இது பூக்கள் பூக்கும் தருணம்...

மழலையைப் போலவே, மழலையைப் பற்றி பேசும் வார்த்தைகளும் கூட மிக ரசனைக்குரியவைகளாக மாறிவிடுகிறது. அதிலும் கவிதை வரிகளாக மாறும் வார்த்தைகளில் சுகம் இன்னமும் அதிகம்.



 வாராய் என் பிள்ளை கனியமுதே...

இந்த ஜென்மம் முழுவதும்
உன்னை நான்
ரசித்திட வேண்டும்.
தாமரை இதழ்களை
கோர்த்து செய்த
விரல் பிடித்து
இந்த பிறவி முழுவதும்
நான் நடந்திட வேண்டும்.

உன் மழலை மொழியில்
கொஞ்சம்
சிதைந்து வரும்
என் பெயரின்
எதிரொலியை
வாழ்நாள் முழுவதும்
நான் கேட்டிட வேண்டும்.

 உன் பிஞ்சு சிறுவிரல்கள்
அடித்து என் கன்னங்கள்
சிவந்திட வேண்டும்.

 உன் சின்னஞ்சிறு சிரிப்பில்
என் துன்பங்கள்
நிறம் மாறிட வேண்டும்.

உன்னுடைய இளைய முகம்
பார்த்துதான் என் தினசரிகள்
விடிந்திட வேண்டும்.

எந்தன்
தாலாட்டுப்பாடலில்
நீ கண்ணுறங்கிட வேண்டும்.
உறக்கம் வராத பொழுதுகளில்
உன் நெற்றியை
மயிலிறகால்
வருடிட வேண்டும்.


உன் முகம்
பார்த்துக்கொண்டிருக்கும்
ஏதேனும் ஒரு பொழுதில்
நான் மரித்திட வேண்டும்.



இது போல
யாருக்கும்
ஜென்மம் முடிந்ததில்லையென
கவிதையாய்
என் வாழ்வு
முடிந்திட வேண்டும்.

- பாரதி.

2011-இது மகிழ்ச்சி பூக்கள் பூக்கும் தருணம்...




பிரபலங்களுக்கு புத்தாண்டு பலன் சொல்லியிருக்கும் குறட்டை புலியின் அட்டகாசங்களையும் பாருங்களேன். 
http://sleepingtiger007.blogspot.com

24 கருத்துரைகள்:

Unknown said...

கவிதை என்பது தரும் சுகம் அதிகம். வயதில் குழந்தையாக இருந்தாலும், முதிர்ந்தவரின் வாழ்க்கை வாழும் வசதி கவிதை தருகிறது. முதிர்ந்தவர் மீண்டும் அடிசில் சிதறிய காலத்திற்கு திரும்ப வாய்ப்பளிக்கிறது.

மாணவன் said...

//இது போல
யாருக்கும்
ஜென்மம் முடிந்ததில்லையென
கவிதையாய்
என் வாழ்வு
முடிந்திட வேண்டும்.//

சிறப்பான வரிகள் சூப்பர்

உங்களுக்கு மீண்டும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாரதி

மாணவன் said...

இந்த புது வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

நன்றி
நட்புடன்
உங்கள் மாணவன்

சென்னை பித்தன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ம.தி.சுதா said...

என் அன்பு உறவுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

arasan said...

நல்ல பதிவு ... அருமையா இருக்குங்க வரிகள்...

தொடரட்டும் ... வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

செங்கோவி said...

கவிதை அருமை...புத்தாண்டிலும் தொடரட்டும் சந்தோஷம்..

ஹேமா said...

குழந்தை என்பதே குடும்பத்தில் ஒரு கவிதைதானே.அருமையாயிருக்கு கவிதை பாரத் !

நல்வாழ்த்துகள் !

வினோ said...

எத்தனை எழுதினும் கவிதை கொட்டிக் கொண்டே இருக்கும்...:)

புத்தாண்டு வாழ்த்துக்கள்....

NKS.ஹாஜா மைதீன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

Unknown said...

//உன் முகம்
பார்த்துக்கொண்டிருக்கும்
ஏதேனும் ஒரு பொழுதில்
நான் மரித்திட வேண்டும்.//

இந்த வரிகளைத் தவிர்த்திருக்கவேண்டும்...

THOPPITHOPPI said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

ஆமினா said...

தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/2010.html#more

வைகை said...

கொஞ்சம் லேட் பாரதி! உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! இரண்டு நாளும் என் பதிவுலகிற்கு விடுமுறை! அதான் வரவில்லை! இந்த கவிதையை என் மகளிடம் நேரடியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்!

தினேஷ்குமார் said...

தாமதத்திற்கு மன்னிக்கவும் பாரதி

முதலில் உங்கள் ரோசாபூந்தோட்டத்திற்க்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மென்மேலும் வலையுலகில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

***இது போல
யாருக்கும்
ஜென்மம் முடிந்ததில்லையென
கவிதையாய்
என் வாழ்வு
முடிந்திட வேண்டும்.***

என்ன பாரதி இது மரிப்பு முடிவு என்று ..

இவைபோல
உலகமில்லையென
கவிதையில்
என் வாழ்வு
தொடர்ந்திட வேண்டும் ...

***உன் முகம்
பார்த்துக்கொண்டிருக்கும்
ஏதேனும் ஒரு பொழுதில்
நான் மரித்திட வேண்டும்.***

உன் முகம்
பார்க்கும் நேரம்
கண்கள் உறக்கம்
மறந்ததடா என் கண்ணா...

தயவு செய்து வரிகளை மாற்றுங்கள்

sathishsangkavi.blogspot.com said...

//இது போல
யாருக்கும்
ஜென்மம் முடிந்ததில்லையென
கவிதையாய்
என் வாழ்வு
முடிந்திட வேண்டும்.//

Nice....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல வரிகள்... புத்தாண்டு வாழ்த்துக்கள், நன்றி!

சசிகுமார் said...

//பாரத்... பாரதி... said...
மன்னிக்கவும், தமிழ் மணத்தில் வாக்களிக்க இயலவில்லை//

கீழே உள்ள பட்டையில் முயன்று பார்த்து பதில் கூறவும் பதிலுக்காக காத்திருக்கிறேன்

செல்வா said...

/உன் பிஞ்சு சிறுவிரல்கள்
அடித்து என் கன்னங்கள்
சிவந்திட வேண்டும்.//

அருமைங்க ,

//உன்னுடைய இளைய முகம்
பார்த்துதான் என் தினசரிகள்
விடிந்திட வேண்டும்.//

ரொம்ப நல்லா இருக்குங்க ..!! குழந்தைகள் பற்றிய கவிதை எப்பவுமே இனிமையா இருக்கும் .!

Anonymous said...

உறக்கம் வராத பொழுதுகளில்
உன் நெற்றியை
மயிலிறகால்
வருடிட வேண்டும்//
ரொம்ப அருமையான கற்பனை

Anonymous said...

கவிதைகள் இன்னும் சிறிய எழுத்துக்களில் வெளியிடலாமே

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்