மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..
(கருத்துக்கள் தொகுப்பு : +1 அ1, அ மற்றும் ஆ பிரிவு மாணவிகள்)
(மாணவர்கள் என்பது இருபாலருக்கும் பொதுவான வார்த்தை)
ஆசிரியர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துக்கொண்டு, அதைவிட இரண்டு மடங்கு செய்ய முயற்சி செய்யவேண்டும்.
பாடத்தை புரிந்து படிக்கவேண்டும். மக்கப் பண்ணக்கூடாது.
ஒரு ஆசிரியர் பற்றி இன்னொரு ஆசிரியரிடமோ அல்லது வேறு ஒருவரிடமோ சொல்லக்கூடாது.(விமர்சிக்கக்
கூடாது)
பாடம் நடத்திவிட்ட பின், சார் சொன்னால் தான் படிக்கணும் என்று நினைக்காமல், அடுத்த நாள் வரும்போது படித்துவிட்டு வரவேண்டும்.
படித்ததை எழுதிப்பார்க்க வேண்டும்.
ஆசிரியருக்கு பிடிச்ச மாதிரி நடக்கமுடியாட்டியும் பரவாயில்லை, ஆசிரியருக்கு பிடிக்காததை செய்யக்கூடாது.
படிக்காத மாணவர்களைப் பற்றி தாழ்வாக எண்ணக்கூடாது, அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யவேண்டும். பிலுக்கிக்கொள்ளாமல் சொல்லித்தர வேண்டும்.
பாடம் நடத்தும் போது முழுகவனத்தையும் செலுத்தவேண்டும். பராக்கு பார்க்கக்கூடாது.
படிக்கும் மாணவர்களிடத்தில் போட்டி இருக்கவேண்டும், பொறாமை இருக்கக்கூடாது.
தேவையில்லாமல் விடுமுறை எடுக்கக்கூடாது.
படிப்பு மட்டுமில்லாது கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் கலந்துக்கொள்ளவேண்டும்.
எல்லா பாடங்களிலும் சமமாக கவனம் செலுத்த வேண்டும்.
வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கவலைப்பட்டுக்கொண்டு படிப்பில் கோட்டை விட்டுவிடக்கூடாது.
ஆசிரியர்களுக்கு மரியாதையை இயல்பாக தரவேண்டும். போலியாக நடிக்கக்கூடாது.
வாழ்க்கையில் முன்னேறிய ஒருவரை ரோல்மாடலாக ஏற்றுக்கொண்டு, அவர் போல் முன்னேற முயற்சிக்க வேண்டும்.
இது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் - 6
*********************************************************************************
சம காலக்கல்வி பற்றிய முந்தைய பதிவுகள்:
45 கருத்துரைகள்:
//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//
இதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி...
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து கருத்துகளுமே சூப்பர், இன்றைய மாணவர்கள் இதை புரிந்துகொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்....
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்க...
//வாழ்க்கையில் முன்னேறிய ஒருவரை ரோல்மாடலாக ஏற்றுக்கொண்டு, அவர் போல் முன்னேற முயற்சிக்க வேண்டும்.//
நிச்சயமாக...நமது செயல்களில் சரியான...
“பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
இதை மனதில்கொண்டு செயல்பட்டால் நாம் அனைவருமே சாதனையாளர்கள்தான்.......
சரியாகத்தான் சொல்லி இருக்குறார்கள், அப்படியே டியூசன் வந்தாதான் மார்ர்கு போடுவேன்னு சொல்லாம இருக்கனும் :-)
இதை நான் ஒரு ஆசிரியராக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றி...
Tamil10???????
நானும் ஆஜராகிட்டேன்.
///ஆசிரியருக்கு பிடிச்ச மாதிரி நடக்கமுடியாட்டியும் பரவாயில்லை, ஆசிரியருக்கு பிடிக்காததை செய்யக்கூடாது.////
......நல்ல வேளை.... நான் படிக்கும்(??!!) போது, இப்படியெல்லாம் யாரும் என்கிட்ட சொல்லல....
/
நல்ல பதிவு அணைவரும் இதை ஒரு பிரிண்ட் எடுத்து மாணவர்கள் இருக்கும் அறையில் அல்லது உங்கள் ஊர் பள்ளியில் கொடுங்கள்
indraiya thinagaran papper vaangip padikkavum;
namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;
vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/
nice...
மாணவன் said...
//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//
இதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி...///
ஏழு கழுதை வயசாகுது ன்னும் பாஸ் பண்ண மாட்டேன்க்கிரியே
இம்பூட்டு நல்லவங்களா நீங்க.........
மீண்டும் என் மூன்றாம் வகுப்பு வாத்தியாரின் அறிவுரைகளை நினைவிற்கு கொண்டு வருகின்றன தங்கள் பதிவு.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
nice...
மாணவன் said...
//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//
இதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி...///
ஏழு கழுதை வயசாகுது ன்னும் பாஸ் பண்ண மாட்டேன்க்கிரியே/////////
ஒங்க வயசுன்னு ஒப்பனா சொல்லவேண்டியதுதானே?!
மாணவன் said...
//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//
இதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி..//////////
இதை நான் பால்வாடி குழந்தையாக படிப்பதில் பெருமை அடைகிறேன்!
மாணவன் said...
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து கருத்துகளுமே சூப்பர், இன்றைய மாணவர்கள் இதை புரிந்துகொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்....
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்க..//////
பகிர்ந்துக்கலைனா திட்டுவின்களா?!
நல்ல அறிவுரைகள் ...
இது இருந்தாலே போதும் அனைத்து மாணவர்களும் எங்கேயோ போய்டுவாங்க ,...
நான் ஒன்னே ஒன்னு சொல்றேன் சகோ பாடம் படிப்பதை விட ஒரு விளையாட்டா பாவித்து விளையாடிபாருங்க நான் தான் வின்னர்னு வின் பண்ணுவேன் என்று நெஞ்சில் அழுத்தமா பதியவைக்கணும் ஆடுகளத்தில் ஓடுகிறேன் ஆட்டநாயகன் ஆவதற்கே == குறிப்பா எனக்கு கணிதம் சரியாக வராது பத்தாவது படிக்கும் பொழுது அப்போ எங்க ஆசிரியர் சொன்னது நானும் கணிதத்தை ஒரு விளையாட்டுப்போல எடுத்துகொண்டு விளையாட ஆரம்பித்தேன் 78 மார்க் கிடைச்சது டிப்ளமோ படிக்கும் போதும் அதே வழிமுறையை மேற்கொண்டேன் நல்ல பயன் பெற்றேன்
நல்லதொரு அறிவுரை கருத்துரை சூப்பர்.....
தலைப்பே அசத்தலா இருக்குங்க...
நம்மெல்லாம் படிக்கும் போது இதை யாரும் சொல்லி தரலையே...
பெரம்புதானே கெடச்சது...
அட..மாணவர்கள் எல்லோரும் ரொம்ப பிரட்டிக்கலாகத்தான் இருக்கின்றார்கள். சொல்வதை அப்படியே கடைப்பிடித்து எதிர்கால சிற்பிகளாக பரினமிக்க வாழ்த்தக்கள்.
அருமையான மாணவச் செல்வங்கள் .
மாணவர்கள் எப்பவுமே நல்லாதாங்க சிந்திக்கிறாங்க, சில ஆசிரியர்களும் ,
பெற்றோர்களும் தான் பல நேரங்களில் அவர்களை முறையா வழி
நடத்த தவறிடராங்க
மாணவர்கள் எப்படியிருக்கணும்ன்னு நாம சொல்றதைவிட அவங்களே சொன்னாங்க பாருங்க.. சூப்பர்.
//பாடத்தை புரிந்து படிக்கவேண்டும். மக்கப் பண்ணக்கூடாது.///
இது அருமைங்க , ஆனா பெரும்பாலான தனியார் பள்ளிகளில் புரியுதோ இல்லையோ மனப்பாடம் பண்ணி ஆகணும்னு தான் இரண்டு வருஷம் ஒரே பாடத்த நடத்துறாங்க ..
//ஒரு ஆசிரியர் பற்றி இன்னொரு ஆசிரியரிடமோ அல்லது வேறு ஒருவரிடமோ சொல்லக்கூடாது.(விமர்சிக்கக்
கூடாது)
//
இது ஆசிரியருக்கு மட்டும் இல்லை , வெளியிலையும் இப்படி இருந்தா பிரச்சினை இல்லை ..
அதே மாதிரி பிளுக்கிகொல்லுதல் , பராக்கு பார்த்தல் அப்படிங்கிற வார்த்தைகள் அருமை .. அதாவது பேச்சு வழக்குல வந்தது நல்லா இருக்குனு சொன்னேங்க ..
மிக விரைவில் .. சமூகம் .
என் வலைப்பூவுக்கு வந்து கருத்துரையிட்டதற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com
நல்ல அறிவுரைகள் .
நல்லா படிக்கிற மாணவர்கள் ஓரளவு சுமாராப் படிக்கிற மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தா, ‘சொல்லிக் கொடுத்தவங்களுக்கு’ பாடம் நல்லா மனசுல நிக்கும்....
அறிவுரை எல்லாம் சூப்பர்.....
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
nice...
மாணவன் said...
//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//
இதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி...///
ஏழு கழுதை வயசாகுது ன்னும் பாஸ் பண்ண மாட்டேன்க்கிரிய//
mm.. உங்ககூட சேர்ந்தா எப்படி பாஸ் பண்ண முடியும்???ஹிஹி
// வைகை said...
மாணவன் said...
//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//
இதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி..//////////
இதை நான் பால்வாடி குழந்தையாக படிப்பதில் பெருமை அடைகிறேன்!/
யப்பா ராசா.... நான் தெரியாம சொல்லிட்டேன் அதுக்குன்னு இப்படியா பால்வாடி குழந்தை...ம்ம்ம் ஹிஹி
// வைகை said...
மாணவன் said...
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து கருத்துகளுமே சூப்பர், இன்றைய மாணவர்கள் இதை புரிந்துகொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்....
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்க..//////
பகிர்ந்துக்கலைனா திட்டுவின்களா?!//
ஏண்ணே, ஏதாவது கோவம் இருந்தா.. இந்த வாரம் நேர்ல பார்க்கும்போது பேசி தீர்த்துக்குவோம்.... ஹிஹி
எங்களுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. சிங்கை குருப்ஸ் கூடாரத்தில் ஏதேனும் குழப்பமா? சொல்லுங்கள் மாணவரே... வைகை அவர்களே..
அருமையான கரூத்துக்கள்.பிரிண்ட் போட்டு ஸ்டடி டேபிள் முன்னாடி ஒட்டிவைக்க வேண்டிய அற்புதமான ஆலோசனைகள்.நன்றி பாரத்பாரதி.
மாணவர் நலன் விரும்பும் நல்ல பதிவு.வாழ்த்துக்கள்
பாரத்... பாரதி... said...
எங்களுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. சிங்கை குருப்ஸ் கூடாரத்தில் ஏதேனும் குழப்பமா? சொல்லுங்கள் மாணவரே... வைகை அவர்களே.////////////
அப்படியெல்லாம் இல்லை.....இது சும்மா.......உங்கள் பதிவுகளில் சில பதிவுகளில்தான் இதுபோல செய்யமுடியும்...
இன்றைய பள்ளி மாணவர்கள் நல்ல தெளிவுடன் தான் உள்ளனர்
அன்புடைய பதிவருக்கு வணக்கம்,
தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...
அன்புடன்,
வலைச்சரம் நிர்வாகம்.
இறுதியாக...
மேற்கண்டவைகள் அனைத்தும் வெறும் சொல்லாக இல்லாமல் செயல்படுத்தியும் காட்ட வேண்டும்
இன்றைய மாணவர்கள் வருங்கால மாணவர்களுக்காக சொன்ன அறிவுரைகளா?
நல்லாத்தான் சொல்றாங்க
கை கொடுங்க..
இப்பொழுத்தெல்லாம்
புத்த கசுமை தாங்காமலேயே
மாணவிகள்
பூப்பெய்தி விடுகின்றனர்..
நம் சமுதாயத்தில் மாணவர்களுக்கான
பல்வேறு சுமைகளை நீக்கினாலே நன்றாக படிப்பார்கள்...
அனைவரும் புரிந்துகொள்ள..
பகிர்ந்ததிற்கு நன்றி.
Post a Comment