சின்னதொரு சொர்க்கம்.ரஷ்ய இலக்கியங்களில் எல்லாம் மிக பெரிய சந்தோஷத்தை ஒருவன் அடைந்தான் என்பதை விளக்க அதிக அளவில் பயன் படுத்தப்பட்டிருக்கும் உவமை என்னவென்றுத் தெரியுமா?.."பள்ளியை விட்டு வரும் மாணவன் போலே...

நடிகர் சூர்யா கூட அவரின் பள்ளி வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை ஒருமுறைச் சொன்னார், அவர் பள்ளியில் படிக்கும் போது ஒரு நாள் பள்ளி முதல்வரின் மகன் திடீரென இறந்து விட்டதால், இன்று பள்ளி விடுமுறை என்றவுடன் மாணவர்கள் அனைவரும் சந்தோஷமாக கைத்தட்டினார்கள்.

பள்ளி என்பது சின்னதொரு திகார் சிறையாகவே பெரும்பாலான மாணவர்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் எங்களுக்கு சொர்க்கமாகவே தோன்றுகிறது.

மாணவர்களை புரிந்துக் கொண்ட ஆசிரியர்களும், ஆசிரியர்களை புரிந்துக் கொண்ட மாணவர்களும் இருக்கும் இடத்தை சொர்க்கம் என்று தானே சொல்ல வேண்டும்.

அரசுப்பள்ளி என்றாலே ஔவையார் காலத்தில் இருப்பதைப் போன்று இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். எங்கள் வகுப்பறை "எந்திரன்" யுகத்து வகுப்பறை.

லேப் டாப், புரஜெக்டர் என நவீன தொழில்நுட்பங்களை கற்பித்தலுக்கு பயன்படுத்தும் ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். எங்கள் வகுப்பறையின் Window -வில் சின்னதொரு அறிவிப்பு பலகையில்இடம் பெற்றுக் கொண்டிருந்த, எங்களின் கவிதைகள், கட்டுரைகள் இப்போது Microsoft Windows வழியாக, இந்த வலைப்பூ வாயிலாக, இப்போது உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது என்பதே இதற்கு
ச் சான்று. 

சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்...
எங்களைப் பொறுத்தவரை சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் சொர்க்கம்.. எங்கள் பள்ளி வாழ்க்கை(+2 வாழ்க்கை) இன்னும் வெறும் 150 நாள்கள் தான். இருப்பினும் மிச்சம் இருக்கிற நாட்களை ரசனையோடு இருக்கப்போகிறோம்..
எங்கள் ஆசிரியர்களையும், பாடங்களை கொண்டாடி மகிழப்போகிறோம்..

இடவசதி குறைவு போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி; எங்கள் பள்ளி வெற்றி நடைப்போடுகிறது. சென்ற மார்ச்-2010 பொதுத்தேர்வில் எங்கள் மாணவியர்கள் 200-க்கு 198 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். மாநில முதல் இடத்திற்கும் எங்களுக்கும் இடைவெளி வெறும் இரண்டு மதிப்பெண்கள் தான்..

"தங்கம் எனக்கு வேண்டாம்... தங்கப்புதையல் எனக்கு வேண்டும் என்று எங்கள் ஆசிரியர்கள் சொன்னபோது, நாங்கள் "ரின்" விளம்பரத்தில் வருவதுப் போல , இரண்டு மார்க் தானே அதுவும் இந்த முறை வந்துவிடும் என்று அவர்களுக்கே நம்பிக்கையூட்டியிருக்கிறோம்.

இந்த முறை நிறைய பொறியியல் , மருத்துவ மாணவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்...

எங்கள் எண்ணங்கள் கைக்கூட நீங்களும் எங்களுக்காக இறைவனை வேண்டி
க்கொள்ளுங்கள்.

12-அ1,அ,மற்றும் ஆ பிரிவு மாணவிகள்.
நகரவை மகளிர் மேல் நிலைப்பள்ளி,
மேட்டுப்பாளையம்.*****************************************************************************************************

டிஸ்கி:
இது மீள்பதிவு. தேர்வுக்கு 150 நாட்கள் மீதி என்பது கடந்து, இப்போது தேர்வெழுதிக்கொண்டிருக்கிறோம். 


மொழிப்பாடங்கள் முடிந்து, முக்கிய பாடங்கள் தொடங்கி விட்டன. 


இன்று இயற்பியல், உங்கள் வாழ்த்துக்களையும் எங்களுக்காய் மீள்பதிவு செய்வீர்களா?   

24 கருத்துரைகள்:

தமிழ்வாசி - Prakash said...

மீள் பதிவுனாலும் அருமை.. எல்லா மாணவர்களுக்கும் உள்ள மனப்பான்மை அது.

எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

வேடந்தாங்கல் - கருன் said...

இந்தத் தேர்வில் அனைவரும் வெற்றிபெற்று நல்வாழ்வு கிடைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்ளும் ஓர் ஆசிரியர்...

வாழ்த்துக்கள்.

வேடந்தாங்கல் - கருன் said...

இந்தத் தேர்வில் அனைவரும் வெற்றிபெற்று நல்வாழ்வு கிடைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்ளும் ஓர் ஆசிரியர்...

வாழ்த்துக்கள்.

மாணவன் said...

தேர்வில் அனைவரும் சிறப்பாக வெற்றிப்பெற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...

THOPPITHOPPI said...

தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்


அப்படியே தேர்வு எண் சொன்னா நல்லா இருக்கும்

வைகை said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பார்த்து எழுதுங்க.....உங்க பேப்பர... :))

Ramani said...

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரட்டும்
என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்

சங்கவி said...

தேர்வில் அனைவரும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்....

சி.பி.செந்தில்குமார் said...

>எங்கள் பள்ளி வாழ்க்கை(+2 வாழ்க்கை) இன்னும் வெறும் 150 நாள்கள் தான். இருப்பினும் மிச்சம் இருக்கிற நாட்களை ரசனையோடு இருக்கப்போகிறோம்..

அடடா.. உங்கள் வருத்தங்களை சேர்ந்து சுமக்கிறோம்

Anonymous said...

மாணவிகளின் கவலை உண்மைதான்.பள்ளியிலிருந்து வெளியேறும் போது எல்லா கனவுகளும் வகுப்பறையில் அடைக்கப்படுகின்றன.

Harini Nathan said...

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் :)
i like the quote " Never say the sky is the limit when there is a foot prints on the Moon" great :)

இரவு வானம் said...

இயற்பியலில் மட்டுமில்லை, வாழ்க்கை எனும் வேதியியலிலும் எல்லா மாணவ்ர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள், ஏன்னா நான் ஒரு வேதியியல் பட்டதாரி :-)))

Chitra said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அனைவரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Speed Master said...

வாழ்த்துக்கள்

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

வாழ்த்துக்கள்!

செங்கோவி said...

//அரசுப்பள்ளி என்றாலே ஔவையார் காலத்தில் இருப்பதைப் போன்று இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். எங்கள் வகுப்பறை "எந்திரன்" யுகத்து வகுப்பறை.// கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்குங்க..நாங்க படிக்கும்போது ஔவையார் காலத்து மரத்தடி வகுப்பறை தான்..மழை பெஞ்சா லீவு!!.....அனைவரும் தேர்வில் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகள்!

MANO நாஞ்சில் மனோ said...

வெற்றி பெற வாழ்த்துகிறேன் உங்கள் எல்லோரையும்.....

அமைதிச்சாரல் said...

தேர்விலும், வாழ்விலும் வெற்றிபெற வாழ்த்துகள்..

ரஹீம் கஸாலி said...

வாழ்த்துக்கள் சகோதரிகளே...

இளங்கோ said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

பதிவுலகில் பாபு said...

அனைவரும் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அனைவரும் சிறப்பாக எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி சகோ
உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்