இயற்கையே...
உன்னிடம் உள்ள சிறந்த மூங்கில் கொண்டு
என் மகளுக்கு இன்னிசை பாடு...
அவளின் கனவுகள் முடிவின்றி நீளட்டும்..
உச்சி வானத்து சூரியனே.,
இரவின் நிலவிடம் குளுமையை
கடன் வாங்கி.,
உன் வெப்பத்தின் வேகத்தை குறைத்துக்கொள்...
என் தேவதை கண் உறங்குகிறாள்..
என் இதயம் போல
வெண்மை காட்டி,
சிலிர்த்திடும் பறவைகளே
உங்கள் இறக்கைகளின் வேகங்களை
கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்..
என் இளவல் தூங்குகிறாள்.
இப்படியாய்...
இன்னுமாய்..
இயற்கையிடம் மட்டுமல்லாது
செயற்கை மனிதர்களிடமும்
என் குழந்தைக்காக வேண்டிக்கொள்ள
ஏ... இரக்கமற்ற இறைவா
எனக்கொரு குழந்தை வரம் கொடு...
கவிதையாக்கம்:
க.ரேணுகா.
டிஸ்கி:
ரேணுகாவின் கவிதைக்கான பின்னூட்டம்; இந்த பதிவுக்கான தலைப்பாகி விட்டதால், பின்னூட்டமாக கவிதைக்கான தலைப்பை தர முடியுமா உங்களால்..
25 கருத்துரைகள்:
கவிதை சூப்பரா இருக்கு!
தலைப்பு....
எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாததால் சும்மா....'வேண்டுதல்'?
என்று என் வலையில்
டென்ஷன் ஆகாதிங்க பாஸ்…
”இறைவனும் தூங்குகிறான்?”
அருமையான கவிதை.... வாழ்த்துகள் ரேணுகா
தலைப்பு: "குழந்தை வரம்"
வணக்கம் மச்சி,
குழந்தையின்றி ஏக்கமுறும் தாயின் அல்லது ஒரு பெண்ணின் உள்ளத்து உணர்வுகளைக் கவிதை தாங்கி நிற்பதால்,
‘வரம் வேண்டும் இறைவா’
இப்படி ஓர் தலைப்பு வைக்கலாமா.
அழகான கவிதை. இறுதி வரிகள் கனக்க வைக்கிறது (
குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் நிலை கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது :(
அசத்தலான கவிதை சகோ..
தலைப்பு என்ன தலைப்பு..
கடைசியில் கலக்கிட்டாங்க..
யாராலும் தர முடியாத வரம் - டைட்டில்
குழந்தையும் தெய்வமும் ஒன்றாகுமா?
கவிதை அருமை
ஒரு பெண்ணின் ஏக்கம்....
மொட்டுக்காக மலரின் தவம்.....
தாலாட்டும் வரம் தா....
தாயன்பு வேண்டுதல்
கலக்கிட்டீங்க....
செம டச்சிங்....
வாழ்த்துக்கள்.*** தாலாட்டுப்பாட தருவாயோ வரம்***
ஆண்டவா குழந்தை வரம் கொடு.
இறைவா நீ தூங்கும் நேரத்தில்
தேவதை வரம் ..
கவிதை நன்றாக இருந்தது.
’’இறைவா, கொஞ்சிட பிஞ்சொன்று கொடு’’.
அருமையான கவிதை
வரம் தர வேண்டும் இறைவா!!
நிலவுக்கு ஏங்கும் வானம்.
பிள்ளைக்கு ஏங்கும் கிள்ளை
தாய்மை வரம்.(தலைப்பு)
கவிதை நன்றாக இருக்கிறது.
ஏக்கம் தொனிக்கும் கவிதை.
இனிய வ்ரம் விரைவில் கிடைக்கும்.
அருமை ரேணுகாக்கு பாராட்டுக்கள்
'பிள்ளை பிச்சை' என்று விரக்தியான தலைப்பை வைக்கலாமா அந்த தாயின் மனசுபோல
Post a Comment