சமீபத்தில் நாஞ்சில் நாடன் அவர்களின் பேட்டி, தினமலரில் படிக்க நேரிட்டது. அதன் சாராம்சமும், அதனைத்தொடர்ந்து நம் சிந்தனையில் விளைந்த கருத்து கத்திரிக்காய்களும்...
நாஞ்சில் நாடன் சொன்னது:
எல்லா எழுத்தாளர்களும் தங்கள் வாழ்க்கையைச் சார்ந்து, வாழ்ந்த நிலம் சார்ந்துதான் எழுதுகிறார்கள். நானும் அப்படித்தான். ஆனால் என் எழுத்தை நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு எழுத்து என்ற ஒரு வட்டத்திற்குள் நிறுத்துவதை நான் ஏற்கமாட்டேன். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த வட்டத்தை விட்டு வந்துவிட்டேன்.
ஒரு நாவல் என்பது அந்த எழுத்தாளரின் சுயசரிதம் அல்ல. பல்வேறு சம்பவங்களில் அவனுக்கு நேர்ந்த அனுபவங்கள் என்று சொல்லலாம். என் நாவலில் வரும் கதைமாந்தர்களில் என் அனுபவமும் இருக்கும், முழு பாத்திரமும் நான் அல்ல.
எழுத்தாளனுக்கு யாரும் குரு கிடையாது. ஆனால் பிடித்தமான எழுத்தாளரின் தாக்கம் இருக்கும்.
மற்ற எல்லா மொழி எழுத்தாளர்களிடமும் குழு அரசியல் இருக்கிறது. ஆனால் இங்கு அதிகம். அங்கு காழ்ப்பு இல்லை. ஆனால், இங்கிருக்கிறது. மற்ற மொழிகளில் இரண்டு எழுத்தாளர்கள் சந்தித்துக்கொண்டால் சிகரெட்டை மாற்றிப் புகைக்கும் அளவுக்கு சகஜமாகப் பழகுவார்கள். இங்கு நேருக்கு நேர் பார்த்தால் கூட பேசுவதில்லை.
என் படைப்புக்குள் இந்து வெள்ளாளர் மனம் செயல்படுவதாக அ.மார்க்ஸ் விமர்சித்தது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எழுத்தாளன் சாதி, மதம் அற்றவன்.
இலக்கியம் படைக்க வேண்டும் என்று யோசிப்பேனே தவிர அதை நவீனத்துவத்தில் எழுதுவதாக இல்லை பின்நவீனத்தில் எழுதுவதா இல்லை மேஜிக்கல் ரியலிசத்தில் எழுதுவதா என்று யோசிப்பதில்லை. எனக்கு இந்த இசங்கள் மீது நம்பிக்கை இல்லை. இந்த இசங்கள் தோன்றிய நாடுகளிலேயே தோற்றுப்போனவை. பின் நவீனத்துவம் இறந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. போஸ்ட்மார்டனிசம் இங்கு அவசியமில்லை.
பேட்டியிலிருந்து நாம் கற்றதும் பெற்றதும்:
எழுத்துக்களை விட எழுத்தாளர்கள் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள்.(விமர்சிக்கப்படுகிறார்கள்). திறமை இருக்கும் இடமெல்லாம் சச்சரவுகளும் உடன்பிறந்தாளாக இருக்கும் போல.
எழுத்தாளர்கள் ஜாதி, மதம் தாண்டியவர்கள். (இருப்பினும் ஏதேனும் வரம்புக்குள், வட்டாரத்திற்குள் சிக்குகிறார்களா என கவனித்து கொண்டே இருக்கிறது இந்த உலகு)
இசங்கள் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து வேலை. ஆனால் இசங்களின் பெயர்களை எழுத்தாளர்களும், வாசகர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். (அப்போது தான் மற்றவர்களின் சட்டையை கிழிக்க முடியும், குறைந்த பட்சம் தன் சட்டையை கிழித்துக்கொள்ள முடியும்).
கொசுறு:
எழுத்துகளில் தரம் தாழ்ந்து போகும் போது, அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும் என பெரும்பாலும் கருதப்படுகிறது. (நல்லா இருக்கும் போது????)
35 கருத்துரைகள்:
எங்கெல்லாம் புகழ் போதை அதிகமாகுதோ..அங்கு இந்த குழு அரசியல் தவிர்க்கமுடியாதது போல?
நம்ம பதிவுலகத்தை விடவா????
நாம் பெரும்பாலும் எழுத்தைப் படிப்பதில்லை. எழுத்தாளனையே அதில் தேடுகிறோம்.
எழுத்துகளில் தரம் தாழ்ந்து போகும் போது, அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும் என பெரும்பாலும் கருதப்படுகிறது//
வணக்கம் சகோதரம், நான் இந்தக் கூற்றுக்களை மறுத்துரைக்கிறேன். காரணம் வறுமையின் பிடியிலும், தாழ்ந்து போன வாழ்விலிருந்தும் பல எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு வைரமுத்துவின் ஆரம்ப கால வாழ்வையும்,கோகிலம் சுப்பையா, சீ.வி வேலுப்பிள்ளை, முதலிய பல எழுத்தாளர்களைக் குறிப்பிடலாம்.
எழுத்தாளன் என்பது: காலத்தின் கண்ணாடி, அவன் வாழும் காலப் பகுதியின், வாழ்ந்த காலப் பகுதியில் உள்ள சமூகத்தின் விம்பங்களை எழுத்தாளன் பிரதிபலிக்கிறான். இதற்கு வறுமை/ தாழ்ந்த வாழ்வு ஒரு தடையல்ல.
உங்களின் அலசலும், விமர்சனப் பார்வையும் அருமை.
>>>
எழுத்தாளனுக்கு யாரும் குரு கிடையாது. ஆனால் பிடித்தமான எழுத்தாளரின் தாக்கம் இருக்கும்.
கரெக்ட்
கரைக்டாதான் சொல்ரீங்க...
>>
எழுத்துகளில் தரம் தாழ்ந்து போகும் போது, அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும் என பெரும்பாலும் கருதப்படுகிறது.
சாரு...?
>>
எழுத்துக்களை விட எழுத்தாளர்கள் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள்.(விமர்சிக்கப்படுகிறார்கள்). திறமை இருக்கும் இடமெல்லாம் சச்சரவுகளும் உடன்பிறந்தாளாக இருக்கும் போல.
>>>உடன்பிறந்தாளாக<<<
இந்த வார்த்தையை மாற்றி உடன் பிறந்தவனைப்போல் என மாற்றலாம்...
எல் கே said...
நம்ம பதிவுலகத்தை விடவா????
ரிப்பீட்டு
>>
எழுத்தாளன் என்பது: காலத்தின் கண்ணாடி, அவன் வாழும் காலப் பகுதியின், வாழ்ந்த காலப் பகுதியில் உள்ள சமூகத்தின் விம்பங்களை எழுத்தாளன் பிரதிபலிக்கிறான். இதற்கு வறுமை/ தாழ்ந்த வாழ்வு ஒரு தடையல்ல.
உங்களின் அலசலும், விமர்சனப் பார்வையும் அருமை.
நிருபனின் கமெண்ட் அட்டகாசம்
சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த பதிவு இது.. வாழ்த்துக்கள்
நல்லா சொல்லி இருக்கீங்க... ஊதுற சங்கை ஊதிட்டீங்க...
..இசங்கள் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து வேலை.// அப்படிப் போடுங்க!
..எங்கெல்லாம் புகழ் போதை அதிகமாகுதோ..அங்கு இந்த குழு அரசியல் தவிர்க்கமுடியாதது போல? ..
வைகை கூறியதை வழி மொழிகிறேன்...
//எழுத்துகளில் தரம் தாழ்ந்து போகும் போது, அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும் என பெரும்பாலும் கருதப்படுகிறது//
நூற்றுக்கு நூறு சரி...
நல்ல பயனுள்ள பதிவு.எழுத்தாளனின் தரத்திற்கும்
அவன் எழுத்தின் தரத்திற்கும் நிச்சயம்
தொடர்பு உண்டு என நம்புபவன் நான்.
தரம் என்பது வசதி வாய்ப்பு சம்பத்தப்பட்டதல்ல
அவன் மனம் சம்பத்தப்பட்டது.
தொடரட்டும் உங்கள் தரம்மிக்க பதிவுலகப் பணி
.வாழ்த்துக்களுடன்...
அவரது பேட்டியை நான் தினமலரில் வாசிக்கும் வாய்ப்பு அமையவில்லை. பகிர்வுக்கு நன்றி.
தொலைக்காட்சியில் பேட்டி பார்த்தீர்களா?
அருமையான கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி
. திறமை இருக்கும் இடமெல்லாம் சச்சரவுகளும் உடன்பிறந்தாளாக
இருக்கும் போல.//
உங்களின் அலசலும், விமர்சனப் பார்வையும் அருமை
அருமை. சிறந்த பகிர்வு. நன்றி.
நாஞ்சில் நாடனின் கருத்தும் அதை விட அடைப்புக் குறிக்குள்ளிருக்கும் கருத்துக்களும் நன்றாகவே உள்ளன!
THERE ARE MANY NOTABLE POINTS IN YOUR ARTICLE.THANKS
சரியாகத்தான் சொல்லி இருக்கிறார், இருக்கீறீர் :-)
நாஞ்சில் நாடன் பற்றிய பதிவு அருமை.. வாழ்த்துக்கள்..
எழுத்துக்கள் தற்போது மதிக்கப்படவில்லை யென்றலும் அது தரமாக இருந்தால் என்றைக்கும் அது உயிர் பெரும்..
ஏன் என்றால் எழுத்தாளனை விட அதிக நாட்கள் வாழ்வது எழுத்துகள் தான்..
கடந்த மாதம் “சூடியபூப் சூடற்க..”
என்ற கவிதை நூலுக்கு சாகத்மிய விருது கிடைத்தது என்று நினைக்கிறேன்..
அருமையான அலசல். நாஞ்சில் நாடனுக்கு அங்கீகாரம் காலம் கடந்துதான் கிடைத்தது என்பது வருந்தக்தக்க உண்மை.
கலக்கிடீங்க சூப்பர் பாரதி
//எழுத்தாளனுக்கு யாரும் குரு கிடையாது. ஆனால் பிடித்தமான எழுத்தாளரின் தாக்கம் இருக்கும்.//
உண்மைதான்...
//பேட்டியிலிருந்து நாம் கற்றதும் பெற்றதும்.. //
nalla karuthukkal.. Nandri
எழுத்துக்களை விட எழுத்தாளர்கள் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள்
உண்மைதான் ஆனால் இது ஆரோக்கியமானதல்ல மாற்றப்படவேண்டும்.
நல்ல பகிர்வுக்கு நன்றிங்க
நல்ல தரமான பதிவு.
அருமையான கருத்துக்கள்
எழுதுபவரின் வாழ்வு,அவன் உணர்வுகளும் பின்னியே அவரின் எழுத்துத் தொனியும் அமையும் !
எழுத்தாளனுக்கு யாரும் குரு கிடையாது. ஆனால் பிடித்தமான எழுத்தாளரின் தாக்கம் இருக்கும்.//
sure.
Post a Comment