அறை எண் 15 - சில டைரி குறிப்புக்கள்.

முஸ்கி: 
என் டைரி -2010 என்ற தலைப்பிலான தொடர் பதிவில் ,
ஆமினா அவர்களின் அழைப்பை ஏற்று, தொடர்கிறோம்.

எங்கள் டைரி ரெய்டு வந்த சி.பி.ஐ. வசம் இருப்பதால், வித்தியாசமான முயற்சியாக, அறை எண் பதினைந்தின் டைரியை உங்களுக்கு திருட்டுத்தனமாக சமர்பிக்கிறோம்.
 (அடுத்தவங்க டைரியை படிக்குற சொகம்... அட அட....)




நான் இந்தப் பள்ளியின் பதினைந்தாம் எண் அறை. நான் இங்குள்ள சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம்.

அவர்களின் அடையாளம் என்பது பன்னிரெண்டாம் வகுப்பு அ1,அ,ஆ மாணவியர்கள்.
பாவம் அவர்கள் அனைவரும் வரும் மார்ச் 2011 பொதுத்தேர்வுக்காக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இருக்கிறார்கள். சூறாவளியாக சுழன்றாடுகிறார்கள்.

 மார்ச் மாதம் வரை அவர்களின் தேதிகள் முழுமையும் நிரப்பப்பட்டு இருக்கிறது. அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பிடியை இறுக்கத்துவக்கிவிட்டனர். அம்மாடி ஒரு கழுத்தில் எத்தனை சுருக்குக்கயிறுகள்.

சென்ற வருடமும் இப்படித்தான் இருந்தது. இதே சூழல் ஆனால் வேறு மாணவியர்கள்.

2010-  ல் இதே ஜனவரி மாதம் அவர்களும் அலை பாய்ந்துக் கொண்டிருந்தனர், போகி அன்று கூட வந்திருந்தனர், செய்முறை வகுப்பு என்று கூட்டமாய் கருவிகள் நோண்டினார்கள். மெல்லியதாய் சிரித்துக்கொண்டனர்.

வகுப்பு முடிந்த பின்னும் கலையாமல் படிக்கட்டுக்களில் தவமிருந்தனர். ஆசிரியர் இல்லாத பொழுதுகளில் சத்தமாய் சிரிந்தனர், என்னுடைய சுவர்களில் கூட பெயர் செதுக்கினார்கள். மார்ச்சில் தேர்வெழுதி, மே மாதம் தேர்ச்சி தகவல் பெற்றனர், ஜூனில் கல்லூரியில் கலந்தார்கள்.

சென்ற வாரம் கூட கல்லூரி விடுமுறை நாளில் இங்கே வந்திருந்திருந்தனர், என்னுள் உலவினர். தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளில் மீண்டும் ஒரு முறை அமர்ந்து மகிழ்ந்தனர்.

சென்ற  வருட மாணவியரும், இந்த வருட மாணவியரும் கலந்திருந்த அந்த நாள் என் டைரிக்குறிப்பில் சிறந்த நாள்.

இந்த வருட மாணவியருக்கும், அடுத்த வருடம் இங்கே வந்துப் பார்க்கும் ஆசை முளைக்கும். நிறைய சந்தோஷ நிகழ்வுக்களும் நிகழ்ந்திருக்கிறது.


 சுதந்திர தின விழாவில் இந்தியாவின் வரைப்படம் வரைந்து, விளக்குகளால் ஒளியேற்றியது, ஆசிரியர்கள் தின விழாவில் ஆசிரியர்கள் போல பேசி நடித்துக்காட்டியது, அவர்களிடம் பேட்டி எடுத்தது, ரம்ஜான் கஞ்சியை அனைவருடன் பகிர்ந்துக்கொண்டது, பிறந்த நாளுக்கு அளிக்கப்படும் சாக்லேட்டுக்களை பதுக்கிக்கொண்டது, வீட்டுத்தோட்டத்தில் பூத்த பூக்களைக் கொண்டு வகுப்பறையை அலங்காரம் செய்தது, ஒரு மழை நாளில் குளிரெடுத்து நடுங்கிய மாணவிக்கு, ஆய்வக இன்டக்சன் அடுப்பு மூலம் சுடுதண்ணி தயாரித்தது என எல்லா வகுப்பறை கொடுக்கும் சுகங்களையும் இவர்களுக்கும் நான் தந்திருக்கிறேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு என்னும் பெயரில் இவர்களை பத்து மாதங்கள் சுமந்திருக்கிறேன், என் குழந்தைகளை வெகு விரைவில் உலகத்தினை பார்க்க இருக்கிறார்கள். வகுப்பறை என்பதும் கருவறைதானே.

பிரார்த்தனை செய்யுங்கள், என் குழந்தைகளின் தேர்வும், வாழ்வும் சிறக்க....

*********************************************************************************

தொடர்புடைய பதிவுகள்:





இந்த தொடர்பதிவை தொடர மாணவன்,  குறட்டை புலி,   அஞ்சா சிங்கம்லட்சுமி,  இரவு வானம் ,  சுந்தரா  ஆகிய பதிவர்களை அழைக்கிறோம். 
(அப்பாடா இனி நிம்மதியா தூங்கலாம்)

38 கருத்துரைகள்:

Unknown said...

வடை

Unknown said...

///(அடுத்தவங்க டைரியை படிக்குற சொகம்... அட அட....)///

இதுக்குதான் நான் டைரி எழுதுறதில்ல

Unknown said...

பள்ளிகூட நினைவலைகள் .பிராத்தனை செய்கிறேன்

சாந்தி மாரியப்பன் said...

டைரி படிக்க சுகமாத்தான் இருக்கு :-))

Anonymous said...

டைரி அனுபவங்கள் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது

தினேஷ்குமார் said...

கண்டிப்பா பிரார்த்திக்கிறோம் சகோ

என்னை கொஞ்சம் என்னுடைய பள்ளிவலாகத்துக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது உங்கள் பதிவு என்னபன்றது சகோ நம்மாலதான் பத்தாங்கிளாசுக்கு மேல தாண்ட முடியல அன்னைக்கே யோசிச்சிருக்கணும் நான் இன்னைக்கு யோசித்து பயனிருக்கா

வினோ said...

பசுமையான நினைவுகள்..

கண்டிப்பா பிரார்த்திக்கிறேன்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

பசுமையான நினைவுகள்....

தயாரகிக்கொண்டிருக்கிறது ஒரு டைரிக் குறிப்புகள்...

அஞ்சா சிங்கம் said...

பிரார்த்தனை செய்யுங்கள், என் குழந்தைகளின் தேர்வும், வாழ்வும் சிறக்க..../////////

கண்டிப்பாக பிராத்திக்கிறேன் .
நானும் எழுத முயற்சிக்கிறேன் .
அழைப்பு விடுத்ததற்கு நன்றி ......

ரஹீம் கஸ்ஸாலி said...

(அடுத்தவங்க டைரியை படிக்குற சொகம்... அட அட....)////
அதான் நீங்களே சொல்லிட்டேன்களே....அப்புறம் நான் என்னத்த சொல்ல...

அருண் பிரசாத் said...

அப்பாலிக்கா வந்து படிச்சிட்டு கமெண்ட் போடுறேன்... ஆணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

செங்கோவி said...

ஆம்..வகுப்பறையும் கருவறையே!

வைகை said...

பிரார்த்தனை செய்யுங்கள், என் குழந்தைகளின் தேர்வும், வாழ்வும் சிறக்க....////////


கண்டிப்பாக உங்களுக்காக பிராத்தனைகளும், உங்களுக்கு வாழ்த்துக்களும் எப்பவும் உண்டு!!

வைகை said...

தமிழ்மணத்தில் ஏதோ பிரச்னை பின்னர் வாக்களிக்கிறேன்!

குறையொன்றுமில்லை. said...

என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்ததற்கு நன்றி.

Prabu Krishna said...

பசுமையான நினைவுகள்..

கண்டிப்பா பிரார்த்திக்கிறேன்....

THOPPITHOPPI said...

கண்டிப்பா பிரார்த்திக்கிறேன்

Chitra said...

பன்னிரெண்டாம் வகுப்பு என்னும் பெயரில் இவர்களை பத்து மாதங்கள் சுமந்திருக்கிறேன், என் குழந்தைகளை வெகு விரைவில் உலகத்தினை பார்க்க இருக்கிறார்கள். வகுப்பறை என்பதும் கருவறைதானே.


....Thats very touching. May God bless them!

Unknown said...

//பிரார்த்தனை செய்யுங்கள், என் குழந்தைகளின் தேர்வும், வாழ்வும் சிறக்க....//
Sure! :-)

Unknown said...

அனைவரும் சிறந்த மதிப்பெண்களை பெற்று வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் ...

மாணவன் said...

டைரி குறிப்புகள்... பள்ளிகால நினைவுகளை அசைபோட வைத்தீர்கள் அருமை

மாணவன் said...

//முஸ்கி:
என் டைரி -2010 என்ற தலைப்பிலான தொடர் பதிவில் ,
ஆமினா அவர்களின் அழைப்பை ஏற்று, தொடர்கிறோம்.//

முஸ்கியா இது என்னா இப்ப புதுசா வந்துருக்கா நல்லாருக்கே நடத்துங்க....

மாணவன் said...

//எங்கள் டைரி ரெய்டு வந்த சி.பி.ஐ. வசம் இருப்பதால், வித்தியாசமான முயற்சியாக, அறை எண் பதினைந்தின் டைரியை உங்களுக்கு திருட்டுத்தனமாக சமர்பிக்கிறோம்.//

ஓகே ரைட்டு நானும் நண்பனின் டைரியை திருடி எழுதிட வேண்டியதுதான் ஏன்னா எனக்கு டைரி எழுதற பழக்கம் இல்லங்க... எழுதவும் தெரியாது???
(இந்த பொழப்புக்கு...) உங்களோட மைண்ட் வாய்ஸ் கேட்குது

ஹிஹிஹி

மாணவன் said...

//பிரார்த்தனை செய்யுங்கள், என் குழந்தைகளின் தேர்வும், வாழ்வும் சிறக்க....//

பிரார்த்தனையுடன்... வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

மாணவன் said...

என்னை தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றிங்க கண்டிப்பாக எழுதறேன் (எப்ப??? நண்பனின் டைரி கிடைத்ததும்) ஹிஹிஹி

மாணவன் said...

மற்ற தொடர்பதிவு எழுதும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்....

சிவகுமாரன் said...

பிரார்த்திக்கிறேன் குழந்தைகளுக்காக

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

மாணவச் செல்வங்கள் தேர்வினிலும் வாழ்க்கையினிலும் வெற்றி பெற பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

thodar தொடர் பதிவுக்குக்கூட மைனஸ் ஓட்டு போடனுமா? #டவுட்

சி.பி.செந்தில்குமார் said...

நம்மை எல்லாம் மனுஷனா மதிச்சு யாரும் தொடர் பதிவுக்கு கூப்பிடறதில்லையே.. ஏன்? $# டவுட் 2

Unknown said...

உண்மையில் இப்போது வரை நான் வாழ்க்கையில் மிஸ் பண்ணியதாக நினைப்பது +1,+2 படித்த காலங்களையே அதனை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி, என்னையும் தொடர்பதிவுக்கு அழைத்ததுக்கு மிகவும் நன்றி, கண்டிப்பாக எழுதுகிறேன், படித்து முடித்து சென்ற மாணவ செல்வங்கள் வாழ்வில் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன்.

இளங்கோ said...

//எங்கள் டைரி ரெய்டு வந்த சி.பி.ஐ. வசம் இருப்பதால்... //
Hahahaa :)

செல்வா said...

//ஆசிரியர்கள் தின விழாவில் ஆசிரியர்கள் போல பேசி நடித்துக்காட்டியது, அவர்களிடம் பேட்டி எடுத்தது, ரம்ஜான் கஞ்சியை அனைவருடன் பகிர்ந்துக்கொண்டது, பிறந்த நாளுக்கு அளிக்கப்படும் சாக்லேட்டுக்களை பதுக்கிக்கொண்டது, வீட்டுத்தோட்டத்தில் பூத்த பூக்களைக் கொண்டு வகுப்பறையை அலங்காரம் செய்தது, ஒரு மழை நாளில் குளிரெடுத்து நடுங்கிய மாணவிக்கு, ஆய்வக இன்டக்சன் அடுப்பு மூலம் சுடுதண்ணி தயாரித்தது என எல்லா வகுப்பறை கொடுக்கும் சுகங்களையும் இவர்களுக்கும் நான் தந்திருக்கிறேன்//

வாய்ப்பே இல்லைங்க , இந்த வரிகள் படிக்கும் போது உணர்வுப்பூர்வமா இருக்கு , அதோட இதுக்கு கீழ இருக்குற வரிகள் அதவிட வகுப்பறையும் கருவறைதானே அப்படின்னு சொல்லி , ஒரு அறையோட குழந்தைகள் அப்படின்னு சொல்லிருக்கறது ரொம்ப பிடிச்சிருக்கு !

குறையொன்றுமில்லை. said...

உங்க அழைப்புக்கு பதில் சொல்லும் விதத்தில் டைரி எழுதிட்டேனே. நீங்கதான் படிக்கவே வல்லை.

"குறட்டை" புலி said...

என்னடா இது குறட்டைக்கு வந்த சோதனை? நான் காட்டுக்குள்ள ஓடி ஒளிச்சுட்டு... ஏதாவது ஒரு டைரியை எடுத்துட்டு தான் வரணும்... கண்டிப்பா... வருவேன்!!
நான் இப்படி ஒரு முதல் வாரத்திலேயே எழுத கூப்பிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு எனது ஆயிரம் குறைட்டைகள் நிறைந்த நன்றி

எம் அப்துல் காதர் said...

தல என்னைய யாரும் திருட முடியாது!! ஏன்னா நானே ஒரு டைரி ஹி.. ஹி

Vani said...

அருமை :))) எல்.கே.ஜிக்கு சீக்கிரம் அனுப்புங்க வாழ்த்துகள்

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்