சின்னதொரு சொர்க்கம்.

ரஷ்ய இலக்கியங்களில் எல்லாம் மிக பெரிய சந்தோஷத்தை ஒருவன் அடைந்தான் என்பதை விளக்க அதிக அளவில் பயன் படுத்தப்பட்டிருக்கும் உவமை என்னவென்றுத் தெரியுமா?.."பள்ளியை விட்டு வரும் மாணவன் போலே...

நடிகர் சூர்யா கூட அவரின் பள்ளி வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை ஒரு முறைச் சொன்னார், அவர் பள்ளியில் படிக்கும் போது ஒரு நாள் பள்ளி முதல்வரின் மகன் திடீரென இறந்து விட்டதால், இன்று பள்ளி விடுமுறை என்றவுடன் மாணவர்கள் அனைவரும் சந்தோஷமாக கைத்தட்டினார்கள்.

பள்ளி என்பது சின்னதொரு திகார் சிறையாகவே பெரும்பாலான மாணவர்களுக்குத் தோன்றுகிறது. ஆனால்எங்களுக்கு சொர்க்கமாகவே தோன்றுகிறது.

மாணவர்களை புரிந்துக் கொண்ட ஆசிரியர்களும், ஆசிரியர்களை புரிந்துக் கொண்ட மாணவர்களும் இருக்கும் இடத்தை சொர்க்கம் என்று தானே சொல்ல வேண்டும்.

அரசுப் பள்ளி என்றாலே ஔவையார் காலத்தில் இருப்பதைப் போன்று இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். எங்கள் வகுப்பறை "எந்திரன்" யுகத்து வகுப்பறை.

லேப் டாப், புரஜெக்டர் என நவீன தொழில்நுட்பங்களை கற்பித்தலுக்கு பயன்படுத்தும் ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். எங்கள் வகுப்பறையின் Window -வில் சின்னதொரு அறிவிப்பு பலகையில்இடம் பெற்றுக் கொண்டிருந்த, எங்களின் கவிதைகள், கட்டுரைகள் இப்போது Microsoft Windows வழியாக, இந்த வலைப்பூ வாயிலாக, இப்போது உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது என்பதே இதற்கு சான்று.

சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்...
எங்களைப் பொறுத்தவரை சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் சொர்க்கம்.. எங்கள் பள்ளி வாழ்க்கை(+2 வாழ்க்கை) இன்னும் வெறும் 150 நாள்கள் தான். இருப்பினும் மிச்சம் இருக்கிற நாட்களை ரசனையோடு இருக்கப்போகிறோம்..
எங்கள் ஆசிரியர்களையும், பாடங்களை கொண்டாடி மகிழப்போகிறோம்..

இடவசதி குறைவு போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி; எங்கள் பள்ளி வெற்றி நடைப்போடுகிறது. சென்ற மார்ச்-2010 பொதுத்தேர்வில் எங்கள் மாணவியர்கள் 200-க்கு 198 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். மாநில முதல் இடத்திற்கும் எங்களுக்கும் இடைவெளி வெறும் இரண்டு மதிப்பெண்கள் தான்..

"தங்கம் எனக்கு வேண்டாம்... தங்கப்புதையல் எனக்கு வேண்டும் என்று எங்கள் ஆசிரியர்கள் சொன்னபோது, நாங்கள் "ரின்" விளம்பரத்தில் வருவதுப் போல , இரண்டு மார்க் தானே அதுவும் இந்த முறை வந்துவிடும் என்று அவர்களுக்கே நம்பிக்கையூட்டியிருக்கிறோம்.

இந்த முறை நிறைய பொறியியல் , மருத்துவ மாணவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்...

எங்கள் எண்ணங்கள் கைக்கூட நீங்களும் எங்களுக்காக இறைவனை வேண்டிகொள்ளுங்கள்.

12-அ1,அ,மற்றும் ஆபிரிவு மாணவிகள்.
நகரவை மகளிர் மேல் நிலைப்பள்ளி,
மேட்டுப்பாளையம்.32 கருத்துரைகள்:

cheena (சீனா) said...

அன்பின் பாரத்

முதலில் தமிழ் மணத்தில் இணையுங்கள் - அது ஒரு தமிழ் வலைப்பூக்களின் திரட்டி - அதில் இவ்வலைப்பூவினை ( பதிவென்றும் சொல்லலாம் ) இணைத்து விட்டால் நீங்கள் இடும் ஒவ்வொரு இடுகையும் ( போஸ்டும் ) பலராலும் பார்க்கப்படும் - மறுமொழிகள் தரப்படும். ஆதரவு பெருகும்

ஒவ்வொண்ணா பாக்கறேன் - கருத்து சொல்றேன்

நல்வாழ்த்துகள் மாணவச் செல்வங்களுக்கு

நட்புடன் சீனா

*இயற்கை ராஜி* said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

சங்கவி said...

அழகான முயற்சி...
பள்ளியைப்பற்றிய அற்புதமான கட்டுரை..

வாழ்த்துக்கள் மென் மேலும் வளர...

vaish said...

really fantastic job ...

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

பன்னிரண்டாவது படிக்கும் மாணவியரின் எண்ணங்கள் நன்று - ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் உரை நன்று. பள்ளி எப்பொழுதும் சொர்க்கமே - எல்லோருக்கும் சொர்க்கமே !

புரிதலுணர்வு இருப்பின் சொர்க்கமே - நல்ல சிந்தனை.

எந்திரன் யுகத்து வகுப்பறை - ஆகா ஆகா

மைக்ரோ சாஃப்ட் விண்டோசா - பலே பலே

சாகிற நாள் - சொற்கள் தவிர்க்கலாம் - உவமை சரியில்லை.

நடைமுறைச் சிக்கல்கள் இடையேயும் - அதிக மதிப்பெண் பெறும் மாணவியர்க்கு பாராட்டுகள்.

தங்கப் புதையல் தரவும் - பொறியியலாளராக - மருத்துவராக - ஒளிரவும் நல்வாழ்த்துகள்

எண்ணங்கள் கைகூட இறையருள் என்றும் நிலைக்க - நல்வாழ்த்துகள் செல்வங்களே !

நட்புடன் சீனா

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அழகாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் வலையுலகில் ஏதாவது உதவி தேவையென்றால் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

tamilmanam.net திரட்டியில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். நிறைய பேரை சென்றடையும்

SUMAZLA/சுமஜ்லா said...

மாணவச் செல்வங்களே!

நானும் ஆசிரியப்பணிக்கு படித்தவள் தான் ஆயினும் கடந்த சில மாதங்கள் வரை ஒரு மாணவியே.... ஆம் நேற்று தான் என்னுடைய மதிப்பெண் பட்டியல் கிடைத்தது. பி.எட் தேர்வில் கல்லூரியில் முதல் மாணவியாகத் தேறி பூரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அத்தகைய பூரிப்பில் தாங்களும் ஆழ எமது வாழ்த்துக்கள்.

வலைப்பூ என்பது ஒரு மாயவலை அல்ல. ஆனால, வாழ்ந்தால் வாழ்த்தும் வீழ்ந்தால் தூற்றம் உலகம் போலத்தான் இதுவும்.

தமிழ்மணம் மற்றிம் இண்ட்லியும் இணையுங்கள். ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் தளமாக உங்கள் தளம் மாறும். எதைப் பற்றியும் எழுதுங்கள். ஆனால் அதில் சுவாரஸ்யம் இருக்கட்டும். எண்ணவோட்டத்தைப் பதியுங்கள். ஆனால் அதில் உயிரோட்டம் இருக்கட்டும்.

வாழ்த்துக்கள்!!!

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்..
முதலில் சீனா அய்யா சொன்னது போல தமிழ்மணத்தில் இணையுங்கள்..
http://www.tamilmanam.net

ரோகிணிசிவா said...

all the best ,
do well

ரோகிணிசிவா said...

all the best ,
do well

வி.என்.தங்கமணி, said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
தலைப்பில் மேட்டுப்பாளையம் என்பதுடன்
எந்த மேட்டுப்பாளையம் என்பதை தெரிவியுங்கள்
தமிழ்நாட்டில் நிறைய மேட்டுப்பாளையம் உண்டு.
தட்டுத்தடுமாறி நடைபழகினாலும் ஓட்டத்தில்
நீங்கள் முதலாவதாக வருவீர்கள்.
அடுத்த மடலில் கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன்.
அன்பு மாணவிகளே நன்றி.
வாழ்க வளமுடன்.

பாரத்... பாரதி... said...

ஜோயல்சன் அவர்களே ...
புதிய பதிவுகளைப் பற்றி கருத்துரை தரவில்லையே?கோபமா?

பாரத்... பாரதி... said...

புதிய முயற்சி என வரவேற்பு அளித்த இயற்கை ராஜி-க்கு நன்றிகள்...
சரி அது என்ன இயற்கை ராஜி ?

வி.என்.தங்கமணி, said...

வலைப்பூ பதிவிறக்கம் ஆக
தாமதம் ஆகிறது.
எனவே தேவையற்ற அழங்காரங்களை
குறையுங்கள். கடிகாரம், பார்வையாளர்
எண்ணி 2ல் ஒன்று ஆகியவற்றை
எடுத்து விடுங்கள். சீக்கிரம் பதிவிறக்கம்
ஆவதையே பார்வையாளர்கள் விரும்புவார்கள்.
அன்பு மாணவிகளே நன்றி,

பாரத்... பாரதி... said...

அழகான முயற்சி என நம்பிக்கையூட்டிய
சங்கவிக்கு நன்றிகள்

பாரத்... பாரதி... said...

ஆரூரன் விசுவநாதன் அவர்களின் வாழ்த்துக்களுக்கு
நன்றிகள். அடிக்கடி எங்கள் பதிவுகளை பார்வையிட்டு, கருத்துரைகள் தருக..தமிழ் மணத்தில் இணைய முயற்சிகளைத் தொடங்கி விட்டோம்

பாரத்... பாரதி... said...

நேற்று வரை மாணவியாக இருந்து, இன்று
ஆசிரியையாக உருமாற்றம் கொண்டுள்ள சுமஜ்லா- வுக்கு எங்கள் அனைவரின் சார்பில் முதலில் வாழ்த்துக்கள் பின்பு வருகை புரிந்து கருத்துரை வழங்கியதற்கு நன்றிகள்..

பாரத்... பாரதி... said...

அன்பரசன் அவர்களுக்கு நன்றிகள்..
தமிழ் மணத்தில் இணைய முயற்சிகளைத்
தொடங்கி விட்டோம்..அடிக்கடி எங்கள் பதிவுகளை பார்வையிட்டு,கருத்துரைகள் தருக..

பாரத்... பாரதி... said...

ரோகிணி சிவா அவர்களின் வாழ்த்துக்களுக்கு
நன்றிகள்.
அடிக்கடி எங்கள் பதிவுகளை பார்வையிட்டு,
கருத்துரைகள் தருக..

பாரத்... பாரதி... said...

சீனா... அவர்களுக்கு,
முதலில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..
இந்த வலைப்பூ-இல் உள்ள
அனைத்து பதிவுகளை படித்து,
மிகச் சரியான மதிப்பீடுகளை வழங்கியமைக்கு
நன்றிகள். எங்களுக்கு வேறு யாரும் வழங்கியிராத
ஆதரவு. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும்
தாய் அன்பு உங்களுடையது..
நன்றிச் சொல்ல வார்த்தைகளே
இல்லாது தீர்ந்துப்போன உணர்வு...
தங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை
வெகு விரைவில் சரி செய்கிறோம்..
தொடர்ந்து வழிகாட்டுங்கள்..
தமிழ் மணத்தில் இணைய முயற்சிகளைத்
தொடங்கி விட்டோம்..

பாரத்... பாரதி... said...

எங்கள் பள்ளிமாணவியாய் இருந்து தற்சமயம் கல்லூரியில் பயிலும் வி.பத்ம பிரியா-வின் வருகைக்கும் நன்றிகள்..

பாரத்... பாரதி... said...

நன்றிகள் vaish... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
வந்து பார்க்கவும்..

சிவாஜி said...

சிதையா நெஞ்சு கொள்
தவத்தினை நிதம்புரி
நாளெல்லாம் வினை செய்
நினைப்பது முடியும்
நன்று கருது மந்திரம்
-பாரதி

இந்த வரிகளை இங்கு நினைவு கூர்கிறேன். வாழ்த்துக்கள்.

ப.செல்வக்குமார் said...

வணக்கம் பாரதி .,
நிச்சயம் உங்களது வலைப்பூவினைப் பார்வையிடுகிறேன் . மேலும் உங்களது பள்ளிக்காலம் இனிமையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் .. அன்புடன் செல்வா ..

ப.செல்வக்குமார் said...

வணக்கம் பாரதி .,
நிச்சயம் உங்களது வலைப்பூவினைப் பார்வையிடுகிறேன் . மேலும் உங்களது பள்ளிக்காலம் இனிமையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் .. அன்புடன் செல்வா ..

பாரத்... பாரதி... said...

ப. செல்வகுமார் விரைவில் எங்கள் வலைப்பூவை
பார்வையிட வாருங்கள்..

Shathish Kumar said...

My heartly to ur present 12th students to score good marks. Ask the students to take seminars in class sir, in college they are giving more topics to take seminars in class. Give them practice in taking seminars

Anonymous said...

namathu payanam sigarathi thandi valara vendum-
sudha,susithra,saranya, nandhini

P.Sundaramoorthy said...

Namathu payanam sigarathai thoda valara vendum.

-Sudha,
-Suchitra,
-Nandhini,
-Saranya

sundaramoorthy said...

Namathu payanam sigarathai thoda valara vendum.

-Sudha,
-Suchitra,
-Nandhini,
-Saranya

sundaramoorthy said...

Namathu payanam sigarathai thoda valara vendum.

-Sudha,
-Suchitra,
-Nandhini,
-Saranya

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்