஷ(ய)ம்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி
இரண்டுக்கும் இதில் முக்கிய
பங்குண்டு!

varagan said...

உண்மை!

சமூக அக்கறையுள்ள

பதிவிற்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்

வராகன்.

Chitra said...

சமூக அக்கறையுடன் உள்ள நல்ல பதிவு.

கவி அழகன் said...

காலத்துக்கு தேவையான வரம்பு மீறாத படைப்பு வாழ்த்துக்கள்

Vijay Periasamy said...

பெற்றோர்களின் அறவணைப்பும் , நல்ல ஆசிரியர்களின் சரியான வழிகாட்டலும் மட்டுமே , பள்ளி மாணவர்களை இப்படிப்பட்ட தீய விசயங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் .

hayyram said...

இப்படியெல்லாம் நடப்பது இயற்கைன்னு தெரிஞ்சு தான் நம் தாத்தா பாட்டி காலத்தில் எல்லாம் காதலிக்கும் பருவத்தில் கல்யாணம் செய்து வைத்து அவர்களை தவிக்க விடாமல் காப்பாற்றினார்கள். கட்டிலில் படுக்கும் வயதில் பள்ளியில் படிக்க வைப்பது நம் குற்றம். வெள்ளைக்காரன் செய்த வேடிக்கை நாகரீகத்தில் பலியானது நமது பாரம்பரியம்.

இதை படித்துப் பாருங்கள்!

http://hayyram.blogspot.com/2010/06/blog-post_16.html

எல் கே said...

//வயதுக்கு வந்ததன் அடையாளமே எதிர்பாலின ஈர்ப்பு..

அது தவிர்க்க முடியாது..
//

எதுங்க எட்டாவது ஒன்பதாவது படிக்கறப்ப வரதா ??? என்னங்க தமாசு பண்றீங்க ?

முதலில் உங்க வெளிநாட்டு மனப்பான்மையை விட்டுவிட்டு இந்திய மனப்பான்மையில் பாருங்க

எல் கே said...

/இது ஊடகங்களின் வேலையா...இல்லை...பெற்றோர்கள் இன்னும் சரியா குழந்தைகளை ஹான்டில் பண்ணலையான்னு யோசிக்க வேண்டிய //

இரண்டும் கலந்தக் கலவை ஆனந்தி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாறி வரும் உலகில் எல்லாம் தலைகீழாகி விட்டது...

Unknown said...

எங்கே செல்லும் இந்தப் பாதை ?

டக்கால்டி said...

நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

எண்ணங்கள் 13189034291840215795 said...

எதுங்க எட்டாவது ஒன்பதாவது படிக்கறப்ப வரதா ??? என்னங்க தமாசு பண்றீங்க ?

முதலில் உங்க வெளிநாட்டு மனப்பான்மையை விட்டுவிட்டு இந்திய மனப்பான்மையில் பாருங்க//


:))

என்னமோ இந்தியாவிலே இல்லாததை வெளிநாட்டிலே உள்ளவர் செய்திட்டார் எனும் புரிதல் குறித்து சிரிப்புத்தான் வருது..:).. எதுக்கெடுத்தாலும் வெளிநாடுதான் பலியா?... :))).

இந்தியா வெளிநாட்டை விட முன்னேறியது இவ்விஷயத்தில் சங்க காலத்திலேயே..நியாபகமிருக்கட்டும்...:)

இதற்கான விளக்கம் இங்கே...

" பதின்ம வயது திருமணம் குற்றமா?..
http://hayyram.blogspot.com/2010/06/blog-post_16.html

R. Gopi said...

கல்லூரி முதலாம் ஆண்டில் எங்கள் ஆங்கிலப் பாடத் திட்டத்தில் இருந்த ஒரு கதை ஞாபகம் வருகிறது.

ஒரு பெண்ணைக் கவர வேண்டி ஒரு மாணவன் நிறையப் படிக்க ஆரம்பிப்பான். படிக்கப் படிக்க படிப்பின்மேல் ஆர்வம் மேலோங்கி அந்தப் பெண்ணின் மேல் இருக்கும் ஈர்ப்பு போய் விடும்.

இனக்கவர்ச்சி என்பது தற்காலிகம். உண்மையான அறிவே சாஸ்வதம் என்பதை வலியுறுத்தும் இதுபோன்ற
கதைகள் அடங்கிய பாடத்திட்டங்கள் இன்றைய உடனடித்தேவை என்று நினைக்கிறேன்.

என்னுடைய சொந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். பத்தாம் வகுப்பு வரை ஆண்பால்ர் மட்டும் தனியே படிக்கும் வகுப்பில் படித்தவன் நான். பதினொன்றாம் வகுப்பு முதல் இருபாலர் படிக்கும் வகுப்பு. சில மாணவிகள் மேல் ஈர்ப்பு வந்தது உண்மை.அதுவும் நன்றாகப் படிக்கும் ஆங்கிலம் அழகாகப் பேசும் மாணவிகள் மேல் கூடுதலாக. அவர்களிடம் பேசத் தோன்றும். ஆனால் அந்த அளவிற்குத் தகுதி வளர்த்துக் கொண்டே அதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் நன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நாட்களில் படிப்பின் மேல் பிடிப்பு அதிகமாகி அவர்களிடம் பேச வேண்டிய ஆர்வம் இரண்டாம் பட்சமானது. அவர்களே வந்து பேசியபோதும் கூட, மேலும் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது.

இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டியது அந்தக் காலக் கட்டத்தில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரண்டும் கெட்டான் வயசில் தோன்றும் பிரச்சினைகள், அது பற்றிய புரிதல்கள் ஆகியவற்றை நாசூக்காக வகுப்பில் எடுத்துரைப்பர். என் வீட்டில் உள்ள மற்றவரும் அதையே செய்தனர். அந்த இரண்டு வருடங்களும் நல்ல சூழ்நிலையை அமைத்துத் தந்ததற்கு நான் என் தாய் தந்தையருக்கு, உற்றார் உறவினருக்கு, நண்பர்களின் பெற்றோர்களுக்கு நிறையக் கடைப்பட்டிருக்கிறேன்.

இந்த வயதில் படிப்பே முக்கியம். மற்றது தேவையில்லை என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்தும் கடமை எல்லோருக்கும் உள்ளது.

ஒரு குழந்தை வயிற்றில் இருப்பதைக் காட்டிலும், அதற்கு இரண்டு வயதாவது வரை உள்ள பருவத்தைக் காட்டிலும் adolescent பருவம் மிக முக்கியமான ஒன்று என்பது ஏன் கருத்து. பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Anonymous said...

காதல் ஒரு ஃபேஷன் இப்போது..இது இந்த வயதில் தேவைகளின் பரிமாற்றம் மட்டுமே...சொல்ல நினைத்த கருத்துக்கள் யாவும் நண்பர்கள் சொல்லிவிட்டார்..சமூக பொருப்புள்ள பதிவு..

சக்தி கல்வி மையம் said...

சமூக அக்கறையுள்ள இது போன்ற பதிவுகளை
அதிகரிப்பதன் மூலமே குறைந்த பட்சம் பதிவுலகில் ஒர் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அதற்காகவாவது தொடர்ந்து எழுதவும்.வாழ்த்துக்கள் .

தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.

நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

settaikkaran said...

நண்பரே!

மேலோட்டமாகப் பார்த்தால், இது மிகவும் அதிர்ச்சியை தருகிற தகவல் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. இது கலாச்சாரத்துடன் தொடர்புடையதா அல்லது காலத்தின் மாற்றம் காரணமாக, நம்மை அறியாமல் நமக்குள்ளே புகுந்து விட்ட அலட்சியத்தின் எதிர்மறை விளைவா என்பதே விடைதேடற்குரிய கேள்வியாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. கடவுள் தொடங்கி, காதல் வரையிலும் அனைத்துமே பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது அல்லவா? சரியான புரிதல்களை, சரியான பிராயத்தில் புகட்ட வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.

இது போன்ற நிகழ்வுகள் சலிப்பையும், சற்றே அச்சத்தையும் ஏற்படுத்துவது இயல்பே. ஆனால், ’அவ்வளவு தான், எல்லாம் முடிந்தது,’ என்ற விரக்திநிலைக்குச் செல்ல வேண்டியதில்லை. ஒருவிதத்தில் இது விழிப்புணர்ச்சி இடுகைதான். இதை ஆக்கபூர்வமாகத் தொடரலாம்.

நாமும் இந்த சமூகத்தில்தான் குப்பை கொட்ட வேண்டியிருக்கிறது. சற்று, குப்பையை அகற்றவும் நம்மால் இயலும். நன்றி!

பரதேசித் தமிழன் said...

நீங்கள் சொல்லி இருப்பது மிக மிகச்சரி. பதின்ம வயதில் வரும் காதலில் கவர்ச்சியும் காமமும் மட்டுமே இருக்கும். அதைப் புரிந்து கொள்ளாமல் தடுமாறி வாழ்க்கையை இழந்தவர்கள் எத்தனையோ?
சரியான பதிவுதான். பாராட்டுகள்!
நன்றி!

செல்வா said...

காதல் வருவதற்கான வயசு அப்படின்னு சொல்லுறத விட ,
யார இருந்தாலும் அவுங்களோட வாழ்கை பற்றி அதாவது எதிர்காலம் பற்றின விசயங்களை சொல்லிக்கொடுத்தா இது போல பிரச்சினைகள் தவிர்க்கப்படலாம்னு நினைக்கிறேன் . என்னைப் பொறுத்த வரையில் காதல் எந்த வயசுல வருது அப்படிங்கிறத விட எந்த நேரத்துல வருது அப்படிங்கிறதுதான் முக்கியம்.

அதாவது ஒரு பையன் காலேஜோ , இல்ல பள்ளிக்கூடத்துலையோ படிக்கும் போது ஒரு பொண்ண பிடிச்சுப் போய் அவள காதலிக்கறதா நினைச்சிட்டு அவனோட எதிர்காலத்துல பெரிய ஆள வந்து இந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்குவேன் அப்படின்னு நினைச்ச அது தப்பு இல்லைன்னு நினைக்கிறேன் .. அத விட்டுட்டு ஒரு பெரிய ஆள் அதாவது காதலிக்கிற வயசு அப்படின்னு சொல்லக்கூடிய வயசுல ஒருத்தர் எதுவுமே செய்யமா அவரோட எதிர்காலம் பற்றி கவலை இல்லாம இருக்குற ஒருத்தர் செய்யுற காதல் கண்டிப்பா தவறாக அதாவது பல பிரச்சினைகளை ஏற்ப்படுத்தலாம் அப்படின்னு நினைக்கிறேன் ..!

பாலா said...

ஊடக தணிக்கைத் துறைக்கு சமூகம் சார்ந்த்த ஒரு பொறுப்பு இருக்க வேண்டும்..
பெற்றோர் இருவரும் வேலைக்கு போகும் சமூகத்தில் குழந்தைகள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டதர்க்கான விலை இது...
இன்னும் வரும் காலங்களை நினைத்தால்... :((

Jayadev Das said...

இந்த ஊடகங்கள் மக்கள் வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு இது உதாரணம்"வைகாசி பொறந்தாச்சு" அப்படின்னு பிரசாந்த் அறிமுகமான படம் வந்ததுக்கப்புறம் எத்தனை ஆயிரம் பள்ளி மாணவ மாவிகள் குட்டிச் சுவராகப் போனார்கள் என்பதாகும். வெளிநாட்டு தொலைக்காட்சிகள் வந்ததற்க்கப்புரம் நடந்த கலாசார சீரழிவு கொஞ்சமா நஞ்சமா? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல காதலர் தினம் போன்ற கருமாதிகள், அப்புறம் Living Together என்னும் பாடாவதி வழக்கம் நுழைய ஆரம்பித்திருக்கிறது. இதை நீ எத்தனை பேரிடம் பார்த்தாய் என்று கேள்வி கேட்கலாம், கொடிய வைரஸ் உடலில் நுழையும் போது கண்ணுக்கே தெரியாது. ஆனால் விரைவில் அது பெருகி உயிரையும் கொள்ளுமளவுக்கு வரும், அப்போது என்ன செய்வது? இதைப் புரியாமல், காதலர் தினம் போன்ற கலாசார சீரழிவை எதிர்ப்போரை சமூக விரோதிகள் போல சித்தரிப்பதை ஊடகங்களும் செய்கின்றனவே? நம்மூரிலும் ஒரு நாள், பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் பெண்ணும் ஆணும் கண்ட படி சுற்றித் திரிதல், கற்பம் கருக்கலைப்பு என்று போனால் என்ன செய்வது? அன்று நிலைமை கை மீறிப் போயிருக்கும், அன்றைக்கு இந்த தொலைகாட்சி காரனா வந்து இழந்த கலாசாரத்தை மீட்டுக் கொடுப்பான்?

Unknown said...

Sariyaga sonneergal

Unknown said...

Miga arumayana pagirvu kalatirketra karutu

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்