விஜயகாந்துக்கு இது தான் சத்திய சோதனைக்காலம்..ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாக விளங்ககூடியவர் என்று அடையாளம் காட்டக்கூடிய வகையில் தமிழகத் தலைவர்களில் மீதமிருப்பவர் என பெரும்பாலானவர்களின் ஈர்ப்பை பெற்றிருந்தார் விஜயகாந்த்.

கறுப்பு எம்.ஜி.ஆர்., என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் விஜயகாந்த், "நானே முதல்வர்" என்ற அறைக்கூவலுடன் அரசியலுக்கு வந்தார் என்றாலும் கூட, "நாற்பது சட்டமன்ற தொகுதிக்கான சீட்" என்ற தொகுதி உடன்பாட்டுக்குள் வந்தவுடன், "அட போங்கப்பா... மீண்டும் ஜெயலலிதா, கருணாநிதி தானா?" என்று நடுநிலை வாக்காளர்கள் சலிப்பு தட்டினார்கள்.

ஆளுங்கட்சிக்கு எதிராக செய்யும் அரசியல் நடத்தி, சீக்கிரம் கால் ஊன்றுதல், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் இழுத்தல் என்ற அரசியல் ஆரம்ப பாடத்தில் தேர்ச்சி பெற்று, தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அளவுக்கு உயர்ந்திருக்கும் விஜயகாந்துக்கு இனி வரும் தேர்தல்கள் நிச்சயம் சத்திய சோதனை தான்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, கலைஞர் அரசுக்கு எதிராக அறிக்கை அரசியல் நடத்திய பாமகவின் மருத்துவர் பாணியில், அம்மாவிடம் கேப்டன் "உள்ளிருந்து எதிர்த்தல்" அரசியல் பண்ண முடியாது. 

சட்டமன்றத்தில் இவ்வளவு அசுர பலம் கிடைக்கும் என்பது ஜெயலலிதாவுக்கு முன்பே தெரிந்திருந்தால், விஜயகாந்துக்கு நாற்பது சீட்டுக்களை ஜெயலலிதா ஒதுக்கி இருக்கமாட்டார், ஏன் கூட்டணியில் கூட சேர்த்திருக்கமாட்டார். விஜயகாந்த் இத்தனை தொகுதியில் ஜெயித்ததை அம்மா, அவ்வளவாக ரசித்திருக்க மாட்டார் என்பது தான் உண்மை.

தேர்தலுக்கு முன்பே இப்படி என்றால், தேர்தலுக்கு பின்பு ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வது விஜயகாந்துக்கு இப்போதைய சூழ்நிலையில் கஷ்டம் தான்.

இன்னும் ஆட்சிக்கு எதிராக அதிக அளவில் போராட்டங்களோ, முணுமுணுப்புகளோ, பெரிய அளவில் கிளம்பாத நிலையில்,
ஜெயலலிதாவை எதிர்த்தால், தேமுதிகாவுக்கு உள்ளாட்சி தேர்தலில் இதே அளவு அடையாளம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

சமச்சீர் கல்வி விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் அரசுக்கு, எதிர்ப்பு காட்டிய போது, விஜயகாந்த் எதிர்க்க துணியவில்லை என்பது தான் உண்மை. குதிரை கிடைக்கும் வரை கழுதை என்று சப்பைக்கட்டு தான் கட்ட முடிந்தது.(இப்போது கழுதை தான் என்று முடிவாகிவிட்டபின், குதிரை தேடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, அம்மா சொன்னால் கழுதை தான் இந்த கள்ளழகரின் குதிரை போல)

அதிமுக போலவே தேமுதிகவும் கிராமப்புறங்களில் அதிக வாக்கு வங்கியைக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். இது முக்கியமாக "கவர்ச்சியை அடிப்படியாகக் கொண்ட வாக்கு வங்கி". எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் என்ற பிம்பங்களுக்காக மட்டும் வாக்களிப்பவர்கள் இன்றும் அதிக அளவில் இருக்கிறார்கள்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, நடிகர்கள் மீதான கவர்ச்சியை அப்படியே, ஓட்டுக்களாக மாற்றும் வித்தை எம்.ஜி.ஆர், தவிர வேறு யார்க்கும் வாய்க்கவில்லை. விஜயகாந்துக்கு கட்சியை நடத்தும் அளவுக்கு அந்த கவர்ச்சி உதவியிருக்கிறது அவ்வளவே.

இலவசங்களை காட்டி இந்த ஓட்டு வங்கியை தன் பக்கம் திருப்ப திமுக போட்ட திட்டங்கள் அரசியல் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால்.., சினிமாவை அடிப்படையாக கொண்ட, வெள்ளந்தி மனிதர்களின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்வதில் உண்மையில், ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே தான் போட்டி.

கிராமப்புறங்களில் தேமுதிக வேர் ஊன்றி விட்டால், தமிழக அரசியலில் விஜயகாந்த், தவிர்க்க இயலாத சக்தியாக மாறிவிடுவார் என்பது ஜெயலலிதா தெரியாமல் இல்லை.

ஆட்சியில் இருப்பதால், சலுகைகளை வழங்கி, கிராமபுற ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ளவே ஜெயலலிதா விரும்புவார் என்பதால், இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு அவர் வழிவிடப்போவதில்லை.

டிஸ்கி:    
ஆட்சியாளர்களை ஆதரித்து அரசியல் நடத்தலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சரத்குமார், கிருஷ்ணசாமி, ஜாவஹிருல்லா என பெரும் கூட்டமே காத்துகொண்டிருக்கிறது. (உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதேனும் ஒரு நாளின் சட்டமன்ற நிகழ்வை ஜெயா டிவியில் பாருங்களேன்)

30 கருத்துரைகள்:

விக்கியுலகம் said...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி....கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!

தினேஷ்குமார் said...

கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு ...

செங்கோவி said...

அப்படியா..அப்போ சத்தியத்துக்கே சோதனைக்காலம்னு சொல்லுங்க!

செங்கோவி said...

நல்ல வாய்ப்பு தான்..பட்டையை கிளப்பலாம் தான்..ஆனாலும் ஏன் பன்னீர்செல்வம் ரேஞ்சுக்கு பம்மறாரு..உள்ளாட்சித் தேர்தலுக்கு அப்புறம் பார்ப்போம்.

VELU.G said...

எனக்கென்னவோ இது ரெஸ்ட் எடுக்கற காலம்னு தோனுது

நிரூபன் said...

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, நடிகர்கள் மீதான கவர்ச்சியை அப்படியே, ஓட்டுக்களாக மாற்றும் வித்தை எம்.ஜி.ஆர், தவிர வேறு யார்க்கும் வாய்க்கவில்லை.//

ஆமாம் பாஸ்...கலைஞரினை இம் முறைத் தேர்தலில் மக்களால் புறந்தள்ள வேண்டும் எனும் ஒரேயொரு நோக்கம் தான் கப்டனை வெற்றி பெறச் செய்திருக்கிறது.

நிரூபன் said...

ஆட்சியில் இருப்பதால், சலுகைகளை வழங்கி, கிராமபுற ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ளவே ஜெயலலிதா விரும்புவார் என்பதால், இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு அவர் வழிவிடப்போவதில்லை.//

விஜயகாந்தைக் கூட ஜே அவர்கள் கைப் பொம்மையாகத் தான் பயன்படுத்துவார் என்று நினைக்கிறேன்.

தமிழ்வாசி - Prakash said...

அவருக்கு சுதி கொஞ்சம் இறங்கிருச்சாம்...

தமிழ் உதயம் said...

சட்டசபைக்கு தொடர்ந்து மட்டம் போடும் விஜயகாந்தை பார்க்கும் போது, விஜயகாந்த் இந்த சோதனையில் தேறுவது கடினமே.

ஜீ... said...

//"உள்ளிருந்து எதிர்த்தல்" //
அதெப்பிடி வெளியே இருந்தாலே பம்முதல் தான் செய்யலாம்! உள்ள இருந்து எப்பிடி எதிர்க்கிறது? :-)

ஜீ... said...

தமிழ்மணம் 7

கழுதைய விடுங்க.. மகனை வேற நடிக்கவைக்கப் போறாராம்! எல்லாரும் பீதில இருக்காங்க!

சங்கவி said...

உண்மைதான்....

அரசன் said...

சரியான நேரத்தில் சிறந்த பகிர்வு

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அம்மா என் இவரு இப்படி பம்மராறு..

பலே பிரபு said...

ஆனால் விஜயகாந்த் இல்லை என்றால் அம்மாவால் இவ்வளவு தொகுதிகள் பெற்று இருக்க முடியாது என்பது என் கருத்து.

Thirumani Pandian said...

அம்மாவை பாத்தாலே விஜயகாந்து நடுங்கிறாரு அப்புறம் எங்க எதிர்த்து பேச. அவரு எதோ அரசிலுக்கு வந்தோமா காசு பாத்தோம கட்சிய வளர்தோமன்கிற முடிவுல இருக்காரு. அவர நம்பி ஒட்டு போட்ட மக்கள் தான் ஐயோ பவம்.இதுக்கு முன்னாடி 5 வருஷம் விருதாச்சலம் தொகுதில எம்எல்எ இருந்து என்னத்தை கிலிச்சறு??? தொகுதி பக்கமே போனதில்லை அந்த 5 வருசமா

Thirumani Pandian said...

இதுக்கு முன்னாடி 5 வருஷம் விருதாச்சலம் தொகுதில எம்எல்எ இருந்து என்னத்தை கிலிச்சறு??? தொகுதி பக்கமே போனதில்லை அந்த 5 வருசமா இவருக்கு ஒட்டு போட்ட மக்கள் நிலைமைதான் ஐயோ பாவம்

முனைவர்.இரா.குணசீலன் said...

குதிரை கிடைக்கும் வரை கழுதை

உண்மைதான்.

சென்னை பித்தன் said...

என்னதான் செய்வார் கேப்டன்?!

மாய உலகம் said...

அரசியலின் அலசல் அருமை அன்பரே

மாய உலகம் said...

தமிழ்மணம் 12

Anonymous said...

அவருக்கு நேரம் சரியில்லை என்று சொல்லுங்கள்...
அடுத்த தேர்தலில் அம்மாவோடு சேர்ந்து காணாமல் போவார்....இன்னும் முழிக்கவில்லை என்றால்...

மைந்தன் சிவா said...

அரசியலா??ஹிஹி தமிழக அரசியலா??ஹிஹிஹிஹி

Nesan said...

namba gapdan orunal varuvar parungal makkal avarai mathippathai nerel pathan nichayam dmk mann kavum aduttha cm captan thanan

vidivelli said...

அரசியல் அலசல் நல்லாயிருக்குங்க...
எல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்ப்போம்..

சி.பி.செந்தில்குமார் said...

அலசி காயப்போட்டாச்சு போல!!

Kannan said...

உங்கள் அலசல் சூப்பர்.
தொடருங்கள்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

shanmugavel said...

சிறப்பான அலசல்.

Lakshmi said...

என்னதான் முயன்றாலும் இந்த அரசியலையும், நம்ம அரசியல் வாதிகளையும் புரிஞ்சுக்கவே முடியாது.

Ramarajan said...

உண்மைதான்.இப்ப என்ன பன்னமுடியும்.பொருத்திருந்து பார்ப்போம் என்ன செய்(ய)வா(ரா)ருன்னு.!

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்