அன்பார்ந்த மாமூ மற்றும் மச்சிகளே....



ஆகவே கல்லூரி கலக்கல்களே..

"எதுவும் தவறில்லை
இளமையிலே"
என வேதாந்தம்
பேசுங்கள்..,
"மாமு, மச்சி"
எனத்தொடங்கி
கலாயுங்கள்...

தொடர்சொற்பொழிவுகள்
நிகழ்த்துங்கள்...,

கல்லை சாகுபடியில்
புரட்சி செய்யுங்கள்...,

ஒரு புத்தகம் மட்டும்
ஏந்திக்கொண்டு
கல்லூரி பயணமாகுங்கள்..,

குப்பை திரைபடங்களை
நூறு நாட்கள்
காண வைய்யுங்கள்.

சமாளிக்கத்தெரியாத
விரிவுரையாளர்களிடம்
"துள்ளுங்கள்"

"டிபன் பாக்ஸ்"
தூக்குவதற்கு சங்கடப்படுங்கள்.

ஒரு கோப்பை தேநீருக்குள்
பலரின் பசியை
அடக்குங்கள்.

பேருந்து நிலையங்களில்,
நிறுத்தங்களில்
காத்திருங்கள்..
படியில் தொங்குங்கள்.

"ராஜா...ராஜா...ராக்கெட் ராஜா.."
கோரஸ் பாடுங்கள்..

பஸ் டே என்று தடியடிபடுங்கள்.

நிலா, அவள் என
கவிதை கிறுக்குங்கள்.

கண்ட கண்ட
இடங்களில் எல்லாம்
உங்கள் பெயரை
பொறித்து வைய்யுங்கள்..

மடிப்பு கலையாமல்
உடுத்துங்கள்...

குடும்ப வறுமை
மறந்து..,
"சீன்"  போடுங்கள்...

கனவுகளில்
காலம் கடத்துங்கள்...

எல்லாம் செய்யுங்கள்
ஆனால் ,

யதார்த்த வாழ்க்கை
என்பது வேறு
என்னும் உண்மையையும்
உணர்ந்திருங்கள்.

வாழ்க்கையின்
வக்கிரம்
மிக கசப்பானது.

ஆதலால் மாணவர்களே...

"வாழ்க்கைக்கும் 
கொஞ்சம் தயாராகுங்கள்"

இல்லையெனில்
நீங்கள்
உங்களின் பெற்றோருக்கு
மட்டுமல்ல...,
இந்த பூமிக்கும்
சுமை..

டிஸ்கி:

இது துளிக்கடல் - பாகம் 1.
ஒரு வரியை கருவாக கொண்டு,
கவிதையை உருவாக்கும் முயற்சி.

இந்த வாரத்திற்கான வரி:

 நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 
   ---பாரதி.

இந்த வரிகளை ஆதாரமாக்கி
நீங்களும் முயற்சிக்கலாமே...
நெஞ்சில் துணிவிருந்தால்...
நாவில் தமிழிருந்தால்...

IMAGES : http://sputter4u.blogspot.com/search/label/FUNNY%20PICTURES

36 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said...

>>>கல்லை சாகுபடியில்
புரட்சி செய்யுங்கள்...,

கடலை..?

சி.பி.செந்தில்குமார் said...

>>>>வாழ்க்கையின்
வக்கிரம்
மிக கசப்பானது.

அட விடுங்க பாவம்..காலேஜ் லைஃபை ஜாலியா எஞ்சாய் பண்ணட்டும் பயப்படுத்தாதீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் பாணியிலிருந்து விலகி முற்றிலும் மாறு பட்ட டைட்டில்.. ரசித்தேன்

ம.தி.சுதா said...

////ஒரு கோப்பை தேநீருக்குள்
பலரின் பசியை
அடக்குங்கள்.////

ஆழ்மனதை தொட்டுட்டுது... நன்றி நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

Jill_online said...

Very nice.. Continue your poems in these kind of social topics...

Unknown said...

நல்லா சொன்னீங்க சகோ..........இருக்க வேண்டிய பொறுப்பு ஒரு பக்கம் இருத்தல் நலம்

சக்தி கல்வி மையம் said...

அருமையான கவிதை.. நல்ல முயற்சி..

middleclassmadhavi said...

இன்னும் +2 பரிட்சைகள் முடியலையே?!!

கவிதை அருமை!

அன்புடன் மலிக்கா said...

////ஒரு கோப்பை தேநீருக்குள்
பலரின் பசியை
அடக்குங்கள்.////

நல்ல சிந்தனை

மழையோ மழை சூப்பர் கிளிக்.

கவிதைக்கு வாழ்த்துக்கள்.

பெண்ணெழுத்தைபற்றிய ஒரு தொடர் எழுதியுள்ளேன் படித்துவிட்டு கருத்தினை பகிருங்கள்..http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.html

arasan said...

நல்ல வரிகள் ...
யதார்த்த கல்லூரி வாழ்வை வரிகளுக்குள்
அடக்கி கூறிய விதம் சிறப்பு

Anonymous said...

நல்ல ஐடியாக்கள்

Anonymous said...

டைட்டில் ரொம்ப நல்லாருக்கு

Anonymous said...

கவிதை நடை புதுசா இருக்கு மாமு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த உலகை மறந்து உலாவரும் கல்லூரி மாணவர்களுக்கு சரியான சாட்டையடி...

கவிதை நடை
தலைப்பு அருமை...

தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..

வைகை said...

வாழ்க்கையின்
வக்கிரம்
மிக கசப்பானது.//

இந்த உண்மை எனக்கு....மேலே நீங்க சொன்ன அனைத்தையும் செஞ்சதுக்கு பிறகுதான் தெரிந்தது!

சசிகுமார் said...

எல்லாம் பண்ணுங்க பண்ணுங்க என்று கூறி கடைசியில் வச்சிங்க பாரு ட்விஸ்ட்டு அது தான் கலக்கல்.

sathishsangkavi.blogspot.com said...

கவிதை நடையும் தலைப்பும் அருமை...

வைகை said...

ஆமா..இது மாமு மச்சிகளுக்கு மட்டுமா? அத்தாச்சி.. மச்சினிக்கெல்லாம் இல்லையா? இவர்கள் இப்போது எந்த விதத்திலும் அவர்களுக்கு குறைவில்லாமல் பண்ணுகிறார்கள் இப்போது... :))

MANO நாஞ்சில் மனோ said...

//இல்லையெனில்
நீங்கள்
உங்களின் பெற்றோருக்கு
மட்டுமல்ல...,
இந்த பூமிக்கும்
சுமை..//

எத்துனை உண்மை இது......

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த வரிகளை ஆதாரமாக்கி
நீங்களும் முயற்சிக்கலாமே...
நெஞ்சில் துணிவிருந்தால்...
நாவில் தமிழிருந்தால்...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏன் இப்பிடி பயன்காட்டுறீங்க போங்க....ம்ம்ம்ம்.....அவ்வ்வ்வ்....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

"வாழ்க்கைக்கும்
கொஞ்சம் தயாராகுங்கள்"//
மிக நன்றாக சொன்னீர்கள் .

THOPPITHOPPI said...

//அன்பார்ந்த மாமூ மற்றும் மச்சிகளே....//

:)

தலைப்பு பயங்கரமா இருக்கு

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

ஜீவன்சிவம் said...

எனது கல்லூரி வாழ்கையை ஞாபகம் படுத்தியதற்கு நன்றி.
கடைசி வரிகள் உண்மையான வேண்டுகோள்

ஜீவன்சிவம் said...

இன்றைய சூழ்நிலையில் சர்வேயில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது ஆர் கே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

"வாழ்க்கைக்கும்
கொஞ்சம் தயாராகுங்கள்"//
அர்த்தமுள்ள ஆழ்ந்த வரிகள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹி...... ஹி......... நான் நிஜமாவே கமெண்டு போடத்தான் வந்தேன்! வந்த இடத்துல இப்படியெல்லாம் போடலாம் னு இருந்திச்சு! அதுதான் போட்டேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கல்லூரி பசங்களுக்கு ( பொண்ணுங்களுக்கும் தான் ) சூப்பரா ஐடியா சொல்லிக்குடுத்துட்டு கடைசியில இப்புடி கவுத்திட்டீங்களே?

டக்கால்டி said...

பாதி உடன்படுகிறேன்...

சண்முககுமார் said...

அருமையான கவிதை


இதையும் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இந்த வாரத்திற்கான வரி:

நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
---பாரதி.//////////

நான் கெளம்பிட்டேன்......

நிரூபன் said...

ஒரு புத்தகம் மட்டும்
ஏந்திக்கொண்டு
கல்லூரி பயணமாகுங்கள்..,//

எங்களைப் போன்றோரின் வாழ்வியலை மிகவும் ஆழமாகவும், அழுத்தமாகவும் சொல்லும் கவிதையினை நகைச்சுவையுடன் தந்திருக்கிறீர்கள். நன்றிகள்.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்