தமிழகத்திலும் சுனாமி..


தமிழக சமீப வரலாற்றில், இது வரை இல்லாத அளவில் மிக பயங்கர கூட்டணி நிலநடுக்கமும், அரசியல் சுனாமியும் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்சிகள் குற்றுயிரும், குலையுயிருமாக காணப்படுகின்றன. பல கட்சிகள் காணாமல் போயிலுள்ளன.

பயங்கர பேரழிவு:

நேற்று 2.34 மணியளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில், திமுக கூட்டணிதான் முதலில் பாதிப்படைந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 1.21 புள்ளிகள் என்ற அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அனைவரும் எப்படி இருந்த நாள் இப்படி ஆயிட்டேன் என்று கதறும் அளவுக்கு சில நிமிடங்களிலேயே நிலைமை மோசமாகிவிட்டது.

அறிவாலயத்திலில் உள்ள கனிமொழி அணுக்கரு உலையில் நேற்று தீப்பிடித்தது, இந்த வழியாக வந்தவர்கள், அந்த வழியாக சென்றதால் பெரும்பாதிப்பு இருக்காது என நம்பப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி டெல்லியிலுள்ள ராகுல் காந்தியின் வீட்டில் உண்டானதாக அறியப்படுகிறது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக அறியப்பட்ட ஈரோடு இளங்கோவன் வளாகம் நேற்றைய நிலநடுக்கத்தின் போது கப்சிப் என்று காணப்பட்டது.

63 நாயன்மார்களுக்கும் ஆண்டி கோலத்தை அளிப்போம் என தமிழ்
உணர்வாளர்கள் வானிலை முன்னறிவிப்பு செய்துள்ளதால், பீதி காரணமாக நேற்று சத்தியமூர்த்தி பவனில் , அரசியல் மீன் பிடித்தல்
தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று கதர் சட்டைகள் சாக்கடைக்குள் இறங்காமல் இருந்தனர். ஆயினும் சட்டையை கிழித்தல், கொடும்பாவி எரித்தல், உள்குத்து, வெளிக்குத்து ஆகியன சிறிய இடைவெளிக்கு பிறகு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு தலைநகரான அதிமுக கூட்டணியின் கரையோர பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் பாதிப்பு கடுமையாக இருந்தது.

எல்லோரும் வாய்ப் பொத்தி உட்கார வேண்டும்,என்ன நடந்தாலும் யாரும் அழக்கூடாது என அதிமுக பகுதியின் தலைமை நிர்வாகி எச்சரித்து இருப்பதால், அங்குள்ள சிலரின் கண்ணீரின் அளவை வைத்து மட்டுமே பாதிப்பை உணர முடிவதாக நமது சிறப்புச்செய்தியாளர் தெரிவிக்கிறார்.

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவதால் ரொம்ப நல்லவனாகிய மதிமுகவிற்கு இன்னும் சில ஊமைக்குத்துக்கள் விழும் எனவும் அறியப்படுகிறது. (அடுத்த அம்மாவசையிலாவது நல்லகாலம் பொறக்குமா?)

பச்சைத்தமிழர்களுக்கு பாதிப்பில்லை.

தமிழ்குடிதாங்கி மாவட்டத்தில் சிறிது அதிர்வுகள் உணரப்பட்டாலும், மக்களவை உறுப்பினர் கனவு இன்னும் தொடருவதால் பெரும் பாதிப்பில்லை.

வைகோவுக்கு முன்பு 41 கி.மீ. வேகத்தில் சம்பவ இடத்தை கடந்துவிட்டதால், விருதகிரி வருத்தகிரியாக மாறாமல் தப்பித்துள்ளார். எனினும் முரசு கிழியாமல் இருக்க, தற்போது நேர்காணல் நிவாரண முகாம்களை நடத்தி வருகிறார்கள்.

அனைத்து நாடார்கள் கூட்டமைப்பு என்ற கட்டையைப் பிடித்து தாம் கரையேறி தப்பித்ததாக சரத்குமார் வலுகட்டாயமாக நமது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காணமல் போனவர்கள் :

சுனாமியை சுளுக்கெடுப்பேன், சுனாமியில் மூங்கு நீச்சல் போடுவேன் என்று பீலா விட்ட நடிகரை, வட்டாள் நாகராஜ் வம்சத்தினர் தேடிக்கொண்டிருப்பதாக பரபரப்பு கில்லி ஆடுகள பகுதிகளில் நிலவுகிறது. இதுவரை அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.


"உப்புத்தண்ணி குடிக்குறது எனக்கொன்னும் புதுசில்லை' என்று உளறியபடியே தன்னந்தனியே ஒருவர் கடலுக்குள் நுழைந்துள்ளார்.
அவரின் தெளிவான அடையாளம் இதுவரை அறியப்படவில்லை.

காணமல் போன கம்யூனிஸ்டுகள், விஜய டி.ஆர்., புரட்சி பாரதம் மற்றும் சில சின்ன பயபுள்ளகள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்மான அறிக்கைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்றுவந்த வீரமானவர் இந்த சுனாமியால் முற்றிலும் உருக்குலைந்துள்ளதால், மூக்குடைந்த திருமாவுடன் தானே
தலைமறைவாகியுள்ளார்.

2011 எனக்குத்தான் என்று இதுவரை காலண்டர் தாள்களை கிழித்துக்கொண்டிருந்தவர்களும் தேடப்படுவோர் பட்டியலில் இருக்கின்றனர்.

அண்மைச்செய்தி:


இந்த தேர்தல் சுனாமியால் மனமுடைந்துள்ள நடுநிலையாளர்கள்
பச்சை போர்ட் கடையின் பக்கம் கரை ஒதுங்கியுள்ளனர்.

31 கருத்துரைகள்:

Anonymous said...

நம்ம ஆளுங்க ஜப்பான் பக்கம் எப்ப போவாங்க?
அந்த நாளில் வர வேண்டும் சுனாமி!!
என்னாச்சு பினாமி!!
கலி காலம் முத்தி போய்!
களி காலம் வந்திருச்சு!
கனி!இனி?
ஒரு 'நையாண்டி மேளம் 'வாங்க...சிரிங்க.

Anonymous said...

சுனாமியை
விலங்குகள் கண்டுபிடித்து விடும்...
இந்த சுனாமியை
எந்த விலங்குக்கும் தெரியவில்லையா?
கை விலங்கின் அச்சத்தில் மறந்து போய் இருப்பார்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

came and voted! once agai, i will come

சென்னை பித்தன் said...

பயங்கரமான ஒரு பேரழிவைப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்! இதிலிருந்து தமிழகம் தப்பிக்குமா? தொங்கும் எனவும் ஒரு கருத்து நிலவுகிறதே!

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ இது மகா பெரிய பேரிடர் ஆச்சே.....

MANO நாஞ்சில் மனோ said...

சோனியா'மி......

Anonymous said...

ஆமா இதைவிட பேரழிவு எதுமில்லை

Anonymous said...

சரியான நேரத்துல டைமிங்கா அடிச்சு தூள் கிளப்பிட்டீங்களே

தமிழ்வாசி பிரகாஷ் said...

சுனாமியே வந்தாலும் இவிங்க அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக்கிட்டு தான் இருப்பாங்க. இவிங்களுக்கேல்லாம் அதுக்கும் மேல ஏதாவது வரணும்...வரும்...


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எவனையும் விடல போல...?

எல் கே said...

சுத்தி சுத்தி அடிக்குது போல

செங்கோவி said...

உண்மையிலேயே சுனாமி மாதிரி ஒரு பதிவு..நல்ல கற்பனை வளத்துடன் கூடிய பதிவு..அரசியல்லயும் கலக்குறீங்களே..இனிமே நாங்க கொஞ்சம் ஜாக்ரதையாத் தான் இருக்கணும்!!!

வினோ said...

May 13 ல தெரியும் இதன் விளைவு....

நிரூபன் said...

வணக்கம் சகோ, ரசித்தேன், சிரித்தேன், சிரிப்பினையும் சிந்தனையும் விதைக்கும் சுனாமியின் செயற்பாடுகளை நன்றாகச் சுட்டியுள்ளீர்கள். இன்னொரு விடயம் இச் சுனாமி இப்போது சிசிலி, மொறீசியஸ் தீவுகளிலும் மையம் கொண்டுள்ளதாக அறிந்தேன்.

எல்லோரையும் துவைத்தெடுத்து விட்டீர்கள். அருமையான வானிலைச் செய்தித் தொகுப்பு.

rajamelaiyur said...

super... super

Prabu Krishna said...

கடைசியில் இந்த சுனாமிக்கு நாம்தான் ஐந்து வருடம் கஷ்டப்பட போகிறோம்.

வசந்தா நடேசன் said...

சுற்றிச்சுழன்ற சுனாமிக்கு வாழ்த்துக்கள்.

உமர் | Umar said...

//அடுத்த அம்மாவசையிலாவது//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லையே?

இராஜராஜேஸ்வரி said...

.நல்ல கற்பனை வளத்துடன் கூடிய பதிவு..interesting.

shanmugavel said...

நல்ல சுனாமி.ஹா..ஹா..

வைகை said...

நல்லவேள...சுனாமில சிக்காம தாமதமா வரேன்...

வைகை said...

63 நாயன்மார்களுக்கும் ஆண்டி கோலத்தை அளிப்போம் என தமிழ்
உணர்வாளர்கள் வானிலை முன்னறிவிப்பு செய்துள்ளதால்//

இவங்க ஏன் அளிக்கணும்?.. கோஷ்டி சண்டைல அவங்களாவே அப்பிடி ஆயிருவாங்க.. ஹா..ஹா..

வைகை said...

2011 எனக்குத்தான் என்று இதுவரை காலண்டர் தாள்களை கிழித்துக்கொண்டிருந்தவர்களும் தேடப்படுவோர் பட்டியலில் இருக்கின்றனர்//

மீண்டு(ம்) வருவோம்... 2016 எங்களுடையதே!

சி.பி.செந்தில்குமார் said...

ஜப்பான் மேட்டரை தமிழக அரசியல் நிலவரத்தோடு மிக்ஸ் பண்ணிய ஐடியாவுக்கு ஒரு ஷொட்டு

settaikkaran said...

நம்மூருலே சுனாமி வந்தாலும் சாவுறது இந்த ஆளுங்களோட பினாமியாத்தான் இருப்பாங்க! இவங்க தப்பிச்சிருவாங்க! :-)

அன்புடன் மலிக்கா said...

அந்த சுனாமி தெரியும் இந்த சுனாமியெல்லாம் நமக்கு தெரியாதுப்பா. ஏதோ உங்களபோன்றவ்ர்களா தெரிஞ்கிடுறோம். ம்ம்

சுனாமின்னு பேரக்கேட்டாலே
நெசமாலே
சுருங்குதுல இதயம்..

VELU.G said...

ஆமாங்க பயங்கர பேரழிவு தரும் சுனாமி
தான்

சசிகுமார் said...

அருமை

Arun Ambie said...

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
டைமிங் சென்ஸ் செமையாக இருக்கிறது உங்களுக்கு. (சொந்தமா எளுத முடிஞ்சாலும் டெம்ப்ளேட்டையும் பயன் படுத்துவம்ல)

Anonymous said...

த‌ய‌வு செய்து சுனாமி இந்த‌ பேரிட‌ரை உங்க‌ளை பிர‌ப‌ல‌ ப‌டுத்த உப்யோக‌ ப‌டுத்தாதீர்...
என‌து கடுமையான‌ க‌ண்ட‌ன‌ங்க‌ள்....

Unknown said...

நல்ல பகிர்வு நண்பரே..

மே மாசத்துக்கு அப்புறம்தான்.. விளைவுகள் பற்றித் தெரியும்.. பார்ப்போம்..

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்