திமுக தேர்தல் அறிக்கை -சூடான, சுவையான ஒரு அலசல்.



சென்ற 2006 சட்டசபை தேர்தல் அறிக்கையில் திமுக- வின் தேர்தல் அறிக்கை முக்கிய பங்காற்றியது என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் பின் தான் தமிழ்நாடு மட்டுமில்லாது, இந்தியாவெங்கும் இலவச அறிவிப்புக்கள் களை கட்டின. எங்கள் தேர்தல் அறிக்கை தான் "தேர்தல் கதாநாயகன்" என்று  கருணாநிதி அப்போது சந்தோஷமாக குரல் கொடுத்தார். ( இந்த முறை கதாநாயகி என்று சொன்னது - பெண் சிங்கத்தின் பாதிப்பு)


அந்த 2006 தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றிய நாகநாதன், திட்டக்குழுவின் தலைவராக மாற்றப்பட்டு அழகு பார்க்கப்பட்டார்.

இந்த 2011 தேர்தல் அறிக்கையில் பெண்களை அதிகம் கவரும் விஷயங்களும், இலவச அறிவிப்புக்களும் கட்டாயம் இருக்கும் என்ற கணிப்பை உறுதி செய்துள்ளது இன்று வெளியிடப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை.

கடந்த முறை இலவச கலர் டிவி வழங்கப்பட்டதைப் போல, இம்முறை தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்ற அறிவிப்பு எப்படியும் நாளைய செய்தித்தாள்களில் தலைப்பாக மாறிவிடும். ( ஏனுங்க இரண்டையும் கொடுத்த என்னங்க தப்பு ... ஒரு வேளை அம்மா இரண்டும் தருவோம் அப்படினு சொன்னா என்ன பண்றது # ட்வுட்.)

ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்று முன்பு கலைஞர் ஒரு முறை சொல்லியிருந்தார். தமிழகத்தில் ஏழைகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்தியுள்ளது இந்த தேர்தல் அறிக்கை. ஏழைகளை ஒழிக்க (???) இன்னும் ஐந்து ஆண்டுகள் திமுகவிற்கு தேவைப்படுகிறது. (கேட்கறாங்க-ல கொடுங்கப்பா!)

மக்களும் இந்த இலவச அறிவிப்பை வரவேற்று, ஏற்றுக்கொள்ளுவார்கள் என்பது உண்மையே.. ஆனால் ஸ்பெக்ட்ரம் இன்றைய அரசியலை மிக அதிக அளவில் பாதித்துள்ளதால் மக்களின் "எதிர்பார்ப்பு" இதை விட அதிகம் என்று டீக்கடை பெஞ்சுகள் முணுமுணுக்கின்றன. (தம்பி டீ இன்னும் வரல...)

இந்த அறிவிப்புக்களை பார்த்து, அம்மாவும் அள்ளிவீச கூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.(வாக்குறுதிகளை).
இனிவரும் நாட்களில் தமிழக வாக்காளர்களின் காதில்(???) தேனாறும் பாலாறும் ஓட போகிறது என்பதும் சர்வநிச்சயம்.(Why blood, same blood)

கட்சி பொதுக்கூட்டங்களில் பேச்சாளர், தன் எதிரில் எதிர்கட்சிக்காரர் இருப்பதாக நினைத்து கொண்டுபேசுவது போல,  எதிரில் மத்திய அரசு இருப்பதாக நினைத்து கொண்டு கீழ்கண்ட அறிவிப்புக்களை செய்திருப்பதாகவே தெரிகிறது.

*கல்வியை மாநில அரசின் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்துவோம்.

* கிராமத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடத்த அனுமதியோம்.

* மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு கிடைத்து வருகின்ற வரி வருவாய் நியாயமான முறையில் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* செம்மொழியாயான தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை.

* மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துவோம்.

* திருக்குறளை தேசிய நூலாக்க பாடுபடுவோம்.

* ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் ஆட்சியில் பங்கு கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தக் கூறுவோம்.

அடுத்த அஞ்சு வருஷம் நன்றாக பொழுது போவதற்கான எல்லா அறிகுறிகளும் இதில் தெரிகிறது. தமிழன்களின் குரல் கேட்கக்கூடாது என்பதற்காக மன்மோகன் சிங் இன்னும் இருக்கமாக தன் தலைப்பாகையை கட்டி கொள்ளக்கூடும். (என்ன கேட்டாலும் அவரு எனக்கு ஒண்ணும் தெரியாது, ஆனால் நான் பொறுப்பேற்கிறேன் அப்படினு சொல்லப்போறாரு , சரி கேட்கிறத கேட்டுவைப்போம்,
கேளுங்க...கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க)


அறிக்கையில் இருக்கும் இன்னும் சில ஜனரஞ்சக விஷயங்கள்:
(இலவசம் என்பதற்கு நாகரீகமான சொல்...)

* அரசு கல்லூரிகளில் படிக்கும் பி.சி., எம்.பி.சி. எஸ்.சி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் (இளைஞர் ஓட்டுவங்கி அதிகமோ?)

*மகளிர் சுய உதவி கடன் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இதில், ரூ.2 லட்சம் மானியம். (மகளிர் சக்தி)

*அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று சீறுடை. (இதென்ன கலாட்டா அப்படினு கேட்கக்கூடாது. அம்புட்டும் இலவசம் தான்)

* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் இனி ரூ.1 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்.( அன்புள்ள முதல்வருக்கு அப்படினு கடிதமெழுத ஆனந்திக்கு மேட்டர் கிடைச்சாச்சு)

* அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி. (ஒரு வேளை, மாநில அரசின் சார்பில் தனியே சி.பி.ஐ அமைக்கப்படுமோ? - நாங்களும் சில பேரை சி.பி.ஐ காட்டி மிரட்ட வேண்டாமா என்ற ஆதங்கம் கூட இதில் இருக்கக்கூடும்)

* பரம ஏழைகளுக்கு ரூ.1 அரிசி இனி இலவசமாக வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். (யாருங்க அது பரம ஏழை. உடனடியாக மேடைக்கு வரவும்)

* தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

சரி..சரி.. ஆட்டோ வரும் நேரமாகி விட்டதால், எம்முடைய ஒலிபரப்பை இத்துடன் முடித்து"கொல்கிறோம்"

டிஸ்கி :

1)திமுக-வின் தேர்தல் அறிக்கை சி சென்டர்களில்(அடித்தட்டு மக்களிடையே) வெள்ளி விழா காணும், பி சென்டர்களில் (மத்திய தர வகுப்பில் அதாங்க மிடில் கிளாஸில்) முணுமுணுப்புடன் வரவேற்கப்படும். ஏ சென்டர் எனும் மேல்தட்டுமக்களிடையே புன்னகையுடன் காபி  குடிக்கும் வரை வாசிக்கப்படும். (அவங்களுக்கு மத்திய அரசின் பட்ஜெட் படிக்கத்தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்)

2)மற்ற எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கை பற்றியும் விமர்சனம் செய்யப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம். (அந்த அறிக்கைகளும் இவர்களின் அறிக்கையை காப்பி அடிச்சது போலத்தான் இருக்கும். அப்புறம் என்னத்துக்கு அலசல், காயவைத்தல் எல்லாம்)

3)ஒரு கட்சி தன்னுடைய போன தேர்தல் அறிக்கையையே
ஜெராக்ஸ் எடுத்து தரப்போவதாக பரபரப்பு வேறு அடிபடுகிறது.
அய்யா என்னத்த தேடுறீங்க?



நன்றி:http://therthal.vikatan.com/index.php?eid=412

32 கருத்துரைகள்:

வந்தியத்தேவன் said...

பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேலானது என்கின்றது ஒரு பழமொழி இலவசங்களைக் கொடுப்பதை விட வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரலாமே.

இலவசங்களுக்கும் குவாட்டருக்கும் அடிமையாகும் மக்கள் இருக்கும் வரை ஏழைகள் இருந்துகொண்டே இருப்பார்கள் ஸ்டாலின், உதயநிதி அவரின் மகன் என தலைமுறை தலைமுறையாக இலவசங்களும் அடிமைகளுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

Unknown said...

அரசியல் தொழிலாக மாறி வெகு நாளாகிறது.............அதன் அடிமைகளாய் மக்கள் எனும் சிட்டுக்குருவிகள் அவ்வளவே!

Unknown said...

நல்ல விமர்சனம். (அட இது சினிமா விமர்சனம் இல்லையா?) அப்படியே தெருவுக்கு ஒரு சத்திரம் கட்டி மூணு வேளை சோறும் போட்டா வேளை முடிஞ்சது)

Prabu Krishna said...

//ஈழத்தமிழர்களுக்கு அரசில் பங்கு கேட்போம் //

//அரசு பள்ளி மானவர்களுக்கு இலவச சீருடை //


ஆளே இல்லாத கடைல யார்க்கு பாஸ் டீ ஆத்துறீங்க


ஆமா நாமெக்கல்லாம் மத்திய அரசு இருக்கா # டவுட்

அதெல்லாம் விடுங்க இந்த இலவசத்த கண்டுபிடிச்சவன் மட்டும் கைல கிடைக்கட்டும் கொய்யால கொத்துபரோட்டாதான்.

தனிமரம் said...

நல்லாத்தான் இருக்கு அறிக்கை இதில் மக்கள் ஓட்டுப்போட எவ்வளவு கொடுப்போம் என்று சொல்லவில்லையே!

Bala said...

இலவசதிலும் ஜாதியை புகுத்துகிறாரே கருணாநிதி! லேப்டாப் கொடுப்பது என்று முடிவான பிறகு அது என்ன பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும்? பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் என்று அறிவித்திருந்தால் கூட ஒத்துக் கொள்ளலாம். 1 ,76 ,000 கோடி புகழ் ராசாவின் வாரிசு படித்தால் இலவசம் உண்டு. இது என்ன நியாயம்?

தமிழ்வாசி பிரகாஷ் said...

மக்களை ஏமாற்றுகிற எல்லாம் மாயை....


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

thangapandi said...

loosu bala.. aadhi dravidarku ilavasa cycle koduthuchey amma.. appo engey poi irundha..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பல்லு பொடி, பிரசு, செருப்பு இதுலாம் விட்டுட்டீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////3)ஒரு கட்சி தன்னுடைய போன தேர்தல் அறிக்கையையே
ஜெராக்ஸ் எடுத்து தரப்போவதாக பரபரப்பு வேறு அடிபடுகிறது.///////

அதையே கட்சி பேரை மட்டும் மாத்திட்டு எல்லோரும் பயன்படுத்திக்கலாமே?

ramalingam said...

//அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி//
அரசு ஊழியர்கள் ஓட்டு வேண்டாம் போல இருக்கு.

யோகா.எஸ் said...

பரம ஏழைகளுக்கு ரூ.1 அரிசி இனி இலவசமாக வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். (யாருங்க அது பரம ஏழை. உடனடியாக மேடைக்கு வரவும்)காய்,மற்றும் கறி யாரு கொடுப்பா?

Unknown said...

டிவிட்டரில் திமுக தேர்தல் அறிக்கையின் எதிரொலி...

@zoogleton
மிக்ஸி,கிரைண்டர்,லேப்டாப் எல்லாம் கொடுப்போம்! ஆனா மின்சாரம்? கடந்த ஆட்சியில் திட்டங்கள் வகுக்கபடவில்லைனு சொல்லிட்டாப்போச்சு! #tnae2011

@Sowmi0201
தமிழ்நாட்டில் ஏழைகளே இல்லையா? 1 ரூபாய் அரிசி வாங்க மாதத்தின் முதல் 5 தேதிகளில் நியாய விலை கடைகளில் கூட்டம் ஏன் நிரம்பி வழிகிறது?

@jill_online
நல்ல வேளை 5 வருசத்துக்கு ஒரு தடவ தேர்தல் வருது வருசாவருசம் வந்தா அதுக்கும் ஆடித்தள்ளுபடிக்கும் என்ன பெரிய வித்யாசம்


@kolaaru
திமுக தேர்தல் அறிக்கை-ஒரே வார்த்தைல சொல்லனும்னா “சோனியாகாந்தி” # பளபள செவப்புதோல் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆகாது

@saran
@4SN மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி #tnae11 #good ஐ இது 2006 அறிக்கையிலும் இருக்கு http://bit.ly/g3p9e0

@thirumarant
சென்ற முறை கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றிவிட்டதால்,இந்த முறையும் தேர்தல் அறிக்கை வெற்றியையே தரும் என நினைக்கிறேன்

@salemdeva
அம்மா.. தாயே... நீங்க மைக்ரோவேவ் ஓவன், பிரிட்ஜீ குடுங்கம்ம்ம்மாஆஆஆ... ச்சே.. கடைசில பிச்சைக்காரங்க ஸ்லாங் வந்திருச்சி.

@athisha
கலைஞருடைய மிக்ஸி கிரைண்டருக்கு போட்டியா , அம்மா ப்ரிட்ஜ்ஜு வாஷிங் மிஷின்னு அறிவிச்சாதான் அதிமுக காரய்ங்க தகிரியமா வெளிய தலைகாட்ட முடியும்!

Unknown said...

டிவிட்டரில் திமுக தேர்தல் அறிக்கையின் எதிரொலி...

@anburajabe
RT @arasu1691 தெரு நாய்களுக்கு பிஸ்கட் போடுபவர்கள் கண்டிப்பாக ஒருநாள் அந்த நாயை கல்லால் அடிக்க முயல்வார்கள்

@kolaaru
அதிமுக தேர்தல் அறிக்கை - அவர்கள் மிக்‌ஷி-கிரைண்டர்தான் தருகிறார்கள்,நாங்கள் விஜயகாந்தின் ”அரிசிமில்”லையே இலவசமாக தருவோம்

@anburajabe
RT விலைவாசியைக் குறைக்க ஏதேனும் திட்டங்கள் அறிவிச்சிருக்காரா... (மளிகை சாமான் வாங்கனும்னா லோன் வாங்க வேண்டியிருக்கு...) #தேர்தல் அறிக்கை


@TBCD
அரசின் இலவசங்களை கண்டிப்பவர்கள் அரசு கல்லூரிகளை புறக்கணிப்பார்களா...?

@isr_selva
திமுக கொடுத்தால் இலவசம். மற்ற கட்சிகள் கொடுத்தால் அதன் பெயரென்ன என்பதை அதிமுக தேர்தல் அறிக்கை வந்தவுடன் கண்டுபிடித்துவிடலாம்.

@NIZAMPAKKAM
மிக்ஸி = கலக்கும் இயந்திரம், கலப்பான், கலப்பி! கிரைன்டர் = அரைக்கும் இயந்திரம், அரைப்பான், அரைப்பி! #ஹா... ஹா...

@kolaaru
திமுக தேர்தல் அறிக்கையில் விடுபட்டவை # கொடைக்கானலயே மொத்தமாக ஜெயலலிதவுக்கு பரிசளித்து நிரந்தர ஓய்வு வழங்கப்படும்

@kavi_rt
அடங்கொய்யா ஊர்ல நாட்ல எலக்‌ஷன் நடக்கதான் செய்யுது ஆனா இந்த வீணாப்போன தமிழ்நாட்டுல மட்டும் ஏண்டா இந்தக் கூத்து? :-)

@kavi_rt
இலவசங்களை எதிர்ப்பவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.இந்த உலக வாழ்க்கையே உங்களுக்கு இலவசமாகத்தான் வழங்கப்பட்டிருக்கிறது #நானே சிந்திச்சேன்

Unknown said...

இந்த நாட்டை உருப்படாமல் அடிக்க இதைவிட வேறு நல்ல திட்டம் இருக்கப்போவத் இல்லை..

நிரூபன் said...

இந்த 2011 தேர்தல் அறிக்கையில் பெண்களை அதிகம் கவரும் விஷயங்களும், இலவச அறிவிப்புக்களும் கட்டாயம் இருக்கும் என்ற கணிப்பை உறுதி செய்துள்ளது இன்று வெளியிடப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை.//

இப்போது பெண்கள், இனிக் குழந்தைகள், அடுத்த தேர்தலில் முதியவர்கள் என்று போனால் தமிழ் நாட்டின் மொத்த எதிர்காலமுமே சுத்த சூனியமாகிப் போய் விடும்.

நிரூபன் said...

இந்தப் பதிவில் நகைச்சுவையாகப் பல விடயங்களைக் கூறியிருப்பினும் எதிர்காலத்தில் அவை யாவும் இந்த முதிர்ந்த பழம் Sorry கிழம் அரசியல்வாதிகளால் நிஜமானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

டக்கால்டி said...

நண்பர்களே,
பழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.

நன்றி,
டக்கால்டி

Unknown said...

டிவிட்டரில் திமுக தேர்தல் அறிக்கையின் எதிரொலி...

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு; இழுபறியில் தே.மு.தி.க: http://bit.ly/hTbcFF

@LathaMagan
ஓசில குடுத்து காசு வேஸ்ட் பண்றாங்க. எங்கூர்ல குடுத்தா லைன்ல மொத ஆளா நிப்பேன் #என்னாங்கடாஉங்கநியாயம்

@dinakaran_web
லத்திகா அதிரடி மாற்றம் புதிய டிஜிபி போலோநாத்: சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டா... http://bit.ly/ftaify

@krpsenthil
தி.மு.க தேர்தல் அறிக்கையை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தேன் # ஆர்காட்டார்

@saran
தி.மு.க உடன்பிறப்புகளுகு சொரணை வர கொஞ்சம் உப்பு.... ... #சுட்டது #tnae11

@samugam
படித்தவர்கள் கூட திமுகவை எதிர்ப்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்!!!

@TBCD
இலவசங்களை கண்டிப்பவர்கள் டுவிட்டர் கம்பெனிக்கு இதுவரைகும் டுவிட்டரை பயன்படுத்தியற்கு ஆன செலவை வட்டியோடு செலுத்திவிடவும்

@icarusprakash
டிவிட்டர் இலவசமா? யார் சொன்னது? இந்த ஆண்டு டிவிட்டரின் விளம்பர வருமானம் 150 மிலியன் டாலர்

@parisalkaaran
// பிரெஞ்ச், ஜெர்மன், அராபி கற்றுத்தர நடவடிக்கை -திமுக தேர்தல் அறிக்கை// ஒரு காலத்துல இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தின கட்சி! சபாஷு!

Arun Ambie said...

பேசாம அரசு அலுவலகங்கள்ல கூட்டாஞ்சோறு ஆக்கி வீட் வீட்டுக்கு விநியோகம் செஞ்சுறலாம். அரிசி, பருப்பு, உப்பு, ஊறுகான்னு ஒவ்வொண்ணா இலவசமா குடுக்கறதுக்கு அது பல வேலைகள மிச்சப்படுத்தும். உப்பு கம்மியாவே போட்டு மக்களை மொண்ணை மழுங்கல்களாவே காலகாலத்துக்கும் வெச்சுக்கலாம்.

எல் கே said...

எங்களுக்கு இலவசங்கள் தேவை இல்லை. அடிப்படை உரிமைகளை கொடுங்கள் அது போதும்

சென்னை பித்தன் said...

ஹைய்யா!எனக்கு டவுன் பஸ்ஸில் பாஸ் கொடுக்கப் போறாங்களாம்!சென்னை வெயிலில் இனி பேருந்தில் சுற்றிப் பொழுது போக்கலாம்!இந்த ஏழைக்கும் ஒரு இலவசம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டிஸ்கி நக்கல் சூப்பருங்கோ!

Unknown said...

நல்ல அலசல்..

பெண்களைக் கவரும் வகையில் மிக்ஸி, கிரைண்டர்,, ம்ம்ம்.. அவங்க ஓட்டு எல்லாம் அய்யாக்குதான் இனி..

மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஒன்னும் செய்றதில்ல.. இலவசங்களைக் கொடுத்து அவங்களை மழுங்கட்டிச்சுட்டே இருக்கறதுதான் இவர் வேலை..

Unknown said...

அப்படியே தெருவுக்கு ஒரு சத்திரம் கட்டி மூணு வேளை சோறும் போட்டா வேளை முடிஞ்சது/////

ஹா ஹா ஹா.. கரெக்டுல.. :-)

Anonymous said...

அப்படியே தெருவுக்கு ஒரு சத்திரம் கட்டி மூணு வேளை சோறும் போட்டா வேளை முடிஞ்சது - Kalanesan - Super

Anonymous said...

இலவசமா குவார்ட்டரும் கோழிபிரியாணியும் கொடுக்கப்படும் என்பது மிஸ்ஸாகிடுச்சாம்

Anonymous said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.

Anonymous said...

//தமிழன்களின் குரல் கேட்கக்கூடாது என்பதற்காக மன்மோகன் சிங் இன்னும் இருக்கமாக தன் தலைப்பாகையை கட்டி கொள்ளக்கூடும்//.

எத்தனை பேர் கிண்டல் செய்தாலும் பன்மோகனின் மௌனவிரதம் கலையாது. '@##%$^%%%௬௯௪௭௫௩&^%$" என்ன திட்டுனாலும் அசையாதீங்க பி.எம். சார்! நமக்கு கௌரவம் தான் முக்கியம். ஹே..ஹே..!

டக்கால்டி said...

அட போங்க பாஸ்...அடுத்த தேர்தல்ல வீட்டுக்கொரு டூ வீலர் கொடுக்கப் போறாங்களாம்...பெட்ரோல் பங்- களை ஸ்டாலின் பேரன் வாங்கப் போறதா பேச்சு

பாலா said...

ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடருமா அல்லது இலவசங்கள் வழங்குவதற்காகவே எல்லோரும் ஏழையாக ஆக்கப்படுகிரார்களா? நம்ம கிட்டயே ஆட்டைய போட்டு, நமக்கே கொஞ்சம் கிள்ளி கொடுக்குறாங்கபா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்