கட்டத்துரை விஜயகாந்தும், கைப்புள்ள வடிவேலுவும் - அன்றைய அலப்பறை.

 
 ஒரு காமெடியனை ஹீரோவாகும் முயற்சியா இல்லை ஒரு ஹீரோவை காமெடியனாக்கும் முயற்சியா என இதுவரை அந்த அலப்பறைக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

திருவாரூரில் நடைப்பெற்ற திமுகவின் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டத்தில் பேசிய வடிவேலு, ஆரம்பத்தில் ஆளுங்கட்சியின் திட்டங்கள் பற்றி பேசிய போது சாதாரணமாகத்தான் இருந்தது.

இப்ப நான் மேட்டருக்கு வரேன் என விஜயகாந்த் பற்றி ஆரம்பித்த
கொஞ்சநேரத்தில், திமுக தலைமை அவரை எப்படி பயன்படுத்த இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமானது.

தியாகங்கள் எதுவுமே செய்யாமல், நேற்று  கட்சி தொடங்கி , (அந்த கட்சி பேரு என்ன?  நாக்கமூக்கவா?) இன்று தேர்தலை சந்தித்து, நாளை ஆட்சியைப்பிடித்து முதல்வர் ஆகிவிடுவேன் என்று  நினைக்கிறார் விஜயகாந்த் என்று ஆரம்பித்த வடிவேலு அதன்பிறகு பேசியதெல்லாம் ஏகவசனம் தான்.

"தண்ணிய போட்டா நீ என்ன வேணா பேசலாமா?
நீ முதல்வர்னா நான் பிரதமர்... நீ பிரதமர்னா நான் ஜனாதிபதி
நீ பிரதமர்னா நான் ஒபாமா"
என  வடிவேலு அள்ளி வீச, முதல்வர், ஸ்டாலின், அழகிரி உள்பட எல்லோரும் சிரித்தனர். சினிமாக்காரங்களே ஆகாது-னு சொன்ன நம்ம ராமதாஸ் கூட சிரிச்சுட்டார்னா பாத்துக்கோங்களேன்...
(நல்லவேள நீ ஒபாமா-னா நான் பின்லேடன் அப்படினு சொல்லல... )  

தண்ணில போற கப்பல் இருக்கறவனுக்கு பேரு கேப்டன்-னு பேரு..
எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டனா?

இது வடிவேலு சொன்னதன் ஹைலைட்.

தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தை நடைப்பெற்று கொண்டிருந்தபோது, வெளியே காத்திருந்த நிருபர்கள் கேட்டா, முதல் ரவுண்டு, இரண்டாவது ரவுண்டு அப்படினு அடுக்கிட்டே போனாங்க... கடைசியா ஒன்பதாவது ரவுண்ட் முடிஞ்சதுக்கு பின்னாடி மொத்தமா ஃபிளாட்-னு சொன்னாங்க.. இது தான் நீ பேச்சுவார்த்தை நடத்துற லட்சணமா?

ஒன்ணரை ரூபாய்க்கு கண்ணாடி வாங்கி போட்டுட்டு, இரண்டரை ரூபாய்க்கு தொப்பிய வாங்கி போட்டுட்டா நீயெல்லாம் எம்ஜியாரா? இதுல கறுப்பு எம்ஜியாருனு பேரு வேற...

நான் கறுப்பு நேரு-னு  சொல்லிட்டு போயி சீட்டு கேட்டா சோனியா அம்மா சீட்டு குடுக்குமா?


41 சீட்டை வெச்சிட்டு எப்படி நீ முதலமைச்சர் ஆக முடியும்???

இதெல்லாம் வடிவேலு, வெடிவேலுவாய் மாறி  கேட்ட கேள்விகள்..
                           


திருவாரூர் கூட்டத்தில் வடிவேலு களமிறக்கப்பட்டதன் பின்ணணி:
* தனது சொந்த பிரச்சனையின் போது, தமிழகத்தில் எங்கே போட்டியிட்டாலும் விஜயகாந்தை எதிர்த்து களமிறங்குவேன் என சொல்லியிருந்த வடிவேலுவை எல்லா தொகுதிகளிலும் பயன்படுத்துவதுதான் திமுகவின் திட்டம்.

*தன் மதுரைக்கார பேச்சால் விஜயகாந்தின் வண்டவாளங்களை, மேடையில் ஏற்றுவது தான் வடிவேலுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட்.

*விஜயகாந்திற்கு அதிகம் செல்வாக்கு இருப்பதாக கருதப்படும் தென்மாவட்டங்களில், வடிவேலு மூலம் விஜயகாந்தை டேமேஜ் செய்வது தான் அழகிரியின் திட்டம்.

* நீ, வா, போ என்பது ஒரு கட்டத்தில் லூசு என நீண்டது வடிவேலுவின் அரசியல் பரிமாணத்தின் வளர்ச்சியோ?

*தமிழக அரசியல் மேடைகளில்  அடுத்த எஸ்.எஸ்.சந்திரனாகவோ அல்லது வெற்றி கொண்டானாகவோ இனிவரும் நாட்களில் வடிவேலுவை காணலாம்.

*அரசியல் மேடைகளில் தனிமனித தாக்குதல் சரியா, நாகரீகமா என
கேள்வி எழுப்புபவர்கள் அன்று மேடையில் இருந்தவர்களை விட கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாக இருந்தால் மட்டும் பின்னூட்டதில் ருத்ர தாண்டவம் ஆடலாம். மற்றவர்கள் கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனத்தை சொல்லி ஆறுதல் பெற்றுக்கொள்ளவும்.

*அதெல்லாம் சரிங்க, தன்னை கறுப்பு எம்ஜியார் அப்படினு சொல்லிக்கொள்ளும்  விஜயகாந்துடன், , எம்ஜியார் ஆரம்பித்த கட்சியை நடத்துபவர்கள் கூட்டணி வைத்திருப்பது என்ன லாஜிக்? (விஜயகாந்த் ,கறுப்பு எம்ஜியார் என்பதை ஒத்துக்கொள்கிறதா அதிமுக?)
      

25 கருத்துரைகள்:

MANO நாஞ்சில் மனோ said...

வடை....

MANO நாஞ்சில் மனோ said...

//விஜயகாந்த் ,கறுப்பு எம்ஜியார் என்பதை ஒத்துக்கொள்கிறதா அதிமுக?)//

ஒருவேளை அப்பிடியும் இருக்குமோ...??? ஒருவேளை இப்பிடியும் இருக்குமோ...???

MANO நாஞ்சில் மனோ said...

என்னதான் சொல்லுங்க இனி வடிவேலு'வுக்கு சினிமா கேரியர் அவுட் என்பதே உண்மை. உதாரணம் எஸ் எஸ் சந்திரன்.....

Chitra said...

தன் மதுரைக்கார பேச்சால் விஜயகாந்தின் வண்டவாளங்களை, மேடையில் ஏற்றுவது தான் வடிவேலுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட்.


.... ஒரு நல்ல காமெடி ரோல் கிடைச்சிடுச்சுனு சொல்லுங்க.... ஹா,ஹா,ஹா,ஹா...

ராஜ நடராஜன் said...

பாவம் கைப்புள்ள.

Jainadhiya said...

"ஒளிய தெரியாதவன் தலையாணி வீட்ல ஒளிஞ்ச கதை அகிடுச்சே என் பொழப்பு"

இத ஒரு படத்துல அவரே சொல்லுவாரு...

சி.பி.செந்தில்குமார் said...

ஆனா கேப்டன் 15 வருடங்களுக்குள் சி எம் ஆவது திண்ணம்

செங்கோவி said...

//தன்னை கறுப்பு எம்ஜியார் அப்படினு சொல்லிக்கொள்ளும் விஜயகாந்துடன், , எம்ஜியார் ஆரம்பித்த கட்சியை நடத்துபவர்கள் கூட்டணி வைத்திருப்பது என்ன லாஜிக்?// இது கேள்வி!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஒன்ணரை ரூபாய்க்கு கண்ணாடி வாங்கி போட்டுட்டு, இரண்டரை ரூபாய்க்கு தொப்பிய வாங்கி போட்டுட்டா நீயெல்லாம் எம்ஜியாரா? இதுல கறுப்பு எம்ஜியாருனு பேரு வேற...ஃஃஃஃ

அட இப்புடி வேற சொல்லறாங்களா ? அனால் ஒன்று நடிகர்மாருக்கு ஏற்ற முதல் தொழில் அரசியல் தான்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

வடிவேலு இப்படிப்பேசியிருப்பது மிகவும் கேவலமான ஒரு எடுத்துக்காட்டு என்னதான் எதிரியாக இருந்தாலும் மேடை நாகரீகம் இன்றி பேசுபவர்கள் தண்டிக்கப்படக்கூடியவர்கள்..!

:(

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தியாகங்கள் எதுவுமே செய்யாமல், நேற்று கட்சி தொடங்கி , (அந்த கட்சி பேரு என்ன? நாக்கமூக்கவா?) இன்று தேர்தலை சந்தித்து, நாளை ஆட்சியைப்பிடித்து முதல்வர் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறார் விஜயகாந்த் என்று ஆரம்பித்த வடிவேலு அதன்பிறகு பேசியதெல்லாம் ஏகவசனம் தான்.

பார்த்தேன் பார்த்தேன்! அம்புட்டு ஆவேசமா பேசினாரு! விட்டாக்கா கேப்டன குத்தி கிழிச்சுடுவார் போல! இம்புட்டுக்கும் காரணம் என்ன?

வடிவேலுக்கும் யாராவது " ஊத்தி " கொடுத்தாங்களா? ( கலைஞரா? )

சக்தி கல்வி மையம் said...

present.,

sulthanonline said...

//கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனத்தை சொல்லி ஆறுதல் பெற்றுக்கொள்ளவும்.//


ஓகே தல. அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா..!

ELANGOVAN said...

@சி.பி.செந்தில்குமார்//
ஆனா கேப்டன் 15 வருடங்களுக்குள் சி எம் ஆவது திண்ணம்//

அடுத்த முதல்வர் இப்ப 15 வருஷம் ஆயிட்ச்ச! அப்பாட ஒரு 15 வருஷம் தபிசொம்ட!!! அப்ப 15 வருஷத்துல வடிவேலு பிரதமர்!

Unknown said...

தேர்தலில் மார்க்கெட் போனால்தானே அரசியலுக்கு வருவார்கள். இவர் ஏன் அரசியலுக்கு வந்து மார்கெட் போகனும்னு நினைக்கிறார்?

Unknown said...

(விஜயகாந்த் ,கறுப்பு எம்ஜியார் என்பதை ஒத்துக்கொள்கிறதா அதிமுக?)

இதத்தானங்க வடிவேலுவும் முன்னமே கேட்டாரு, ஒருவகையில வடிவேலு பேசறதும் சரிதான், விஜயகாந்த் மட்டும் மத்தவங்கள தாறுமாறா பேசலையா என்ன? அவரு மத்தவங்கள பேசும்போது மட்டும் குளுகுளுன்னு இருக்குமா? அரசியலுன்னு வந்துட்டா எல்லா கருமத்தையும் கேட்டுதான் ஆகணும், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

பாட்டு ரசிகன் said...

சினிமாவில் தான் அடித்துக் கொள்கிறார்கள் என்று நினைத்தால் அது அரசியலிலும் தொடர்கிறது..
என்ன கொடுமை..

சசிகுமார் said...

வடிவேலுவின் பேச்சில் நாகரிகமற்ற வார்த்தைகள் இதெல்லாம் வடிவேலுக்கு தான் பிரச்சினையை தரும்.

Ponchandar said...

வடை, போண்டா என ஒற்றைச் சொற்களிலில் வரிசையாக வரும் பின்னூட்டங்களை படிக்க எரிச்சலாக உள்ளது...ஒரு சில நல்ல பின்னூட்டங்களை படிக்காமல் திரும்பிவிடுகிறேன்.......

Anonymous said...

5 லட்சம் ரூபாய்க்கு இது கூட வடிவேல் உரையாற்றலைன்னா எப்படி..?

Anonymous said...

செம பதிவு

Anonymous said...

பதிவு ஒரே மப்பா இருக்கு

நாஞ்சில் பிரதாப் said...

வடிவேலு ஒரு முட்டாள், ஒரு காமெடிபீசு என்பது முன்பே தெரிந்தவிசயம்.
பகுத்தறிவு பேசும் தலைவர் கூட்டத்துக்கு வரும்போது பகுத்தறிவை வீட்டுல வச்சுட்டு வந்துட்டாரா. அதை ரசித்து சிரித்த மற்ற மானங்ககெட்டவர்களை பற்றி ஏன் எதுவும் எழுதவில்லை.

Prakash said...

Before commenting on Vadiavelu, Pls check how Vijaykath speaks in meetings. For Vijaykath, this type of counter speech is required.

ஒருவகையில வடிவேலு பேசறதும் சரிதான், விஜயகாந்த் மட்டும் மத்தவங்கள தாறுமாறா பேசலையா என்ன? அவரு மத்தவங்கள பேசும்போது மட்டும் குளுகுளுன்னு இருக்குமா?

Unknown said...

உங்க கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருந்தா அவங் எப்படி தேர்தல் வேலைய பாக்குறது ஹிஹி!

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்