விஜயகாந்தும், பேய் எண் பதிமூன்றும்..

தேர்தல் தேதி என்னிக்கு அறிவிச்சாங்களோ அன்னிக்கே விஜயகாந்த் பதிமூணு பேய் நம்பர் அப்படினு கத்துனாரு, கதறுனாரு,  யாரும் நம்பல... 
ஆனா இப்ப பாருங்க அவரு சொன்னதுக்கு அர்த்தம் இருக்குனு, பேய்கள் எல்லாம் சேர்ந்து அவரு மூலமாகவே நிரூபிச்சு விட்டது.

பின்ன என்னங்க சார். பஸ்ல அடிச்சு பிடிச்சு, சீட்டை பிடிச்சு உட்காந்த பின்னாடி இந்த பஸ் புதுக்கோட்டை போகாது, ஃபுகுஷிமா போகுது, இறங்குங்க...அப்படினு சொன்னா எப்படிங்க இருக்கும்.
சரிங்க, விஷயத்திற்கு வருவோம், விஜயகாந்த் எடுக்க வாய்ப்புள்ள மூணு முடிவு பத்தி தான் ஊரே பேசிட்டு இருக்கு, நாமும் இன்னிக்கு அதைத்தான் பேசவும் போறோம்.

"விஜயகாந்த் தன்மானம் மிக்கவரு,மதுரக்காரரு நான்தான் அன்னிக்கே சொன்னேல்ல" அப்படினு அண்ணன் அழகிரி பழம் விட்டுட்டாரு...."
அப்படினு திமுக கூட்டணிக்குள் கால் வைக்கலாம். 

ஆனா ஏற்கனவே அந்த கூட்டணியில, பிச்சையெடுத்த பெருமாள்களும், அதை புடுங்கிய அனுமார்களும் என நிறைய பேரு, சண்டையில கிழிஞ்ச சட்டையோடு திரிவதால், விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு போனால் ஒண்ட வந்த பிடாரியாகவோ அல்லது ஊர் பிடாரியாகவோ கருதப்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமில்ல "ராசா"தந்திரமிக்க கலைஞர்,
பஞ்சையும், நெருப்பையும், பக்கத்துல பக்கத்துல  வைக்க விரும்பமாட்டாரு.. (யார் பஞ்சு, யார் நெருப்பு அப்படினு கேட்கப்பிடாது...ஆமா...)
இல்லைனா ரிஸ்க் எடுக்க விரும்பாமல், கியர் மாற்றி கிளம்ப தயாராக இருக்கும் அம்மா பஸ்ஸிலே திரும்பவும் போய் உட்கார்ந்துக்கலாம். " நான் சும்மா சூ...சூ... போகத்தான் இறங்கினேன் அப்படினு டிரைவர் சீட்ல உட்கார்ந்திருக்குற அம்மாவிடம் சமாளிக்கலாம்.

அம்மா பஸ்ல என்ன பிரச்சனைனா இனி சன்னலோர சீட் கிடைக்காது, பின்பக்க சீட்தான் கிடைக்கும். முன்பக்கம் 160 ஆளுக ஏற்கனவே வாய்பொத்தி உட்கார்ந்திருக்காங்களே.... அவுங்களே கிளம்புறக்கு முன்னாடி இறக்கி விடப்படலாம் என்பதால் நுனி சீட்ல தான் உட்கார்ந்திருக்காங்க.

அஞ்சு வருஷமா இந்த வண்டிக்கு நான் தான் கண்டக்டர் அப்படிங்கிற கனவுல, வண்டிய யார் கண்ணும் படாம சுத்தபத்தமா பாத்துக்கிட்ட வைகோ-வை கிளினராக கூட சேர்த்திக்காம தெருவுல விட்டுவிட்டதால், நம்ம பொழப்பு பரவாயில்லை அப்படினு மனசை தேத்திக்கிட்டு உட்கார்ந்துகலாம்.

விஜயகாந்த் அம்மா வண்டில போறது அப்படினு முடிவு பண்ணிட்டா, 
ரெண்டு கம்யூனிஸ்டுகளும் ஓடி வந்து புட்போர்ட்ல தொத்திக்கிவாங்க. அட அதுல மட்டும் தானே இடம் பாக்கி இருக்கு.
பதிமூணு பேய் நம்பரு, மூணு தேவதை நம்பரு அப்படினு மூணாவது அணி அமைக்கலாம். இது அடுத்த வாய்ப்பு. 

கம்யூனிஸ்டுகளும், கிருஷ்ணசாமியும் நேரடியாக வாசல் தேடி வந்து விட்டதால், "நானும் இந்த ஏரியாவுல பெரிய ரௌடியாக்கும்" அப்படினு சர்டிபிகேட் கிடைச்சாச்சு. 

"கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல, நீங்க வெளிய வாங்க தல " அப்படினு சூழ்நிலை உருவானதால, கொஞ்ச நாளா மூட்டை கட்டி வச்சிருந்த முதல்வர் கனவுவோட திரும்பியும் கிளம்பிடலாம்.

இந்த வாய்ப்பை விட்டுட்டா அப்புறம் ஷங்கர் எடுக்குற படத்துல வேணா முதல்வரா ஆக்ட் கொடுக்கலாம். ஷங்கரும் இப்ப ரொம்ப பிஸி....

கொஞ்சம் நல்லா மார்கெட்டிங் செய்தால், கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் மட்டுமில்லாது வைகோ, சீமான், பாஜக, விஜய டி.ஆர். என பழைய எதிரி வாசிம்கான் தவிர எல்லார்த்தையும் பல்லாக்கு தூக்க கூப்பிடலாம்.

தவிர 40 தொகுதியிலும் டெபாசிட் வாங்கவில்லை அப்படினு ராக்கிங் செய்த தேர்தல் கமிஷனுக்கு "தென்னவனாக" மாறி பாடம் கற்பிக்கலாம்.
ஓட்டு வங்கி அதிகமாயிடுச்சு அப்படினு அடுத்த தேர்தலில் தெம்பா பேரம் பேசலாம், நம்ம மாஸா ராம்தாஸ் மாதிரி.

ஒரு வேளை அதிக தொகுதிகளில் ஜெயிக்க முடியாவிட்டாலும், முதல்வராக ஆகாவிட்டதாலும், அதிமுக ஓட்டுக்களை பிரிச்சு கலைஞரை அடுத்த முதல்வராக்கும் கைங்கர்யத்தை நிறைவேற்றிய திருப்தியாவது இருக்கும். (பொட்டி வாங்காமலே....)

ஒரு வேளை கலைஞர் மைனாரிட்டியா ஜெயிச்சாருனா, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அப்படினு போய் ஒட்டிகிடலாம். அந்த நேரத்துல காங்கிரசும் இருக்காது, 63 நாயன்மார்களின் தொண்டையில் மீன் முள்ளு குத்தியிருப்பதால் யாரும் மிச்சம் இருக்க மாட்டாங்க.

டிஸ்கி :

விஜயகாந்தை கலங்கடிக்கும் மூன்றாவது அணி பற்றிய பாதகமான விஷயங்களும் இல்லாமலும் இல்லை....

நம்ம மக்களுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தையே மூணாவது அணி
என்பது தான்.கொஞ்சம் கூட மதிக்காமல் போகலாம்.

கூட்டணி என்பது திமுக அல்லது அதிமுக உடன் செய்வது மட்டுமே, மத்ததெல்லாம் டூப்பு அப்படினு தொண்டர்கள் நம்புவதால், 
தொண்டர்களை தக்கவைப்பது சிரமமே.

திராவிட கட்சிகளின் கூட்டணி குடிதாங்கியாக இருப்பதால் இன்றும் 
சொகுசாய் இருக்கும் ராமதாசின் வியாபார யுக்தி மனதை மயக்குவது.
(வைகோவின் அரசியல் வாழ்க்கை பயமுறுத்துவது)

உதிரிப்பூக்கள்:

நேற்றைய மனிதர்: MAN OF MATCH :

மாப்பிள்ளை ராவணன் 


இன்றைய பஞ்ச் டயலாக் :

தன் கிட்ட ஓவரா பேசுறவங்களையே அம்மாவுக்கு புடிக்காது,
 இவுங்க நிபந்தனை போடுறாங்க, என்ன நடக்க போகுதோ"


படங்கள் கண்டெடுத்த இடம்:
http://idlyvadai.blogspot.com/2011/03/blog-post_18.htmlஅண்மைச்செய்தி:Last Updated : 18 Mar 2011 04:29:25 PM IST
சென்னை, மார்ச்.18: தமிழக பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

23 கருத்துரைகள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாணவர்களிடத்தில் அரசியல் பதிவு!!!
வரவேற்கத்தக்கது...

கலாநேசன் said...

//பழைய எதிரி வாசிம்கான் தவிர எல்லார்த்தையும் பல்லாக்கு தூக்க கூப்பிடலாம்//

Super

# கவிதை வீதி # சௌந்தர் said...

முன்றாம் அணி கனவு போயே போச்சி...

நாடகமும் முடிந்து போச்சி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

அரசியல் அலசலுக்கும் தாங்கள் தயாராகி வி்ட்டிர்கள் போல..
வாழ்த்துக்கள்..

பாலா said...

விஜயகாந்துக்கு அம்மா பஸ்தான் லாயக்கு. மூன்றாவது அணி என்றால் ஊர் போய் சேர முடியாது என்று தெரியும்.

இளங்கோ said...

//பழைய எதிரி வாசிம்கான் தவிர எல்லார்த்தையும் //
Hahhaa.. :)

MANO நாஞ்சில் மனோ said...

இனி அம்மா ஊத்தி கொடுப்பார் கேப்டன் எடுத்து குடிப்பார்....நான் பச்சை தண்ணிய சொன்னேன்....

பதிவுலகில் பாபு said...

செம.. அருமையான அலசல்..

பார்க்கலாம்.. அடுத்து என்ன நாடகம்னு..

பலே பிரபு said...

//நம்ம மக்களுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தையே மூணாவது அணி
என்பது தான்.கொஞ்சம் கூட மதிக்காமல் போகலாம்.//

இந்த முறையும் அது உண்மை ஆகிவிட்டது. ஆனால் அது கட்சிகளுக்கே பிடிக்கவில்லை.

Lakshmi said...

இந்த அரசியல் பத்தி தலையும் புரியலை வாலும் புரியலியே.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம கலக்கல்..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

13 நா பயமாத்தான் இருக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விஜயகாந்த் முதல்வராகட்டும்

நாய்க்குட்டி மனசு said...

எதிர் கட்சி அணித் தலைவராகவாவது ஆகட்டும்

மைதீன் said...

திரும்ப, திரும்ப ஜெயா,மு.க.தானா? அடப் போங்கப்பா?

செங்கோவி said...

//இந்த பஸ் புதுக்கோட்டை போகாது, ஃபுகுஷிமா போகுது, இறங்குங்க...அப்படினு சொன்னா எப்படிங்க இருக்கும்.// ஹா..ஹா..பட்டையைக் கிளப்புறீங்க சார்!

மதுரை சரவணன் said...

ஜெயா வாழ்க..அடுத்த முதல்வர் அம்மாதான்... மதுரை அப்படித்தான் இருக்கு...நல்ல அலசல்.வாழ்த்துக்கள்

தமிழ்வாசி - Prakash said...

என்ன அருமையா எழுதியிருக்கிங்க...அருமையோ அருமை.

டக்கால்டி said...

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

டக்கால்டி said...

அருமையான அலசல்னு சொன்னா டெம்ப்ளேட் கமெண்ட்டுன்னு சொல்ல மாட்டீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா என் படம் இங்கு எதுக்குப்பா?

நிரூபன் said...

விஜகாந்தை வைத்தும் நம்பர் ஜோசியத்தை வைத்தும் நடை முறை அலசலை அலசியுள்ளீர்கள். என் படம் இங்கு எதுக்கப்பா.... சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆகாயமனிதன்.. said...

தேர்தல் அறிக்கை 2011 கதாநாயகி (கதாநாயகன்)
http://aagaayamanithan.blogspot.com/2011/03/2011.html

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்