குறைந்த பட்சம் அதர்மமாவது, அதர்மத்தை அழிக்கட்டும்.முன்பொரு முறை ராஜபக்சேவுக்கு புற்றுநோய் என்று தகவல்கள் வந்த போது, கொஞ்சமாய் சந்தோஷம் பரவியது   என் உள்மனதில்.

அடுத்தவன் மரணிக்க நினைக்கும் நீயெல்லாம் மனுசனா, மிருகமா என்று நீங்கள் நினைக்கூடும்.

ஒருவனின் மரணத்தை நினைத்த, எதிர்பார்த்த நான் மிருகம் என்றால், ஒரு இனத்தை மரணிக்க வைத்த அவனை என்னென்று சொல்வீர்கள்.

நானும் மனுசன், ராஜபக்சேவும் மனிதன் என்று, ஒரே தட்டில் எங்கள் இருவரையும் நிறுத்தப்படுவதாக இருத்தால், மனிதம் என்ற போர்வையே வேண்டாம் எனக்கு. எனக்கு மட்டுமல்ல இன்னும் பல சாமானியனுக்கும் இந்த எண்ணம் இருக்கும் என்று நம்புகிறேன்.

ராஜபக்சேவுக்கு புற்று நோய் என்றவுடன் கிளம்பிய சின்னதொரு சந்தோஷம் மீண்டும் உருவெடுத்து இருக்கிறது எனக்குள் இப்போது.

தான் விதவையானதால், தமிழ் இனத்தை சார்ந்த பல பெண்களை விதவையாக காரணமாக இருந்த, அன்னை இப்போது ஆஸ்பத்திரியில்.

சத்தம் இல்லாமல் அமெரிக்காவில் சிகிச்சையாம். ஆனால் நிச்சயம் வலித்திருக்கும் தானே?

வலிக்கும் போது என் இன பச்சினம்குழந்தைகள் கூட அனுபவித்த ரணவலி, அந்த "அன்னைக்கும்(???)" உண்டாகியிருந்தால், தெய்வம் என்பது இருக்கிறது என்னும் என் நம்பிக்கை இன்னும் உறுதிப்படும்.

தர்மம், நியாயம் என்று முறைப்படி வாழ்ந்துவிட்டு, இன்று நேசம் தொலைத்து, தேசம் மறந்து, கனவுகள் களைந்து, 1000 ரூபாய் தர்மம்  வாங்கி பிழைக்கும் வண்ணம், வாழ்க்கையின் கசப்புக்களை  நிதம் நிதம் விழுங்கிக்கொண்டிருக்கும் என் இனத்தை நினைக்கும் போதெல்லாம்,

அதர்மத்தை, தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நம்பிக்கை இப்போதெல்லாம் இற்றுப்போய் விட்டது எனக்குள்.

குறைந்த பட்சம் அதர்மமாவது, அதர்மத்தை அழிக்கட்டும்.

இன்னொரு உயிரைக்கொன்று புசிப்பவன் அரக்கன் என்றால்,
என் இனத்தை அழித்து புசித்த, அந்த அரக்கத்தனம் மிக்கவர்களுக்கு வாழ்வில், இறக்கும் போதாவது புரியட்டும் எம்மக்கள் அனுபவித்த கொடுமை எத்தகையது என்று.
 படங்கள்
http://dreambigalwaysss.blogspot.com/2009_05_01_archive.htmlவாக்களிக்க மட்டுமே தெரிந்த இன்னுமொரு வாயில்லா பூச்சியின் வார்த்தைகளாய், என் வார்த்தைகள் கோர்வையில்லாது தடுமாறுவது, எனக்கே கூட நன்றாக தெரிகிறது எனினும் என் உணர்வுகள், உங்களுக்கு புரியுமென்று நம்புகிறேன்.

18 கருத்துரைகள்:

செங்கோவி said...

நானும் இந்த சந்தோசமான செய்தியை எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்..இப்போது துணிந்து நீங்கள் சொல்லிவிட்டீர்கள்..

செங்கோவி said...

நம்மைப் போன்றே அவர்களும் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்றால், தெய்வம் ஒன்று இருந்து தான் என்ன பயன்?..இன்னும் அதிக கேடு அவர்களை வந்தடையும்..

விக்கியுலகம் said...

மாப்ள ஒன்னு சொல்லிக்கறேன்...எப்பவுமே ஒன்னு சொல்லுவாங்க பெரியவங்க....நாம நெறய பாவம் செய்ஞ்சி இருந்தா சீக்கிரத்துல சாக முடியாது....உடல் மற்றும் மனசு அந்த வலிகளை அனும்பவிச்சி தீரனும்...பாருங்க துரோகம் பண்ண தாத்தா படும் அவஸ்தையை....அதே போல அந்த இட்லி காரியும் அனுபவிக்கிறாங்க.....அடுத்து இதுக்கு முதல் காரணமான இந்த ராட்சசனும் அனுபவிப்பான்....wait and see...the show begin....

கலாநேசன் said...

ராஜபக்சேவுக்கு புற்று நோயா! புற்று நோய்க்கே புற்று நோயா! ஸ்வீட் எடு கொண்டாடு!

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த உலகில் மனிதாபிமானம் அற்ற யாரும் வாழ தகுதியுடையவர்கள்...

ராஜபக்சே முடிவு சீக்கிறம் வரவேண்டும...

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
நானும் மனுசன், ராஜபக்சேவும் மனிதன் என்று, ஒரே தட்டில் எங்கள் இருவரையும் நிறுத்தப்படுவதாக இருத்தால், மனிதம் என்ற போர்வையே வேண்டாம் எனக்கு/
/////////

இரு இனம் அழிவதை கண்டு நெஞ்சம் துடிக்கும் நீர் மனிதன்..

ஒரு இனத்தையே வேறறுத்த ராஜபக்சே மனிதனில் சேர்க்க முடியாதவர்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மிகவும் துணிச்சலான பதிவு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நீங்க முத்த வரில சொன்ன செய்தி,,,


ஸ்வீட் எடு .. கொண்டாடு..

Anonymous said...

இப்ப எல்லாம் எங்க தர்மம் நியாயம் எல்லாம் ...(((

மாணவன் said...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!,

சி.பி.செந்தில்குமார் said...

engkee adharmam aliyuthu?all r good...

vidivelli said...

சகோ/ உங்களின் உள்ளக்கொதிப்புப்போல் தான் எனக்கும் கொதித்துக்கொண்டிருக்கிறது...
அவர் அணுவணுவாய்த்தான் சாக வேண்டும்.துடிக்க துடிக்க கொன்று குவித்த அரக்கனை எப்படி பெயர்கொண்டு சொல்லமுடியும்...
அருமையான பதிவு..
எனக்கு உங்க பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு..

கவி அழகன் said...

நல்லதே நடக்கும்

ஜெய்லானி said...

///செங்கோவி said...

நானும் இந்த சந்தோசமான செய்தியை எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்..இப்போது துணிந்து நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.//நான் நினைச்ச அதே கமெண்ட் ..நீங்க போட்டுட்டீங்க :-)

சென்னை பித்தன் said...

பொங்கியெழுந்த உள்ளுணர்வுகளைத் துணிவுடன் சொல்லியிருக்கிறீர்கள்!

ஆமினா said...

துணிவுக்கு பாராட்டுக்கள்

பலே பிரபு said...

உண்மை தமிழனின் உணர்வு இது

Chitra said...

தர்மம், நியாயம் என்று முறைப்படி வாழ்ந்துவிட்டு, இன்று நேசம் தொலைத்து, தேசம் மறந்து, கனவுகள் களைந்து, 1000 ரூபாய் தர்மம் வாங்கி பிழைக்கும் வண்ணம், வாழ்க்கையின் கசப்புக்களை நிதம் நிதம் விழுங்கிக்கொண்டிருக்கும் என் இனத்தை நினைக்கும் போதெல்லாம்,


..... நினைத்து பார்க்கும் போதெல்லாம், மனதை பிசையும் உணர்வு....

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்