பிளஸ் டூ - வில் சாதிக்க...
என்னதான் ஒரு வருடம் முழுவதும் படித்தாலும் கூட, தேர்வுக்கு முந்தைய விடுமுறை நாட்களை சரியான முறையில் திருப்புதல்(Revision) செய்வதற்கு பயன்படுத்தினால் மட்டுமே, மதிப்பெண்களை கில்லியாய் சொல்லியடிக்க முடியும்.
மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புக்களுக்கு சேர , இயற்பியல் (Physics) பாடத்தின் மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் வரும் 11-03-2011 வெள்ளியன்று பிளஸ் டூ - இயற்பியல் தேர்வு நடைப்பெற உள்ளது.
இயற்பியலுக்கு இரு நாட்கள் படிப்பதற்கு விடுமுறை உள்ள நிலையில் அதற்காக திட்டமிடலை படி நிலைகளாக குறிப்பிட்டுள்ளோம்.
இயற்பியலில் சென்டம் எடுக்க பத்து படி நிலைகள் :
Ten Steps to Achieve Centum in Plus Two Physics.
படி நிலை STEP 1 :
அனைத்து பாடங்களிலுள்ள விதிகள் (law), வரையறைகள்(Definition), பண்புகள்(Properties), பயன்கள்(Applications), வரம்புகள்(Limitations), ஒப்பீடுகள்(Comparison), வேறுபாடுகள்(Distingush), அலகுகள்(Units), காரணம் கூறுதல்(Reasoning) போன்ற விஷயங்களை படித்தல்.
இவை தேர்ச்சி பெற கியாரண்டி தரும் விஷயங்கள்.இவைகளை படிக்க பெரிய புத்திச்சாலித்தனம் தேவையில்லை என்பதால் அனைத்து வகை மாணவர்களும் இதனை படிக்கலாம். இந்த தலைப்புக்களை தவறு இன்றி படித்து விட்டால் சுமார் ஐம்பது மதிப்பெண்கள் வாங்கிவிடலாம், வேண்டுமெனில் முந்தைய வினாத்தாள்களை அலசிப்பாருங்கள்.
படி நிலை 2 :
மொத்தமுள்ள பத்து பாடங்களில், ஏதேனும் நான்கு பாடங்களை தேர்வு செய்து அதனை ஒரு வரிகூட விடாமல் படித்தல்.
இருபத்து ஐந்து மதிப்பெண்கள் இருக்ககூடிய நான்கு பாடங்களை தேர்வு செய்து, A TO Z படித்தால், கடினமாக வினா வந்தாலும் கூட நூறு மதிப்பெண்கள் நிச்சயம் பெற்று விடலாம்.
படி நிலை 3 :
இதற்கு முன் நடைப்பெற்ற பொதுத்தேர்வுகளின் வினாத்தாளிலுள்ள வினாக்களை படித்தல்.
இதுவரை புதிய பாடத்திட்டத்தின் படி மார்ச்-2006 நடைப்பெற்றுள்ள
15 தேர்வுகளின் வினாக்களை, எந்த கேள்வியையும் விட்டு விடாமல் படித்தால், பெரும்பாலான வினாக்களை விடையளிக்க முடியும். இதன் மூலம் 120 மதிப்பெண்கள் வரை பெற முடியும். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் 140 மதிப்பெண் வரை கூட பெற முடியும். (இயற்பியலை பொறுத்தவரை, சில வினாக்கள் திரும்ப, திரும்ப கேட்கப்படுவதால்)
படி நிலை 4:
புத்தகத்தின் பின் (Book back)) உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல் மற்றும் பாடத்தின் உள்ளே இருக்கும் முக்கியமான தலைப்புக்களின் இறுதி விடைகள், எண்மதிப்புகள் ஆகியவற்றை மனப்பாடம் செய்தல்.
ஒரு மதிப்பெண் வினாக்கள் சவால் விடுபவையாக இருந்தாலும் கூட, ஆறு வினாக்கள் தவிர மீதமுள்ள வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாகயிருக்கும்.
படி நிலை 5 :
கணக்குகளை (Problems) செய்து பார்த்தல்.
வினாத்தாளில் மொத்தமிருக்கும் 230 மதிப்பெண்களில், கிட்டத்தட்ட 35 மதிப்பெண்களுக்கு கணக்குகள் கேட்கப்படலாம். Part I - 5 numerical Problems, Part II - 5 numerical Problems, Part III - 3 numerical Problems.
கணக்கிடுதல் வினாக்களில் ஒன்று கட்டாயம் விடையளிக்க வேண்டிய கணக்காக இருப்பதால் (Compulsory Sum) இதற்கான பயிற்சியையும் கட்டாயம் பெற்றிருந்தால் மட்டுமே சென்டம் கனவு நிறைவேறும்.((Compulsory Sum ல் கேட்கப்படும் கணக்கில் ஒன்று, தீர்க்கப்பட்ட பகுதியிலிருந்து வரும் என்பதும், இரண்டில் ஒன்று சமன்பாடில் பிரதியிட்டால் விடைகிடைக்கும் வகையில் எளிதாக இருக்கும் என்பது சமீபத்திய கண்டுபிடிப்புகள்.)
படி நிலை 6 :
மீதமுள்ள பாடங்களில் மூன்று பாடங்களை படித்தல்.
படி நிலை 7:
வராது என மற்றவர்கள் ஒதுக்கிய கேள்விகளை, தனியே பட்டியலிட்டு அதனையும் படித்தல்.
படி நிலை 8 :
இறுதியாய் மீதமுள்ள மூன்று பாடங்களை படித்தல்.
ஐந்து வரையுள்ள படி நிலைகளை நன்றாக படித்தாலே 145 மதிப்பெண்களை தொட்டு விடலாம் என்றாக இருந்தாலும் கூட, ஒரு வேளை எதிர்பாராத கேள்விகள் அதிகம் வந்தால் அதனையும் எதிர்கொள்ள படி நிலைகள் 6, 7, 8 ஆகியவை உதவும்.
படி நிலை 9 :
மூன்று மணி நேர பயிற்சித்தேர்வு எழுதுதல்.
நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதையும், தேர்வெழுதும் போது உண்டாககூடிய சிக்கல்களையும் கண்டறிய இந்தமூன்று மணி நேர பயிற்சித்தேர்வு உதவும்.
படி நிலை 10:
ரிலாக்ஸ் செய்துக்கொள்ளுதல்.
தேர்வின் போது அதிக சந்தோஷமாக இருந்தாலும், அதிக துக்கமாக இருந்தாலும், அவை தேர்வை பாதிக்கும் என்பதால் ரிலாக்ஸ் செய்துக்கொள்ளுதல் அவசியம்.
டிஸ்கி:
1.படி நிலைகளின் வரிசையில் படித்துக்கொண்டு வரும் போது, ஒரு வேளை நேரமில்லை என்றால் நேரடியாக ஒன்பதாம் படி நிலைக்கு வந்து விடலாம். (அதற்கேற்ப மதிப்பெண் இருக்கும்)
2.மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த பதிவினை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் ஆதரவளிக்க பதிவர்களை வேண்டுகிறோம்..
26 கருத்துரைகள்:
மாணவர்களுக்கான பதிவுக்கு வாழ்த்துக்கள்..
இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..
சாதிப்பதற்கு வாழ்த்துக்கள்!
நல்ல வழிகாட்டுதல்கள்.. மூன்றுமணி நேரத்தேர்வு அதாவது ஒன்பதாவதுபடி நிலை இன்னும் சிறப்பானது. அடிக்கடி நாமே எழுதி பயிற்சி எடுத்துக்கறதுனால நிஜமான தேர்வு எழுதும்போது உண்டாகற பதட்டம் தவிர்க்கப்படுது..
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...
எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ
மாணவர்களுக்கு பயன்படும் இந்த கட்டுரையை உங்கள் அனுமதியோடு என் தளத்தில் லிங்க் கொடுக்கிறேன். உங்கள் சம்மதத்தை மெயிலில் சொல்லவும்.
இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..
சூழ் நிலைக்கேற்ற சூப்பர் பதிவு நன்றிகள் நன்றிகள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
அனைத்து மாணவர்களும் தேர்வில் சிறப்பாக வெற்றிப்பெற வாழ்த்துக்கள் :)
வணக்கம் சகோதரம், ஆலோசனைப் பதிவு அருமையான வழிகாட்டுதலாய் உள்ளது. தேர்வெழுதும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.
வழிகாட்டலுக்கு நன்றி
இயற்பியலுக்கு மட்டுமல்லாமல் எல்லா subjectsக்கும் உங்கள் அறிவுரை (தகுந்த மாற்றங்களோடு) பொருந்தக் கூடியவையே.
அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
மிக..மிக...உபயோகமான பதிவு பாரத்...பாரதி...
மாணவர்களுக்கு பயனுள்ள பதிவுங்க.
அம்மாடி பிசிக்ஸா நான் பிச்சுக்கிறேன்
//சி.பி.செந்தில்குமார் said...
மாணவர்களுக்கு பயன்படும் இந்த கட்டுரையை உங்கள் அனுமதியோடு என் தளத்தில் லிங்க் கொடுக்கிறேன். உங்கள் சம்மதத்தை மெயிலில் சொல்லவும்.//
கட்டாயம் இணைப்பு கொடுங்கள், இதெற்கெல்லாம் கேட்கவே வேண்டாம்..
நல்ல பிரயோஜனமுள்ள பதிவு மாணவ மணிகளுக்கு....
வெற்றிபெற வாழ்த்துக்கள்
ஆஹா... அவசியமான பதிவு...! வாழ்த்துக்கள்!
தேர்வு அறைக்குள் நுழைவதற்கு பத்து நிமிடம் முன்பே புக்கை மூடி வைக்கச் சொல்லுங்கள்..கடைசி நிமிடம் வரை படிப்பது பதட்டத்தையே உண்டாக்கும்.
அனைவரிடமும் சென்றடைய வேண்டிய பயனுள்ள தகவல்.
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.
திட்டமிடலும்,வழிகாட்டலும் மாணவ மாணவிகளுக்கு நிச்சயம் பயன் தரும்.
படிக்கிற மாணவர்களுக்குப் பயனுள்ள பதிவு :)
வாழ்த்துக்கள்!
நல்ல பயனுள்ள பதிவுங்க.
Post a Comment