நான் தோற்று விழமாட்டேன்.

எனது பள்ளி... எனது நம்பிக்கை...

இன்னும் சில நாட்களில்
எங்கள் பள்ளி நாட்கள்
முடிந்து விடும்..
அதன் பின்
வாழ்க்கையை
நேரடியாக சந்திக்கப் போகிறேன்..
இவள் கை களைத்து
தோற்றுப் போய்விடுவாளோ
என கவலைப்பட வேண்டாம்...

வெறும் புத்தகப்புழுவாய்
இருந்து விடாமல்
எதார்த்த வாழ்வின்
நடைமுறை சிக்கல்களையும்;
மனித மனதின் முரண்பாடுகளையும்
எனது பள்ளி
கற்றுக் கொடுத்திருக்கிறது.

வாழ்க்கையின்
சிரமங்கள் எதனையும்
எதிர் கொள்ளும்
வலிமையை
எனது தோள்களுக்கு
என் பள்ளி வாழ்க்கை
தந்திருக்கிறது.

நான் தோற்று விழமாட்டேன்.
வீழ்ந்தாலும்
உடன் எழுவேன்.

சிகரங்கள்
என்னை
பாடமாய்
எடுத்து படிக்குமாறு
எழுவேன்...

மிக உயரமாய்...


எஸ். பாரதீ....

8 கருத்துரைகள்:

சிவாஜி said...

வாழ்த்துக்கள் :)

கண்ணகி said...

தன்னம்பிக்கை வரிகள்...மனதில் உறுதி இருந்தால் மாமலையும் கடுகுதான்...

கருத்துக்களில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது...வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... said...

வாழ்க்கைக்கான நம்பிக்கையைத் தருவது தானே
உண்மையான கல்வி.. நன்றி கண்ணகி..

பாரத்... பாரதி... said...

நன்றி சிவாஜி. இன்றும் வருகை தந்து கருத்துரை
வழங்கியதற்கு...

Vel Kannan said...

எழுச்சியாக உள்ளது .. வாழ்த்துகள்

Shathish Kumar said...

True lines sir. I've learned many things from ur classes. I'll emerge as you said when we finish 4yrs of engineering sir. Your blog is wonderful sir. Also publish something related to physics sir

பாரத்... பாரதி... said...

நன்றி சதீஷ்.. உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

தன்னம்பிக்கை தான் மாணவர்களின் சொத்தாக இருக்க வேண்டும். அருமையான சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்