டுபாக்கூர் அரசியல் செய்திகள் -இது கலாய்ப்பு சிறப்பிதழ். சிரிக்க மட்டும்..


டுபாக்கூர் டிவியின் "சிறப்பு சிரிப்பு செய்திகள்" வழங்கி வாசிப்பது வக்கீல் வண்டுஊஊ முருகன்...

தனிக்கோர்ட்டு நீதிபதிகளுக்கு ஜெயலலிதா புதிய சலுகை அறிவிப்பு:

தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க மறுத்த பெங்களூர் தனிக்கோர்ட்டு நீதிபதிகள், சென்னை வந்து, தன் முன் நேரில் அஜராகி விசாரிக்க விரும்பினால் தான் முழு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக ஜெயலலிதா அறிவிப்பு.

கோத்தபய- மன்மோகன் ரகசிய சந்திப்பு:

ராஜபக்ஷே மற்றும் சோனியா ஆகியோர்க்கு புற்று நோய் என்று பரவிவரும், மருத்துவமனை செய்திகளால், அவர்களுக்கு "தமிழர் தர்மம் வெல்லும், மீனவர் சாபம் கொல்லும்" என்னும் பாடலை விடாது கறுப்பு இயக்கத்தினர் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில் கோத்தபய- மன்மோகன் நேற்று கோவாவில் ரகசியமாக சந்தித்து, திண்ணை காலியாக போகும் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ராமதாஸ் அறிவிப்பால் பன்னாட்டு பொருளாதாரம் பாதிப்பு:

49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழிப்பது தான் நம் முதல் வேலை என மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறைக்கூவல் காரணமாக ஏற்பட்ட பயத்தால் , தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள், தம்முடைய கட்சியின் பெயரில் உள்ள திராவிட என்னும் வார்த்தையை "தார்" ஊற்றி அழிக்க முற்பட்டுள்ளதால், உலகச் சந்தையில் தார் விலை கிடுகிடுவென உயர்ந்தது. எதிரொலியாக பங்கு சந்தை, பத்தாயிரம் புள்ளிகள் உயர்ந்து, அழகிய "கோலமாக" மாறியது.

சச்சின்... சச்சின்...சச்சின்..

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சச்சின் நூறாவது நூறு அடிப்பார் என காத்திருந்து, காத்திருந்து, நூறு டிகிரி அளவுக்கு காய்ச்சல் கண்ட நூறு பேர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதி.

ஸ்விஸ் வங்கி பணம் - கலைஞர் காட்டம்.

ஸ்விஸ் வங்கியில் தமக்கு கணக்கு இருப்பதாக செய்தித்தாள்களில்
வெளிவந்த செய்தியை கலைஞர் கடுமையாக சாடியுள்ளார். சொந்த பேங்கில் எனக்கு கணக்கு வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அழகிரி தனது குடும்பத்தாருடன் லண்டனுக்கு "எஸ்" ஆகலாம்
என்ற பீதியின் காரணமாகவே கலவரம் உண்டானது என்ற செய்தியும் ஆளும் அதிமுக அரசால் பரப்பபட்டதே - கலைஞர்

மண்ணுமோகனுக்கு தமிழக மக்களின் கேள்வி:

வெறும் ஒண்ணரை கோடி மக்களை கொண்டுள்ள இலங்கையின் வெத்து பய, ஏழரை கோடி மக்களின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிண்டலடித்திருப்பது மண்ணு மோகனின் , மத்திய அரசுக்கு ஏன் தீவிரமான விஷயமாக தோன்றவில்லை. இந்திய இறையாண்மை என்னும் ரோஷம் தமிழுணர்வாளர்களுக்கு எதிராக மட்டுமா?

ஹசாரேவும் பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

என்னைப்பொறுத்தவரையில் அன்னா ஹசாரேவும் ஊழல்வாதி
தான். ஆதலால் அவருக்கு காங்கிரசில் சேரும் எல்லா தகுதியும் வந்துவிட்டது. ஆகவே ஆண்ட வெள்ளையர்களை விரட்டிவிட்டு, ஆளும் கொள்ளையர்களாக இருக்கும் காங்கிரசுக்கு ஆதரவாக உண்ணும் விரதம் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்படி அவர் காங்கிரசில் இணைந்தால் தங்கபாலும், நானும் ஒற்றுமையாகி ஒரே கோஷ்டியாக, புதிய தமிழக காங்கிரஸ் தலைவரை எதிர்ப்போம்.

அண்மைச்செய்தி:

ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா உரை:

சமச்சீர் கல்வியை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வகையில், அரசுக்கு உண்டான அனைத்து செலவுகளையும், தனது கழக ரத்தத்தின் ரத்தங்கள் சார்பில் தானே அரசுக்கு வழங்க உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். (சமூக நீதி காத்த வீராங்கனை பட்டத்தை மீண்டும் ஒரு முறை ஜெயலலிதாவுக்கு வழங்க, வீரமணியார் இந்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது)

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..


29 கருத்துரைகள்:

Unknown said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

மாலதி said...

ராஜபக்ஷே மற்றும் சோனியா ஆகியோர்க்கு புற்று நோய் என்று பரவிவரும், மருத்துவமனை செய்திகளால், அவர்களுக்கு "தமிழர் தர்மம் வெல்லும், மீனவர் சாபம் கொல்லும்" என்னும் பாடலை விடாது கறுப்பு இயக்கத்தினர் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில் கோத்தபய- மன்மோகன் நேற்று கோவாவில் // nice

ஆமினா said...

கலக்கல் செய்திகள்

சுதந்திரதின வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான சிந்தனை...
செய்திகள் அததனையும் அம்புட்டு ரசனை..

விட்டா இப்படிக்கூட நம்மாளுங்க கேட்பாங்க...

நிரூபன் said...

இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் மச்சி,

அரசியல் செய்திகளை வைத்து, அதிரடி மொக்கை போட்டிருக்கிறீங்க.

அடாது கறுப்பு இயக்கப் பாடல் சூப்பரோ சூப்பர்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுதந்திரதின வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

கலைஞர் சொந்த பேங்க் காமெடி செம

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

மாணவன் said...

//கலாய்ப்பு சிறப்பிதழ்// கலக்கல்....

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

//ஸ்விஸ் வங்கியில் தமக்கு கணக்கு இருப்பதாக செய்தித்தாள்களில்
வெளிவந்த செய்தியை கலைஞர் கடுமையாக சாடியுள்ளார். சொந்த பேங்கில் எனக்கு கணக்கு வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.//

அனைத்தும் அருமை ஆயினும் இது மிக மிக அருமை.

கவி அழகன் said...

ஆஹா ஆஹா அருமையான நகைச்சுவை செய்திகள் வாசித்து மகிழ்ந்தேன் தோழரே இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

ஜெய் ஹிந்த்!

Yaathoramani.blogspot.com said...

கலக்கல் செய்திகள்
ஆனாலும் இதில் ஒன்னு ரெண்டு
நடந்தாலும் நடக்குமோ என்ற
பயமும் இருக்கு
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
கோத்தபாய..சச்சின்...ஹிஹி

செங்கோவி said...

//அழகிரி தனது குடும்பத்தாருடன் லண்டனுக்கு "எஸ்" ஆகலாம்
என்ற பீதியின் காரணமாகவே கலவரம் உண்டானது என்ற செய்தியும் ஆளும் அதிமுக அரசால் பரப்பபட்டதே - கலைஞர் //

ஹா..ஹா..அஞ்சாநெஞ்சன் நிலைமை இப்படி ஆகிட்டதே!

Anonymous said...

போதும் இதோட நிறுத்துங்க பாரதி..மேடம் ஜெயா போட்டோல சைகை காட்டிட்டாங்க.

vidivelli said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

Karthikeyan Rajendran said...

சும்மா போட்டு எல்லாரையும் கலாய்ச்சுட்டீன்களே

இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

muthukumaran said...

//ஸ்விஸ் வங்கியில் தமக்கு கணக்கு இருப்பதாக செய்தித்தாள்களில்
வெளிவந்த செய்தியை கலைஞர் கடுமையாக சாடியுள்ளார். சொந்த பேங்கில் எனக்கு கணக்கு வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.//
அய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. சூப்பர் ங்க.

மாய உலகம் said...

சிறப்பு சிரிப்பு செய்திகள் அனைத்தும் அரசியல் நையாண்டிகளுடன் இருந்தது... அருமை

Riyas said...

ம்ம்ம் நல்லாயிருக்கு..

சாந்தி மாரியப்பன் said...

செம கலக்கல் செய்திகள்..

சாந்தி மாரியப்பன் said...

செம கலக்கல் செய்திகள்..

Prabu Krishna said...

ஹா ஹா ஹா எல்லாமே அருமை... வடிவேல், தோனி போட்டோவே பட்டைய கிளப்புது.

பாலா said...

செம கலாய்ப்பு

அ.முத்து பிரகாஷ் said...

வெறுமனே சிரித்து விட்டு போய் விட முடியவில்லை..
அத்துனையும் அத்துனை அருமை..
இடஒதுக்கீடு விடயத்தில் எத்தனை கருத்து மாறுபாடு இருந்தாலும் ஜெ நன்றிக்குரியவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது தோழர்.
நன்றி.

Anonymous said...

எல்லாமே பட்டைய கிளப்பும் காமெடி

Anonymous said...

எல்லாமே நெத்தியடி!

vazha vaippavan! said...

சொந்த பொன்னையே வெளியில கொனுவர முடியாத கோமாளி...
கோவணம் கிழிந்து,,,இப்போது இத்தாலி பிசா சாப்பிடும் பிணம்!

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்