"உம் பேரு நந்தினி தானே, நல்ல பேரு தானே, ஏன் பிடிக்கல?"
ஒரு நாள் எங்கள் வகுப்பறையில் பேர்கள் பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருந்த போது வந்து விழுந்த விஷயம் இது.
பேர் பிடிக்காதததுக்கு அவள் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது.
"எல்லா சீரியலையும் வில்லியோட பேரு நந்தினினுதாங்க இருக்குது. நீங்க நல்லாயிருக்குனு சொன்ன பொன்னியின் செல்வன் கதையிலியும் வில்லி பேரு நந்தினிதாங்க".
"ஆனா அந்த கதையோட கடைசில, ஏன் அவங்க வில்லியா மாறுனாங்க அப்படிங்கிறது புரிஞ்சதால கொஞ்சம் ஆறுதலா இருந்தது"
மிஸ் ஆரம்பித்த பேர் சொல்லி புராணம் சுவாரஸியமான கட்டத்தை எட்டியிருந்ததை உணர முடிந்தது.
"மிஸ், எனக்கு எம் பேர் ரொம்ப பிடிக்கும்.
ராஜா மணி-ங்கிற பேருக்கு பின்னால ஒரு கதை இருக்குங்க. சோழ ராஜாவின் அரண்மனை முன்பிருந்த அரசவை ஆராய்ச்சி மணியை நீதி கேட்டு அடித்த தாய் பசுவின் கதைதாங்க"
சுவாரசியமற்ற சாதாரண பதில்களின் இடைஇடையே பளீச் பதில்களும் வந்து விழுந்துக்கொண்டிருந்தன.
"எம் பேரு சண்முகப்பிரியா,
எனக்கு எம் பேரு ரொம்ப பிடிக்கும், சாமியோட பேரு. ஆனா சில புள்ளங்க சண்முகா-னு சுருக்கி கூப்பிட்டா கோவம் வரும்"
"எம் பேரு சஃதானா பேகம். எம் பேர யாருமே சரியா சொல்ல மாட்டங்க, அப்பெல்லாம் கோவம் வரும்." (எங்கே நீஙக சொல்லுங்க சஃதானா பேகம்)
"எம் பேரு எனக்கு புடிக்காது"
"காளியம்மாள்?"
"ஆமாங்க, மொதல எனக்கு ரம்யா-னு தான் பேரு வெச்சாங்க, ஆனா பாட்டி ஸ்கூல சேத்தும் போது, காளியம்மானு சொல்லிட்டாங்க, எனக்கு ரம்யாஸ்ரீ-ங்கிற பேரு ரொம்பபிடிக்கும்".
(இப்படித்தான் மக்களே, பாட்டிகள் பலபேர் வாழ்க்கையில விளையாடி இருக்காங்க )
நல்லது நண்பர்களே, எங்கள் வகுப்பறை கதை பேச ஆரம்பித்தால், ஆயுசு பத்தாது.
"உங்களுக்கு உங்கள் பேரு பிடிக்குமா?
"வேறு பேரு வைச்சுக்கிடறதுனா என்ன வெச்சுகுவீங்க"
"வலை உலகில் புனைப்பெயர வைத்துக்கொள்ள எப்படியெல்லாம் யோசித்தீர்கள்"

"கும்புடறேன் சாமி" இது ஒருவரின் பெயர்.
இதற்கு என்ன பின் புலம் இருக்கும் என யூகிக்க முடியுமா உங்களால்?
"கும்புடறேன் சாமி" என்ற பெயரில் இந்த சமூகத்தால் அவமானப்பட்ட ஒரு தகப்பனின் வெறி மிக்க கோபம் இருப்பதை உங்களால் உணர முடிகிறதா?
காலம் முழுவதும் கும்பிட்டு,கும்பிட்டு முதுகெலும்பு வளைந்து போனவன் தன் மகனுக்கு இந்த பேர் வைத்ததற்கு பின், முதலமைச்சர் என்ன, ஜனாதிபதி என்ன, எந்த சாதியைச் சேர்ந்த கொம்பனாக இருந்தாலும், கும்புடறேன் சாமி-னு தானே கூப்பிடனும்..
டிஸ்கி:1
பெரியார், இது போல "சாமி" என முடியும் பெயர்களை வைத்துக்கொள்ள அறிவுறுத்தியதாக எங்கோ படித்ததாக ஞாபகம்.இது பற்றி முழுமையாக யாரேனும் பின்னூட்டம் இட்டால் மிக மகிழ்வோம்.
டிஸ்கி:2
இன்றைய தினத்தில் சட்டமேதை அம்பேத்கார் அவர்களை நினைவு கூறுவதில் ரோஜாப்பூந்தோட்டம் பெருமிதம் கொள்கிறது.டிஸ்கி:3
நந்தினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளின் பேட்டி இந்த வலைப்பதிவில் உள்ளது. வாய்ப்பிருந்தால் படிக்கவும். (யெச் சூஸ் மீ, இந்த பதிவுக்கு ஒட்டு, பின்னூட்டம் போட்டுட்டு அப்பறம் படிங்க).
டிஸ்கி :4
வகுப்பறையில இந்த நாயம் எல்லாம் பேசுறாங்க-னு தலைமை ஆசிரியரிடம் போட்டுக் குடுத்துறாதீங்க.
50 கருத்துரைகள்:
நல்லதொரு பதிவு சகோதரம்...
ஒரு தகவல்... ஒரு புதுப் பேனா வாங்கும் போது 97 வீதம் பேர் தமது பேரைத் தான் முதல் முதல் எழுதிப் பார்க்கிறார்களாம்...
நன்றி.சகோ"தரம்"
adcehaaa just missu
"vadai pocheaa"
enakku ennoda peru rombap pidikkum enna eppvumea entha mail account create pannurappovum pirabalam vanthathu illea and googel search enginelayum koduthu paarthaachu me the only one who holds my name in this world. [chumma oru advertisementtu he he he]
அதெல்லாம் சரி! இந்த பாரத்... பாரதி இதன் பெயர்காரணம் என்னவோ?!!
ம.தி.சுதா அந்த வடைய யாருக்காவது தர மாதிரி ஐடியா இருக்கா,
செல்வா, தினேஷ் இப்ப வருவாங்க என்ன சொல்றது?.
வினு அல்சோ இன் பீலீங்.
மொதல்லையே வந்தேன் கொஞ்சம் ஆணி அதனால வடைய கவனிக்கல
Mr.பாரத் ....... பாரதியின் புதுமை பெண் ..... பதிவு நல்லா இருக்குதே!
எது எப்படியோ எனக்கு என் பேரு ரொம்ப பிடிக்கும்க௦. குறிப்பா இப்போ விண்ணை தாண்டி வருவாயா படம் வந்ததுக்கு அப்புறம். ஏன்னா அந்த படத்துல திரிஷா ஒரு சீன்ல என்ன என்ன பண்ண சொல்ற கார்த்திக். அப்டின்னு சொல்வாங்க. இன்னும் சொல்ல போனா என்னோட அடுத்த பதிவுக்கு டைட்டிலே இந்த வசனம்தான்.
எனக்கு எம் பேர எங்க பாட்டிசொல்லும் போது ரொம்பபிடிக்கும் எப்படின்னு கேக்கறீங்களா எப்பா கினேசு கினேசு னு கூப்பிடுவாங்க
karthikkumar said...
மொதல்லையே வந்தேன் கொஞ்சம் ஆணி அதனால வடைய கவனிக்கல
பாத்து புடுங்குங்க பங்காளி ஆணி
dineshkumar said...
எனக்கு எம் பேர எங்க பாட்டிசொல்லும் போது ரொம்பபிடிக்கும் எப்படின்னு கேக்கறீங்களா எப்பா கினேசு கினேசு னு கூப்பிடுவாங்க///
எங்களுக்கெல்லாம் பியுட்டி சொன்னதான் பிடிக்கும். (சும்மா பங்கு)
dineshkumar said...
karthikkumar said...
மொதல்லையே வந்தேன் கொஞ்சம் ஆணி அதனால வடைய கவனிக்கல
பாத்து புடுங்குங்க பங்காளி ஆணி///
பாத்துதாங்க ஆணிய புடுங்க முடியும். பாக்காம எப்படி?
பெயர்களின் வினோதம் என்னை நிரம்பவே ஆச்சர்யப்படுத்தியது உண்டு. பெரியார் இதனைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். கும்பிடுறேன் சாமி என்பது யாரோ பெரியார் தொண்டரால் வைக்கப்பட்ட பெயராகத்தான் இருக்கும் என் நினைக்கிறேன். இதனைப்பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதுகிறேன்..
மாணவிகளின் சிந்தனைகள் பார்க்கையில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது..
பதிவு நல்லாருக்கு
என் பெயர் ஸ்கூல் படிக்கும் போது ஒன்று முதல் மூனாவது வரை
நாய்க்குட்டி
அதுக்குமேல எட்டாவது வரை
மர்டோனா
பத்தாவது வரை
பூனை
பனண்டாவது படிக்களங்கோ அப்புறம் டிப்ளமோ அங்க
சுருளை
ஒருவருட அப்பரண்டீஷ் ட்ரைனிங்க்ள
மொசு
அப்புறம் ஊர்ல
வீச்சருவா, காடுவெட்டி இப்படி நிறைய பேரு எனக்கு
இப்ப நீங்க என்ன வைக்கப்போரிங்க
சரி சரி கட பக்கம் வாங்க
எச்சுச்மி ஒரு பேர விட்டுட்டேனுங்க
ஊர் பெருசுங்க கூப்பிடறது
கட்டபொம்மன்
சிருசுங்க கூப்பிடறது
சின்ன தல
வித்தியாசமான சுவாரசியமான பதிவு!
dineshkumar said...
எச்சுச்மி ஒரு பேர விட்டுட்டேனுங்க
ஊர் பெருசுங்க கூப்பிடறது
கட்டபொம்மன்
சிருசுங்க கூப்பிடறது
சின்ன தல//
உங்க தல சிறுசா இருக்குமா டவுட்டு நெம்பர் 10251
தன் பெயர் பிடிக்கவில்லை என்று சொல்சது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்!
பெயர் மட்டுமில்லாமல் Nicknames வேற இருக்கில்ல?
பாரத்... பாரதி... said...
ம.தி.சுதா அந்த வடைய யாருக்காவது தர மாதிரி ஐடியா இருக்கா,
செல்வா, தினேஷ் இப்ப வருவாங்க என்ன சொல்றது?.
வினு அல்சோ இன் பீலீங்.
சகோதரர் தானே சாப்டட்டும் நான் கோபிக்க மாட்டேன் சகோ செல்வா தான் என்ன சொல்வார்னு தெரியல
karthikkumar said...
dineshkumar said...
எச்சுச்மி ஒரு பேர விட்டுட்டேனுங்க
ஊர் பெருசுங்க கூப்பிடறது
கட்டபொம்மன்
சிருசுங்க கூப்பிடறது
சின்ன தல//
உங்க தல சிறுசா இருக்குமா டவுட்டு நெம்பர் 10251
இல்ல பங்கு நமக்கு முன்னாடி பெருசு ஒன்னு இருக்கில்ல அண்ணன சொன்னேன்
வட யாருக்காவது வேணுமா
vinu said...
adcehaaa just missu
"vadai pocheaa"
வட வாங்க தான் நாங்க மூணுபேர் இருக்கோமே பாஸ் நீங்க புதுசா வட வாங்க வந்தீங்களா செல்லவா சங்கத்த கூட்டுப்பா கவுண்டர பஞ்சாயத்து பன்ன ரெடியா வர சொல்லுபா .....
சரி சங்கத்துல இணையறதுக்கு முன்பணம் செலுத்தி விட்டீர்களா
வைகை said...
அதெல்லாம் சரி! இந்த பாரத்... பாரதி இதன் பெயர்காரணம் என்னவோ?!!
வேணாம் விட்ருங்க நான் கேட்டு கேட்டு இப்பவெல்லாம் கேக்கறதே இல்ல எதாவது புரியுதா பாஸ் புரியலனா கேக்க கூடாது மறந்திடுவேன்
பெயரில் என்ன இருக்கிறது? அது ஒரு அறிமுகத்திற்கு மட்டுமே.
அந்த மனிதரைப் பிடித்துவிட்டால் அந்தப் பெயரும் பிடித்து விடுகிறது.
நந்தினி மிக அழகான பெயர். என் கதைகளின் எல்லா நாயகிகளின் பெயரும் அதுதான்.
ஷண்முகப்ரியா எவ்வளவு அழகிய ராகம்.
வகுப்பறையில இந்த நாயம் எல்லாம் பேசுறாங்க-னு தலைமை ஆசிரியரிடம் போட்டுக் குடுத்துறாதீங்க.
போட்டு குடுத்துடுவோம்
பாரத் பாரதி! கும்புடறேன் சாமி! என்ன ஒரு பேருங்க! நல்ல பதிவு! முண்டாசுக்கார கவிஞன் பேரில் உங்கள் வலை ஓர் அக்கினிக் குஞ்சாய் ஜொலிக்கட்டும். வாழ்த்துக்கள்!
வித்தியாசமான பதிவு...
பேட்டிகளும் நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள்...
மோகன்ஜி said...
பாரத் பாரதி! கும்புடறேன் சாமி! என்ன ஒரு பேருங்க! நல்ல பதிவு! முண்டாசுக்கார கவிஞன் பேரில் உங்கள் வலை ஓர் அக்கினிக் குஞ்சாய் ஜொலிக்கட்டும். வாழ்த்துக்கள்!
வாங்க ஐயா
முதல் வருகைக்கு நன்றி
ஓனர் டியூஷன் போயிருக்காங்க கடைக்கு நான் தான் இப்ப ஓனர்
பாரதியோட பின்னூட்டங்கள் எழுப்பும் கேள்விகளை மற்ற பதிவுகளில் பார்த்தீர்கள் பாரதியே திரும்பிவந்து கேள்வி கேட்க்கிற மாதிரி இருக்கும் கண்டிப்பா ஜோலிப்பாங்க ஐயா உங்க ஆசி என்றும் அவர்களுக்கும் வேண்டும்
//வாங்க ஐயா
முதல் வருகைக்கு நன்றி
ஓனர் டியூஷன் போயிருக்காங்க கடைக்கு நான் தான் இப்ப ஓனர் //
நன்றி தினேஷ். தங்களின் அளவில்லாத கடமை உணர்ச்சிக்கு மிக்க நன்றிகள்..
//காலம் முழுவதும் கும்பிட்டு,கும்பிட்டு முதுகெலும்பு வளைந்து போனவன் தன் மகனுக்கு இந்த பேர் வைத்ததற்கு பின், முதலமைச்சர் என்ன, ஜனாதிபதி என்ன, எந்த சாதியைச் சேர்ந்த கொம்பனாக இருந்தாலும், கும்புடறேன் சாமி-னு தானே கூப்பிடனும்..//
வச்சாருல்ல ஆப்பு..
எப்படி யோசிச்சாரு பாருங்க? பின்னே? எத்தனை நாள் வளைஞ்சு துண்டை கமுக்கட்டுல சொருகிகிட்டு.... கும்புடு போடுறது? இதுதான அக்கினி.. பாரதி. கொளுத்துங்க..
இந்த பதிவு எங்களுக்கு நல்ல பேர் பெற்றுக்கொடுத்த பதிவாக இருக்கும் என நம்புகிறோம். வலையுலக பிரபலங்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுத்தந்ததால்...
இது வெறும் பொழுதுப்போக்கு பதிவாக இல்லாமல், சமூகமும் பேசியிருப்பதால் இந்த முறையும் தப்பிவிட்டோம்..
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..
////காலம் முழுவதும் கும்பிட்டு,கும்பிட்டு முதுகெலும்பு வளைந்து போனவன் தன் மகனுக்கு இந்த பேர் வைத்ததற்கு பின், முதலமைச்சர் என்ன, ஜனாதிபதி என்ன, எந்த சாதியைச் சேர்ந்த கொம்பனாக இருந்தாலும், கும்புடறேன் சாமி-னு தானே கூப்பிடனும்..//
சூப்பர்..
பெயர்களை அழைக்கும் விதத்தை ரொம்ப சுவாரசியமாக சொல்லி இருக்கீங்க அருமை
தொடரட்டும் உங்கள் பணி...
பாரத்... பாரதி... said...
//வாங்க ஐயா
முதல் வருகைக்கு நன்றி
ஓனர் டியூஷன் போயிருக்காங்க கடைக்கு நான் தான் இப்ப ஓனர் //
நன்றி தினேஷ். தங்களின் அளவில்லாத கடமை உணர்ச்சிக்கு மிக்க நன்றிகள்..
நன்றியெல்லாம் எதுக்கு சகோ கடமையைத்தான் செய்தேன் மோகன்ஜி ஐயா வை அழைத்தேன் மறுப்பேதும் சொல்லாமல் உடனே வந்துவிட்டார் ஹைதராபாத்திலிருந்து ஐயப்ப பூஜை முடித்த கையோடு சுவாமி சரணம்
கும்பிடறேன் சாமி யூக விளக்கம் சிந்திக்கும்படி இருந்தது... நிச்சயம் அதுதான் காரணமாய் இருக்கும்...
ஆறுச்சாமி,அழகர்சாமி,அய்யாச்சாமி,
முனியசாமி,பால்ச்சாமி,குப்புச்சாமி,
கறுப்பசாமி,வெள்ளைசாமி,சின்னச்சாமி
பெரியசாமி,மலைச்சாமி,
முத்துச்சாமி,ஆசாமி,புதுசா இப்போ கும்பிடறேன் சாமி.
மனிதர்களை அடையாளம் காணப்படுவதற்காகவே பெயர்கள் சூட்டப் பட்டிருக்கு.
நந்தினியை வில்லியாகவே பார்த்த நீங்கள், கதாநாயகியாகவும்,நல்ல சகோதரியாகவும் நடிக்கப் பார்த்ததில்லைனு நினைக்கிறேன்.
கோடீஸ்வரனுக்கு பெருமாள் பிச்சைனோ அல்லது முகைய்யதின் பிச்சை என்று பாட்டிமார்கள்
பெயர் வைப்பதில்லையா ?
நந்தினி என்று உங்களுக்கு பெயர் வைத்த முன்னோர்கள், "முந்து நீ" என்று பெயர் வைக்காமல் போனதிற்கு ஒரு சல்யூட்.!
ஒரிசாவின் முன்னாள் முதல் அமைச்சர் பெயரும் நந்தினியே.
காமதேனுவின் குழந்தையின் பெயரும் நந்தினியே.
சோ...கவலை வேண்டாம்.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
நானும் ஒரு ஓலைக் குடிசை கட்டியிருக்கேன்,ஏழை மக்கள்களின் கண்ணீரை மட்டும் எழுதுவதுதான் எனது பனி,ஆகையால் உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறேன்.
நான் ஒன்னும் பதிவர் இல்லை,ஆகையால் கருத்தோ அல்லது ஓட்டோ,போடனம்னு அவசியம் இல்லை,உங்கள் போட்டோவை வந்து காலி இடத்தில் ஓட்டிவிட்டு போனிர்கள் என்றாலே போதும்.எப்படி விருந்தினரை அழைக்கணும்னு எனக்கு தெரியலை, ஆகையால் இதை ஒரு அழைப்பு கடிதமாக ஏற்று, ஏழை எங்களுக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.
http://naattamain.blogspot.com/
ஆஹா,அவங்கவங்கபேரு மேல என்ன பிரியம்,பாராட்ட வேண்டிய விஷய்ம்தானே.லஷ்மி என் அழ்கானபேர்பட்டபாடு அப்பப்பா.
பாட்டீக்கு எச்சுமூ, அம்மாக்கு ஏட்டீ எச்சிமிசனியனே, அதைக்கு எச்சி, ஆக யாருமே லஷ்மின்னு கூப்பிட்டதே கிடையாது. 63 வயசுல இப்படிக்கூட ஒருகுறையா?!!!!!!!!!!!!!!!!
பெயர்கள் வைத்து, சுவாரஸ்யமான பதிவு.
எனது சகோதரி மகனின் காலேஜ் கிளாஸ்மேட்
ஒருவனின் பெயர் 'யுனிவர்சிட்டி'.
இந்தக் கதை படியுங்கள்:
http://nizampakkam.blogspot.com/2009/10/teacherandstudent.html
உங்க காதை கொடுங்க. பதிவர்களோட பூனை ச்சீ புனை பெயரை நான் சொல்றேன்
பெயரில் என்ன இருக்கு? அது ஒரு சொல் அவ்வளவே!
அழகா எங்களுக்குப் பெயர் வச்சிட்டு வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டிருக்காங்க.இங்க எங்க பேரையெல்லாம் என்னமாதிரி வெட்டிக் கொத்திக் கூப்பிடுறாங்க.
களைச்சுப் போய் கை விட்டாச்சு எப்பிடியாச்சும் கூப்பிடுங்கன்னு.
ஆனா...பாரத்
உங்க பேர் ரொம்பவே பிடிக்கும் !
என் பெயர் எனக்கு ரொம்பவே பிடிக்கும் ஏன் தெரியுமா அதில் வாசமும். மணமும். அன்பும். கலந்திருக்கும்[ஓவர் பில்டப்போ]
என்ன ஒன்னு. மலிக்கா அப்படிங்கிறத எல்லாரும் மல்லிகா அப்படின்னு கூப்பிடுறச்சே என்னவோபோலிருக்கும்.
பெயர் பதிவு அசத்தல் தொடர்ந்து
ஒலி[ளி]க்கட்டும் பாரதியின் முழக்கம்..
என் பெயர் எனக்கு ரொம்பவே பிடிக்கும் ஏன் தெரியுமா அதில் வாசமும். மணமும். அன்பும். கலந்திருக்கும்[ஓவர் பில்டப்போ]
என்ன ஒன்னு. மலிக்கா அப்படிங்கிறத எல்லாரும் மல்லிகா அப்படின்னு கூப்பிடுறச்சே என்னவோபோலிருக்கும்.
பெயர் பதிவு அசத்தல் தொடர்ந்து
ஒலி[ளி]க்கட்டும் பாரதியின் முழக்கம்..
நல்லா எழுதி இருக்கீங்க புராணம்..
// "எம் பேரு சஃதானா பேகம். எம் பேர யாருமே சரியா சொல்ல மாட்டங்க, அப்பெல்லாம் கோவம் வரும்." (எங்கே நீஙக சொல்லுங்கசஃதானா பேகம்) //
நானே ஒரு தடவ சொல்லிப் பார்த்தேன் .. உச்சரிக்க கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு ..!!
50
அடடே...நான்கூட இப்படி ஒரு பதிவு போட்டிருக்கேனே... ஒருவேளை அதோட இன்ஸ்பிரஷன்லதான் இந்தப்பதிவை போட்டீங்களா....?? :)))
http://vimarsagan1.blogspot.com/2010/08/blog-post_24.html
good one.
Post a Comment