வணிகம் செய்து
களைத்து
வகுப்பறையில்
ஓய்வெடுக்க வரும்
ஆசிரியர்களைக்
கண்டு
ஆத்திரம் கொண்டேன்...
"உன் வாத்தியார்
இப்படி
இருந்திருந்தால்
நீ எப்படி
இப்படி?"
"இந்நேரம்
உன் தோலை உரித்து
வாத்தியமாக
அல்லவா
அடித்துக்கொண்டிருப்பார்கள்"
வாமனா...
உன் மூன்றாவது அடியை
இந்த ஆ"சிறியர்களின்"
தலையில் வை...
சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் -5
கவிதையின் பின்புலம் பற்றி ஆராயும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
********************************************************************************
சம காலக்கல்வி பற்றிய முந்தைய பதிவுகள்:
பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மட்டம் வீக்..
வடை ஸாரி, சாக்லேட் போச்சே.
ஐயோ.. யாராவது தெளிய வைய்யுங்களேன்.
இப்படித்தான் இருக்க வேணும்...
30 கருத்துரைகள்:
//வாமனா...
உன் மூன்றாவது அடியை
இந்த ஆ"சிறியர்களின்"
தலையில் வை...//
super punch
தவறு செய்யும் ஆசிரியர்களின் லட்சணங்களை "குட்ட" சொன்னது சரியே.
இந்த குட்டல் தேவை தான்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
தவறு செய்யும் ஆசிரியர்களின் லட்சணங்களை "குட்ட" சொன்னது சரியே.
//வாமனா...
உன் மூன்றாவது அடியை
இந்த ஆ"சிறியர்களின்"
தலையில் வை...//
Correct.......
அடேங்கப்பா சரிதான்
Interesting!
போட்டிநினை கல்வியின் தாக்கங்கள் ஆசியர்களையும், போட்டிநிலை வணிகர்களாக ஆக்கிவிட்டதில் ஆச்சரியம் இல்லைத்தானே?
கல்வித்திட்டத்தில் மாற்றம்வேண்டும் என்று மேடைகளில் கதறும் ஆன்றோர்கள், அரசியல்வாதிகள் உரிய உன்னதமான கல்வித்திட்டம் ஒன்றை ஏன் இதுவரை முன்மொழியவில்லை? சாத்தியப்பாடு பற்றிய ஐயமா? அல்லது இந்த தடவல்முறையிலேயே சுகங்கண்டு விட்டார்களா?
உண்மையாகவே சொல்லப்போனால், ஒரு குழந்தையை அழகுறக்குளிப்பாட்டி, சீவிச்சிங்காரித்து, பூமுடித்து, பொட்டும் வைத்து அழகுபார்த்துவிட்டு, அந்தக்குழந்தையின் கழுத்தையே அறுத்துவிடுவதுபோலல்லவா இன்றைய கல்விநிலை உள்ளது?
நீங்க சொல்லரதும் கரெக்ட்பா..
எவ்வளவு குட்டுனாலும் இந்த பயலுக திருந்த மாட்டானுகப்பூ..
மனிதன் படைத்த கடவுள் ...
ஏன் இந்த கோபம் ......
நியாயமானதுதான் பள்ளிக்குச்செல்லும் பிள்ளைகள் இன்னும் சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பணிவிடை செயத்துகொண்டிருக்கிராகள் என்று திருந்துவார்கள் அதுமட்டும் இல்லாது டியுஷன் என்ற பெயரில் வீட்டுவேலைகளும் சேர்த்து பெற்றோர்கள் கவனிப்பதில்லையா என்ற வருத்தம் என்னுள் .....
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம் இது என் வகுப்பில் உள்ளவர்கள் அனைவரும் வாத்தியார் வீட்டில் டியுஷன் படிக்கவேண்டும் என்ற கட்டளையுடன் படித்தால் தான் எட்டாவது போகமுடியும் என்ற பயமுருத்தலும் கூடே எங்க வீட்டில் அனுமதிக்கவில்லை நானும் டியூஷனில் சேர விருப்பபடவில்லை இருப்பினும் வாத்தியார் வீட்டு வழியாகத்தான் செல்வேன் என் வீட்டுக்கு அங்கு எட்டிப்பார்த்தால் நாய்க்கு உணி புடுங்குவது முதல் வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருப்பார்கள் என் வகுப்பு தோழர்கள் காலையில் வகுப்புக்கு சென்றால் என் மீது கோபத்தாக்குதல் நடக்கும் சில சமையம் அடிமட்டும் விழாது அன்றே அந்த அடி என் மீது விழுந்திருந்தால் என்ன நடந்திருக்கும் இன்று யோசிக்கிறேன்
பள்ளிக்கூடம்...கோயில் என்று சொன்னான் பாரதி....
அது பாடம் சொல்ல பணத்தை பிடுங்கும் கொடுமை ஏனடி....
தாலி தவிர எல்லாம் இங்கு அடகு கடையிலே...
அட எல்லாம் விற்றும் படித்தும் இங்கு வேலை கிடைக்கலே.......
வழிபிறக்குமா??? விழிதிறக்குமா???????
என்று இசைஞானி பாடிய வரிகள்தான் இன்றைய கல்வி நிலைமை.......
//கே.ஆர்.பி.செந்தில் said...
மனிதன் படைத்த கடவுள் ...///
கடவுள் படைத்த உலகில்
மனிதன் வாழ்கிறான்...
மனிதன் வடித்த சிலையில்
கடவுள் வாழ்கிறார்...
செம குட்டு....
அந்தக் காலத்தில் நம் கல்விக் கண்களைத் திறப்பவர் என்று போற்றப்பட்ட ஆசிரியர்களை ஆ’”சிறியர்கள்” என்று தாங்கள் கூறும் இன்றைய அவல நிலையை எண்ணி, ஒரு சில இன்றைய நல்லாசிரியர்களுக்கு வருத்தம் ஏற்படலாம்.
//வணிகம் செய்து
களைத்து
வகுப்பறையில்
ஓய்வெடுக்க வரும்
ஆசிரியர்களைக்
கண்டு
ஆத்திரம் கொண்டேன்...///
கவிதையின் பின்புலம் பற்றி சொல்லுற அளவுக்கு எனக்குத் கவிதை தெரியாதுங்க .,ஆனா வணிகம் செய்து களைத்து அப்படின்னு சொல்லும்போது சில ஆசிரியர்கள் சில பகுதி நேர வேலைகள் செய்யுறதா சொல்ல வரீங்களானு தோணுது , அதே சமயம் தனிப்பயிற்சி பத்தி சொன்னா மாதிரியும் தெரியுது. கூடவே சில தனியார் பள்ளிகளில் canvass அப்படின்னு கூட்டிட்டு போவாங்க , அதுவாகவும் இருக்கலாம்.
எது எப்படியோ அது அவுங்க விருப்பம் .. ஆனா பள்ளிக்கூடத்துல வந்து ஓய்வு எடுக்காம இருந்தா போதும் .. வீட்டுல அவுங்க என்னதான் பண்ணினா நமக்கு என்ன ..? அத விட்டுட்டு வீட்டுல வெளிலையும் அதிகமா வேலை செஞ்சிட்டு இங்கவந்து கடனே அப்படின்னு பாடம் நடதுரதுதான் தப்பு அப்படின்னு எனக்குத் தோணுது .. இந்த சமகால கல்வி தொடர் பதிவ ரொம்ப அருமையா கொண்டு போறீங்க ..!
ஆசிரியர்களுக்கு இப்ப எவ்வளவு சம்பளம் என்று எனக்கு தெரியாது.
ஆசிரியர்கள் மற்றும் காவலர்களுக்கு நிறைய , அதாவது கொஞ்சம் அதிகமாகவே சம்பளம் தர வேண்டும்.
அவர்களை பொருளாதார நிர்பந்தத்தில் வைத்து விட்டு, நேர்மையாய் இரு, உன் வேலை புனிதமானதாய் நினை என்பதெல்லாம் வீன்.
மேலை நாடுகளில் இந்த இரு சாராருக்கும் கெளரவமான சம்பளம் தரப் படுகிறது.
நம்ம ஊர் வாத்தியார்கள் கமர்ஷியலா மாறி விட்டார்கள், ஆனால் திறமைக் குறைவு வந்து விட்டாதா என்று தெரியவில்லை, இல்லாதிருக்கும் வரைக்கும் நல்லது
சரியான சம்பளம் கிடைத்தும் கூட துரோகம் செய்பவர்களை பசித்த புலி தின்னட்டும்.
ஆகச் சிறியவரையும் "ஆ" சிறிிரையும்
மிகச்சரியாக இணைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
நல்லா சொல்லி இருக்கீங்க பாரதி
ஆசிரியர்கள் கடவுள் மாதிரி அவர்களே பிழை விட்டால் யாரிடம் போவது
குட் கவிதை
மாணவன் said...
பள்ளிக்கூடம்...கோயில் என்று சொன்னான் பாரதி....
அது பாடம் சொல்ல பணத்தை பிடுங்கும் கொடுமை ஏனடி....
தாலி தவிர எல்லாம் இங்கு அடகு கடையிலே...
அட எல்லாம் விற்றும் படித்தும் இங்கு வேலை கிடைக்கலே.......
வழிபிறக்குமா??? விழிதிறக்குமா???????
என்று இசைஞானி பாடிய வரிகள்தான் இன்றைய கல்வி நிலைமை.......
ரிபீட்டு போட்டுட்டு அப்படியே அப்பீட்டு ஆகிக்கிறேன்.
என்னைக்கு கல்வி வியாபாரமா மாறிட்டதோ, அன்னைக்கே ஆசிரியர்களும் வியாபாரிகள் ஆகி விட்டனர், இந்த வியாபாரிகள் கையில கல்வி இருக்கும் வரை படிக்க நினைக்கும் ஏழை மாணவர்கள் கடைசி வரை ஏழையாகவே இருக்க வேண்டியதுதான் கல்வியில் :-(
ஆசிரியர்களின் லட்சணங்களை சுட்டி கட்டியமைக்கு பாராட்டுக்கள்
குட்டக்குட்ட குனிந்துகொண்டே போனால்?
வணிகம் வகுப்பறையைப் பாதிக்காத வரை கவலையில்ல.ஆனால் வகுப்பறையே வணிகக் களமானால்? சீடர்களே வாமனர்களாய் மாற வேண்டுமோ?
நன்று!
இன்றைய கல்வியின் நிலையைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.சரிதான் குட்டு !
ஒரு காலத்தில்...ஆசிரியர்களுக்கு கிடைத்த மரியாதை.. இப்போது இல்லை.. காரணம்... சில ஆசிரியர்களின் ஒன்றுதல் இன்மை.. கடமைக்காக வேலை செய்தல்.. இப்படி பல காரணங்கள்..!
என்னவோ.. குழந்தைகளுக்கு நல்ல படியா சொல்லித்தந்தா சரி தான்...
நீங்க அழகா எழுதுறீங்க.. தொடருங்கள்.. பகிர்வுக்கு நன்றிங்க..
சில வாத்தியார்கள் இவ்வாறு இருப்பது வருத்ததிற்கு உரியதுதான்.... ஆனால், இன்று சில பள்ளிகளும், ஏன் சில அரசியல்வாதிகளும் பள்ளி மாணவர்களை வணிகம் செய்ய பயண்படுத்துவது வேதனையான உண்மை
Post a Comment