புலியென இருந்த உங்களை அஞ்சு வருடமாக தயிர்சாதம் தின்ன வைத்து, மியாவ், மியாவ் என்று கத்த வைத்துவிட்டார்களே...
எது எப்படியாயினும் இது உங்களுக்கான நேரம்,
திமுக அப்புறம் அதிமுக என மாறிமாறி உங்களை வாயிற்காப்பானாக பயன்படுத்திக்கொண்டவர்களை தண்டிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்புக்கிடைத்திருக்கிறது. செஞ்சோற்று கடன் தீர்த்தது போதும்,
உங்களை புலியென, வேங்கையென நிரூபிக்க இன்னும் கூட அவகாசம் இருக்கிறது.
ஈழத்தமிழர்கள் மட்டுமில்லாது உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு உணர்வூட்ட, போராட உங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது.
காங்கிரஸை எதிர்க்கும் போரில் இறங்க ஏன் இன்னும் தயக்கம் உங்களுக்கு.
அரசியல் களத்தை பொறுத்தவரை நீங்கள் நல்ல அரசியல்வாதியாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இன்றும் என்றும் நீங்கள் நல்ல பேச்சாளர்தானே?
அரசியல்வாதியாக நீங்கள் இந்த தேர்தலை புறக்கணியுங்கள் தவறில்லை, ஆனால் தமிழ் உணர்வாளராக ஏன் இந்த தேர்தலில் தமிழர்க்கு துணை நிற்கக்கூடாது?
இனி நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில், எல்லாம் இழந்து நிற்கும் தமிழர்களுக்காக ஏன் நீங்கள் போரிடக்கூடாது?
குறைந்தபட்சம் காங்கிரஸை காலி செய்யவாவது நீங்கள் களம் காணக்கூடாதா?
வைகோ, சீமான். நாஞ்சில் சம்பத். நெடுமாறன் என நீங்கள் ஒருங்கிணைத்து குரல் கொடுத்தால், 63 தொகுதிகளில் காங்கிரஸ் நடுநடுங்காதா?
அங்கீகாரம் பெறுவதற்கு 21 தொகுதிகளை கேட்கிறீர்கள். இங்கே 63 தொகுதிகள் உங்களுக்காக காத்திருப்பதை ஏன் மறந்து விட்டீர்கள்?
திமுக. மற்றும் அதிமுக-வை விரும்பாத நடுநிலைவாக்காளர்களின் வாக்குகளை இதுவரை பெற்று வந்த விஜயகாந்த், 41+4 என்ற அளவில் அதிமுக கூட்டணியில் அடமானமாகிவிட்ட நிலையில், நடுநிலைவாக்காளர்களின் வாக்குகளை ஏன் நீங்கள் குறிவைக்கக்கூடாது.
மீண்டும் கலைஞர் அழைக்கிறார் என்று அங்கே போய் கூட்டத்தோடு கூட்டமாய், ,மீண்டும் புளிச்சாதம் சாப்பிட போய்விடாதீர்கள்.(அப்புறம் உங்களுக்கும் அரசியல் வியாபாரி ராமதாசுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்) அப்படி போனால் உங்களிடமிருந்து பிரிந்து போய் திமுக-வில் ஐக்கியமான மு.கண்ணப்பன் உள்ளிட்ட பலருக்கு நீங்களே வாக்கு கேட்டு போகவேண்டிய நிலை வந்துவிடும்.(நீங்கள் தன்மானக்காரர் வேறு)
ஆகவே தமிழனத்தை வஞ்சம் செய்த காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டுவதற்காவது, அதிமுக, திமுக என தயிர்சாதம், புளிச்சாதம்
வாங்கி திங்காமல் நீங்கள் வேங்கையென நிரூபியுங்கள்.
டிஸ்கி:
பேருந்து பயணத்தின் போது புலம்பிய ஒரு தமிழனின் குரல் பகிர்தலுக்காக..
32 கருத்துரைகள்:
நல்ல அறிவுரை; இந்த அரசியலை நோக்கும் நாம் முதலில் தயிர் சாதம் சாப்பிடவதை நிறுத்த வேண்டும் போல.
இப்படி உசுப்பி உசுப்பியே நம்மள ரண களம் ஆக்கரதுல இவங்களுக்கு எல்லாம் எம்புட்டு சந்தோசம்!
- இப்படிக்கு ...கோ!
உங்கள் கட்டுரைகளில் ஆகச்சிறந்த கட்டுரை..
என் சல்யூட்...
இவர் முன்னமே விஜயகாந்த் மற்றும் கம்மியூனிஷ்டை ஒன்றிணைத்து முயற்சி செய்திருக்கலாம்!
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
அப்போ வைகோ என்ன கறி சோறு திங்கறவரா?ஹி ஹி சும்மா தமாசுக்கு...
அதிமுக வுக்கு எதிராக இவரது கட்சித் தொண்டர்கள் செயல் படப் போவதாக செய்தியில் பார்த்தேன்...
நண்பரே!
வைகோ-வை தேர்தலை சந்திக்க சொல்கிறீர்களே அவருக்கு எத்தனை பேர் ஓட்டுப்போட தயாராக இருக்கிறார்கள்(நம்மை போன்றோரை தவிர) மக்கள் இன்று அவரை பார்த்து அனுதாபத்தை வீசலாம். ஆனால் தேர்தல் தேதி நெருங்கிய உடன் எவன் கொடுக்கிறானோ அவனுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். ஏன்னா தமிழனுக்கு நன்றி உணர்வு சாஸ்தி.
இந்த நிலையில் அவர் எடுத்த முடிவு சரியே!
/////
இனி நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில், எல்லாம் இழந்து நிற்கும் தமிழர்களுக்காக ஏன் நீங்கள் போரிடக்கூடாது?////
வார்த்தையில் ஜாலம் காட்டும் வைகோ போன்றோர் மேடையேறி உரையாற்ற வேண்டும்...
வைகோவிற்கு உண்மையில் என்ன தான் ஆயிற்று..
மணமகள் தேவை உதவ முடியுமா..
விவரம் அறிய கவிதை வீதி வாங்க...
http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_22.html
நல்ல அறிவுரை....
Forwarded to VAIKO!
ஆனால் கோடை காலத்தில் தயிர் சாதம் தான் உடலுக்கு நல்லது!!
கன்டிப்பாக காங்கிரசை எதிர்த்து அவர் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பமும்...
ஆனால் இன்றும் என்றும் நீங்கள் நல்ல பேச்சாளர்தானே?//
இந்தியாவின் சிறந்த பார்லிமெண்டேரியன்
அருமையான கருத்துள்ள வரிகள்
பல வலைப் பதிவர்கள் எழுதுவதைப் போல வைகோ ஒன்றும் புலி கிடையாது.புலி வேஷம் போடுபவர்.அவ்வளவுதான்.மதிமுகவில் தொண்டர்களே கிடையாது.ஆரம்பத்தில் இவரை நம்பி வந்த பலரும் வெளியேறிவிட்டனர்.கஷ்டப்படாமல் கூட்டணி நிழலிலேயே ஓட்டலாம் என்று பார்த்தார்.ஜெயலலிதாவுக்கு இவரைப் பற்றி தெரியாதா என்ன?ஓட்டிவிட்டார்.தனியே நிற்கவும் முடியவில்லை.
அருமையான பதிவு! பார்க்காலாம்...
ஒரு தமிழனின் குரலல்ல!தமிழ்நாட்டின் குரல்!
மிகச் சரியான அறிவுரை. இவர் ஏன் எப்போதும் தவறான முடிவுகளையே எடுக்கிறார்?
இன்னும் கெட்டுப் போய்விடவில்லை. பி.ஜே.பி (செலவுக்காக), கார்த்திக் இவர்களுடன் சேர்ந்து காங்கிரசை கருவறுப்பதில் தவறில்லை.
வை.கோபால்சாமி - இனியாவது 'வாய்ச் சொல வீரத்தை செயலில் காட்டுங்கள்'. இல்லையேல் நீங்களும் 'பொய்யகோ' கவிதைகள் எழுதும் இன்னொரு 'டாக்டர் கயவர்'தான்.
என்னளவில், என் மனதில் இதுதான் உங்களுக்கான கடைசி வாய்ப்பு.
----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -மார்ச் '2011)
//வைகோ, சீமான். நாஞ்சில் சம்பத். நெடுமாறன் என நீங்கள் ஒருங்கிணைத்து குரல் கொடுத்தால், 63 தொகுதிகளில் காங்கிரஸ் நடுநடுங்காதா?
அங்கீகாரம் பெறுவதற்கு 21 தொகுதிகளை கேட்கிறீர்கள். இங்கே 63 தொகுதிகள் உங்களுக்காக காத்திருப்பதை ஏன் மறந்து விட்டீர்கள்?//
சூப்பர் ஐடியாவா இருக்கே வைகோ சிந்திப்பாரா...?
வைகோ அவர்களை நாம் என்ன செய்ய சொல்லுகிறோமோ (காங்கிரஸை ஒழித்து கட்டுவது) அதை நாம் நம்முடைய ஒவ்வொரு இடுகையிலும் சொல்லுவோம் இந்த தேர்தல் முடியும் வரை.
அருமை
இதையும் பாருங்க
கவுண்டமணியின் சில மணியோசைகள்
//நடுநிலைவாக்காளர்களின் வாக்குகளை ஏன் நீங்கள் குறிவைக்கக்கூடாது.//
அது எப்போதுதான் அவருக்கு புரியப்போகிறதோ..
வைகோ வும் சராசரி அரசியில்வாதியே. இலங்கை தமிழர்கள் நலனுக்காக பேசினால் மட்டும் நல்ல
அரசியல்வாதி ஆக முடியாது. வைகோ எதற்காக ம தி மு க ஆரம்பித்தார்? அப்போது எத்தனை
தொண்டர்கள் தீ குளித்தார்கள் என்று தெரியுமா? பின்பு மீண்டும் தி மு க வுடன் கூட்டணி வைத்தார்.
அப்போது கலைஞர் வைகோவை பார்த்து கூறிய வசனம் உங்களுக்கு நினைவிருக்கிகறத ா??
"தம்பி நான் உன்னை பிரிந்தேனா காலம் நம்மை பிரித்ததா". அப்போது வை கோ கலைஞரை பார்த்து
அழ , கருணாநிதி அழ நாடகம் நடை பெற்றது. பின்பு தி மு க வை விட்டு பிரிந்து
தனியே நின்றார். எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார் . இலங்கை தமிழருக்காக பேசிய போது
ஜெயலலிதா POTA சட்டத்தில் வைகோவை சிறைக்கு அனுப்பினார். பின்பு எல்லாவற்றையும் மறந்து
அ தி மு க விடம் கூட்டணி சேர்ந்தார். இப்போது ஜெயலலிதா 32 தொகுதிகளை தரவில்லை என்பதற்காக
கூட்டணியில் இருந்து மீண்டும் பிரிந்து விட்டார்.
வை கோ விற்கு என்ன கொள்கை இருக்கிறது?? சிந்தியுங்கள்??
என்னை பொறுத்த வரை வைகோ வும் RAMDOSS போல தான், சந்தர்ப்ப வாத அரசியல் வாதி.
அண்ணா.தி.மு.க-கூட்டணியிலிருந்து தன்மானமில்லையென்று ம.தி.மு.க-விலகியுள்ளது பற்றித்தான் கடந்த மூன்று நாட்களாக பேச்சு. வைகோவின் தன்மானத்தை கொஞ்சம் திரும்பி பார்ப்போமா?
கடந்த 1993-ஆம் ஆண்டு தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வைகோ......கட்சியையும், கொடியையும் கைப்பற்றும் முயற்சில் இறங்கி தோல்விகண்டு பின்னர் மறுமலர்ச்சி(?) தி.மு.க.-வை நிறுவினர். அன்று அவரோடு தோள்கொடுத்த பலர் இன்று அவருடன் இல்லை என்பது வேறுவிஷயம்.
அப்போது ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவை எதிர்த்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், கோவை, சேலம் வழியாக, 1500 கிலோமீட்டர் தொலைவு 51 நாள்கள், பல்லாயிரக்கணக்கான தோழர்களுடன் செருப்புதேய, கால்கடுக்க நடைப்பயணம் சென்றார். நீண்ட தூரம் நடந்ததால் காலில் ஏற்பட்டிருந்த கொப்புளங்களுக்கு 1998 - ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் களிம்பு வாங்கி பூசி ரணத்தை ஆற்றினார்....
அப்போது எங்கே போயிருந்தது இவரின் தன்மானம்?
அதன் பிறகு மத்தியில் அமைந்திருந்த பா.ஜ.க- கூட்டணி ஆட்சியிலிருந்து ஜெயலலிதா வாபஸ் வாங்கியவுடன் அந்த கூட்டணிக்கு தன் பரம எதிரியான தி.மு.க. வந்து சேர்ந்தது. அப்போதும் இந்த தன்மான புலி அந்த கூட்டணில் தொடர்ந்தார். அதன் பிறகு 1999-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.கூட்டணியிலேயே நீடித்தார்
எந்த கட்சியால் கொலைப்பழி சுமத்தி நீக்கப்பட்டாரோ....
எந்த கட்சிக்கு எதிராக நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர் உயிரை மாய்த்துகொண்டார்களோ...அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது நெருடலாக தெரியவில்லை இவருக்கு.....அப்போது எங்கே போனதாம் இவரின் தன்மானம்?
அதன்பிறகு 2001 சட்டசபை தேர்தலில் ஒரு சில சீட் பிரச்சினைக்காக தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியாகி தனித்து போட்டியிட்டு டெபாசிட் இழந்த போது இவருடன் இருந்த தன்மானம், மீண்டும் தி.மு.க-கூட்டணில் சேர்ந்து 2004 நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோது எங்கே போயிற்று?
பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதா அரசு இவரை கைது செய்தது. ஓரிரு மாதத்தில் வெளியேறி பாசிச ஜெயலலிதாவை ஆட்சியிலிருந்து அகற்றுவேன் என்று கூறிய வைகோ....கலைஞரிடம் 23 தொகுதிகள் கேட்டு, கலைஞர் 22 தொகுதிகள் தர முன்வந்தும் ஒரே ஒரு தொகுதிக்காக, நாங்கள் ஒ பாசிடிவ் ரத்தம் போன்றவர்கள் யாருடனும் கூட்டு சேருவோம் என்று கூறிவிட்டு தி.மு.க கூட்டணியிலிருந்து விலகும் போது இவருடன் இருந்தது தன்மானமா? சீட் பேரமா?
முதல்நாள் வரை பாசிசஜெயலலிதா என்று கூறிவிட்டு அடுத்த நாள் அன்பு சகோதரி என்று பாசமழை பொழிந்து 35 சீட் வாங்கிய போது எங்கே போச்சாம் இவரின் தன்மானம்.
அட போங்க சார்....தன்மானமாவது...புடலங்காயாவது...அரசியல் செய்ய அந்த எலவுலாம் எதுக்கு?.
புலியென இருந்த உங்களை அஞ்சு வருடமாக தயிர்சாதம் தின்ன வைத்து, மியாவ், மியாவ் என்று கத்த வைத்துவிட்டார்களே...//
அவரும் தான் என்ன செய்வார் பாவம் !
குறைந்தபட்சம் காங்கிரஸை காலி செய்யவாவது நீங்கள் களம் காணக்கூடாதா?
வைகோ, சீமான். நாஞ்சில் சம்பத். நெடுமாறன் என நீங்கள் ஒருங்கிணைத்து குரல் கொடுத்தால், 63 தொகுதிகளில் காங்கிரஸ் நடுநடுங்காதா?
super idia
காலையிலேயே போடவேண்டிய பின்னூட்டம் தாமதமாக.....
சீட்டுகளுக்கும் பின் புலமாக இறுதிவரை வை.கோ வை காக்க வைத்ததின் முடிச்சை வை.கோ இமயம் தொலைக்காட்சியில் சொன்னது உட்பட யாரும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியவில்லை.
மன்மோகன் சிங்குடன் கூட நட்பு பாராட்டும் வை.கோ காங்கிரஸ்க்கு எதிரான பிரச்சாரத்தில் அதுவும் தற்போதைய சூழலில் நுழைவார் என்பது நடக்க இயலாத ஒன்று.அவரது நோக்கம் தி.மு.க சார்ந்த ஒன்றே.
துவக்கம் முதலே சொல்லி வருகிறேன்.ஈழம் குறித்த அக்கறை எல்லோரிடமும் இருக்கிறது.ஆனால் ஒன்று படுதலில் தங்கள் சுயநலங்களையே அனைவரும் முன்வைக்கிறார்கள்.
ஈழம் குறித்த வை.கோவின் உணர்ச்சி வயப்படுதல் உண்மையாக இருந்தாலும் மற்றவர்களுடன் இணைந்து செயல்படாத தன்மையையே இவரிடமும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறேன்.
தேர்தலில் நிற்க கட்சிக்குப் பணமில்லையென்ற வை.கோ வின் ஒப்புதல் இந்திய ஜனநாயக வியாபாரத்தை வெளிச்சம் போட்டுக்காண்பிக்கிறது.தற்போதைய துறவறம் அவருக்கும் அவரது கட்சிக்கும் வருங்காலத்தில் புதிய பாதையை திறக்கட்டும்.
//அதிமுக, திமுக என தயிர்சாதம், புளிச்சாதம்
வாங்கி திங்காமல் நீங்கள் வேங்கையென நிரூபியுங்கள்.//
ம்க்கும்... இதை இவர் என்ன நிரூபிக்கிறது
அம்மா ஆட்சிக்கு வந்ததும் பொடா தடா ன்னு உள்ள தள்ளூம், அப்ப வாரத்திற்கு 4 நாள் களியும் மூணு நாள் கறிச்சோறும் சாப்பிடத்தான் போறாரு அதனால இப்ப அவர் சாப்பிட்ட தயிர் சோறு புளிச்சோறு பத்தி கோபப்படாதிங்க
அன்பின் பாரதி
ஆதங்கம் புரிகிறது. முடிவெடுக்க இயலாத நிலையில் இருக்கிறார். சற்றே ஓய்வெடுத்து மீண்டும் வரட்டும். என்ன செய்வது ....
அன்பின் பாரதி
ஆதங்கம் புரிகிறது. முடிவெடுக்க இயலாத நிலையில் இருக்கிறார். சற்றே ஓய்வெடுத்து மீண்டும் வரட்டும். என்ன செய்வது ....
கடைசி வரை காக்க வைத்து, அவருக்கு பத்துக்கு மேல் தேறாது என்று சொல்லிய விதம் சகோதரிக்கு புதிதல்ல. அவர் கோபம் ஒரு விதத்தில் நியாயமானதே.
ஆனால், ஒரு விஷயத்தை பதிவர்கள் சரியாக கோடிட்டு காண்பிக்கவில்லை: இலங்கை தமிழர்கள் குறித்து தமிழகத்திலும், பிறகு இந்திய அரசிடமும் சரியான கருத்து உருவாக ஒருவரும்- ரிபீட்டு- ஒருவரும் ஒன்றும் செய்ய வில்லை.
thamizh நாட்டிற்குள்ளேயே இலங்கை பிரச்னையை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் இருபது-இருபத்தைந்து சதவீதம் இருக்கலாம்; அவர்களிலும்,
- ராஜீவ் காந்தி மரணம்
- புலிகள் இலங்கை தமிழர்களின் ஒரு பகுதியின் நலத்தையே பேசுகிறார்கள்;
- புலிகள் பிற தமிழ் குழுக்களை களைந்து கொடி நாட்டியவர்கள்
- இந்திய இறையாண்மை; இலங்கை இறையாண்மை;
- புலிகள் தங்கள் கொள்கையை விளக்கி இந்திய அரசின் துணையை ஒரு போதும் நாட வில்லை;
- இலங்கை முஸ்லீம்களை இரக்கம் இல்லாமல் அழித்தவர்கள் (மசூதியில் தொழுது கொண்டு இருந்தவர்களை குண்டு போட்டு தாக்கியது)
- போரில் தம் நிலை பலமில்லை என்று சரியாக மதிப்பிடாமல் அல்லது தெரிந்த பின்னும் போரைத் தொடர்ந்து அப்பாவி மக்களை காவு கொடுத்தார்கள்
என்ற பல கோணங்கள் உள்ளன; இது தமிழர்கள் இடையே மட்டுமே உலவும் கருத்துக்கள் என வெவ்வேறு பதிவுகளில் கண்டிருக்கிறேன். இவற்றில் எது பெரும்பாலும் சரி அல்லது பெரும்பாலும் தவறு என்று நான் என் மதிப்பீட்டை வழங்கவில்லை.
வைகோவும், நெடுமாறனும், சீமானும், அப்போதப்போது கனைக்கும் தொல் திருமா போன்றவர்களும் பல சுதிகளில், வெவ்வேறு பாடல்களை கத்திக் கொண்டு (cacophony) இருந்தார்களே தவிர, செயல் முறையில் பலன் அளிக்கும் வகையில் ஒன்றும் செய்யவில்லை.
எனவே வைகோ காங்கிரசை தோற்கடிக்கிறேன் என்று இலங்கை தமிழர்கள் பெயர் சொல்லி எத்தனை தொகுதிகளில் டெபாசிட் தக்க வைத்துக் கொள்ள முடியும்?
Post a Comment