பதவி...பதவி..பதவி...

இந்த வார செய்தி:
மஹாராஷ்டிரா முதல்வர் அசோக் சவாணை பதவியிலிருந்து நீக்க பா... செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை..


கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அரசியல் சட்டத்திற்கு மதிப்பு அளிப்பவராக இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.- வெங்கய்ய நாயுடு.

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தர முடியாவிட்டால் முதல்வர் பதவியை கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அ.தி.மு.. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழகத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் தி.மு.. வினருக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயார் - தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின்.
(சென்ற வாரம் ராஜினாமா கோரும் வாரம்?)இந்த வார வேதனை:

கோவை தொழில் அதிபர் ரஞ்சித் குமார் ஜெயின் மகன் ரித்திக்(7) மற்றும் மகள் முஸ்கின்(11) ஆகியோர் கால் டாக்சி டிரைவர் மோகன் மற்றும் அவர் கூட்டாளி மனோகரன் என்பவர்களால்  கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொடூர கொலைக்காரர்களை தூக்கிலிட வேண்டும், விசாரணை இன்றி தண்டனை விதிக்க வேண்டும் பொதுமக்கள் ஆவேசம்.

என்ன கொடுமை சார் இது :

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று, ஒரே நாளில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சரக்கு விற்பனை 250 கோடி ரூபாயைத் தொட்டது, இது முந்தைய தீபாவளியை (2008) விட 25 அதிகம்.வரவிருக்கும் தீபாவளி விற்பனை கடந்த ஆண்டு சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்ப்பு. (குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களில் ஏராளமானவர்கள் இளைஞர்கள்). {மயக்கத்தில் தமிழகம்- புதிய தலைமுறை வார இதழ் கவர் ஸ்டோரி}

இந்த வார கருத்து:

மனிதன் பாதி மண்ணாகவும், பாதி தெய்வமாகவும் இருப்பதால் அவனால் மூழ்கவும் முடியாது, பறக்கவும் முடியாது.
-பைரன்.


இந்த வார ஹைக்கூ:


கல்லெறிந்தது பழத்திற்குத்தான்
மன்னிக்குமா குருவி
-யாரோ.


உதிரிப்பூக்கள்:

*தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
*தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர். கே. ரவி ராஜ பாண்டியன் பொறுப்பேற்றார்.

*கர்நாடக அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் வந்தடைந்தது. 


 


5 கருத்துரைகள்:

எஸ்.கே said...

இந்த வார தொகுப்பும் அருமை! வாழ்த்துக்கள்!

செல்வா said...

இந்த வாரக்கொடுமை மனசைப் பாதிக்குதுங்க ,
அதே மாதிரி (சென்ற வாரம் ராஜினாமா கோரும் வாரம்?) இது சூப்பர்..!!
அழகா தொகுத்திருக்கீங்க ..

Unknown said...

எஸ்.கே. அவர்களுக்கும், ப.செல்வக்குமார் அவர்களுக்கும் நன்றிகள்.

Thanglish Payan said...

Pathavi..illayel manudam ellai..

Nalla thoguppu..

cheena (சீனா) said...

அருமையான இடுகை - தொகுப்பு அனைத்துமே அருமை

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்