இரத்த சரித்திரம்..

அதிகாலை பனியில்
மூச்சிரைக்க
சைக்கிள் மிதித்து
பேப்பர் போடும் பையன்;


கையில் உள்ள
சில்லறைகளை
இறுக்கப் பிடித்தப்படியே
நகர பேருந்தை
தேர்ந்தெடுத்து
ஏறும் சிறுவன்;

பாக்கெட்டில் உள்ள
காசினை
எண்ணி தந்துவிட்டு
பின் "ஒரு டீ"எனஆர்டர் கொடுக்கும்
கல்லூரி மாணவன்;
நூலகத்தில்
தேநீர் கொண்டு
பசியடக்கி
போட்டித்தேர்வுக்கான
புத்தகங்களில்

தவமிருக்கும் இளைஞன்;

இப்படியாய்
யாரேனும் ஒருவரை
யாங்கேணும்
காண நேர்கையில்


தவிர்க்க இயலாது
நினைவுக்கு வருகிறது
என் இளமைக்காலம்...
- எஸ்.பாரத்.
உலகில் வேறு எந்த பல்கலைக்கழகமும் கற்றுக் கொடுக்காத; வாழ்க்கைப் பாடங்களைத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கும் "வறுமை" எனும் பல்கலைக் கழகத்தில் பயின்றவன்.

9 கருத்துரைகள்:

Unknown said...

வெள்ளை நிற அழகிய கற்களின் ஊடே வெளித்தெரியாது கசியும்
வாழ்க்கையின் இரத்தச்சுவடுகள். காயங்களின் இடையே நாட்களை நகர்த்துபவர்களுக்கு, இயல்பாய் உதவுகிறது என் கரங்கள், எந்தன் முந்தைய தழும்புகளைத் தடவிக்கொண்டே..

Unknown said...

இந்த பதிவு விருந்தினர் பக்கம்.
இன்றைய விருந்தினர் கவிதையை வழங்கியவர் எஸ்.பாரத்.

எஸ்.கே said...

இளமையில் வறுமை கொடுமை!
கவிதை எழுதியவருக்கு வாழ்த்துக்கள்!

தினேஷ்குமார் said...

உண்மைதான் நண்பரே

வறுமையின்
வலிகள்
வர்ணிக்க முடியாத
வரிகளில்
குருதி சொல்லும்
சோகங்களின்
வடுக்கள்
நினைவில் நிராடும்
சிலதுளிகள்

அன்பரசன் said...

//தவிர்க்க இயலாது
நினைவுக்கு வருகிறது
என் இளமைக்காலம்...//

Super..

Anonymous said...

en kangalai kalanga veitha varigal!!! Valkail valznthukatta vendum endrumm vairakyam intha varigalil therinthau!!!

cheena (சீனா) said...

அன்பின் பாரத் பாரதி - விருந்தினர் பக்கம் - நல்ல செயல் - கவிதை எழுதிய எஸ்.பாரத்திற்கும் நல்வாழ்த்துகள். இளமையில் வறுமை என்பது கொடுமை - இருப்பினும் வாழ்வில் முன்னேறியவர்களில் பலர் இளமையில் வறுமையில் துடித்தவர்கள் தான். நட்புடன் சீனா

Unknown said...

சிறுவர்கள் வேலை செய்வது வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள நாடுகள் அனைத்திலும் இந்த கொடுமைகள் நடந்தவண்ணம்தான் இருக்கிறது. சிறுவர்களின் உழைப்பில் பெரியவர்கள் வாழும் அவலத்தை என்ன சொல்ல,

அடுத்து இளைஞர்கள் பற்றி எழுதியிருந்த பத்திகள் என் நினைவுகளை மீட்டெடுத்தது..

நல்ல கவிதை.. பாராட்டுக்கள்..

அன்பரசன் said...

//உலகில் வேறு எந்த பல்கலைக்கழகமும் கற்றுக் கொடுக்காத; வாழ்க்கைப் பாடங்களைத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கும் "வறுமை" எனும் பல்கலைக் கழகத்தில் பயின்றவன்.//

Super.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்