கால்பந்து ஆட்டக்களத்தில்
உடலுக்கு உரம்
சேர்க்கச் சொன்னது
உனது உரைகள்...
தொலைக்காட்சித் தவத்தால்
வயிறுப் பெருத்து,
வாழ்க்கைச் சிறுத்து,
மானாட, மயிலாட களத்திற்கு
உரம் சேர்ப்பது
எங்களின் "கெமிஸ்ட்ரி"
"தேசம், மக்கள்
இவையே நம் தெய்வங்கள்;
மற்றெல்லா தெய்வங்களும்
மனதை விட்டு அகலட்டும்"
இவை உன் வார்த்தைகள்.
அரிதாரம் பூசுபவர்களையும்
அவதாரங்களில் சேர்த்து
தெய்வங்களின் பட்டியலை
நீட்டித்துக்கொண்டது
எங்களின் நிகழ்காலம்...
உன்னுடைய
"சித்தாந்த முகவரி"யிலிருந்து
அரசியல் முடிவுகள்
வந்தது அந்தகாலம்....
"பவர் புரோக்கர்"
பெண்மணியின்
நுனி நாக்கு ஆங்கிலத்திலிருந்து
முடிவுகள்
வருவிக்கப்படுவது
எங்கள் காலம்.
எழுமின், விழிமின் என
கொதித்த சில உத்தமர்களுக்கு
ரத்தக்கொதிப்பு வந்தது மட்டும்
மீதம்.
குருஷேத்திரத்தில்
இது மாயக்கண்ணன்களின் காலம்;
நாங்கள் வீர அபிமன்யுவாக
மாற்றப்பட்டு,
மரிக்க வேண்டியிருக்கிறது.
தலைவர்களால்
முதுகெலும்பு உருவப்படாமல்
மிச்சமிருக்கும்
நூறு பேர்
இப்போது தயார்..
அடுத்த போர் என்பது
அது எந்த தலைவரின் கீழும் அல்ல;
எங்கள் போரே
தலைவர்களை
எதிர்த்து தான்...
***********************************************************************************
தொடர்புடைய மற்ற பதிவர்களின் படைப்புக்கள்:
26 கருத்துரைகள்:
அந்த முண்டாசு கட்டினு இருகறவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அட வட...!!!!!
#"பவர் புரோக்கர்"
பெண்மணியின்
நுனி நாக்கு ஆங்கிலத்திலிருந்து
முடிவுகள்
வருவிக்கப்படுவது
எங்கள் காலம்.#
நம்ம நாட்டின் நிலையை அழகாக சொன்னிர்கள்....சூப்பர்
நல்ல வரிகள் இன்றைய உண்மை வரிகள்
எங்கள் போரே தலைவர்களை எதிர்த்து தான்...
அசத்தல் சகோ
இன்றைய நிலைமையை வரிகளில் பதிவு செஞ்சீருக்கீங்க அருமை...
சுவாமியை வீர வணக்கங்களுடன் வணங்குகிறேன்.....
எனது தளத்தின் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றிங்க பாரதி...
nice
>>>>எங்கள் போரே
தலைவர்களை
எதிர்த்து தான்...
the finishing touch is super.
சூப்பருங்க நாட்டு நடப்பை உறிச்சு வச்சிருக்கீங்க
வாழ்த்துக்கள்
சூப்பர் பதிவு. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
//குருஷேத்திரத்தில்
இது மாயக்கண்ணன்களின் காலம்;.. //
its very nice one..
//எங்கள் போரே
தலைவர்களை
எதிர்த்து தான்...//
அசத்தலான இடுகை..
அருமையான, நாட்டு நடப்பை உணர்த்தும் வரிகள். இப்படிப்பட்ட தலைவர்களை எதிர்க்கும் அந்த 100 பேர்கள் தான் நாட்டுக்கு இப்போது தேவை
//பவர் புரோக்கர்"பெண்மணியின் நுனி நாக்கு ஆங்கிலத்திலிருந்து முடிவுகள் வருவிக்கப்படுவது எங்கள் காலம்.//
நல்லாருக்கு பிரமாதம்
ரொம்ப ரொம்ப அருமையான வரிகளில் நினைவு கூறல்...
சூப்பர் பாஸ்! அருமை!
//தொலைக்காட்சித் தவத்தால்
வயிறுப் பெருத்து,
வாழ்க்கைச் சிறுத்து,
மானாட, மயிலாட களத்திற்கு
உரம் சேர்ப்பது
எங்களின் "கெமிஸ்ட்ரி"
/
இந்த வரிகள் நல்லா இருக்குங்க , ஆனா வயிறுப் பெருத்து அப்படின்னு வருமா இல்ல வயிறு பெருத்து அப்படின்னு வருமா ?
//அரிதாரம் பூசுபவர்களையும்
அவதாரங்களில் சேர்த்து
தெய்வங்களின் பட்டியலை
நீட்டித்துக்கொண்டது
எங்களின் நிகழ்காலம்...
///
உண்மையான வரிகள் , திரைப்படத் தாக்கம் இப்பவெல்லாம் ரொம்ப அதிகமாகவே இருக்குங்க !
//அடுத்த போர் என்பது
அது எந்த தலைவரின் கீழும் அல்ல;
எங்கள் போரே
தலைவர்களை
எதிர்த்து தான்...
///
உண்மைதாங்க !!
//அரிதாரம் பூசுபவர்களையும்
அவதாரங்களில் சேர்த்து
தெய்வங்களின் பட்டியலை
நீட்டித்துக்கொண்டது
எங்களின் நிகழ்காலம்...
///
அருமை
//எங்கள் போரே
தலைவர்களை
எதிர்த்து தான்...//
இன்றைய இளைஞர்கள் அப்போரில் இறங்கினால்,போலித்தலைவர்கள் ஓடுவது திண்ணம்!
ஸ்வாமிஜியை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!
எங்கள் போரே
தலைவர்களை
எதிர்த்து தான்...
....ம்ஹூம்..... உண்மைதான்!
உண்மை..அருமை வரிகள்..
Post a Comment