பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ் மட்டம் வீக்.


வாசிக்கவும், எழுதவும் தெரியாத மாணவர்கள், பத்தாம் வகுப்பில் கூட உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் வேண்டுமானாலும் உங்களின் அக்கம்பக்கம் உள்ள அரசு பள்ளிகளில் விசாரித்துப்பாருங்களேன்.

இடை நிற்றலை தவிர்க்கும் விதத்தில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய
ஆல்-பாஸ் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் அதன் பின் விளைவுகள் இப்படி இருப்பது இன்னும் உலகத்தாரின் கண்களுக்கு தென்பட வில்லை என்பது உண்மை.

அனைவரும் தேர்ச்சி என்பதால் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்பது ஒரு புறம் சரியான விஷயமாக இருந்தபோதிலும், கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே.

எப்படி படித்தாலும் பாஸ் தானே என்பதால் மாணவர்கள், படிப்பில்
முழு கவனம் செலுத்துவதில்லை.

ஏற்கனவே மாணவர்களை கண்டிக்கக்கூடாது என்று இருப்பதாலும், பொதுத்தேர்வு, அதன் தேர்வு முடிவுகள் என்ற நெருக்குதல்கள் இல்லாதாலும் சில ஆசிரியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று பெற்றோர்களும் கவனியாமல் இருக்கிறார்கள்.எப்படியும் பாஸ் என்பதால் தன் குழந்தைகள் விடுப்பு எடுப்பதையும் அலட்சியமும் செய்கிறார்கள்.

வெறுமனே பாஸ் பாஸ் என்று, வருடங்களை மட்டும் கடந்து, பத்தாம் வகுப்பு வந்து ஒண்ணும் தெரியாமல் வந்து நிற்கும் மாணவர்களுக்கு நாங்கள் பாடம் நடத்துவதா, வாசிக்க பழக்குவதா என பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள்,பழியை எட்டாம் வகுப்பு ஆசிரியர்கள்  மீது  தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சின்ன வகுப்பு ஆசிரியர்களை சரியில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.

முன்பெல்லாம் பள்ளிக்கு போக முடியாதவர்கள் மட்டும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர், இப்போது பள்ளி போகிறவர்கள் கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது தான் வளர்ச்சியா?

இப்போதைய கல்வியின் நிலவரம் "பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ் மட்டம் வீக்" என்பது தான்.

இந்த பிரச்சனையை சரி செய்யாவிடில், உலகிலேயே இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற புள்ளிவிபரம் மட்டுமே மீதமிருக்கும், நிதர்சனத்தில் அவர்கள் அனைவரும் எண், எழுத்து என்னும் இரண்டு கண்களும் இல்லாத புதியவகை மாற்றுத்திறனாளிகளாகவே இருப்பார்கள்.

அப்புறம் எங்க போயி வல்லரசாவது?

***********************************************************************************

இது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் 4.


***********************************************************************************

சம காலக்கல்வி பற்றிய முந்தைய பதிவுகள்:


வடை ஸாரி, சாக்லேட் போச்சே. 


ஐயோ.. யாராவது தெளிய வைய்யுங்களேன்.


இப்படித்தான் இருக்க வேணும்...



26 கருத்துரைகள்:

மாணவன் said...

இருங்க படிச்சுட்டு வரேன்.....

இளங்கோ said...

இது முற்றிலும் உண்மை. அதனால்தான் எங்கள் விழுதுகள் மூலமாக கிராமப் பகுதிகளில் வகுப்புகள் எடுத்து வருகிறோம். அதை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (ஒரு சிலரைத் தவிர) அனைவருமே, சொல்லித் தருவதை ஒரு வேலையாக கருதுகிறார்கள், 'படித்தால் படி, இல்லன்னா போ' என்றுதான் பெரும்பாலும் இருக்கிறது.

மாணவன் said...

//முன்பெல்லாம் பள்ளிக்கு போக முடியாதவர்கள் மட்டும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர், இப்போது பள்ளி போகிறவர்கள் கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது தான் வளர்ச்சியா?//

அனைவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்....

மாணவன் said...

சமகால கல்வி தெளிவான பார்வை..

தொடருங்கள்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////முன்பெல்லாம் பள்ளிக்கு போக முடியாதவர்கள் மட்டும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர், இப்போது பள்ளி போகிறவர்கள் கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது தான் வளர்ச்சியா?/////////

சரியான கேள்வி கேட்டிருக்கீங்க... !

Unknown said...

அரசாங்கம் சிந்திக்கும் திட்டங்கள் எல்லாம் தொலைநோக்கு பார்வையோடு இருப்பதாக தெரியவில்லை, வருந்தத்தக்க உண்மை,பேஸ் மட்டமே இனிமேல் இருக்காதோ என எண்ண தோன்றுகிறது :-(

Anonymous said...

I am a high school teacher handling 10th standard. we r under pressure to produce results with students who don't know alphabets. we r humans and
we find it difficult to teach 1 to 8 syllabus in just 2 years 9 and 10 stds. we r looking for someone who will listen to our cries
tqs

செங்கோவி said...

சரியான பதிவு...இது பற்றி எனக்கும் பல கேள்விகள் உள்ளன..எனக்குத் தெரிந்த ஆசிரியர்களிடம் கேட்டால், அவர்களும் இது எதிர்காலத்தில் நல்ல பயனைத் தரும் என நம்பவில்லை.

Vijay Periasamy said...

இந்தியா வில் , கல்வியின் தரம் மிகவும் பின்னடைந்துள்ளது ..

வெறும் ஏட்டு சுரைக்காய்களாக நமது மாணவர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள் .



சிந்தனையை தூண்டாத கல்வி , பாழ்நிலத்தில் பாய்ச்சப்படும் நீர் போன்று , வீணாக தான் போகும் .


இனியாவது சிந்திப்பார்களா , அரசும் , கல்வியாளர்களும் ?

Anonymous said...

சமக்கால கல்வி என்பது என்ன? ஒரு மாற்றத்தினை கொடுப்பது? மனிதனை பின்னோக்கி இழுப்பது அல்ல. ஆனால், கல்வி அரசியல் வாதிகளின் பகடைக்காயாய் மாறியப் பின் சில மங்குனிகளின் கைத்தட்டலில் உண்மைகளின் ஒலி வலியோடு நின்று விடுகிறது....

Chitra said...

முன்பெல்லாம் பள்ளிக்கு போக முடியாதவர்கள் மட்டும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர், இப்போது பள்ளி போகிறவர்கள் கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது தான் வளர்ச்சியா?


.....கேள்வியின் சூடு, நிஜத்தை காட்டுகிறது....

ஹேமா said...

எங்கும் எதிலும் வியாபார நோக்கம்.அதனால் பள்ளியிலும் நிலை இப்படித்தான் நம் நாடுகளில் !

ஆமினா said...

நல்ல பார்வை
//we r looking for someone who will listen to our cries//
கண்டிப்பாக இந்த நிலை மாறும்

THOPPITHOPPI said...

பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ் மட்டம் வீக்.
..................
பில்டிங் வீக்

ரஹீம் கஸ்ஸாலி said...

முன்பெல்லாம் பள்ளிக்கு போக முடியாதவர்கள் மட்டும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர், இப்போது பள்ளி போகிறவர்கள் கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது தான் வளர்ச்சியா?/////

நெத்தியடி

அருண் பிரசாத் said...

உண்மைதான்.... தற்பொது சில பள்ளிகள் இதைதான் செய்கின்றன. எல்லா பள்ளிகளையும் சொல்ல முடியாது.....

பெற்றோர்களும் கவனம் செலுத்துதல் நலம்.... ஆனால், அவர்களும் படிக்காதவராய் இருந்தால் ஒன்று செய்ய முடியாது

அஞ்சா சிங்கம் said...

கற்பிக்கும் முறையில் மாற்றம் வர வேண்டும் ....................
சிந்தனையை வளர்க்காத கல்வி முறை ஒன்றுக்கும் உதவாது..............

செல்வா said...

///வெறுமனே பாஸ் பாஸ் என்று, வருடங்களை மட்டும் கடந்து, பத்தாம் வகுப்பு வந்து ஒண்ணும் தெரியாமல் வந்து நிற்கும் மாணவர்களுக்கு நாங்கள் பாடம் நடத்துவதா, வாசிக்க பழக்குவதா என பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள்,பழியை எட்டாம் வகுப்பு ஆசிரியர்கள் மீது தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சின்ன வகுப்பு ஆசிரியர்களை சரியில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.///

உண்மைதாங்க , வெறும் பாஸ் என்பதை மட்டும் வைத்து கல்வியின் தரம் உயர்ந்ததாக கருத்தில் கொள்ள முடியாது. அத விட பாஸ் அப்படிங்கிறது அவுங்களுக்கு இந்த விசயங்கள் தெரிந்திருக்கிறது , அதனால இவுங்களால இதற்கு மேல் செல்ல முடியும் அப்படின்னு ஒரு சான்று தானே , ஆனா படிச்சாலும் படிக்கலைனாலும் பாஸ் அப்படின்ன்கிறது உண்மைலேயே கல்வியின் தரத்தைக் குறைக்கும் என்பதே எனது கருத்து !!

Unknown said...

ஏட்டு சுரக்காய் கரிக்கு உதவாது

சென்னை பித்தன் said...

மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள்தான்,உயர்ந்திருக்கிறது;கல்வியின் தரம்!
நல்ல பதிவு!
பொங்கல் வாழ்த்துகள்!

லீலா said...

சமகால கல்வி தொடர் மேலும் மேலும் ஆழமாகவும் சிந்தனையை நிரடுவதாகவும் உள்ளது ஆசிரியர்களின் பணி அறப்பணி என்பதை மறப்பதே காரணம்

ரிஷபன்Meena said...

இது ரொம்ப கொடுமை.

மாணவனைக் கண்டிக்க கூடாது, என்னத்தை எழுதினாலும் எழுதாவிட்டாலும் என்றாலும் பாஸ் என்றால் எப்படி விளங்கும்.

ஆல் பாஸ் யார் மூளையில் உதித்த திட்டமோ ?

January 14, 2011 10:50 P

ஆச்சி ஸ்ரீதர் said...

மரத்தடியில் படித்தால் கூட சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரைப் பொருத்தும்,படித்து முன்னேற வேண்டுமென்ற உறுதியுள்ள மாணவரும் வேண்டும். பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் வாழ்த்துக்கள்

Prabu Krishna said...

படிப்பு மட்டும் கெடுவது இல்லை. எல்லா கெட்ட பழக்கங்களும் கூட இப்போது சீக்கிரமே தெரிந்து கொள்கிறார்கள்.

டக்கால்டி said...

கல்வி பாடத்திட்டத்தை ஒழுங்காக வரையறுக்காத நமது அரசிடம், பாலியல் கல்வியை போதிக்க கோரிக்கை வைப்பவர்களை என்ன சொல்வது?

ம.தி.சுதா said...

இது எங்கும் தொடரும் பிரச்சனை..

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்