அறிவுக்கு தான் மதிப்பு.
சிரிப்பதற்கு இல்லை மதிப்பு;
சிந்திப்பதற்கு தான் மதிப்பு.
தூங்குவதற்கு இல்லை மதிப்பு;
துன்பத்தை துடைப்பதற்கு தான் மதிப்பு.
சண்டை போடுவதற்கு இல்லை மதிப்பு;
சாதிப்பதற்கு தான் மதிப்பு.
நிலவை பார்ப்பதற்கு இல்லை மதிப்பு;
நிலவில் கால் வைப்பதற்கு தான் மதிப்பு.
முயன்றால் முடியவில்லை
என்பதற்கு இல்லை மதிப்பு;
முயற்சிக்கு முடிவில்லை
என்பதுதான் மதிப்பு.
- வித்யா.ப.
பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு.
9 கருத்துரைகள்:
மதிப்பிடுதலும், மதிப்பிடும் முறைகளும் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கையில் எது மதிப்பு, எது மதிப்பில்லை என கணக்கிடுகிறது ஒரு மாணவியின் கவிதை.
கவிதைக்கு மதிப்பிட வரவேற்கிறோம் வலையுலகை.
கவிதை படிப்பதற்கு இல்லை மதிப்பு ( என்ன மாறி)
கவிதை எழுதவே மதிப்பு ( உங்கள மாறி)
//நிலவை பார்ப்பதற்கு இல்லை மதிப்பு;
நிலவில் கால் வைப்பதற்கு தான் மதிப்பு.//
இந்த வரிகள் ரொம்ப அருமையா இருக்குங்க .,
வாழ்த்துக்கள் தங்கச்சி ..!!
நல்ல தன்னம்பிக்கை கவிதை .. பாராட்டுக்கள் வித்யா ...
உங்கள் பதிவு மிகவும் மதிக்க் படவேண்டியதாய் ( அருமையாய்) இருக்கிறது.
மதிப்பில் கவிதை துவக்கி தடம் பதிக்கும் மாணவி வித்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நண்பரே
ஃஃஃஃஃநிலவை பார்ப்பதற்கு இல்லை மதிப்பு;
நிலவில் கால் வைப்பதற்கு தான் மதிப்பு.ஃஃஃஃ உணர்வூட்டும் வரிகள் வாழ்த்துக்கள்..
அற்புதமான கவிதை!
மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Nice
Post a Comment