சினிமா நடிகர், நடிகைகள் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்கிறேன் என்ற பேரில் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு தீனியாகி கொண்டிருக்கிறார்கள். (2011 நமக்குத்தான் என்றதன் அர்த்தம் இது தானோ?)
திருவாரூர் திமுக பொதுக்கூட்டத்தில் மொக்க சாமி வடிவேலு
ஏகத்துக்கு வம்பு பேசி, வழக்கு கண்ட மாவீரனாகவும் மாறியாச்சு, தன் பிரச்சாரத்தால், தமிழன்னையை பீதிக்குள்ளாக்கிய "அவதாரபுருஷி" குஷ்பும் வழக்கு வாங்கியாச்சு.
அகில உலக சுனாமி சூப்பர் ஸ்டார், ஜே.கே. ரீத்தீஷ் கூட, வழக்கு வாங்கி, களி திங்கவும் போயாச்சு.
இப்போது நமது விஜயகாந்த் அவர்களும் தனது கட்சி வேட்பாளரிடம், தன்னுடைய ஹீரோயிச வித்தையை காட்டியிருக்கிறார்.
இதன் நேரடிக்காட்சிகள், இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்ற பில்டப் ஏதுமின்றி , இப்போதைய (29-03-11 இரவு பத்து மணி) மக்கள் செய்திகளில், ஒளிபரப்பானது. (இதே வீடியோ சன் டிவிக்கு கிடைத்திருந்தால், சாமியாருக்கு கிடா வெட்டியது போல, பொங்க வைத்திருப்பார்கள்)
இன்றைய பிரச்சாரத்தின் போது, தன்னுடைய தேமுதிக தர்மபுரி வேட்பாளரை சரமாரியாக விஜயகாந்த் அடித்த காட்சிகளை பார்க்கும் போது உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருக்கிறது. (இந்த காட்சிகளின் உண்மைத்தன்மையை இனி தான் வெளிப்படுத்த வேண்டும்)
குடி போதையில் விஜயகாந்த் இவ்வாறு வேட்பாளரை அடித்ததாக மக்கள் செய்திகளில் சொன்னார்கள்.
அதிமுக மற்றும் விஜய் ரசிகர் மன்ற கொடியை, விஜயகாந்த் இறக்கச்சொல்லும் காட்சியையும் மக்கள் தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது.
விஜயகாந்த் கொங்கு என்பதை நொங்கு என கிண்டலடித்தது, பாமக வின் போராட்டங்களை கிண்டலடித்தது ஏற்கனவே பிரச்சனையை கிளப்பியுள்ள நேரத்தில், வேட்பாளரை விஜயகாந்த் அடித்த விஷயத்தை, அவரும், அதிமுகவும் எப்படி கையாளப் போகிறார்கள், என்பது தெரியவில்லை. (இவரு அதிரடியில் அம்மாவை மிஞ்சி விடுவார் போல)
சினிமாவில் , சுவற்றில் கால்வைத்து, சுழற்றி சுழற்றி அடிக்கும் அண்ணன் விஜயகாந்த், நிஜத்தில் தன் பிரச்சார வேனுக்குள் வைத்து அடித்தது சொந்த கட்சியின் "புள்ள பூச்சியை" என்பதால் வழக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
29 கருத்துரைகள்:
வடை எனக்கே...
அடபாவி இப்பிடி வேற நடந்துருச்சா அடடடா...
super clippings. dont miss. now Kalaignar tv layum.
பேசும்போது குறுக்கே பேசினால் யாருக்குத்தான் கோபம் வராது? மக்கள் டிவி, இவர் ஒரு அடி அடித்ததை திருப்பித் திருப்பி காட்டினார்கள். காடு வெட்டி குரு மட்டும் என்னவாம்?
வணக்கம் சகோ, தமிழகத்திலிருந்து அதிரடிச் செய்தியினைத் தந்திருக்கிறீர்கள்.
இந்த நிலையிலை போனால், விஜயகாந்தின் அரசியல் வாழ்வு என்னாகும்?
அதுவும் பொது மக்களின் மத்தியிலை எப்படி விகேப் பண்ணுவது என்று கப்டனுக்கு தெரியாது?
இவரெல்லாம் மந்திரியாகி என்ன பண்ணப் போறாரு!
வாழ்க ஜனநாயகம்.
அடடா அப்போ கேப்டனை உண்மையிலேயே காஷ்மீருக்கு அனுப்பி வெச்சிருக்கலாமோ?
என்னதான் நடக்குது? ஒண்ணும் புரியல! :-(
நிதானம் இல்லாத மனுசன்!
கறுப்பு எம்ஜியார்ன்னா, எம்ஜியார் மாதிரியே அடிச்சிடலாமா என்ன?
வீடியோவை பார்த்து அதிர்ச்சி ஆனதுதான் மிச்சம்.
உண்மை தான். விசயகாந்த் தனது கட்சியினரை பொது இடங்களில் வைத்து நாகரீகம் இன்றி கேவலமாக திட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஒருவரை இப்படி தான் விசயகாந்த் கண்டபடி திட்டி அடித்து விட்டார். ஒரு மருத்தவரான அவர் அடுத்தநாளே தேமுதிகவில் இருந்து விலகிவிட்டார். அந்த சம்பவத்தை நிருபர்கள் நேரில் பார்க்கமுடிந்ததே தவிர புகைபடம், ஒளிபடம் எடுக்க முடியவில்லை.
நடுநிலை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவ&மாணவியர் பலர் விசயகாந்த் ஒரு மாற்று சக்தி என்ற நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தனர். ஆனால் விசயகாந்தால் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை மது குடிக்காமல் இருக்க முடியாது என்ற உண்மை பலரிடமும் வெறுப்பை தேடி தந்துள்ளது.
நாகரீகம் அற்ற குடிகாரர் பின்னால் சென்ற தேமுதிகவினரின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
Funny!!!
http://www.tamiltodaynow.in/2011/03/blog-post_5263.html
காபி அடித்து விட்டார்கள்
இதுமட்டுமா இன்னும் எத்தனை காட்சிகளைக் காணப்போகிறோம்?
நல்லவனா நடிக்கக் கூடவா தெரியாது ஒரு நடிகனுக்கு
காரணம் எதுவாக இருந்தாலும் இப்படி நடந்து கொண்டது தவறு. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு முக்கியத்தேவை பொறுமை...
///அகில உலக சுனாமி சூப்பர் ஸ்டார், ஜே.கே. ரீத்தீஷ் கூட, வழக்கு வாங்கி, களி திங்கவும் போயாச்சு.///
அதெல்லாம் பழைய காலத்துல இப்ப நம்ப தலீவரு வாரம் ரெண்டு முறை சிக்கன் போட சொல்லி இருக்காரே எதுக்காக இது போல் நிறைய உடன்பிறப்புகள் அடுத்த ஆட்சியில் செல்ல வேண்டி இருக்கும் என்பதால் தான்.
நிதானம் தவறிய செயல்..
பிரதீபா சொன்ன ப்ளாகிலும் இதே செய்தி???
விஜயகாந்த் மன்னிப்பு கேட்பாரா அல்லது பாஸ்கரே நான் தான் அடிக்கச் சொன்னேன் என்று சொல்லப் போகிறாரா?!!!!
ஹா ஹா ஹா செம காமெடி சீன் அது, வேட்பாளாரு பேர கூட ஒழுங்கா சொல்ல முடியல, இவனெல்லாம் தலைவரு, ஞாயப்படி பார்த்தா வேட்பாளருதான் இவன போட்டு அடிக்கனும்...
இதையும் சினிமா என்று நினைச்சுட்டார் போல விடுங்க
விஜயகாந்தின் செயல் ஏதோ அரசியல் ஸ்டண்ட் மாதிரிதான் எனக்கு தோன்றுகிறது.
துவக்கத்தில் அ.தி.மு.க கூட்டணி தேவையென்று நினைத்திருந்தாலும் பின் ஜெயலலிதாவின் தன்னிச்சையான செயல்களில் முக்கியமாக விஜயகாந்த் தொகுதிக்கு பிரச்சாரமில்லையென்பதும் இருவரும் தனித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
அதோடு கூட அழகிரியின் உள்குத்து வேலைகளும் கூட நமக்கெல்லாம் தெரியாமல் சீன் போடுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.
பெயர் மாற்றிச் சொன்னதுக்கு ஒருவரை அடிப்பதென்பது பரம்பரை குடிகாரர் கூட செய்ய மாட்டார்.
ஒருவேளை உண்மையாகவே நிதானம் தவறி இருந்தால் விஜயகாந்த்தின் அரசியல் இனி கேள்விக்குறியே!
உண்மையான உள்வேலைகள் என்னவாக இருக்க கூடும் என்று கண்டு பிடிப்பது இனி உங்க பொறுப்பு:)
ரைட் ரைட்
//பேசும்போது குறுக்கே பேசினால் யாருக்குத்தான் கோபம் வராது//
அனானி அன்னி .. குறுக்கே பேசல.. ! கேப்டன் மப்புல வேட்பாளர் பெயரை தப்ப சொன்னாரு.. அதை திருத்த வேட்பாளர் முயற்சி பண்ணாரு.. அப்போ தான் அடி விழுந்தது.. வேட்பாளர் பெயர் பாஸ்கர், இந்த மப்பு பார்ட்டி பாண்டியன் நு ரெண்டு தடவை சொல்லிச்சு.. சொந்த கட்சி வேட்பாளர் பெயர் கூட தெரியல இந்த சரக்கு சாமிக்கு
வடிவேலு கல்யாணத்துல தங்க சொம்பு கேட்ட ஜோக் பார்த்து இருக்கீர்களா ? அது தான் இது. மைக் வேலை செய்யவில்லை. அதை சரி செய்யும் படி வீசி எறிந்திருக்கிறார். அவ்வளவுதான். சந்தேகம் இருந்தா இந்து பேப்பர் படிங்க.
குத்துங்க கேப்டன்..குத்துங்க..இவனுக எப்பவும் இப்படித்தான்!
தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்ட போது அவர் கூறிய தாவது:-
தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார். மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்த போது பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார்.
ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். நான் கட்சி துண்டை கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. எனது வெற்றியை தடுக்க இது போன்ற ஒரு பிரசாரத்தை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
http://thatstamil.oneindia.in/news/2011/03/30/vijayakanth-defends-his-action-against-candidate-aid0136.html
விஜயகாந்த் கூறுகையில், "நான் வேட்பாளரை அடித்ததாக தொலைக் காட்சியில் செய்தி வெளியிடுகின்றனர். அட ஆமாய்யா, அடிச்சேன். என் ஆளைத்தானே அடித்தேன். என்னைப்பற்றி என் கட்சிகாரர்களுக்குத்தான் தெரியும்.
இது தான் தேர்தல் களம்.
சின்னக் கவுண்டர் வழங்கும் ரோஷக்காரன் தா.பா. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_30.html
Post a Comment