யார் தவறுக்கு யாருக்கு தண்டனை? உமா மகேஸ்வரி.எம்.

ஒரு இருபத்தைந்து
வயதாகி
இருந்திருக்குமா
இப்போது
உனக்கு...

மருத்துவம்
சட்டமோ
தொழில்நுட்பமோ
படித்திருப்பாயோ என்னவோ...

வாரணமாயிரம்
சூழ வலம் வந்து
திருமணம்
நிகழ்ந்திருக்குமோ
என்னவோ;
அல்லது
அதையும் தாண்டி
குழந்தைகள் பெற்று
அதற்கு
அகரம்
எழுத
பயிற்சி அளித்துக்கொண்டிருப்பயோ
என்னவோ...

சின்ன சின்ன வார்த்தைகள் கோர்த்து
எனக்காக ஒரு கவிதை
நெய்துக்கொண்டிருப்பாயோ
என்னவோ...

இதுவோ
அல்லது வேறு எது
வோ
இந்த கணத்தில்
நீ
செய்துக்கொண்டிருக்கக்கூடும்;
ஒரு வேளை
யாரோ செய்த தவறுக்காய்
போபால் விஷ வாயு
சுவாசித்து
மரிக்காமல்
இருந்திருந்தால்...
-ஏதோ ஒரு இந்திய தாய்க்கான வலியோடு
உமா மகேஸ்வரி.எம்.

27 கருத்துரைகள்:

Unknown said...

டிஸ்கி:
பதில் சொல்லுடா நாயே....

தவறு செய்த நீ ஏதோ ஒர் வல்லரசு தேசத்தில் பஞ்சணையில் சுகித்திருக்க, இங்கே நான் மண்ணரசு தேசத்தில் சகிக்க இயலாத துன்பத்தில் உழல்வதோ....
என் நிலையை, என் வாழ்வின் தோல்வி என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் உன் குற்றத்திற்கு நீ பதில் சொல்லியாக வேண்டும்...

செல்வா said...

//யாரோ செய்த தவறுக்காய்
போபால் விஷ வாயு
சுவாசித்து
மரிக்காமல்
இருந்திருந்தால்...//

வாய்ப்பே இல்லைங்க .. ரொம்ப ரொம்ப கலக்கலான கவிதை ,, இந்த கடைசி வரிகளைப் படிக்கும் போது ஒரு சிலிர்ப்பு வந்தது ,,!! எனக்கு எப்படி பாரட்டுராதுன்னு தெரியல ,, ஆனா ரொம்ப அருமையா இருக்கு ..!!

Unknown said...

நன்றி செல்வா..

எல் கே said...

வலியை உணர்த்தும் வரிகள்...

மாதேஸ் said...

20 வருஷம் ஆகியும் நம்மால ஒன்னும் பெருசா பண்ண முடிலயே... ஒரு வேல... இதுக்கு பேரு தான் “சுதந்திரம்”மோ???

Unknown said...

வலியின் உணர்வுகளை படம் பிடித்து காட்டியிருக்கிறது இக்கவிதை...

வினோ said...

வலியை உண்டாக்குகிறது கவிதை...

அந்நியன் 2 said...
This comment has been removed by the author.
அன்பரசன் said...

மிகவும் உணர்வுப்பூர்வமான கவிதை.
என்ன சொல்றததுன்னே தெரியல..

குறையொன்றுமில்லை. said...

மிகவலியை உணர்த்திய கவிதை.
மனசெல்லாம் பாரமாச்சு.

தினேஷ்குமார் said...

ஒன்னும் சொல்லமுடியல சகோ நெஞ்சம் கனக்கிறது.........

அதே நிலை கூடிய விரைவில் கடலூர் மாவட்டத்திற்கும் வரும் வாய்ப்பை நம் அரசியல் சாக்கடைகள் உருவாக்கியுள்ளன இன்று புதியாதாக உருவெடுத்திருக்கும் ஒரு தொழிற்சாலையினால்

ஹரிஸ் Harish said...

:(..கனமான பதிவு..

ஆமினா said...

:(

ஆமினா said...

மனம் பாரமாகி போனது

நெஞ்சை வலிக்க செய்யும் கவிதை வரிகளுக்கு சொந்தமானவர்க்கு பாராட்டுக்கள்

Anonymous said...

மனசை கவர்ந்த கவிதை

மாணவன் said...

வலியின் உணர்வுகளை வேதனையோடு பதிவு செய்துள்ளீர்கள் அருமை,

மனது வலிக்கிறது...

நன்றி

Chitra said...

மனதை கனக்க செய்கிறது.

Unknown said...

வலியின் பிரதிபலிப்பு உங்கள் கவிதையில் தெரிகிறது.

"நான் என்ன பாவம் செய்தேன்"--தாய்

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டாள்.

a said...

"வலி"ய கவிதை...

ரஹீம் கஸ்ஸாலி said...

அந்த கடைசி வரிகளில் மனம் வலித்தது உண்மை.

kamal said...

Than kulanthaiyai ilantha ilanthu kondirukum atthanai thaaiyin kanatha valiyai sumantha varigal.
Innum ethanai thaai than kulanthaiyai mannil sithaika thaalamal karuvil karaithalo.

Nenjju porukkuthillaye.

ஆனந்தி.. said...

ம்ம்...படிச்சிட்டு ரொம்பவே வருத்தம் ஆய்டுச்சு...(((

புலிகுட்டி said...

மனது வலிக்கிறது.பாதிக்கப்பட்டவர்களுக்கு இலப்பீடு தரவே அரசு யோசிக்கிறது.பின்பு நியாயம் எப்படி கிடைக்கும்.

Kavipuyal said...

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

Kavipuyal said...

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

Raba said...

Anru vulagirkku India....


Enru India virku Thamilagam....

Kuppaikkodaiyai!!!!!!!!

Raba said...

Anru ulagirkku India....


Enru India virkku Thamilagam....


Kuppai koddai yai.!!!!!!

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்