ஞானம் பிறந்த கதை - கவிதையாகிய போது...


கடவுளைத் தேடித் தேடி 
தேய்ந்து போனது
கால்கள்.


காண முடியாமல்
காய்ந்து போயின 
கண்கள்.


இறுதியில் இமைகளை
மூடிக்கொண்டு 
தேடினேன்.


ஞானம் பிறந்தது....


பத்து மாதங்களாய் 
கருவறையில்
காத்து
பெற்று 
வளர்த்த 
தாயே கடவுள்!கவிதையாக்கம்:
ம.புவனேஸ்வரி
பதினொன்றாம் வகுப்பு மாணவிவிளம்பரம்:
நாளை சூடான அரசியல் அலசல் 
19 கருத்துரைகள்:

விக்கியுலகம் said...

மாப்ள நெகிழ வச்ச கவிதைக்கு நன்றிங்கோ!

# கவிதை வீதி # சௌந்தர் said...

சூப்பர்...
கவிதை....

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஒவ்வோறு வீடுகளில்
அவதரித்த கடவுளே..
அம்மா...

# கவிதை வீதி # சௌந்தர் said...

பள்ளியில் ஒரு கவிஞரை உறுவாக்கிவிட்டுவிட்டீர்கள்..

வாழ்த்துக்கள்..
அந்த மாணவிக்கும் தங்களுக்கும்

# கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ்மணம் இணைத்துவிட்டு ஓட்டும் போட்டாச்சி...

Ramani said...

பதினோராம் வகுப்பு மாணவியின் கவிதையா
நம்பவே முடியவில்லை
எத்தனை கருத்துச் செரிவான கவிதை
மனமார்ந்த வாழ்த்துக்கள்
தொடரட்டும் அவர் கவிதைப் பணி

சென்னை பித்தன் said...

பகிர்வுக்கு நன்றி.

vidivelli said...

உண்மைதான் சிலைகளை தேடி அவர்களிடம் அலைவதை விட
எங்கள் அன்புத்தெய்வத்தை வணங்கினாலே போதும்..
அருமையான கவிதை..
வாழ்த்துக்கள்..

vidivelli said...

இக்கவிதையை எழுதிய மாணவிக்கு
பாராட்டுக்கள்..
பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்..

Lakshmi said...

படிக்கும் வயதிலேயே இப்படி கவிதை எழுதும் திற்மையா பாராட்டுக்கள்.

ஆமினா said...

புவனேஷ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

தமிழ்வாசி - Prakash said...

இளம் கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

வருங்கால வைரமுத்தினி வாழ்க....!!

Chitra said...

கவிதையாக்கம்:
ம.புவனேஸ்வரி
பதினொன்றாம் வகுப்பு மாணவி

..... புவனேஸ்வரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
அவளின் கவிதையை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

செங்கோவி said...

நல்ல கவிதை..மாணவிக்கு வாழ்த்துகள்.

நிரூபன் said...

அன்னையின் திரு உருவில் இறைவனைக் காணும் அற்புதமான உள்ளத்து உணர்வலைகளை பகிர்ந்திருக்கிறீங்க.

அமைதிச்சாரல் said...

அசத்தலான கவிதை.. எழுதிய புவனிக்கு பாராட்டுகள்..

சி.பி.செந்தில்குமார் said...

கவிதைக்கும், கவிதாயினி மாணவிக்கான அறிமுகத்துக்கும் நன்றிகள்

kavithai said...

vaalthukal to Bhuvaneswary. Good.

Vetha. Elangathilakam.
http.kovaikkavi.wordpress.com

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்