இது கூத்தாடும் நேரம்...
வா கூத்தடிப்போம் என்று
கூவி அழைக்கும் நண்பா...
உன்னை பிடித்திருக்கும் அளவுக்கு
உன் அழைப்பு எனக்கு பிடித்திருக்கவில்லை
என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?
நான் ஒன்றும் புத்தன் இல்லை என்றாலும்,
ஒரே மணித்துளியில்
சித்தார்த்தனின் மரணமும்,
புத்தனின் பிறப்பும் நிகழ்ந்ததை
போல..,
ஒரே கணத்தில் மரணித்து,
அதே கணத்தில் புதிதாய் பிறந்தவன் நான்..
அதுவும் அதிக முறை.
ஒரு பக்கம் அன்பென்ற சிவத்தையும்,
மறு பக்கம் அது இல்லா சவத்தையும்
தாய் தந்தையென
ஒரே வீட்டில்
பார்த்து பார்த்து வளர்ந்த
துயர சுகங்கள்
போல
ஏராளம்
என்னுள் இருக்கிறது.
சின்னதொரு சந்தோஷம்
மூளைக்கு
சென்று சேரும் முன்
இதயம் கிழிபடும்
கள்ளிக்காட்டு சருகு நான்..
பீட்ஸா, பர்கர், பீர் , ரம் என்று
"பார் இது தான் என் உலகம்" என
நீ காட்டும் உலகிற்கும்
எனக்கும் வெகுதூரம்..
எதுவும் தப்பில்லை என்ற
இன்றைய யுகத்தில்,
குடித்தால் மட்டுமே ஆண்பிள்ளை
என்றால்
நான் "அப்படியே" இருந்து விட்டு போகிறேன்...
ஆனால் நட்பென்பது
தன் "தீயப்பழக்கத்தின்
நிழல்" கூட நண்பன் மீது விழாமல்
பார்த்து கொள்வதில் தான்
பூர்ணமடைகிறது
என்பதை உணர்ந்து கொள்...
டிஸ்கி:
தன்னை குடிக்க அழைத்த நண்பனை பற்றிய ஒரு பதிவினை படிக்க நேர்ந்தது. அதன் தாக்கமே இந்த பதிவு...
Pokkiris என்னும் பதிவரின்..., அந்த பதிவிலிருந்த வரிகள் உங்களுக்காக...
"ஆம்பளைனா குடிக்கனும்ல?" என்றான். அது அவனின் லாஜிக். அவனுக்கு தெரியுமா, நான் என் தாயை இழந்தது, இக்குடியினால், எனது இளமை பருவம் பெரும்பாலும் குடிக்கு எதிரான போராட்டத்தால் கழிந்தது என்றும், வாந்தியின் நாற்றத்தை வைத்து ஹாட்டா, ரம்மா, ஸ்காட்சா, பீரா என்று என்னால் சொல்லமுடியும் என்று (இதுவரை வைராக்கியத்தால் முகர்ந்துகூட பார்த்திராதவன்).
ஆம். எனது தந்தை ஒரு குடிகாரன். அவர் படித்த காலத்தில், எல்லையில் வெற்றி பெற்றுவிட்டு, நான் கணக்கில் 91/100 வாங்கியதால், தண்ணி அடித்துவிட்டு மப்பில் அடித்ததை என்னால் இன்றும் ஜீரணம் செய்யமுடியவில்லை. சாதாரண நிலையில் அடித்திருந்தால் ஒப்பு கொண்டிருப்பேன்.
வாழ்க்கையை வாழத்தெரியாமல், துணையை தொலைத்து இன்றளவில் அவர் படும் வேதனை, சொல்லில் அடங்காது. பளீரென ஒளிர்ந்த கண்ணாடி பாத்திரத்தை உடைத்த பெருமைக்கு சொந்தக்காரர். தன் மனைவியின் பிறந்தநாள் சத்தியத்தை மீறியவர். சத்தியத்தை மீறிய வேகத்தில் மனைவி உடலில் ஊற்றிய மண்ணென்னையை சட்டை செய்யவில்லை போதையில். கணவனை மிரட்ட நினைத்த பேதைக்கு தெரியவில்லை, கட்டுக்கடங்கா தீ விழுங்கிவிடும் என்று. ஒரு நொடி தாமதத்தில் அக்னி ஜுவாலை இரண்டு ஆள் மட்டத்திற்கு. பூனை வாயில் மாட்டிய எலி போல அவள், மெல்ல தீக்கிரையாகிறாள்.
நான் அவளை சந்தித்தது ஆஸ்பத்திரியில் 100% தீக்காயங்களுடன். எனது தாயை கண்டுபிடிக்க என்னால் இயலவில்லை. இதனை எழுதும்போது கண்களில் நீர் கோர்க்கிறது நண்பர்களே.
இரண்டு நாள் இருந்த உயிர், ஒரு நாள் அதிகாலையில் பிரிந்தது. அவள் இறப்பதற்கு முன் கூறியனவற்றில் முக்கியமானவை தந்தையை மன்னிக்க வேண்டும், இளவலை அடிக்கக்கூடாது. மிகவும் முக்கியமானது நான் பட்ட இத்துயரத்தை உனது மனைவிக்கு கொடுத்துவிடாதே, தயவுசெய்து குடித்துவிடாதே. குடி குடியை, மகிழ்ச்சியை, குடித்தனத்தை கெடுத்தது நண்பர்களே.
இப்போது கூறுங்கள் நான் குடித்து ஆண்மகனென்று நிரூபிக்க வேண்டுமா?
விடுமுறையானால் குடிப்பதைப் பற்றி பெருமையடிக்கும் கீச்சர்களுக்கு, சக கீச்சரின் வாழ்வில் நிகழ்ந்த துயரம் என்ற வரிகளோடு.., இந்த பதிவினை பற்றிய இணைப்பினை நல்கிய
@karaiyaan அவர்களுக்கு நன்றிகள்..
34 கருத்துரைகள்:
நன்பேண்டா..
அசத்தலான காவிதை..
பாராட்டுகள்..
தமிழ்மணம் காணோமே?
குடி குடியை கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். கவி அருமை..
கவிதைக்குள் நானும் பிரிதிபலிக்கிறேன்...
குடிப்பது பெருமையாய் நினைத்து என் நண்பர்கள் மத்தியில் குடிப்பது தவறு என்று சொல்லும் தகுதியில் நான் இருக்கிறேன்...
பெருமைப்பட நிறைய இருக்கிறது குடி என்பது அர்ப்ப சந்தோஷமே...
பகிர்வுக்கு நன்றி..
குடியால் அழிந்த பல குடும்பங்களை நான் கண்டிருக்கின்றேன்..எத்தனை எத்தனை கண்ணீர்க்க் கதைகள் நம் கண் முன்னே.
ஆனாலும் இளைஞர்களுக்கு இதில் உள்ள ஆபத்து புரியவில்லையே!
//பீட்ஸா, பர்கர், பீர் , ரம் என்று
"பார் இது தான் என் உலகம்" என
நீ காட்டும் உலகிற்கும்
எனக்கும் வெகுதூரம்..
என் நண்பர்களிடம் நான் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். அது சரி ஆம்பளைனா குடிக்கணுமா என்ன?
Kalakkal kavithainadai.
ல் நட்பென்பது
தன் "தீயப்பழக்கத்தின்
நிழல்" கூட நண்பன் மீது விழாமல்
பார்த்து கொள்வதில் தான்
பூர்ணமடைகிறது
என்பதை உணர்ந்து கொள்...//
நண்பர்கள் நிச்சயம் உணரவேண்டும்!
GOOD FRINDSHIP........
GOOD THINKING........
ungal Thandhaiyai mannithu vitirupirgal ena ninaikiren.Ithai padithavargal manam maruvargalo illaiyo, kaiyal madhuvai thodum bodhu nichayam ungal vedhanai nirambiya varigal ninaivukku vandhu vidum enbadhu urudhi. vazhga valamudan!
பகிர்வுக்கு நன்றி நண்பா!
நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
குடிக்கு எதிராக நல்ல கவிதை. திருந்தட்டும் குடி மகன்கள்.
raittu. mobile comment. neengal mobile view option'i disable seithirunthaal tamilmanam ottu pottiruppen. raittu. mobile comment. neengal mobile view option'i disable seithirunthaal tamilmanam ottu pottiruppen.
மிக மிக அருமை
இத்தனை வீரியமிக்க படைப்பை
சமீப காலங்களில் நான் படிக்கவே இல்லை
படித்து முடித்து சம நிலைக்கு வர
எனக்கு சிறிது அவகாசம் தேவிப்பட்டது
அந்த அளவு மிகச் சிறந்த பதிவைத்
தந்தமைக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்க
நல்ல பதிவுக்கு தலைப்பு ஏன் இப்படி. சுண்டி இருக்கும் தலைப்பு வேண்டும் என்ற வலையில் நீங்களும் விழுந்து விட்டீர்களா?
nalla pakirvu..
samukam thirunthanum..
//குடித்தால் மட்டுமே ஆண்பிள்ளை
என்றால்
நான் "அப்படியே" இருந்து விட்டு போகிறேன்...//
மிகச் சரி!அப்படி நிரூபிக்க வேண்டிய அவசியமேயில்லை!
நல்ல பகிர்வு பாரத்!
அசத்தலான கவிதை...பகிர்வுக்கு நன்றி...
நல்ல கவிதை,விழிப்புணர்வும் கூட!வாழ்த்துக்கள்.தமிழ்மணத்துக்கு அனுப்பிவிட்டேன்.
நான் எழுதிய பதிவு உங்களை இக்கவிதை எழுதத்தூண்டியது எனக்கு பெருமையே. நீங்களும் சமகருத்துடையவர் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களின் வைராக்கியம் வாழ வாழ்த்துகள்.
நல்ல கவிதை, விழிப்புணர்வு பரவட்டும்......!
நல்ல விஷயம். குடியை பெருமையாக பேசுபவர்களுக்கு செருப்படி போல உள்ளது.
அன்பென்ற சிவத்தையும்,
மறு பக்கம் அது இல்லா சவத்தையும் //
போன்ற அழகான கவிதை நடையில் ஆக்ரோசமான விழிப்புணர்வு பதிவு..பகிருவுக்கு நன்றி நண்பரே...
Kudipathu indraya kala katathil oru fashion akavum, kudikavilai endral uyir valave mudiyadhadu mathiriyum oru bimpathai uoruvaki yulanar- The Respectable (Drunker) today youngsters. Neenga thaan kudikrengana yen kuda irukra friends-ayum katayapaduthurenga...
தலைப்பும் கவிதையும் அலாதியான கற்பனை!
Kudipathu indraya kala katathil oru fashion akavum, kudikavilai endral uyir valave mudiyadhadu mathiriyum oru bimpathai uoruvaki yulanar- The Respectable (Drunker) today youngsters. Neenga thaan kudikrengana yen kuda irukra friends-ayum katayapaduthurenga... Indha pathivinai paditha pinavadhu, Kudikum mun yosiyungal Kudimakangale idhu avisiyama endru... Edhan pinavadhu kudiyai thodatheer- Adu mudiyadhendral ungalodu erupavarai kudika alaikatheer- Aduvum mudiyadhendral Nan kudikinren endravadu tweet seiyadheer - Aduvum mudiyadhendral kavingar Nam Natin nilamaiyai nondhu sonnar- "NADUM NATU MAKALUM NASAMAI POKATUM" endru... Nan Solkiren "KUDI-UM KUDIPAVARKALUM KUDIPADHINAI KATAYAPADUTHUVORUM NASAMAI POKATUM" endru....
டைட்டிலே கலக்கல்
"ஆம்பளைன்னா குடிக்கனும்"னு ஒருத்தன் சொல்றான்னா.. அவன் என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா... அவன் சொல்றான்னு நாம குடிச்சா நமக்கு எங்கே போச்சு?!! "அறிவு"
உங்கள் பதிவு நிச்சயம் ஒரு விழிப்புணர்வ் பதிவு நண்பரே!
அருமையான கவிதை
அருமையான கவிதை சகோ .அனுபவக் கவிதை இல்லையா. அதனால்த்தான் ரசித்துப் படிக்க முடிந்தது .
வாழ்த்துக்கள் .எனக்கும் கொஞ்சம் கிறுக்கத் தெரியும் முடிந்தால் பார்த்துப் பயந்துவிடாமல் உங்கள் கருத்தினைத்
தாருங்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ......
தமிழ் மணம் 10
குடிப்பதற்கும், கெட்ட பழக்கத்திற்கும் ஒருவனை விரும்பி அழைப்பது மடமைத் தனம் என்பதனை ஆணித்தரமாக கவிதை மூலம் சொல்லியிருக்கிறீங்க.
கவிதைக்குப் பக்க பலமாக டிஸ்கி அமைந்துள்ளது.
Post a Comment