நலமறிய விருப்பமில்லை...


நான் பித்தன் பேசுகிறேன். என்னை உங்களுக்கு மறந்திருக்காது. எப்போதும் எதிர்மறையாக யோசிப்பது என் பித்தம்.

என் பித்தத்தை நீங்கள் தெளிய வைப்பீர்கள் என்று நம்பி உங்களிடம் பேச்சு கொடுக்கிறேன். கடைசியில் நீங்களும் என்னை போல மாறிவிடக்கூடாது என்பது என் கவலை.

எல்லா நலம் விசாரித்தல்களும் நமக்கு ஆறுதலை தருகிறதா என்பது தான் பித்தனின் இன்றைய கேள்வி.

ஒரு பெண்ணின் குடும்ப விழாவில் "எங்கே உங்க வீட்டுக்காரர்?" அப்படினு கேட்க்கிறார் ஒருவர். அந்த பெண் சட்டென்று அந்த கேள்வியை சமாளிக்க இயலாது "நான் அப்புறமா சொல்லுறேன் சார்" என்கிறாள். அப்படியும் இவர் விடாமல், தொடர்ச்சியாய் விசாரிக்க , ஒரு கட்டத்தில் அந்தப்பெண் கண்கலங்கி பதில் ஏதும் பேச இயலாது, தன் மகளை இழுத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று கதவடைக்கிறாள். வெகுநேரம் அந்த அறையின் கதவு திறக்கப்படவே இல்லை. குடும்ப விழா உற்சாகமிழந்தது.

ஒரு கல்யாணம் காட்சி-னு வந்துட்டா இந்த நலம் விசாரிப்பவர்களின் தொல்லை தாங்க முடியாது. "என்னப்பா அடுத்த கல்யாணம் உனக்கு தானே, இத்தனை வயசாச்சு இன்னும் யோசிக்காம இருக்கே"
(அட பாவிகளா, சின்ன வயசுல கல்யாணம் பண்ணுனா, மொளைச்சு மூணு இல விடல.. என்னடா அவசரம் உங்களுக்கு அப்படிங்கிறீங்க)

கூடவே சுத்தறீயே செவ்வாழ நீயாவது சொல்லக்கூடாதா?" இதில கூட வர்றவனை சேர்த்து விரட்டுறது.

(கல்யாண வீட்டுல இத்தன வயாசாச்சே, நீ இன்னுமா கல்யாணம் பண்ணலை கேட்குற ஒருத்தர , ஏதாவது சாவு வீட்டில் பார்க்கும் போது இத்தன வயசாச்சே நீ இன்னுமா சாகல? அப்படினு நம்ம பருத்தி வீரன் திருப்பி கேட்டா என்னாவது?)

"என்னம்மா, கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சே,இன்னுமா ஒரு புழு பூச்சி இல்லை"
இந்த வார்த்தைகள் காதில் வாங்கும் அந்த பெண்ணுக்கு அன்னிக்கு முழுவதும் நரகமாக இருக்கும். (இவுங்க பாட்டுக்கு பிட்ட போட்டுட்டு போயிடுவாங்க)
 
சில வேளைகளில் இந்த மாதிரியான நலம் விசாரிப்புக்கள் பெயரிலான குத்தல்கள் நீண்டுக்கொண்டே போகும், அவர்கள் குறை என்னவென்று கண்டறிந்து நாம் குத்திக்காட்டும் வரை.

ஒரு ஜெயகாந்தன் சிறுகதை ஒன்று. ஒரு கிராமத்தில் ஒரு மிகப்பெரிய ரவுடி இருந்தான். ஊராருக்கு அவன் கொடுக்கும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. உடல் வலிமையால் அவனை வெல்ல முடியாது என முடிவெடுத்த ஊர்மக்கள் அவனை உளவியல் வலிமையால் வெல்ல முடிவெடுக்கிறார்கள். அப்போது முதல் அவனை பார்க்கும் போதெல்லாம், "என்னப்பா உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா?" என விசாரிக்கத்தொடங்குகிறார்கள். "என்னாச்சு, உடம்பு துரும்பா இளைச்சு போச்சு, ஏதாவது பெரிய வியாதியா" என தொடர்ந்து ஊர்மக்கள் விசாரிக்க, விசாரிக்க, இறுதியில் அந்த ரவுடி படுத்த படுக்கையாகிறான்.
கதை சொல்லும் நீதி : அடுத்தவனை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்ல எளிய வழி நலம் விசாரித்தல்...  

யாரும் இங்கே முழுமையான வாழ்க்கையை பெற்றுவிட்டவர்கள் கிடையாது. எல்லோருடைய வாழ்க்கையிலும் மறக்க விரும்பும் விஷயங்கள் என்று ஏதாவது நிச்சயம் இருக்கும். நமது விசாரிப்புக்கள் அதனை கிளறிவிட்டு ரணத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது.

டிஸ்கி:

புதுசா புடவை கட்டிக்கொண்டு வரும் பெண், புதுசா கார் வாங்கியவர் போன்ற வகையில் இருப்பவர்கள் தங்களை யாரேனும் விசாரிக்க மாட்டார்களா ஏங்குவதும் உண்மைதான்.(புதிய பொருளைப்பற்றி அள்ளிவிட)*******************************************************************************

தொடர்புடைய பதிவு:

பித்தன் பேசுகிறேன்..30 கருத்துரைகள்:

# கவிதை வீதி # சௌந்தர் said...

படிச்சிட்டு வற்றேன்..

சென்னை பித்தன் said...

பித்தனுக்குச் சென்னை பித்தன் எழுதுவது!
நலமா?

தினேஷ்குமார் said...

சமுதாயத்தின் மீது சாட்டையடி...

தங்கள் நலனை விரும்புபவர்களும் சிலருண்டு சகோ....

ஆனால் அவர்கள் நேரடியாக நலம் விசாரிக்க மாட்டார்கள் தங்களை சூழ்ந்தே அவர்களின் பாச உணர்வுகள் இருக்கும்....

Anonymous said...

இது ஒரு மாதிரியான சைக்கோத்தனமான கேள்விகள்...
மற்றவர்களை இடம்,காலமறியாது விசாரிப்புகள் சம்பந்தப்பட்டவர்களை புண்படுத்தவதொடு அவரை பொது இடங்களில் தலைகாட்டுவதை விரும்ப செவதில்லை.

# கவிதை வீதி # சௌந்தர் said...

நாட்டுக்கு தேவையான பதிவு..
நானும் மற்றர்கள் மருத்துவ னையிர் இருக்கும் போது சென்று விரும்புவதிலட்லை...
அவர்களையும் இன்னும் பலவீனமடைய செய்யும்...

Anonymous said...

பதில் சொல்ல வேண்டியவர்கள் பெரும்பாலும் சின்ன புன்னகையை உதிர்த்து விட்டு அந்த இடத்தை பரிதாபமாக வெளியேறுவதைக்கூட சிலர் ரசிப்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

அப்புறம் நீங்க எப்படி இருக்கிறீங்க..

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாம் அவன் சித்தம்....

வேடந்தாங்கல் - கருன் said...

நோ்த்தியான பதிவு..

செங்கோவி said...

//"என்னம்மா, கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சே,இன்னுமா ஒரு புழு பூச்சி இல்லை"
இந்த வார்த்தைகள் காதில் வாங்கும் அந்த பெண்ணுக்கு அன்னிக்கு முழுவதும் நரகமாக இருக்கும்.// இது தாங்க பெரிய கொடுமை!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கூடவே சுத்தறீயே செவ்வாழ நீயாவது சொல்லக்கூடாதா?" இதில கூட வர்றவனை சேர்த்து விரட்டுறது.//
hahaa ஆமா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விடவே மாட்டேன்கிறானுக சார் சிலர் இதே வேலையா இருக்கானுக அடுத்தவங்க வாழ்கையை பத்தி தெரிஞ்சுகிட்டு ரசிக்க ஒரு ஆசை த்தூ

ரஹீம் கஸாலி said...

அடிக்கடி வரட்டும் பித்தன்

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

Speed Master said...

"எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்


http://speedsays.blogspot.com/2011/03/blog-post.html

thirumathi bs sridhar said...

சில அசட்டுத் தனமான கேள்விகளையும் ,விளைவுகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி

அமைதிச்சாரல் said...

//யாரும் இங்கே முழுமையான வாழ்க்கையை பெற்றுவிட்டவர்கள் கிடையாது. எல்லோருடைய வாழ்க்கையிலும் மறக்க விரும்பும் விஷயங்கள் என்று ஏதாவது நிச்சயம் இருக்கும். நமது விசாரிப்புக்கள் அதனை கிளறிவிட்டு ரணத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது//

ரொம்ப சரியான வார்த்தைகள்.. கிளறிவிட்டு ரசிக்கிறதுக்குன்னே வர்றவங்களை என்ன செய்யலாம் :-))

மாணவன் said...

பித்தனின் பித்தங்கள் சிந்திக்க வைக்கின்றன...

நல்லாருக்குங்க... :)

Ramani said...

நீங்கள் சொல்வது மிகச் சரி
ஆனாலும் பெரும்பாலும் இப்படி
கேள்வி கேட்பவர்கள் பதிலைக் கூட
எதிர்பார்பதில்லை
அக்கறையுள்ளவர்போல் காட்டிக்கொள்ளவேண்டும்
என்பதை தவிர அதற்கு மேல் அவர்களுக்கு
சம்பத்தப் பட்டவர்கள் மீது எவ்வித ஈடுபாடும்
இருப்பதில்லை.நாம் தான் கொஞ்சம் கூடுதலாக
கேள்விக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து
அவதிப்படுகிறோமோ என்கிற எண்ணம் எனக்கு உண்டு
சிந்தனைய தூண்டிய நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

நம் தேசத்தில் இது மாதிரி நடக்கலேன்னாதான் ஆச்சரியமே!!

பாலா said...

நலம் விசாரிப்பது என்பது கேள்வி கேட்பதோடு நின்று விடுவதில்லை. நாம் ஏதாவது தவறாக கேட்டு விட்டதால், எதிரே இருப்பவரின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து, நாமே சாமளித்து நிலைமையை சரி செய்து விடவேண்டும்.

Jana said...

அடுத்தவனை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்ல எளிய வழி நலம் விசாரித்தல்...
True

Chitra said...

சில வேளைகளில் இந்த மாதிரியான நலம் விசாரிப்புக்கள் பெயரிலான குத்தல்கள் நீண்டுக்கொண்டே போகும், அவர்கள் குறை என்னவென்று கண்டறிந்து நாம் குத்திக்காட்டும் வரை.


....அவங்க பேசும் போது "நல்ல" எண்ணம்.... நாம திருப்பி கொடுக்கும் போது, "என்னா வில்லத்தனம்!" என்பாங்க... :-(

ஓட்ட வட நாராயணன் said...

புதுசா புடவை கட்டிக்கொண்டு வரும் பெண், புதுசா கார் வாங்கியவர் போன்ற வகையில் இருப்பவர்கள் தங்களை யாரேனும் விசாரிக்க மாட்டார்களா ஏங்குவதும் உண்மைதான்.(புதிய பொருளைப்பற்றி அள்ளிவிட)

இதே மாதிரி புதுசா செல்போன் வாங்கியவர்களின் லிஸ்டையும் சேர்க்கவும்! இம்சை தாங்க முடியல!!

ஆனந்தி.. said...

/../(கல்யாண வீட்டுல இத்தன வயாசாச்சே, நீ இன்னுமா கல்யாணம் பண்ணலை கேட்குற ஒருத்தர , ஏதாவது சாவு வீட்டில் பார்க்கும் போது இத்தன வயசாச்சே நீ இன்னுமா சாகல? அப்படினு நம்ம பருத்தி வீரன் திருப்பி கேட்டா என்னாவது?)// ம்ம்...சரிதான்

வை.கோபாலகிருஷ்ணன் said...

சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய விதத்தில் வெகு அருமையாகவே சொல்லியிருக்கிறீர்கள். யாராவ்து சிலராவது இதைப் படித்து விட்டு, நலம் விசாரிக்காமல், ஒரு சிறிய புன்னகையுடன் நிறுத்திக்கொண்டால் சரி. பாராட்டுக்கள்.

மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை said...

கலக்கல் பதிவு

விக்கி உலகம் said...

நல்லாருக்குங்க

நிரூபன் said...

வணக்கம் சகோதரம் நலமா?
சமூகத்தின் இழி நிலையாலர்களை நன்றாகப் படம் பிடித்துள்ளீர்கள்.
இப் பதிவில் நீங்கள் குறிப்பிடும் கதை சொல்லும் நீதியும் அருமை. சமூகத்தில் உள்ள ஒவ்வோர் மக்களிடமும் ஏதோ ஒரு விதத்தில் குறை, நிறைகள் உண்டு என்பது தவிர்க்க இயலாததே, ஆனால் ஒரு சில மனிதர்கள் தாங்கள் ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் போல தம்மைக் காட்டிக் கொள்ள ஏனைய மக்களை குத்திக் காட்டி எடை போடும் விடயம் தான் வருத்தத்திற்குரியது. அதனை உங்கள் பதிவில் நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

இந்தச் சமூகத்தின் இவ்வாறான இழி நிலை வார்த்தைகளை உடைத்தெறிய வேண்டும் என்பதே என் அவா. உங்களின் நலமறிய விருப்பமில்லை- பூமியிலுள்ள ஒவ்வோர் மானிடர் மீதும் சாட்டையால் அடிப்பது போல உள்ளது. விழிப்புணர்வுப் பதிவு- சமுதாய முன்னேற்றம் நோக்கிய பரிவு!

இராஜராஜேஸ்வரி said...

எல்லா நலம் விசாரித்தல்களும் நமக்கு ஆறுதலை தருகிறதா //
விசாரிப்பதே குத்திக்காட்டத்தானே!!

இராஜராஜேஸ்வரி said...

குத்தல்கள் நீண்டுக்கொண்டே போகும், அவர்கள் குறை என்னவென்று கண்டறிந்து நாம் குத்திக்காட்டும் வரை.
முந்திக் கொண்டு விசாரித்து விடவேண்டும்?????????

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்