பாக்.பிரதமரை கலாய்த்த மன்மோகன் சிங் - ராஜபக்சேவை வரவேற்க தயாராகும் சோனியா - கிரிக்கெட் ஜோக்ஸ்.
கிலானி : டேய் அப்ரிடி, என்னையை கூப்பிட்டு வச்சு, காமெடி, கீமெடி பண்ணலயே?

********************************************************************************

நிருபர் : இந்தியா வெற்றி பெற்றது குறித்து உங்கள் கருத்து?
மன்மோகன் சிங் : (வழக்கம் போல) எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நடந்தவைகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

********************************************************************************

மன்மோகன் சிங் : இந்தியா - பாகிஸ்தான் விளையாடின அரையிறுதிப்போட்டியை ஏன் மொஹாலியில வைச்சாங்க தெரியுமா?
கிலானி : ஏன்?
மன்மோகன் சிங் : இங்கிருந்து உங்க நாட்டுக்கு, சீக்கிரம் போயிறலாம் அதனாலதான், சரி..சரி.. கிளம்புங்கப்பா?

********************************************************************************

ஏர்போர்ட் அதிகாரி : என்ன, அப்ரிடி இன்னும் கிளம்பாம வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க..,
அப்ரிடி : சங்ககரா, இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவாரு, அதான் இருந்து கூட்டிட்டு போயிரலாமுன்னு காத்திருக்கேன்.

********************************************************************************

நிருபர் : இந்தியா வெற்றி பெற்றது குறித்து உங்கள் கருத்து?
சோனியா: இந்தியா- இலங்கை மேட்ச் பார்க்க வாங்க-னு, ராஜபக்சேவை கூப்பிட்டு,  தமிழர்களை கொன்னதுக்கு விருந்து இன்னொரு  தடவையும், விருந்து வைச்சு விசுவாசத்தை காட்டிரலாம்.

********************************************************************************

சோனியா : இறுதிப்போட்டியில் இலங்கை, இந்தியாவை ஜெயித்தால், கட்சத்தீவை இலங்கைக்கே கொடுத்துவிடலாம். இந்தியா ஜெயித்தால் கருணாநிதிக்கு விற்றுவிடலாம். எப்படினாலும் நமக்குத்தான் லாபம்.

********************************************************************************

நிருபர் : உங்க இந்திய பயணத்திட்டம் என்ன?
ராஜபக்சே : மும்பையில மேட்ச் பாத்துட்டு அப்படியே மயிலாப்பூருக்கு போய், தம்பி தங்கபாலுவுக்கு பிரச்சாரம் பண்ண  போலாமின்னு இருக்கேன். ஒரு நன்றி கடனுக்காக.

********************************************************************************


இந்த வரிகள் உண்மையா?

இந்த உலக கோப்பையில் SPIN தான் அசத்தியதே..
S - SRI LANAKA.
P - PAKISTHAN.
I - INDIA.
N - NEWZELAND

இதில் என்பது I மட்டும் தான் உயிரெழுத்து எனவே இந்தியா தான் கோப்பையை வெல்லும்.

1983 காலண்டரும், 2011 காலண்டரும் ஒன்று போலவே இருப்பதாக சொல்லப்படுவதால், அப்போது வென்ற இந்தியாதான், இப்போதும் வெல்லுமா?

*****************************************************************************

 ட்வுட் தங்கமணியின் கேள்விகள் :
இந்தியா, இலங்கை கிரிக்கெட் போட்டி பார்க்க, ராஜபக்சே இந்தியா வந்தால் நம்ம டக்ளஸ் அண்ணன் கூட வருவாரா? # ட்வுட்.

கிரிக்கெட்டில் தோற்ற கேப்டன் பதவிய ராஜினாமா பண்ணுறாங்க. தேர்தலில் தோற்றால் ஏன் கட்சி தலைவர் பதவியை ஏன் ராஜினாமா பண்ண மாட்டேங்கிறாங்க. # ட்வுட்.


சச்சின் செஞ்சுரி அடிக்காததால் தான் , இந்தியா ஜெயித்தது அப்படினு சொல்லுறவங்க - கேப்டனோட ஆளுகளா? # (தேர்தல் விதிமுறை மீறல் ஏதேனும் இதில் இருக்கிறதா? )


இந்தியா - பாகிஸ்தான் போட்டியை உலகப்போர் போல வடநாட்டு பத்திரிக்கைகள் சித்தரித்ததை போல, இந்தியா - இலங்கை போட்டியை  தென்னிந்திய பத்திரிக்கைகள் சித்தரித்து ரணகளமாக்குமா? # ட்வுட்.இந்தியா இலங்கை விளையாடும் போட்டியில், புலம் பெயர்ந்த தமிழர்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள்? #ட்வுட் # இலங்கை தாய் நாடு , இந்தியா தந்தையர் நாடு. ஆனால் இரண்டுமே அவர்கள் வாழ்க்கையில் "விளையாடி" இருக்கிறது.


19 கருத்துரைகள்:

thirumathi bs sridhar said...

சூப்பருங்க

thirumathi bs sridhar said...

இண்ட்லியில் நீங்க இன்னும் இணைக்கலியே?தமிழ்மணத்துல மட்டும் ஓட்டு போட்டுவிட்டு, ஜூட்.

Anonymous said...

//இந்தியா இலங்கை விளையாடும் போட்டியில், புலம் பெயர்ந்த தமிழர்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள்? #ட்வுட் # இலங்கை தாய் நாடு , இந்தியா தந்தையர் நாடு. ஆனால் இரண்டுமே அவர்கள் வாழ்க்கையில் "விளையாடி" இருக்கிறது.//

புலம் பெயர் தமிழர்கள் பலர் இலங்கை அணிக்குத் தான் ஆதரவு....

இந்திய அரசு நமக்கு செய்யாத துரோகங்களா? ஒரு தமிழனும் இந்திய அணியில் இல்லாத போதும் நாம் இந்தியாவுக்காக விசில் அடிக்கல அது மாதிரி தான்..

எனக்கு ஒரு டவுட்டு.. இலங்கைத் தமிழருக்கு இலங்கை தாய்நாடு ஓக்கே !!! அது என்ன இந்தியா தந்தையர் நாடு.. அப்போ கனடா, பிரிட்டன் எல்லாம் என்ன சித்தப்பா, பெரியப்பாவா??

தாய் நாடும், தந்தை நாடும் அவரவர் பிறந்து வளர்ந்த நாடு தான்... இந்தியாவில் இருப்பவருக்கு இந்தியா,,, இலங்கையில் இருப்பவருக்கு இலங்கை,, மலேசியாவில் இருப்பவருக்கு மலேசியா.................... நாடுகளில் தாய் தந்தை எல்லாம் ஒன்னும் இல்லை. அவரவரின் சொந்த நாடு அவ்வளவே !!!

சி.பி.செந்தில்குமார் said...

ஸ்டேட்டை விட்டு செண்ட்ரலுக்கு போய்ட்டீங்க?

சசிகுமார் said...

கலக்கல் பாரதி

இரவு வானம் said...

cricket comedy super

சென்னை பித்தன் said...

அடித்து ஆடுகிறீர்கள்!
அவசியம் பாருங்கள் என் பதிவு
”வலைப்பூக் கவுஜ”

Speed Master said...

ஹி ஹி

மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html

மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது

MANO நாஞ்சில் மனோ said...

//நிருபர் : இந்தியா வெற்றி பெற்றது குறித்து உங்கள் கருத்து?
சோனியா: இந்தியா- இலங்கை மேட்ச் பார்க்க வாங்க-னு, ராஜபக்சேவை கூப்பிட்டு, தமிழர்களை கொன்னதுக்கு விருந்து இன்னொரு தடவையும், விருந்து வைச்சு விசுவாசத்தை காட்டிரலாம்.//

கொய்யால அடி செரு...ல......

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா சூப்பர் கும்மி காமெடி அசத்தல்....

Anonymous said...

ஈழத்தமினின் அவலவாழ்வு இவர்களுக்கு கேலிக்கைப் பொருளாகிப் போனது. இந்த இரண்டு கொலைவெறி நாடுகளுக்கும் இனமான உணர்வுள்ள தமிழன் ஆதரவு தெரிவிக்க மாட்டான். ஹலோ இக்பால் செல்வன் நீங்கள் சவுதியை எங்கள் தந்தை நாடு என்று சொல்வதை மறந்து விட்டீர்களா?

middleclassmadhavi said...

டெம்பிளேட் பின்னூட்டம் 2

நீச்சல்காரன் said...

சச்சின் நூறு அடித்து தோல்வி கண்ட மேட்ச்கள் வெறும் 26% தான் மீதியெல்லாம் வெற்றி தான்

Anonymous said...

எப்பா பெயரில்லாதவரே. சௌதிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ........ anonymous என்று பெயர் வைத்திருப்பதால் உங்கள் நாடு என்ன இங்கிலாந்தா?

Anonymous said...

தமிழினத்தை அழித்தொழித்த கொலைகாரன் நவீன ஹிட்லர் ராஜபக்சே இந்தியா வரான்.அவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூட நம்மால் முடியல்.தமிழின தலிவர் எங்க ஒளிஞ்சிகினு இருக்காரோ?நாசமா போக.

Jana said...

ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

கலக்கல்.. வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... said...

"இந்தியா எங்கள் தந்தையர் நாடு" ,

என்பது மாவீரர்கள் தினத்தின் போது, எல்.டி.டி.ஈ. தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய வார்த்தை.

பி.நந்தகுமார் said...

சங்ககராசெல்வரா செல்வரா? தோனி இப்ப இருக்கிற பார்மை பார்த்தால் அப்ரிடிக்கு துணையாக சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சேவாக் சச்சின் முதல் இருபது ஓவர் அடித்து ஆடினால் மட்டுமே வெற்றி நம் வசம். அதே சமயம் சச்சின்கீது செஞ்சுரி அடிச்சா கோப்பை இலங்கை வசம். சரி சரி எல்லாரும் யாகம் நடத்தலாம் இந்தியா கோப்பையை வெல்ல!

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்