இப்படித்தான் இருக்க வேணும்...

சம காலக்கல்வி-1

மாணவிகளின் பார்வையில்...
எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்...



மெல்லிய புன்னகை இருக்க வேண்டும்.
சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும்.

தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்.
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது.


பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும்.
சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும்.

மாணவர்களின் மனநிலையை புரிந்துக்கொண்டவராக இருக்க வேண்டும்.
பாடம் நடத்தும் போதும், வீட்டுவேலைகளை கொடுக்கும்போதும்
மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.



தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்கு கூட கொண்டுவரக்கூடாது.

தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் பக்தியுடன், ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்படவேண்டும்.

ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டபழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

எப்போதும் திட்டக்கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக்கூடாது.

எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி,
வெறுப்பேத்தக்கூடாது.


எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது, நீங்கள் பேசுவதில் எத்தனை சதவீதம் உணமை, எத்தனை சதவீதம் டுபாக்கூர் என எங்களால் உணர முடியும்.

ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது.
படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.

(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்)

இந்த பதிவுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.(நீங்கள் இதனில் முரண்பாடுகளை கொண்டிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்)


சம காலக்கல்வி பற்றிய மற்ற பதிவர்களின் அலசல்கள்.
கோமாளி  , வெறும்பய , எஸ்.கே. , இம்சை அரசன் பாபு, கௌசல்யா

24 கருத்துரைகள்:

Unknown said...

//ஒரேடியாக முகாரி ராகம் பாடி,
வெறுப்பேத்தக்கூடாது.//

சரிதான்

ரஹீம் கஸ்ஸாலி said...

அருமை. தமிழ்மணத்துல ஒட்டு போட்டுட்டேன்

வார்த்தை said...

//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்)//

ஆனால் மாணவர்கள் இப்படி இருக்கக்கூடாது......(அதுவும் மழை காலத்தில்)
ஹா...ஹா...

தினேஷ்குமார் said...

ரெண்டுநாளா கொஞ்சம் ஆணி அதான் எந்த கடபக்கமும் போகமுடியல படிச்சிட்டு வர்றேன்

லீலா said...

நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்கம் நல்ல சிந்தனை ஊட்டணும் சமகால கல்வி மேல நம்பிக்கை தரணும்

மாணவன் said...

//ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது.
படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.//

மிகச்சரியாக சொன்னீர்கள்...

அருமை தொடருங்கள்....

மாணவன் said...

//இந்த பதிவுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.//


இதே உற்சாகத்துடன் தொடர்ந்து செல்லுங்கள்...

எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்...

நன்றி
நட்புடன்
மாணவன்

test said...

//தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்.
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது//
Super! :-)

test said...

//தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்.
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது//
Super! :-)

வினோ said...

நீங்க எதிர்ப்பார்ப்பது நல்லா தான் இருக்கு.

Chitra said...

(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்)


.....உங்கள் பதிவுகளை, உங்கள் பள்ளி ஆசிரியர்கள் வாசிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம்... எப்பா.... என்னா ஐசு மழை!

வைகை said...

நீங்க ஆசிரியர் எப்படி இருக்கணும்னு சொல்லிட்டிங்க! உங்க ஆசிரியர கூப்பிட்டு மாணவிகள் எப்படி இருக்கணும்னு பதிவு போட சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரிச்சா மாத்ரி இருக்கணும்(மன்னன் கவுண்டமணி ஸ்டைல் ல படிங்க)

Unknown said...

ம் ....

எஸ்.கே said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க! அதுவும் ஆசிரியர்கள் எப்படி இருக்கணும்னு மாணவர்கள் நீங்க சொல்லும்போது அது மிக அருமையாக உள்ளது!

செல்வா said...

என்னோட அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியதற்கு முதலில் நன்றி தெரிவித்துகொள்கிறேன் .. உங்களோட இந்தப் பதிவ நேற்று இரவே என்னோட மொபைல் வழிய படிச்சிட்டேன் ..!! இப்போதைய கல்வி எப்படி மாற்றம் பேர வேண்டும் என்று நீங்கள் சொன்னால்தான் சரியா இருக்கும் அப்படிங்கரதாலதான் உங்களை எழுத சொன்னேன் .. எனது எண்ணம் தவறவில்லை ..! ரொம்ப தெளிவாவும் ., அழுத்தமாவும் சொல்லிருகீங்க ..! உங்க மாணவர்களின் கருத்துதானே இவையெல்லாம் .?!

அருண் பிரசாத் said...

//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்) //
எம்பூட்டு பெரிய ஐசு

ம.தி.சுதா said...

நல்லதொரு தூரநோக்கான பதிவு... வாழ்த்துக்கள்...

செங்கோவி said...

//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்)//

அய்யய்யோ..நான் சொல்ல நினைத்ததை சித்ராக்கா சொல்லீட்டாங்களே..

தமிழ்க்காவலர் said...

நல்லாருக்கு நீங்க கேட்பதெல்லாம்.......

ஆமினா said...

//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்) //

உங்க டீச்சர்ஸ் எல்லாருக்கும் ஜெண்டு பாம் வாங்கி கொடுங்க பா. பயங்கரமா ஐஸ் வச்சிட்டீங்க :)))

NKS.ஹாஜா மைதீன் said...

#ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது.#

அருமையான வரிகள்.... அதுதான் உண்மையும் கூட....

Anonymous said...

ஆசிரியர்கள் மட்டுமல்ல...
மலர்களுக்கு
முட்களும்
குத்தாமல் இருக்க வேண்டும்...

Kousalya Raj said...

ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்களின் பார்வையில் மிக நன்றாக இருக்கிறது...இதை பல ஆசிரியர்கள் பின் பற்ற வேண்டும்...ஒரு மாணவன் நல்ல நிலையில் வளர்வதற்கு நிச்சயம் ஆசிரியரின் பங்கு அவசியம்.

அதே நேரம் இப்போது உள்ள பல மாணவர்களை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது...!? பலர் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை...சில நல்ல பழக்கங்கள் அவர்கள் வீட்டில் இருந்தே வரவேண்டும் என்பது என் கருத்து.

நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்