அன்னபூர்ணாவிலும், ஆர்யா-சிலும் பெருங்கூட்டம் நிரம்பி வழிந்த, ஒரு
சுபமுகூர்த்தநாளின் காலை நேரத்தில், அந்த சின்னதொரு உணவகத்திற்குள் செல்ல நேரிட்டது. கொஞ்சம் புகை மண்டிக்கிடந்த, பதினாறுக்கு பத்து அறையில் கணவனும், மனைவியும் பரிமாறிக்கொண்டிருந்தனர்.
லேசாக ஆடிக்கொண்டிருந்த, நீண்ட மரப்பெஞ்சில் அமர்ந்தபோது, அங்கு ஒலித்துக்கொண்டிருந்த பண்பலையின் சப்தம் பெரும் இரைச்சலாகவே தோன்றியது. சாப்பிட்டுக்கொண்டிருப்பவரின் இருக்கைக்கு பின் காத்திருக்கும் புது நாகரீகத்தின் காலக்கொடுமையை விட, இந்த கடை உசத்தலாகவே தெரிந்தது. பிரமாண்டமாய் ஏதும் இல்லாதபோதும், ஏதோ ஒன்று ஈர்த்தது.
அதற்கு அடுத்த சில நாட்களிலும் தொடர்ந்து அங்கே தான் என் காலை உணவு என்று விதிக்கப்பட்டிருந்தது போலும். பின் உட்கார்ந்த உடனே இரண்டு ஆப்பம் கொண்டு வந்து வைக்குமளவுக்கு புரிந்துக்கொண்டனர். ஒரு நாள் அல்சர் என்று சொன்னதும், அதன்பின் கார சட்னி தவிர்த்தனர்.
ஒரு நாள் மதிய உணவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் பணி மார்க்கெட்டிங் என்பதால் மதியம் வேறு எங்காவது இருக்க நேர்ந்ததால், இயலாமலேயே போனது.
ஒரு நாள் பதினாறு ரூபாய்க்கு, நூறு ரூபாய் நீட்ட, அவர் வழக்கமான பரபரப்போடு சில்லறை தேடி, இல்லாமல்போகவே நாளைக்கு குடுங்க என்றார்.
"வராம ஏமாத்திட்டா"
"சாப்பாட்டுக்காசு. கண்டிப்பா வந்திரும்"
அதெல்லாம் சரிங்க, ஏன் எப்பவும் அழுக்கு பனியனையே போட்டிருக்கீங்க, கேட்க வாய் துடித்தது, ஆனால் தவிர்த்தேன். (சிவாஜி படத்துல வந்த பட்டிமன்ற ராஜாவோட பாதிப்பாக இருக்குமோ?)
அதற்கு அடுத்த சில நாட்கள் அங்கு போகமுடியாதவாறு வெளியூர் பயணமானேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு அந்த கடைக்கு போனபோது, கடை வண்ணம் பூசப்பட்டு, தெளிவானதாய் மாறியிருந்தது.
அட ஆச்சர்யமே, எவ்ளோ பளிச்சுனு இருக்கு. அந்த பெண் ஆப்பம் சுட்டுக்கொண்டிருந்தாள். புதியதாய் இருந்த மற்றொரு பெண் இலைப்போட, சிறிது நேரத்திற்கு பிறகு அவங்க ஆப்பம் கொண்டு வரும்போது தான் கவனித்தேன், நெற்றியில் திருநீறு மட்டும் வைத்திருந்ததை.
என்னைப்பார்த்ததும், முகத்தில் அழுகைக்கான ஆயத்தம் தெரிந்தது. அவுங்ககிட்ட பேசியதில்லை என்பதால், நான் தவிர்க்க இயலாது தலைக்கவிழ்ந்தேன்.
"நீங்க கொடுக்குற அஞ்சு லட்சம் எத்தன நாளு எங்கூட இருக்கும், அந்த காசு எம்புருஷனுக்கு ஈடாகுமா? இரண்டு நாளு எனக்காக பாவபட்டு பேசுவீங்க, அப்புறம் நாந்தானே தனியா அல்லாடனும்? உங்க அரசியல் விளையாட்டுல நான் அனாதையா ஆயிட்டேனே" கணவனை, இலங்கை கடற்படையிடம் பறிக்கொடுத்த பெண் தொலைக்காட்சியில் கதறியது ஏனோ தொடர்பில்லாது நினைவுக்கு வந்தது. யாரால் பகிந்து கொள்ள முடியும் ஒரு மரணத்தின் உண்மையான வலியை...
தயக்கத்தோடு சாப்பிட்டு முடித்து, பணம் கொடுத்து மௌனமாய் வெளியேறினேன்.
அந்த கடையில் அதுவரை நான் எதிர்பார்த்த சுத்தம் அன்றிருந்தது, அந்த சுத்தத்தால் ஒரு மனிதர் இல்லாத வெறுமையை நிரப்ப முடியாமல் போனதைதான் வலியாய் உணர்ந்தேன்.
42 கருத்துரைகள்:
வயிறுநிறைய சாப்பாடு என்று எண்ணி..ஆனால் நெஞ்சு முழுவதும் வலியை உணர்ந்துகொண்டு...
வலி..............
இழப்புகளில் மிகப்பெரிய இழப்பு தான்
"நீங்க கொடுக்குற அஞ்சு லட்சம் எத்தன நாளு எங்கூட இருக்கும், அந்த காசு எம்புருஷனுக்கு ஈடாகுமா? இரண்டு நாளு எனக்காக பாவபட்டு பேசுவீங்க, அப்புறம் நாந்தானே தனியா அல்லாடனும்? உங்க அரசியல் விளையாட்டுல நான் அனாதையா ஆயிட்டேனே" கணவனை, இலங்கை கடற்படையிடம் பறிக்கொடுத்த பெண் தொலைக்காட்சியில் கதறியது ஏனோ தொடர்பில்லாது நினைவுக்கு வந்தது. யாரால் பகிந்து கொள்ள முடியும் ஒரு மரணத்தின் உண்மையான வலியை...////
நிஜமான வலியை உணா்ந்தேன்..
பகிர்வுக்கு நன்றிகள்.
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html
உண்மைதான்...ஓர் உயிரின் இடத்தை எதை கொண்டு நிரப்ப முடியும்?
வெறுமை தந்த வலி ...
நிகழ்வும் தங்கள் படைப்பும்
மனதை மிகவும் பாதித்துவிட்டது.
நல்ல படைப்பு
வலிகள் நிறைந்த உணர்வுகளை சொல்லி நெகிழ வைத்துவிட்டீர்கள் படிக்கும்போதே மனது கனக்கிறது...
//அந்த சுத்தத்தால் ஒரு மனிதர் இல்லாத வெறுமையை நிரப்ப முடியாமல் போனதைதான் வலியாய் உணர்ந்தேன். //
உண்மைதான் உயிரின் இழப்பை எப்படி ஈடு செய்ய இயலும்..
உணர்வுகளை வலிகளுடன் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றிங்க பாரதி...
நெஞ்சில் பாரத்தை ஏற்றி விட்டீர்கள். கணக்கிறது.
//என் பணி மார்க்கெட்டிங் என்பதால் மதியம் வேறு எங்காவது இருக்க நேர்ந்ததால், இயலாமலேயே போனது.//
//மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் படைப்புலகம். //
எங்கயோ இடிக்குதே
//எங்கயோ இடிக்குதே//
இது சிறுகதை. பார்த்த விஷயங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறுகதை
இது எமது முதல் சிறுகதை முயற்சி..
///பாரத்... பாரதி... said...
இது எமது முதல் சிறுகதை முயற்சி..//
நல்லாருக்கு...
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாரதி
நன்றி மாணவரே... இதைப்பற்றி கவிதை எழுதலாம் என ஆரம்பிச்சு, வடிவம் மாறி விட்டது. ஆனால் ஒன்று தெளிவாக புரிகிறது கதை எழுதுவது சாதாரண விஷயமல்ல. எழுத்தாளர்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..
முதல் முயற்சி நல்லாவே இருக்கு.... தொடருங்க....
நல்லாருக்கு...
வாழ்த்துக்கள்
//என் பணி மார்க்கெட்டிங் என்பதால் மதியம் வேறு எங்காவது இருக்க நேர்ந்ததால், இயலாமலேயே போனது./
நமது கே.ஆர்.பி. செந்தில் அவர்களை மனதில் கொண்டு மார்க்கெட்டிங் பணி என சொல்லியுள்ளோம். அவரை போன்று எழுத முடியாவிட்டாலும், அவர் எழுதுவதாக,, எழுதலாமே என்றுதான் இந்த முயற்சி.
முயற்சி நல்லா இருக்கு...
இழப்பு ஈடு செய்ய முடியாது என்றும்...
முடிவு வலிக்கிறது . நல்லா எழுத்து நடை வாழ்த்துக்கள்
சில இழப்புகளை பணத்தால் ஈடு செய்ய இயலாது.
//அந்த கடையில் அதுவரை நான் எதிர்பார்த்த சுத்தம் அன்றிருந்தது, அந்த சுத்தத்தால் ஒரு மனிதர் இல்லாத வெறுமையை நிரப்ப முடியாமல் போனதைதான் வலியாய் உணர்ந்தேன்//.
உண்மைதான்.அங்கு மீண்டும் போவதையே தவிர்க்க வேண்டும் என்று கூடத் தோன்றும்.மனம் லேசாக என் பதிவைப் பாருங்கள்,பாரதி!
எத்தனை நஷ்டஈடு கொடுத்தாலும் ஒரு உசுருக்கு ஈடாகாதுதான்.
சில மனிதர்களின் வெறுமையை இழந்தபின்தான் உணரமுடியும்..
முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி
முதல் கதையிலேயே முத்திரை பதித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
முதல் கதையா இது.. அருமை.. வாழ்த்துக்கள்
கதை நெகிழ வைத்து விட்டது.
நறுக்குன்னு மூணு ஒட்டு போட்டுவிட்டு கிளம்பியாச்சு...
உண்மைதான். ஓர் உயிரின் இடத்தை பணத்தைக்கொண்டுமட்டுமில்லை, வேறு எதனாலும் நிறப்பமுடியாதுதான்.
வலிகள் சுமப்பதே சாமான்யர்களின் வாழ்க்கையாகிவிட்டது சகோ ........
அரசியல் வழுக்கை மண்டையர்கள் தமிழ் தமிழன்னு பேசிக்கிட்டு சமுதாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழகத்திலும் உரிமை போராளியாக வார்த்தைகளில் அல்லாது செயல் வீரனாக ஒரு பிரபாகரன் தோன்றவேண்டும் போல தோன்றும் காலமும் விரைவில்
சாப்பிட்டுக்கொண்டிருப்பவரின் இருக்கைக்கு பின் காத்திருக்கும் புது நாகரீகத்தின் காலக்கொடுமையை விட, இந்த கடை உசத்தலாகவே தெரிந்தது///
யதார்த்த வரிகள் !!
கஷ்டம்தான்
அந்த கடையில் அதுவரை நான் எதிர்பார்த்த சுத்தம் அன்றிருந்தது, அந்த சுத்தத்தால் ஒரு மனிதர் இல்லாத வெறுமையை நிரப்ப முடியாமல் போனதைதான் வலியாய் உணர்ந்தேன்.
.....மனதை கனக்க வைத்து விட்டீர்கள்.
கதை நன்றாக வந்திருக்கிறது. இழப்பின் வழியை உணர்த்துகிறது!
இழப்பின் வலியை உணர்த்துகிறது!
முடிவு அருமை..ஆரம்பத்தில் கட்டுரை போல் தோற்றமளித்தாலும், பாதியில் இருந்து கதை வடிவம் வந்துவிட்டது..தொடர்ந்து கதை சொல்லுங்கள்!
அந்த கடையில் அதுவரை நான் எதிர்பார்த்த சுத்தம் அன்றிருந்தது, அந்த சுத்தத்தால் ஒரு மனிதர் இல்லாத வெறுமையை நிரப்ப முடியாமல் போனதைதான் வலியாய் உணர்ந்தேன். //
Arumai...
Iruthi varigalai en thaathaavin maranatthin pothu unarnthu irukkiren.
உயிரிழப்பின் வலியைத் தெளிவாக உணர்த்தியிருக்கீங்க.
முதல்முயற்சியே அருமை...வாழ்த்துக்கள்!
அருமையான கதை...உண்மையும் கூட....
http://virtualworldofme.blogspot.com/2011/01/blog-post_25.html
வலி:(
கதையா? உண்மைச்சம்பவமா? கட்டுரையா? தெரில.. ஆனா மனதைக்கலங்க வைத்து விட்டது
காட்சி கண்முன்னாடி விரியுது....
சபாஷ் பாரத்
மனசு வலிக்கிறது
சாப்பிட்டுக்கொண்டிருப்பவரின் இருக்கைக்கு பின் காத்திருக்கும் புது நாகரீகத்தின் காலக்கொடுமையை விட,
Well said! and well done!
Post a Comment