மன்(மோகன்) அம்பு - இது அரசியல் வம்பு.

கடந்த 2010 ஆண்டினை கலங்கடித்த, பிரபலங்கள் பற்றிய கேள்விகள்
இவை, சிலவற்றிற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை, மக்களின் மறதிக்காக காத்திருக்கிறார்களோ என்னவோ?


மன்மோகன் சிங்
விலைவாசியை குறைக்கச்சொல்லி,உங்க அமைச்சரவையில் உள்ள சரத்பவாருக்கு ஒரு கடிதம் எழுதுனீங்களே....நல்ல ஐடியாங்க. ஆனா காரியம் ஒண்ணும் நடந்த மாதிரி தெரியலையே?
- உங்களுக்கு கீழ் இருக்கிற அமைச்சருக்கே, கடிதம் எழுதிதான் விலைவாசி நிலவரத்த சொல்ல வேண்டியதா இருக்கே. பாவங்க நீங்க. அதெல்லாம் இருக்கட்டும் அந்த லட்டர்ல மானே, தேனே அப்படினு போட்டிங்களா?
 
:

சுரேஷ் கல்மாடி
போன வருஷ சாம்பியன் நீங்களா, லலித் மோடியா?

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
மதராசப்பட்டினம் படத்தில் வரும் இது பூக்கள் பூக்கும் தருணம் பாடல், ஹே ராம் படத்தில் இளையராஜா தந்த "இசையில் தொடங்குதம்மா" பாடலை ரொம்பவும் ஞாபகப்படுத்துகிறதே. அது சுட்ட பழமா?
 


கருணாநிதி
வெங்காய விலை அதிகமானது ஏன்னு கேட்டதுக்கு, போய் பெரியார கேளு அப்படினு சொன்னீங்க, டெலிபோன் கட்டணம் உயர்ந்தால் அலெக்ஸாண்டர் கிரகம்பெல் கிட்ட போய் கேட்கச்சொல்லுவீங்களா?
  -கேள்வி உபயம் விகடன்.
 



சோனியா காந்தி
ஊழலை ஒளிப்போம் அப்படினு வீர ஆவேசமா பேசுனீங்க, ஒளிப்பதற்கு அர்த்தம் மறைச்சு வைக்குறதுங்களா? நடக்குறது உங்க ஆட்சி தானுங்க, அப்புறம் எதுக்குங்க பஞ்ச் பேசிட்டு, ஆக்சனுக்கு வாங்க.

ரஜினி காந்த்
தலைவா அந்த விருந்து?



பிரதீபா பாட்டில் மற்றும் மீரா குமார்

இந்தியாவை வல்லரசு பட்டியலில் சேர்க்கறதுக்கு பதிலா, பாராளுமன்றத்தை முடமாக்கி; நாட்டை, மாற்றுத்திறனாளிகள் பட்டியல
சேர்த்துருவாங்க போல இருக்குங்களே? உங்கள மாதிரி ஜனாதிபதி, சபாநாயகர் பதவில இருக்கிறவங்க எப்பவாவது ஏதாவது செய்வாங்க, நீங்க இப்பவாவது ஏதாவது செய்வீங்களா?

 நீதிபதி ரவிராஜ பாண்டியன்
அடுத்த வருஷமே வரப்போகுதுங்க, தனியார் பள்ளிகளின் கட்டண விபரத்தை நீங்களாவது சீக்கீரம் சொல்லுவீங்களா?

 ஜெயலலிதா
 நாடாளுமன்ற தேர்தலின் ஈழம் பற்றிய உங்கள் பேச்சை பொது மக்கள் நம்பல, ஊழல் எதிர்ப்புக்கு நீங்கதான் சரினு நிரூபிக்க இப்ப உரக்க பேசுறீங்க , நம்புவாங்களா இந்த மக்கள்?

 வலையுலக பதிவர்கள்
 தெரியாம தான் கேட்கிறோம், சாருவுக்கும், உங்களுக்கும், என்னங்க பிரச்சனை?


இன்றைய அரசியல் பற்றிய எமது வலைப்பூவின் முதல் பதிவு இது.இம்மாதிரி பதிவுகளை தவிர்க்கலாம் எனில் சொல்லுங்கள்.இந்த பதிவுக்கும் வாக்களித்து ஆதரவு கொடுக்க வேண்டுகிறோம்.

32 கருத்துரைகள்:

THOPPITHOPPI said...

வடைய நீங்களே எடுத்துகிட்டா ஞாயமா?

Unknown said...

வடை உங்களுக்குத்தான்.

சக்தி கல்வி மையம் said...

பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com

karthikkumar said...

வலையுலக பதிவர்கள்
தெரியாம தான் கேட்கிறோம், சாருவுக்கும், உங்களுக்கும், என்னங்க பிரச்சனை?///
அது தெரிஞ்சா சொல்லமாட்டமா....

Unknown said...

பாவம் பிரதமர் அழுகிறாரு .

sathishsangkavi.blogspot.com said...

..வலையுலக பதிவர்கள்
தெரியாம தான் கேட்கிறோம், சாருவுக்கும், உங்களுக்கும், என்னங்க பிரச்சனை?,,

சொன்னா அதுக்கு போடனும் ஒரு 5 பதிவு...

மாணவன் said...

//மன்(மோகன்) அம்பு - இது அரசியல் வம்பு//

பெரிய இடத்து பொல்லாப்பு போல இருக்கே,

ஆனால் நல்லா உரைக்கிரமாதிரிதான் கேட்டுறீக்கீங்க பாராட்டுகள்...

ஆனால் இதற்கெல்லாம் பதில்??????

மாணவன் said...

//இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
மதராசப்பட்டினம் படத்தில் வரும் இது பூக்கள் பூக்கும் தருணம் பாடல், ஹே ராம் படத்தில் இளையராஜா தந்த "இசையில் தொடங்குதம்மா" பாடலை ரொம்பவும் ஞாபகப்படுத்துகிறதே. அது சுட்ட பழமா?//

இப்படி பார்த்தா இன்னைக்கு கொள்ளபேரு இசைமைக்க முடியாதே இது ஒரு இன்ஸ்பிரேஷனாகூட இருக்கலாம் (சுட்டத எப்படி சமாளிக்க வேண்டியதா இருக்கு)

மாணவன் said...

//"மன்(மோகன்) அம்பு //

இப்படி இருக்க வேண்டாமுன்னு சொல்லல இப்படி இருந்தா நல்லாருக்குமேன்னு சொல்றேன்... கமல் சொல்லபோறாரு பார்த்துங்க....

ஹிஹிஹி

மாணவன் said...

//வலையுலக பதிவர்கள்
தெரியாம தான் கேட்கிறோம், சாருவுக்கும், உங்களுக்கும், என்னங்க பிரச்சனை?//

சாருவா? யாருங்க அவரு?????? புதுப்பதிவரா?????

Unknown said...

ஹி ஹி ஹி சூப்பர் பதிவுங்க ரொம்ப நல்லா இருந்தது, தொடருங்க

வைகை said...

பதில் கிடைக்காதுன்னு தெரிஞ்சே கேக்குறீங்க...இன்னும் கொஞ்சம் சத்தமா கேளுங்க பாவம் அவளவும் வயசான கட்டங்க..காதுல விழுகாது!

Unknown said...

அய்யாமாரே அம்மாமாரே இவ்ளோபெரிய முதியோர் இல்லத்த மாத்த முன் (பாராளுமன்றம்)வாங்க... சீக்கிரம் முடிவு பண்ணுங்க அரசியல் என்ன ஆண்டவனே நம்ம பக்கம்தான் !?

YOGA.S.Fr said...

பிரதமர்?!என்னிக்கு சிரிச்சாரு,இப்போ அழுவுறதுக்கு?

Unknown said...

நீங்க சொன்னது எதுவும் கேட்கக்கூடாதுன்னுதான் மன்மோகன்சிங் காதுவரை தலைப்பாகை அணிந்திருக்கிறார்.

அஞ்சா சிங்கம் said...

வலையுலக பதிவர்கள்
தெரியாம தான் கேட்கிறோம், சாருவுக்கும், உங்களுக்கும், என்னங்க பிரச்சனை?/////////////

எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு வாய்க்கால் தகரறாரு மாதிரி இருக்கு ......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehe

தினேஷ்குமார் said...

ஓட்டு போட்டுட்டேன் இன்னும் எதிர்பார்க்கிறேன் அரசியலை எதிர்த்து கேள்விகளை

சௌந்தர் said...

ரஜினி காந்த்
தலைவா அந்த விருந்து?///

அவருக்கே வீட்டுலே சாப்பாட்டு போட மாட்றாங்க இதுல நீங்க வேற

சௌந்தர் said...

இந்தியாவை வல்லரசு பட்டியலில் சேர்க்கறதுக்கு பதிலா, பாராளுமன்றத்தை முடமாக்கி; நாட்டை, மாற்றுத்திறனாளிகள் பட்டியல
சேர்த்துருவாங்க போல இருக்குங்களே? உங்கள மாதிரி ஜனாதிபதி, சபாநாயகர் பதவில இருக்கிறவங்க எப்பவாவது ஏதாவது செய்வாங்க, நீங்க இப்பவாவது ஏதாவது செய்வீங்களா?////

இந்த கேள்வியை அவங்களுக்கு தந்தி அனுப்புங்கப்பா

சௌந்தர் said...

வலையுலக பதிவர்கள்
தெரியாம தான் கேட்கிறோம், சாருவுக்கும், உங்களுக்கும், என்னங்க பிரச்சனை?////

நானும் ரொம்ப நாளா கேட்குறேன் யாரும் சொல்ல மாட்டுறாங்க யாரவது சொல்லுங்கப்பா

Unknown said...

//ரஜினி காந்த்
தலைவா அந்த விருந்து?//

இன்னுமா?

bandhu said...

நல்ல கேள்விகள். ஒரு கேள்விக்கும் சம்மந்த பட்டவர்களிடமிருந்து ஒரு பதிலும் வராது. என்றாலும் இந்த சாரு பிரச்சனையை போன்றவற்றையும் விருந்து பிரச்சனையை பற்றியும் இதிலிருந்து எடுத்துவிட்டு, மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை மட்டுமே பேசுவது சிறந்தது!

ஆமினா said...

// தெரியாம தான் கேட்கிறோம், சாருவுக்கும், உங்களுக்கும், என்னங்க பிரச்சனை?///

தெரியாது...
பட் சாருவை பிரபலமாக்கிய பங்கு பதிவுலகையே சாரும்.... அவரை பற்றி தெரியாத அறிந்திடாத என்னையும் சருவை அறிமுகப்படுத்தியது பரு பதிவரின் எதிர்பதிவு தான் ;)

ஆறுமுகம் ராஜு said...

ரவி ராசபாண்டியனும் ராஜினாமாவா?

சி.பி.செந்தில்குமார் said...

ha ha ha saaru... patri paesalainnaa soru irankaadhu namakku

சாந்தி மாரியப்பன் said...

பெரிய இடத்துப்பொல்லாப்புகள் நிறைய இருக்குது போலிருக்கே :-)))

vasan said...

இந்த ரோஜா பூந்தோட்ட‌த்தில் நிறைய கேள்வி முற்க‌ள்.
முற்க‌ள் இல்லாதிருந்த‌தால் தான் இந்த‌ அர‌சிய‌ல் வ‌ழிப்போக்க‌ர்க‌ள்
ம‌ல‌ர்க‌ளை பிடிங்கி க‌ச‌க்கி அவ‌ர்க‌ளுக்கான வாரிசுகளுக்கு அத்த‌ர் தயாரிக்கிறார்க‌ள்.
அனைத்து கேள்வி முட்க‌ளும் நாட்டை காக்கும் வேலிக‌ள்.
வாழ்த்துக்க‌ள், குழ‌ந்தைக‌ளே.

Elayaraja Sambasivam said...

நல்ல கற்பனை

இங்கயும் கொஞ்சம் இருக்கு

http://singhisnotking.blogspot.com/2011/01/1.html

செல்வா said...

//அதெல்லாம் இருக்கட்டும் அந்த லட்டர்ல மானே, தேனே அப்படினு போட்டிங்களா?//

ஹி ஹி ஹி.. அரசியல் கடிதத்துல கூட இப்படி எழுதலாம்கல

செல்வா said...

//ஊழலை ஒளிப்போம் அப்படினு வீர ஆவேசமா பேசுனீங்க,ஒளிப்பதற்கு அர்த்தம் மறைச்சு வைக்குறதுங்களா? நடக்குறது உங்க ஆட்சி தானுங்க, அப்புறம் எதுக்குங்க பஞ்ச் பேசிட்டு,ஆக்சனுக்கு வாங்க.//

இது சூப்பர் .. ஒழிக்கரதுனா மறைக்கரைதுதானே...

செல்வா said...

//இன்றைய அரசியல் பற்றிய எமது வலைப்பூவின் முதல் பதிவு இது.இம்மாதிரி பதிவுகளை தவிர்க்கலாம் எனில் சொல்லுங்கள்.இந்த பதிவுக்கும் வாக்களித்து ஆதரவு கொடுக்க வேண்டுகிறோம்.//

கண்டிப்பா தொடருங்க , நல்லாத்தான் இருக்கு .

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்