ஈழ நாட்டில்
தாத்தா, பாட்டி வாழ்க்கை
பஞ்சத்தில் போனது.
தாய், தந்தை
வாழ்க்கை
யுத்தத்தில் போனது.
இன்று
அகதியாய் அலைக்கழிக்கப்படுகிறது
என் வாழ்க்கை.
என்று வாழ்வோம்
எங்களுக்கான வாழ்க்கையை?
எங்கே தேடுவது
நிம்மதியை?
எங்களை
தொலைத்த இடத்திலா?
நாங்களே
தொலைந்த இடத்திலா?
- அனுஜா.அ.
பன்னிரெண்டாம் வகுப்பு அ பிரிவு.
யாரோ யாருக்காகவோ எழுதிய கவிதைகளில் வெறும் வார்த்தை அலங்காரங்கள் மட்டும் மீதமிருக்கும்.
தனக்காக எழுதிய கவிதையில் வரும் வார்த்தைகள் தேர்ச்சி அற்றவையாக இருப்பினும், வலி வெளிபாடு உச்சமாய் இருக்கும்.
இது தனக்காக எழுதப்பட்ட கவிதை.
23 கருத்துரைகள்:
I..
கேள்விகள் அல்ல வலிகள் நிறைக்த கவிதை...
கேள்விகள் அல்ல வலிகள் நிறைந்த கவிதை...
எம்மால் என்ன செய்யமுடியும் அவர்களுக்கு ஆறுதலாய் இருப்பதைத் தவிர...
எங்கே தேடுவது
நிம்மதியை?
எங்களை
தொலைத்த இடத்திலா?
நாங்களே
தொலைந்த இடத்திலா?
...... மன வலியின் உச்சம்!
வலிகளின் நடுவில வாழ்க்கை
வேதனைகள் நிறைந்த இரவுகள்
தூக்கம் கெடுக்கும் கனவுகள்
கனவுகளிலும் சந்தோஷம் காணா எம் இன மக்களின் வேதனை
ஒரு கவிதையில் வெளிபடுத்தி இருக்கிறார் தன் உள்ள வேதனையை
இந்த கேள்விகளுக்கு ஆறுதலை தவிர என்ன சொல்ல முடியும்?
வலிகள் நிறைந்த வேதனையான உணர்வுகளை வரிகளில் சொல்லியிருக்காங்க...
யாரோ யாருக்காகவோ எழுதிய கவிதைகளில் வெறும் வார்த்தை அலங்காரங்கள் மட்டும் மீதமிருக்கும்.
தனக்காக எழுதிய கவிதையில் வரும் வார்த்தைகள் தேர்ச்சி அற்றவையாக இருப்பினும், வலி வெளிபாடு உச்சமாய் இருக்கும்.
இது முற்றிலும் உண்மை! அந்தப் பிஞ்சின் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன்!
வேதனை தரும் கவிதை
அருமை!
உங்களுக்காக எழுதப்பட்ட இக்கவிதை மனதை கணக்கசெய்தது.
இன்றைய என் பதிவை நீங்க படிச்சுட்டீங்களா?...............
கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்
மறு படியும் கண் கலங்க வைத்து விட்டீர்கள்...
எங்கே போய் அழுவது.....???
யாரிடம் போய் முறையிடுவது..??
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வு கவிதை என்பார்கள். ஆனாலும் இந்தப் பிஞ்சு மனது நிஜங்களை கவிதையில் எமக்காக நீர் சுரக்கும் வகையில் வடித்திருக்கிறது. எங்களின் இறந்த காலங்களையும், இடிந்து போன வாழ்க்கையினையும் கவிதையில் காணும் போது மீண்டும் கண்ணீர் விழிகளில் அரும்புகிறது. பகிர்விற்கு நன்றிகள்.
அலங்காரமில்லாத கவிதை...வலி!
ஃஃஃஃஎங்களை
தொலைத்த இடத்திலா?
நாங்களே
தொலைந்த இடத்திலா?ஃஃஃஃ
என்ன ஒரு வரிகள்...
அத்தனையும் நெருடலுங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..
உறைந்து போய்
கிடக்கும்...
மனதின் தேடல்களின்
உருகலில்
உறக்கம் தொலைத்தேன்...
எளிமையான வரிகள்
கொண்டு வலிகளை
தாங்கி நிற்கிறது கவிதை ,...
விரைவில் அமைதி திரும்ப வாழ்த்துக்கள் சகோதரி.. நாங்களும் பிரார்த்திக்கிறோம் உங்களுக்காக.
கவிதை எங்களுக்கும் மிகுந்த வலியைக்கொடுத்தது.
விடையில்லாக் கேள்விதான்.
ஆனாலும் விடை தேடவேண்டியவர்களும் இவர்கள்தான் !
படித்ததும் மனம் கனத்து விட்டது. அழகான வரிகள்.
வலியின் நிறம் கவிதை
வலியை தந்த வலிமையான வரிகள் ரணங்கள் ஆற ஆறுதலை மட்டுமே தர முடிந்த கையாகலாத தமிழர்கள் நாங்கள் என்பதே உண்மை
Post a Comment