என் மன வாலில்.... இது மனக்குரங்கு

யாருமில்லா
பேருந்து...,
மெல்லியதாய்
பண்பலை பாடல்;

கேட்கவும்,
ரசிக்கவும்
யாருமில்லை.

இருக்கை தேடி
அமர்கிறேன்..
 
பின்  அமர்ந்த
இருக்கையிலிருந்து
இடம் பெயர்கிறேன்;

-ஏதோ ஒரு
காரணத்தை
உத்தேசித்து.


"சரி...சன்னலோரம்"
என
மீண்டும்
இருக்கை
மாறுகிறேன்.

ஏனோ
சம்பந்தமில்லாது
நினைவுக்கு வந்தது..,


முன்னம்
பலமுறை

"ஒண்டிக்க இடம்
கிடைத்தால்
போதுமே
"
என்னும்
ஏக்கத்தோடு
நின்றுக்கொண்டே
பயணித்தது

எஸ்.பாரத்.   

11 கருத்துரைகள்:

Unknown said...

சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது, மிக நீளமாய் யோசித்துப் பார்க்கையில். நானும் ஒரு முறை நிரூபித்து விட்டேனா- குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதையும், மனம் ஒரு குரங்கு என்பதையும்..

Unknown said...

கவிதை ஒழுங்கற்று இருக்கிறது.. அடுத்த முறை கவனமாக எழுதுங்கள் ...

ஆமினா said...

நானும் அப்படி தான் நினைப்பேன்...

இதே பஸ்ஸுல கொஞ்சம் நேரம் இடம் கிடைக்காதான்னு எவ்வளவு ஏங்கியிருப்போம்னு!

நல்ல சிந்தனை உங்களுக்கு

வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது, மிக நீளமாய் யோசித்துப் பார்க்கையில். நானும் ஒரு முறை நிரூபித்து விட்டேனா- குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதையும், மனம் ஒரு குரங்கு என்பதையும்..

இப்பவாது ஒத்துக்கிட்டா சரி

Chitra said...

அந்த படத்தை பார்த்தால், பயமாகத்தான் இருக்கிறது. ஆபத்தான பயணம்.

தினேஷ்குமார் said...

பயணிகளில்லா
பேருந்தில்
துல்லியதொரு
பண்பலை பாடல்
மெய்மறக்க
மெல்லியதாய்.......

இருக்கை
தேடி அமர்ந்தும்
இனம் புரியா
தேடலில்
மனம் ஒரு
குரங்காகா
இருக்கைக்கு
இருக்கை
மாறுகிறேன்..........

சும்மா ட்ரை செய்து பார்த்தேன் அவ்வளவுதான்

ஹரிஸ் Harish said...

dineshkumar said...
பயணிகளில்லா
பேருந்தில்
துல்லியதொரு
பண்பலை பாடல்
மெய்மறக்க
மெல்லியதாய்.......

இருக்கை
தேடி அமர்ந்தும்
இனம் புரியா
தேடலில்
மனம் ஒரு
குரங்காகா
இருக்கைக்கு
இருக்கை
மாறுகிறேன்........//

இது சூப்பரா இருக்கு தல..

எஸ்.கே said...

அருமையான கவிதை!

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

ஹேமா said...

பாரத்...எல்லோர் மனதிலும் இந்த இயல்பான தாவல் இருக்குமென்றே நினைக்கிறேன்.ஏன் எனக்கும்கூட !

goma said...

விருந்து படைத்திருக்கும் போது எதை எடுக்க என்று தோன்றும் ....
பசியோடு இருக்கையில் பன் கூட தேவாம்ருதம் போல் ருசிக்கும்

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்