எஸ்.ராமகிருஷ்ணன் @ நீயா? நானா?



சென்ற வாரம் விஜய் டி.வி.யின்-  நீயா? நானா?  நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், புத்தகம் வாசித்தல் என்பது வெறும் பொழுது போக்கு அல்ல,  கதை என்பதும் வெற்று விஷயங்களை பேசுதல் அல்ல என்பதை வலியுறுத்திச் சொன்ன விஷயங்கள் இப்போது எமது வார்த்தைகளில்...

கதை, நாவல் என எளிதாக சொல்லிவிட முடிந்தாலும், எழுத்தாளனாக இருப்பது சாதாரணமான விஷயமல்ல. நாவல் என்பது ஒருவரின் வாழ்க்கை. மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை உள்வாங்கி எழுதப்படுகிற ஒன்று.

எழுத்து என்பது வாழ்க்கைத்தொகுப்பு.

என் எழுத்து என்பது என் வாழ்க்கையோடு தொடர்புடையது.
என் வாழ்க்கை என்பதும் இந்திய மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது.

புத்தகம் என்பதை வெறும் கதை வாசித்தல் என்று ஒதுக்குகிறார்கள்.

புத்தகம் என்பதன் ஆரம்பம் கதை கேட்டல்.
நானும் புத்தகம் படிக்கும் முன் கதை கேட்டேன்.

இங்கே எல்லாவற்றிலும் ஒரு கதை இருக்கிறது. உடல் மட்டுமல்ல, உணவு மட்டுமல்ல, பள்ளி,இலக்கியம் என எல்லாவற்றிலும் கதை என்பது ஒளிந்து இருக்கிறது. கதைக்கு என்று ஒரு இதயம் இருக்கிறது.

கதைகளின் உலகம் என்பது கற்பனை உலகம் அல்ல, அது இருப்பதில் இருந்து உருவாவது.

காக்கா வடையை எடுத்த கதை உங்களுக்குத் தெரியும், அது 2000 ஆண்டுகளைத் தாண்டி வந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு ஊர்ல ஒரு நரியாம், அதோட கதை சரியாம். இவ்வளவு தான் கதை.

காக்காவும், வடையும் கதை கூட கிரேக்கம், பிரெஞ்ச், அரபு நாடுகளைத் தாண்டி இங்கே வந்திருக்கிறது. ஒவ்வொரு ஊரைத்தாண்டி வரும்போது, அந்த ஊரின் கலாச்சாரத்தை எடுத்து வந்திருக்கிறது.

இங்கே காக்கா தூக்கியது வடையை,  ஆனால் கிரேக்கத்தில் வெண்ணைத்துண்டை தூக்கியதாகத் தான் சொல்லப்படுகிறது .(காக்கா திருடியதாக கிரேக்கத்தில் இல்லை, எடுத்தது) பிரெஞ்ச் இலக்கியத்தில் அது இனிப்பு, அரபு நாடுகளில் அது மாமிசம், வட இந்தியாவில் அது ஜாங்கிரி, தென் இந்தியாவில் வடை.

காக்கா தூக்கிய பொருள் கூட, ஒவ்வொரு நாடுகளிலும் அங்குள்ள மனிதர்களின் விருப்பப்பொருளை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.

முதலையும், குரங்கும் கதையும் கூட இப்படித்தான், பல்வேறு நாடுகளைத் தாண்டி, மாற்றங்களோடு மக்களிடையே பரவியிருக்கிறது.

கதைகள் என்பவை யாத்திரிகர்கள் போல, நீண்ட தூரம் பயணம் செய்து, மற்றொரு நாட்டிற்கு அறிமுகமாகிறது.

கதைகள் படிக்கும் நேரத்தில், பாடபுத்தகத்தை படிக்கலாமே என்பவர்களுக்கு ஒரு விஷயம்.

இங்கே ஜெயித்தவர்கள் எல்லாம் பாடத்திட்டத்தை தாண்டி சிந்தித்தவர்கள் தான்.

விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் கற்பனை மூலம் வந்தது.

பாடத்திட்டத்தை மட்டும் படிப்பவனுக்கு நல்ல வேலைக்கிடைக்கும்,
பாடத்திட்டத்தைத் தாண்டி படித்தால் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கலாம்.

எந்த மதமானாலும் அதில் ஏராளமான கதைகள் உண்டு.
எல்லா கடவுள்களும் கதைகளின் வழியே தான் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டார்கள்.

கதைகள் என்பதை வெறும் பொழுதுப்போக்கு என்று ஒதுக்கி விடமுடியாது. கதை என்பது அறிதல்.  கதை சொல்பவர் மூலம் கற்றுக்கொள்வது. தெரிந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் கூட ஒரு அறிதல் இருக்கிறது. புதிதாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் அதே கதை, புதிய சூழலுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
    

சாப்பாடு ஊட்டும் போது, கதை சொல்லிகொண்டே ஊட்டுவது நம்மூர் வழக்கம். இன்னும் கொஞ்சம் சாப்பிடுவதற்காக, கதையும் ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி நீளும்.

நோயாளிகளிடன் பேசிப்பாருங்கள் அவர்களிடம் ஆயிரம் கதைகள் இருக்கும். கதை சொல்ல எல்லா மனிதர்களும் விரும்புகிறார்கள்.

கதை என்பது பாடம்,  ஐரோப்பாவில் Bed Time Stories  என்றே வைத்திருக்கிறார்கள். இந்த கதைகள், கனவுகளைத் தூண்டும், வாழ்க்கையை வழிநடத்தும்.

வாசித்தலை குறைச்சொல்லுபவர்களை பற்றி ஒன்றும் வருத்தமில்லை, அவர்களுக்கும் படிக்க சந்தர்ப்பம் கொடுத்தால், விருப்பமில்லாதவர்களும் படிப்பார்கள்.

வாசித்தலால் நேரம் வீணாகிறது என்பதும் சரியல்ல, அலுவலகத்தில் தொடர்ந்து நீங்கள் வேலை செய்வதாக   சொல்லிக்கொண்டாலும் கூட, கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் வீணடிக்கப்படுகிறது. (செயல்பாட்டின் பாதி  முன் தயாரிப்புக்காக செலவிடப்படுகிறது)

வாசித்தலும் எளிமையான,ஈர்ப்பான விஷயம் தான்.

புத்தகம் வாசிக்க வீடு அனுமதிப்பதில்லை என்பதை தாண்டி தான் வாசிக்க வேண்டியிருக்கிறது. இன்று சாதித்துள்ள பெண்கள் அனைவரும் போராடித்தான் தடைகளை தாண்டி வந்துள்ளனர். எல்லாவற்றிலும் போராடித்தான் ஜெயிக்க வேண்டியிருக்கிறது, புத்தகம் வாசிக்கவும் அப்படியே.

மதிப்பெண் வாங்கி விட்டு பின் புத்தகங்களை வாசிக்கலாமே, மறைச்சாவது வாசிக்கலாமே..

நல்ல விஷயத்தை சில சமயத்தில் மறைத்துத்தான் செய்ய வேண்டியுள்ளது. நல்ல புத்தகங்களை திருட்டுத்தனமாக கூட படிக்கலாம்.

புத்தக வாசிப்பு என்பது பெரிய அனுபவம்.  எந்த புத்தகங்களை படிக்கலாம் என்று ஒரு பட்டியல் என் இணையதளத்தில் கிடைக்கிறது.


இணைப்பு :


36 கருத்துரைகள்:

மாணவன் said...

நீயா?? நானாவா??? இருங்க படிச்சுட்டு வரேன்.........

MANO நாஞ்சில் மனோ said...

ஐய்யய்யோ வடை போச்சே இருங்க படிச்சுட்டு வாரேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//பாடத்திட்டத்தை மட்டும் படிப்பவனுக்கு நல்ல வேலைக்கிடைக்கும்,
பாடத்திட்டத்தைத் தாண்டி படித்தால் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கலாம்///

சரியாகத்தான் சொல்றாங்க.....

Unknown said...

உண்மைதான், சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். கதையை சொல்வதிலும், கெட்பதிலும் அனைவருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது...

சக்தி கல்வி மையம் said...

ஐய்யய்யோ எனக்கும் வடை போச்சே இருங்க படிச்சுட்டு வாரேன்...

மாணவன் said...

எழுத்தாளர்பற்றியும் வாசித்தல்பற்றியும் அருமையா சொல்லியிருக்கீங்க பாரதி வாழ்த்துக்கள்....

கண்டிப்பாக நாம் அனைவருமே (நல்ல புத்தகங்களின்) வாசிப்புபழக்கத்தை அதிகரித்துகொள்ள வேண்டும்

மாணவன் said...

//பாடத்திட்டத்தை மட்டும் படிப்பவனுக்கு நல்ல வேலைக்கிடைக்கும்,
பாடத்திட்டத்தைத் தாண்டி படித்தால் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கலாம்.//

சூப்பர் நச்சுன்னு சொல்லியிருக்கீங்க....

சக்தி கல்வி மையம் said...

இங்கே ஜெயித்தவர்கள் எல்லாம் பாடத்திட்டத்தை தாண்டி சிந்தித்தவர்கள் தான்------

100% உண்மை.கண்டிப்பாக நாம் அனைவருமே நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துகொள்ள வேண்டும்..

போளூர் தயாநிதி said...

பாராட்டுகள் புத்தகம் படித்தல் பற்றிய உங்களின் பதிவு நல்ல சிந்தையை உண்டாக்க கூடியது நன்றி .

Speed Master said...

சிறப்பான பதிவு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிறப்பான பதிவு

Harini Resh said...

//இன்று சாதித்துள்ள பெண்கள் அனைவரும் போராடித்தான் தடைகளை தாண்டி வந்துள்ளனர். எல்லாவற்றிலும் போராடித்தான் ஜெயிக்க வேண்டியிருக்கிறது, புத்தகம் வாசிக்கவும் அப்படியே.//

உண்மைதான், சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்

பாராட்டுகள் புத்தகம் படித்தல் பற்றிய நல்ல பதிவு

ஆனந்தி.. said...

/புத்தகம் வாசிக்க வீடு அனுமதிப்பதில்லை என்பதை தாண்டி தான் வாசிக்க வேண்டியிருக்கிறது. இன்று சாதித்துள்ள பெண்கள் அனைவரும் போராடித்தான் தடைகளை தாண்டி வந்துள்ளனர். எல்லாவற்றிலும் போராடித்தான் ஜெயிக்க வேண்டியிருக்கிறது, புத்தகம் வாசிக்கவும் அப்படியே//
புத்தகம் வாசிக்க பெண்களுக்கு தடையா...ம்ம்..இப்போ தான் கேள்வி படுறேன்..பெண்களுக்கு புத்தகம் வாசிப்பு ஒரு சிறந்த உற்ற தோழி மாதிரி...
நல்ல பகிர்வு தோழி...

Yaathoramani.blogspot.com said...

.
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

உருப்படியான பதிவு ... உங்களுக்கு என் பாராட்டுக்களும், வந்தனமும் ...

தமிழ் உதயம் said...

நல்ல விஷயம். நல்ல பதிவு.

Thenammai Lakshmanan said...

எஸ் ரா சொன்னது அனைத்தும் அருமை .. பகிர்வுக்கு நன்றீ பாரதி..

Unknown said...

தகவல்களுக்கு நன்றி.
அருமையான கட்டுரை.

இளங்கோ said...

பகிர்வுக்கு நன்றிங்க

Unknown said...

நம்ம கடை பக்கமும் வாங்க, கஷ்ட்டப்பட்டு ஒரு பதிவு போட்டு இருக்கேன் ...

NKS.ஹாஜா மைதீன் said...

வந்த வேலை முடிந்துவிட்டது.....ரெண்டுமே பண்ணியாச்சு...

yeskha said...

அந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் கலந்து கொண்டவன் நான். என் ப்ளாக்கில் அதை தனி பதிவாகவே இட்டுள்ளேன்.

அவர் நிகழ்ச்சி ஒளிபரப்பில் பேசியதை விட எடிட்டிங்கில் போனது சரிபாதி.. தமிழின் முக்கியமான பத்து எழுத்தாளர்களையும், அவர்களின் புததகங்களையும் வரிசைப்படுததுமாறு கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு அற்புதமான கலெக்ஷன் கொடுத்தார்.. ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு உட்பட...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//காக்காவும், வடையும் கதை கூட கிரேக்கம், பிரெஞ்ச், அரபு நாடுகளைத் தாண்டி இங்கே வந்திருக்கிறது//
இது பிரான்சைத் தாண்டிவரவில்லை. பிரான்சில் இருந்தே வந்தது. பிரான்சைச் சேர்ந்த jean de la fontaine
ஆல் எழுதப்பட்டது. (fables de la fontaine) இதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் வீரமாமுனிவர்.

கதை என்பது நம்மைச் சுற்றியுள்ளது. என்பது மிக அனுபவபூர்வமான கூற்று. அதை கவனித்து சுவைபடக் கூறுவதில் வெகுசிலரே ஆற்றல் மிக்கோர். அவர்களில் எஸ் ரா மிக முக்கியமானவர்.

குறையொன்றுமில்லை. said...

உண்மைதான் ப்த்தக வாசிப்பு அருமையான அனுபவம்தான். மிகவும் சரியாகத்தான் சொல்லி இருக்கார்.

ரிஷபன்Meena said...

பாட்டி வடை சுட்ட கதையை வெரி வெரி இண்டியன் கதை என்றே அதுவும் தமிழ்க் கதை என்றே வெகு நாட்கள் நினத்திருந்தேன். ஆனால் அது ஈசாப் கதைகளில் ஒன்று என்று சமீபத்தில் தான் தெரிந்தது.

ஈசாப் பற்றி சிறு குறிப்பு.

Aesop's Fables or Aesopica refers to a collection of fables credited to Aesop, a slave and story-teller who lived in ancient Greece between 620 and 560 BCE. His fables are some of the most well known in the world.

Chitra said...

நல்ல பதிவு மற்றும் பகிர்வு. நன்றிங்க.

செங்கோவி said...

எஸ்.ரா ஒரு நல்ல எழுத்தாளர் மட்டும் அல்ல, நல்ல பேச்சாளரும் கூட. அருமையான பதிவுக்கு நன்றி.

Anonymous said...

வாசித்தல் ஒரு சுவாசித்தல்
வாசித்தல் ஒரு நேசித்தல்

பூங்குழலி said...

கதைகள் என்பவை யாத்திரிகர்கள் போல, நீண்ட தூரம் பயணம் செய்து, மற்றொரு நாட்டிற்கு அறிமுகமாகிறது.

ரொம்ப அழகாக தெளிவாக அலட்டல் இல்லாமல் பேசினார் .இந்த யாத்ரீகன் போல என்பது ரொம்ப கவர்ந்தது என்னை .

அன்புடன் மலிக்கா said...

உண்மைதான் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.நல்ல புத்தகங்கள் வாசிப்பதை அதிகரித்துகொள்ள வேண்டும்

ஆமினா said...

நல்ல பதிவு

அவர் சொன்னதை நான் முழுவதும் ஏற்றுக்க்கொள்கிறேன் ;)

Jana said...

என்னைப்பொறுத்தவரையில் எல்லோரக்கும் எல்லா அனுபவங்களும் கிடைப்பது இல்லை. ஆனால் நாவல்களுடன் தொடர்ந்து பயணிப்பதனால் நினைத்தும்பார்க்காத சம்பவங்கள், அதனூக கிடைக்கும் பட்டறிவுகளை நாம் பெற்றுவிடுகின்றோம்.
அப்படியொரு சம்பவம் நேரடியாகவே எம்மை தாக்கும்போது அதற்கான சொலுசன்களை எழிதில் அடைந்துவிட..வாசிப்பு பேருதவியாக இருக்கின்றது என்பதை மறுத்துவிடமுடியாது.

சென்னை பித்தன் said...

நிகழ்ச்சி பார்க்கவில்லை;தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி!

ஆர்வா said...

ரொம்பவும் நல்ல கான்செப்ட் அது.. அதுல புத்தகம் படிக்க பிடிகக்லைன்னு சொல்வதை சிலர் கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது. ராமகிருஷ்ணனின் விளக்கங்கள் அருமை.. அதை நீங்கள் பதிவிட்டிருப்பது நல்ல விஷயம்

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

S Maharajan said...

தகவல்களுக்கு நன்றி.
அருமையான கட்டுரை.

இராஜராஜேஸ்வரி said...

இங்கே ஜெயித்தவர்கள் எல்லாம் பாடத்திட்டத்தை தாண்டி சிந்தித்தவர்கள் தான்.//
மிகவும் உண்மை!!

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்