கறார் வாத்தியாரான உச்ச நீதிமன்றம்


இந்த வார ஹிட் செய்தி:
பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்து  எந்தக்கட்சிக்கும் இல்லை. 

இடித்துரைக்கும் எதிக்கட்சி இல்லா மன்னன் நிதீஷ் குமார்.
(திருக்குறள் படியுங்கள், மனச்சாட்சியே எதிர்க்கட்சியாகும்.)

இந்த வார கலாட்டா:
அசோக் சவாண்,ஆ.ராஜா,ரோசய்யா ஆகியோர் பதவி இழந்த
ற்கும், எடியூரப்பா பதவி தப்பியதற்கும்,  நிதீஷ் குமார் மீண்டும் ஆட்சியை பிடித்ததற்கும் சமீப குருப்பெயர்ச்சியே காரணம்
- ஜோதிடர்கள்..
(ஆகா... கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க.....)

கறார் வாத்தியாரான உச்ச நீதிமன்றம்:


 அரசு நிர்வாகத்தில் ஒட்டுமொத்தமாக தோல்வி என்று வரும்போதும், மக்களுக்கு உதவ வழியில்லை என்றபோதும் தான் நீதிமன்றங்கள் தலையிடுகின்றன.
- உச்ச நீதிமன்றம்.

சமீப காலங்களில் கறார் வாத்தியாராக உச்ச நீதிமன்றம்  எழுப்பும் கேள்விகள் ஏராளம். வைக்கும் கொட்டுக்கள் ஏராளம். 

பதில் அளித்த விதத்தில் மத்திய அரசு; மக்கு மாணவனா, சமத்து மாணவனா? நீங்களே சொல்லுங்களேன்.
(கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருட்கள் தொடங்கி, ஸ்பெக்ட்ரம் வரை  உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விகளை யாரேனும் தனிப்பதிவாக அலசலாமே?).

கொசுறு கேள்வி:
உச்ச நீதிமன்றம் மத்திய அரசை அறைந்தது, என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அறைந்தது என்றால் என்ன அர்த்தம்?

(இந்த கேள்வியை எழுப்பியதும்  உச்ச நீதிமன்றமே )


செய்தியை நீங்களே யூகித்து
க்கொள்ளுங்கள்...
விமர்சனம் மட்டும் இங்கே....
ன்ன பசுபதி... பேச்சு; நாட்டாம குடும்பத்து பேச்சு மாதிரி இல்லையே....

இந்த பொதுஜன கேள்வி:
பழைய விலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமை பெற்று, லாபம் பார்த்தவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லையாமே, உண்மையா?


இந்த வார ஹைக்கூ:
 பசியுடன் படுத்தாலும்
வயிறு நிறைந்திருக்கும்
அம்மாவின் ஞாபகம்.
- கா.கீ. சதீஷ் குமார்.


உதிரிப்பூக்கள்: 
வி.ஏ.ஓ. தேர்வு , தமிழகத்தில் பிப்ரவரி 20 அல்லது மார்ச் 6 இல் நடத்த டி.என்.பி.எஸ்.சி. திட்டம்.

சீனாவில் நடைப்பெற்ற 16 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 64 பதக்கங்களுடன் 6 வது இடம் பிடித்தது.
 

எல்.ஐ.சி. ஊழல் காரணமாக , முதலீடு செய்தவர்களுக்கு ஒரு காசு கூட நஷ்டம் ஏற்படாது. - பிரணாப் முகர்ஜி.
 

மிழக கனமழையால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95. 

15 கருத்துரைகள்:

Anonymous said...

சமீப காலங்களில் கறார் வாத்தியாராக உச்ச நீதிமன்றம் எழுப்பும் கேள்விகள் ஏராளம்//
அந்தளவு நிர்வாகம் சீர் கெட்டு விட்டதே காரணம்

Anonymous said...

நல்ல பதிவு

எஸ்.கே said...

அருமை!

ஹரிஸ் Harish said...

அருமை...தொடருங்கள்..

அருள் said...

இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றது!

http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_28.html

குறையொன்றுமில்லை. said...

நல்லபதிவு, தொடருங்கள்.

Unknown said...

செய்தித்தாள் விசயங்களை போட்டு அதற்கு எதிர்த்தாக்கு செய்திருப்பது பாராட்டுக்கள் .

ஆமினா said...

நல்ல பகிர்வு!!

பீகாரில் அவர் வென்றது ரொம்ப சந்தோஷம் தான். இனி நக்சலைட் பீதி கொஞ்சம் குறையும்...

நிம்மதியா பீகாருக்குள்ள நுழையயே முடியுறதில்ல :(

Unknown said...

நல்ல பதிவு நண்பா .வி .ஏ.ஒ தேர்வு பிப்ரவரி ஆகிடுமா அந்த தேர்வையாவுது எழுதலாம்னு நெனச்சேன் முடியாது போலேயே

மாணவன் said...

செய்திகளும் தகவல்களும் அருமை

சிறப்பாக உள்ளது

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வினோ said...

நிறைய செய்திகள்.. நன்றி...

PRABHU RAJADURAI said...

நகரவை பள்ளி மாணவமணிகளின் பதிவா, வாழ்த்துகள்!

அன்புடன் மலிக்கா said...

தகவல்களும் செய்திகளும் அருமை..
பாராட்டுக்கள் ,,,....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ரோஜா பூந்தோட்டம் அளித்த முட்கள் நிறைந்த பொக்கே !!
இன்றைய நாட்டின் நிலைமை பொது ஜனத்திற்கு எதற்காக கவலைப்படுவது என்ற பெரும்கவலையை அளித்துள்ளது.

மாதேஸ் said...

இந்த வார கலாட்டா ரொம்ப அருமை... மிகவும் ரசித்தேன்...

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்