மயிலாப்பூரில் கே.வீ. தங்கபாலு போட்டி - தமிழக அரசியலில் பரபரப்பு. - எதிர்ப்பாளர்கள் பெரும் மகிழ்ச்சி.வேட்பாளர் - விண்ணப்ப மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள், இரண்டினை இணைக்காததால், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


மயிலை தொகுதியில் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தானே மயிலாப்பூரில் போட்டியிட உள்ளதாக தங்க பாலு கூறியுள்ளார்.
மெகா டிவியின் நிர்வாகி என்ற தகவலை, ஜெயந்தி மறைத்துவிட்டதாக காங்கிரஸ் போட்டிவேட்பாளராக மயிலாப்பூரில் போட்டியிடும் சிவகாமி தெரிவித்துள்ளார்.


ஜெயந்தி மீது கிரிமினல் வழக்கு ஒன்றும் உள்ளதாக சிவகாமி குற்றம் சாட்டியுள்ளார்..

ஏற்கனவே தங்கபாலு மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கும் போது, புதியதாக கிளம்பியுள்ள இந்த சர்ச்சைகள், காங்கிரஸின் மற்ற கோஷ்டியினரிடயே மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
நேற்று கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடாமல் இருக்க ஹசீனா சையத் என்பவரிடமிருந்து ஐம்பது லட்சம் பெற்றுக்கொண்டு, காங்கிரஸின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மக்பூல் ஜான் போட்டியிடாமல் தடுத்ததாக சென்னை மாநகராட்சியின் பெண் கவுன்சிலர், தமிழக தேர்தல் கமிஷ்னரிடம் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டாமை கருத்து : 
டே பசுபதி... நம்மகிட்ட வேல செய்யவங்களுக்கு படுக்க பாய் நாம தான்டா குடுக்கணும், அந்த பாயில நாமளே படுத்தா என்னடா அர்த்தம்..


#defeatcongress கருத்து 
டெரர் பீசாக- ஒரு காலத்தில் தவறாக கருதப்பட்ட தங்கபாலு, தாம் ஒரு காமெடி பீசு என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.நேற்று முதல் நடைப்பெற்று வரும் #defeatCongress # போராட்ட டிவிட்டுக்கள் :

காங்கிரஸ் "கை"ப்புள்ளைகளை தெளியவைத்து, தெளியவைத்து, அடிப்போம் #tnfisherman #defeatCongress #


டிவிட்டர் போரால் கைப்புள்ளைகள் கட்சி வீழ்த்தப்பட்டது# பேசட்டும் நாளைய வரலாறு #tnfisherman #defeatCongress #

63 "கை"ப்புள்ளைகள் காமெடி தர்பார் நடத்த தமிழரின் மானம்தான் விலையா?#tnfisherman #defeatCongress #

வாழ வைக்கும் தமிழனுக்கு, தலையறுக்கவும் தெரியும் #tnfisherman #defeatCongress #

எங்கள் ரணம் இன்னும் காயவில்லையடா #tnfisherman #defeatCongress #

வேடிக்கை பார்க்கும் தமிழா, டிவிட்டரில் வந்து போராடு #tnfisherman

டிவிட்டரில் காங்கிரஸ் வேட்டை # நீங்களும் இணையுங்கள், தமிழனத்து வேங்கைகளே #tnfisherman #defeatCongress #

தமிழன் ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட், பாக்குறீயா, பாக்குறீயா, # சிங்கம்டா #tnfisherman #defeatCongress #

காங்கிரஸை காலி செய்ய வந்த டிவிட்டர் சுனாமிகள் நாங்கள் #tnfisherman #defeatCongress #

ஓட்டுப்பிச்சை எடுக்கும் உனக்கே இவ்வளவு திமிர் என்றால், பிச்சை போடும் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் #tnfisherman #defeatCongress #

எங்கள் டிவிட்டுகள் பார்த்து 63 கைப்புள்ளைகளும் பீதியாகி, பேதியாகட்டும்.#tnfisherman #defeatCongress ##

#defeatCongress # டிவிட்டரில் போராடும் கணங்கள், எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்கள் #tnfisherman#

#defeatCongress # # இது எங்கள் வாழ்வுரிமை போர், இதனில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கான பெருமிதம் #tnfisherman

#defeatCongress # இது எங்கள் வாழ்வுரிமை போர், இதனில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கான பெருமிதம் #tnfisherman

நீ காசுக்காக கத்துகிறாய், நாங்கள் மானத்துக்காக டிவிட்டுகிறோம் #tnfisherman #defeatCongress #

டிவிட்டர் போரால் கைப்புள்ளைகள் கட்சி வீழ்த்தப்பட்டது# பேசட்டும் நாளைய வரலாறு #tnfisherman #defeatCongress #

வீதியில் நின்று, வேடிக்கை பார்க்கும் தமிழா, வீதிக்கு வந்து போராடு #tnfisherman #defeatCongress #

நான் இந்திய ரத்தத்தை விரும்பி குடிப்பேன் - இலங்கை டிராகுலா - ஒழியட்டும். #tnfisherman #defeatCongress #

நான் இந்திய ரத்தத்தை விரும்பி குடிப்பேன் - இத்தாலிய டிராகுலா #tnfisherman #defeatCongress #

http://therthal.vikatan.com/index.php?eid=744நேற்றைய காமெடி பதிவு :
12 கருத்துரைகள்:

தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

தமிழ் 007 said...

எல்லாம் நம்ம கலைஞரோட சாபம் தாங்க!( கலைஞர என்னா பாடு படுத்துனானுங்க)

சென்னை பித்தன் said...

யார் நின்றாலும் முடிவு ஒன்றுதான்!

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் தேர்தல் களை கட்டுது:)

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த தேர்தலுக்கு தங்கபாலு பாலியாக்கியாச்சி...

ஏதோ அவரால முடிஞ்சது..

வைகை said...

எனக்கென்னமோ இந்த நிராகரிப்பு தங்கபாலுவே போட்டி இதெல்லாம் திட்டமிட்டு நடந்ததாகவே தெரிகிறது!

MANO நாஞ்சில் மனோ said...

அப்பாடா இப்போதான் சந்தோஷமா இருக்கு...

middleclassmadhavi said...

அது எப்படி மாற்று வேட்பாளர் மட்டும் எல்லா ஆவணங்களையும் சரியா சமர்ப்பித்தார்?!!

செங்கோவி said...

அம்மணி மேலயே கிரிமினல் கேஸா..விளங்கிரும்!

மாணவன் said...

ரோஜாபூந்தோட்டதிற்கு இனிய வணக்கங்கள் :)

அரசன் said...

நானும் அண்ணன் வைகை அவர்களின் கருத்துக்கு உடன் படுகிறேன் ...
சோழியன் சொட்டை சும்மா சொளிக்காது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
எனக்கென்னமோ இந்த நிராகரிப்பு தங்கபாலுவே போட்டி இதெல்லாம் திட்டமிட்டு நடந்ததாகவே தெரிகிறது!///

எல்லாம் புளுத்த பழத்திடம் குடித்த யானைப்பால் தான் மன்னா....

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்