நட்பில் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு..எனக்கு இல்லை..



உங்களுக்கு நட்பு என்பதில் நம்பிக்கை இருக்கிறது எனில் மிக்க மகிழ்ச்சி.உலகத்தில் இருக்கும் எல்லா உறவுகளை விட சிறந்த உறவு நட்பு தான் என்பது இங்குள்ள பலரின் வாதமும் கூட. நானும் கூட முந்தைய பள்ளி, கல்லூரி நாட்களில் நட்பினை புகழ்ந்து ஏராளமான கவிதைகளும் எழுதி, நட்பு வட்டத்துக்கு பரிசளித்த காலமும் உண்டு.

ஒன்றாகி சந்தோஷித்து, கவலையுற்று, ஒன்றாய் உண்டு உறங்கிய காலமும் உண்டு.

ஆயிரம் நண்பர்களை கொண்ட நட்பு வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று "லட்சியத்தோடு" நடைப்போட்ட நாட்களும் உண்டு.

ஆனால் சமீப காலமாய், நட்பின் மீதான நம்பிக்கை சற்று இற்றுக்கொண்டே வருகிறது. ஆயிரம் எண்ணிக்கை வரை எதிர்பார்த்த நண்பர்கள் புத்தகத்தில், பல பக்கங்களை பணம் கிழித்து விசி விட்டது, சில பக்கங்களை காலம் கலைத்து போட்டு விட்டது.

"தனித்து நின்றால், அதிரடியாய் வரும் புயல் காற்றில் தாக்குபிடிக்க முடியாமல் போய்விடுவதால், தற்காப்புக்காக, பயத்தின் காரணமாக கைக்கோர்த்து இணைந்து நிற்கிறோம். "தனி மரம் தோப்பாகாது" என்று வசனம் பேசுகிறோம்"  என்றொரு பாலகுமாரனின் ஏதோ ஒரு கதாபாத்திரத்தை போலவே என்னுடைய இன்றைய மனநிலை இருக்கிறது.

உங்களுடைய தந்தையின் வயதில் இருக்கும் ஒருவரை ஆராய்ந்து பாருங்கள். அவருக்கு எத்தனை நண்பர்கள் இருக்கக்கூடும் இத்தனை வருடம் வாழ்ந்து விட்டபின்?

நான் வாழ்ந்தது கொஞ்சமே என்ற போதும், உண்மை நண்பர்களை விரல் விட்டு எண்ணும் போது, வலது கையில் கூட, இன்னும் சில விரல்கள் மிச்சமிருக்கிறது எனக்கு.

பணத்தின் பின் ஓடும் இன்றைய வாழ்க்கையில் அதுவும் கூட இன்னும் குறைந்து விடுமோ என்று கவலையாய் இருக்கிறது. அவரவர் கவலைகளையும் , அவரவர் சந்தோஷங்களையும் சின்னதொரு வாழ்க்கை வட்டத்தை அமைத்து, அதற்குள்ளாகவே "உழல" ஆரம்பித்து விட்டோமோ என்று தோணுகிறது.

இரண்டு வருடம் நட்பாய் இருந்த ஒருவரை ஏதேச்சையாய் சந்திக்கும் போது கூட, அரை மணி நேரத்திற்கு அதிகமாய் பேசுவதற்கு விஷயம் இல்லாமல் வாழ்க்கை ஓட்டத்தோடு ஓட வேண்டியதாய் இருப்பது வரமா சாபமா?

நட்பு என்பது வெறுமனே கடந்த காலத்திற்கான அவயமா?

நிகழ்கால பரபரப்பில் கடந்த காலத்தை தொலைத்துவிட்டது தான் நம் சாதனையா?

பள்ளி, கல்லூரி, பணி புரியும் இடம் என்று இடம் சார்ந்து, இப்போதைய காலம் சார்ந்து  நம்முடைய நட்பு வட்டாரம் இருக்கிறதே, ஏன் இடம், தாண்டி காலம் தாண்டி, நட்பால் நிலைக்க இயலுவதில்லை???

காசு இருந்தே போதும், மகிழ்ச்சி இருந்த போது இணைந்திருக்கும் நட்பு,
சாகும் வரை நீடிக்காமல்; துன்பத்தின் போது, தலைமறைவாகி சாகும் வரம் வாங்கிக்கொள்வது இன்றைய நவநாகரீக பாஸ்ட் புட் வாழ்க்கையின் மிச்சமா?

"நட்பின் மேல் நம்பிக்கை இல்லை" என்னும் பில்லா பாடல் வரிகள் இனி தேசிய கீதமாகி விடுமோ என்ற எண்ணம் வந்து விட்டது இப்போது.

இது தவறான சிந்தனை என்று நீங்கள் சொன்னால், உங்களுடைய வார்த்தைகளையும் செவிமடுக்க நானும் தயாராகவே இருக்கிறேன்.

வெறுமனே வாரத்திற்கு ஒரு முறை கூடி, உற்சாக பனம் அருந்தி மகிழ்வதும், குறுஞ்செய்திகள் மூலம் நட்புக்கான வார்த்தைகளை பரிமாறிக்கொள்வது தான் நட்புக்கான அடையாளம் எனில் நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன். விட்டு விடுங்கள் என்னை.

35 கருத்துரைகள்:

Unknown said...

கலக்கலுங்கோ...

"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே...உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே...."

இந்தப்பாடல் எனக்கு அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறது என் செய்வேன்!

சென்னை பித்தன் said...

வாங்க பாரத்!
வள்ளுவன் சொல்வது போல் நட்பமைவது கடினமே!ஆயினும் நட்பின்றி வாழ்க்கையுண்டோ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாங்க பாரத்..

வெகுநாட்களுக்கு பிறகு மிகவும் கோவத்துடன் வந்துள்ளீர்...

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நாளு கழிச்சு வந்தாலும், காத்திரமான இடுகையோட வந்திருக்கீங்க..

இன்றைய அவசர உலகில் யாருக்கும் யாரோடயும் நின்னு பேச நேரமில்லை.. ஓடிக்கிட்டே இருக்காங்க. அப்றம் எங்கிருந்து நட்பை பாதுகாப்பார்கள்!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நட்பு சார்ந்த இன்றை காலட்டம் அவர்களுடைய வசதி வாய்ப்புகளை பொருத்து மாறுபடுவது உண்மைதான்..

நட்பு என்பது வலிப வயதோடு முடிந்து விடுவது போன்ற சூழல் இன்றை நவநாகரீக சூழலில் ஏற்ப்பட்டுள்ளது.

அதுவும் உண்மைதான். இளமைகால நண்பர்கள் முதுமையில் சந்திக்கும்போது அன்றை வாழ்க்கை தரத்தை மதிப்பிட்டே தன்னுடைய பழக்கத்தை வெளிப்படுத்து கிறது இன்றைய உலகம்.

மற்றபடி இன்றை உலகில் புனிதமான நட்பு என்று எனக்கு இது வரை வாய்த்ததில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னுடைய உண்மையான நண்பர்கள் யாரென்று விரல் விட்டு எண்ணுகையில் என்னுடை ஒரு விரல்களும் கூ்ட பூர்த்தியாகாமல் இன்னும் மிச்சம் இருக்கிறது....

Anonymous said...

அருமை,உண்மை

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் மக்கா என்னாச்சுய்யா லேட்டா வந்துட்டு கோவமா சாட்டையை வீசுகிரீர்....

Prabu Krishna said...

ரொம்ப நாள் கழிச்சு வாங்க வாங்க.......
நட்பை குறை சொல்ல முடியாது. நம் வாழ்க்கை அப்படி ஆகிவிட்டது.

Anonymous said...

unmaithaanga...oru kaala kattathil ellam oru maayaiyaaka..verum ninaivukalaaga mattume minjukirathu..athuvum vayothigathil nadpa...

minjuvathu ontum illai... totally i agree with you...wat's you mail id.

Chitra said...

நட்பு என்பது.... ஒவ்வொருவருக்கும் தனி அர்த்தம் - விளக்கம் - எதிர்பார்ப்பு - திருப்தி - அனுபவம் தரும் இலக்கணங்கள் கொண்டது. நட்பு என்பது ஒரு வழிப்பாதையும் அல்ல. விரைவில், உங்களுக்கு ஏற்ற நல்ல நண்பர்கள் கிடைக்க வாழ்த்துக்கள்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

லேட்டா வந்திங்க... ஆனாலும் இம்புட்டு கோவம் கூடாது

செங்கோவி said...

வருக..வருக..

ரொம்ப நாளாகவே உங்களுக்கு மெயில் அனுப்பி என்னாச்சுன்னு கேட்கணும்னு நினைக்கிறது.ஆனாலும் சோம்பேறித்தனம்...செய்யலை.

இப்போ இந்தப் பதிவின் தலைப்புகூட என்னைக் குத்துற மாதிரியே இருக்கு!

மெயில் அனுப்பாட்டியும் நட்பு இருக்கு பாஸ்..

ஆமினா said...

லேட்டா வந்து...... இப்படி ஒரு பதிவா??

இதான் வாழ்க்கை என புரிய வைக்கும் வரிகள் :)

Unknown said...

நிறைய நாளா காணல?
ம்ம்ம்ம்...அப்பிடித்தான் ஆகிடுமோன்னு பயமா இருக்கு! இப்போ ஒண்ணா இருந்தாலும்!
சமீபத்தில் திருமணம் செய்த எங்கள் நண்பன் ஒருவனிடம் தொடர்பையே நிறுத்திவிட்டோம்/டான்!
இனி ஒவ்வொருவரா அப்படித்தானோன்னு தோணுது!

Unknown said...

//செங்கோவி said...
ரொம்ப நாளாகவே உங்களுக்கு மெயில் அனுப்பி என்னாச்சுன்னு கேட்கணும்னு நினைக்கிறது.ஆனாலும் சோம்பேறித்தனம்...செய்யலை//

ஆமா நான்கூட புறா ஒண்ணு அனுப்பலாம்னு இருந்தேன்...ஆனா கிடைக்கல! :-)

Anonymous said...

வித்தியாசமான பதிவு

Anonymous said...

ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன் நல்லாருக்கீங்களா

சி.பி.செந்தில்குமார் said...

வெல்கம் பேக். நண்பர்கள் தினத்தன்று இப்படி ஒரு பதிவா? ம் ம்

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் சொல்வதும் ஒருவகையில்
சரியாகத்தான் இருக்கிறது
உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே
எனபதெல்லாம் கவிதைக்குதான் சரியாக வருது
நட்பு க்கான நாளில் ஒரு
சிந்திக்கத் தூண்டும் பதிவு

kavimani said...

இந்த வலைத்தளம்தான் வயது வித்தியாசமில்லாமல் நட்பு கொள்ள வைக்கிறது. நல்ல பகிர்வு. வாழ்த்துகள்.
எனது புதிய வலைத்தளத்திற்கு வாங்க பழகலாம்...

போளூர் தயாநிதி said...

உங்களின் நல்ல நண்பர்கள். நண்பர்கள் நாளிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தொடர்க .......

Unknown said...

உண்மையான கருத்துக்கள்

பாலா said...

உண்மையான நட்பு என்பது விரல் விட்டு எண்ணக்கூடியதுதான். மற்ற நட்புகள் எல்லாம் சூழ்நிலை காரணமாக ஏற்படுவதே.

நாவலந்தீவு said...

நீரின்றி உலகில்லை...
நட்பின்றி வாழ்வில்லை...

முன்னேறும் ஒவ்வொரு பாதையிலும் நட்பு இருக்கிறது.... நட்பு பரவலாக தொலைவதே இல்லை. தொலைந்தால் அது நட்பில்லை...

நிரூபன் said...

இம்புட்டு நாளா எங்கே பாஸ் போயிருந்தீங்க?
நட்பின் மகிமையினை உணர்த்தும் அற்புதமான பதிவு, நண்பர்கள் தினத்தில் வந்திருப்பது சிறபபாக இருக்கிறது.

கவி அழகன் said...

அழகாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாழ்வில் ஏதும் நிலையில்லை...

குடந்தை அன்புமணி said...

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

இராஜராஜேஸ்வரி said...

ஆழ்ந்த பகிர்வு.

டக்கால்டி said...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு...

நட்பும் கூட ஒரு நம்பிக்கையே...கடவுள் நம்பிக்கை போல...இருக்கா இல்லையா? என்று ஆராய்ந்து பார்க்கும்போதே நாம் சில நல்ல நண்பர்களை இழந்துவிடுவதுண்டு...

டக்கால்டி said...

ஆனால் உங்கள் எழுத்துக்களில் யதார்த்தம் இல்லாமல் இல்லை...வாழ்த்துகள் தமிழ்...

Yaathoramani.blogspot.com said...

இன்றைய வலைச் சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்தக் கிடைத்த
வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்

அ. வேல்முருகன் said...

நட்பு பிரச்சனையாவது

கருத்தாலா
பணத்தாலா
வாக்கு தவறுதலாலா

பின்னிரண்டு காரணங்களே

ஆயினும்
உடுக்கை இழந்தவன் கைபோலே
சில நட்புகள் இருக்கதான் செய்கின்றன

ksundar said...

காசு இருந்தே போதும், மகிழ்ச்சி இருந்த போது இணைந்திருக்கும் நட்பு,
சாகும் வரை நீடிக்காமல்; துன்பத்தின் போது, தலைமறைவாகி சாகும் வரம் வாங்கிக்கொள்வது இன்றைய நவநாகரீக பாஸ்ட் புட் வாழ்க்கையின் மிச்சமா?
இது ஒரு சரியான வாக்கியம் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். நண்பர்கள் என்பது எல்லாம் வெறும் சுயநலத்தின் வெளிப்பாடு மட்டுமே. நண்பர்கள் என்று சொல்வபவர்கள் தான் முதல் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மாறுகிறார்கள். தனக்கு வேண்டும் பொது உன்னை விட்டால் எனக்கு யார் இருகிறார்கள் என்று சொல்வதும், நமக்கு ஒரு சங்கடம் என்றல் ஓடி ஒழிவதும் இவர்களின் சுயநலம் அல்லாது வேறு என்னவாக இருக்க முடியும். நான் சுமாராக வாழ்வின் 10 வருடத்தை அயோக்கிய நண்பர்களுக்கு செலவு செய்து அவர்களின் சுயநலத்துக்கு பலியானது தான் மிச்சம். நன்றி இல்ல நபர்கள்(நண்பர்கள்) கூட்டம்.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்