ஜெயலலிதா செய்தது அரசியல் நாகரீகமா?-கலைஞருக்காக வீரமணி கேள்வி.

தமிழக தேர்தல் களத்தில், அனல் பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதா அவர்களை, கண்டித்து தமிழகத்தின் "எச்சரிக்கை மணி" திரு.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:
  
காலம் காலமாக தமிழக அரசியல் ஏன் இந்திய அரசியலில் மற்ற தலைவர்களுக்கு எல்லா விஷயங்களிலும் உதாரணமாக திகழ்ந்து வரும் கலைஞர், கடிதம் எழுதுவதில் உலக அரசியலில் முன்னோடியாக உயர்ந்து விட்ட சூழலில், இந்த அம்மையாரும் கடிதம் எழுத தொடங்கியிருப்பது நியாயமா? முறையா? சரியா?

முன்பு ஒரு முறை மன்மோகன் சிங், தன்னுடைய அமைச்சரவை சகாவாகிய சரத்பவாருக்கு கடிதம் எழுதிய போதே, அதை வன்மையாக கண்டித்து, திமுக  கூட்டணியிலிருந்து விலகவும், மத்திய அரசிலிருந்து வெளியேறவும் முடிவெடுத்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை ஏற்படுத்திய, தன்மானகாவலர்கள் நாங்கள். எங்களுடன் மோத வேண்டாம் என எச்சரிக்கிறேன்.

அரசியல் கடிதம் எழுதுவதில் ஐ.எஸ்.ஓ. 2012 தரச்சான்றிதழை பெறுவதற்காக, நானும், துரைமுருகனும் வியன்னாவிற்கு பயணப்பட்ட இந்த நேரத்தில் ஜெயலலிதா செய்திருப்பது அரசியல் அநாகரீகமான செயல் என்பதை ஒட்டுமொத்த தமிழினமும் கண்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

வைகோ யார்? ஐந்தாண்டு காலமும் உங்கள் கூட்டணியின் நிழலிலே இளைப்பாறியவர் தானே. நீங்கள் சொல்லியனுப்பினால் நேரிலே வந்து உங்கள் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ள மாட்டாரா?

அலைப்பேசியில் ஒரு "செல்வி அழைப்பு" (மிஸ் கால்) கொடுத்திருந்தால் கூட போதுமே, அப்படி செய்யாமல் ஜெயலலிதா கடிதம் எழுதியது, இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்பதை அரசியல் வல்லுநர்கள் எடுத்துரைத்துள்ளனர். எங்கள்
அன்பு கம்பி ஆ.ராசா அனைவரிடமும் அலைப்பேசி இருக்கவேண்டும் என்றும் அரும்பாடுபட்டதை ஜெயலலிதா இழிவு செய்தது சரியா என தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.


டிஸ்கி:

திரு. வீரமணி அவர்கள் அறிக்கையை தயாரித்து கொண்டிருக்கும் போதே, நம்முடைய காமெடி குண்டர்கள் அதனை பிடிங்கி வந்து விட்டதால், அறிக்கையின் முதல் பகுதியை மட்டுமே இங்கே வெளியிட்டுள்ளோம். மீதியை நீங்களே கற்பனை செய்துக்கொள்ளவும்.


அண்மைச்செய்தி:

அதிமுக-வின் புதிய வேட்பாளர் பட்டியல் :ஜெயலலிதா

**************************************************************

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்




snapjudge.wordpress.com

16 கருத்துரைகள்:

Anonymous said...

சுயமரியாதையும், தன்மானமும் பெரிது எனக்கூறி வெளியேறிய வைகோ வை பாராட்டலாம்.

இதையொட்டிய பதிவு:

அதிமுக குருவி;வைகோ என்ற துறவி

தமிழ் 007 said...

வைகோ வஞ்சிக்கப்பட்டார் அவ்வளவுதான்.

வேற என்ன சொல்ல!

வைகை said...

அலைப்பேசியில் ஒரு "செல்வி அழைப்பு" (மிஸ் கால்) கொடுத்திருந்தால் கூட போதுமே//

இது புதுசா இருக்கே? அப்ப இதுவும் ஜெயா அழைப்புதானா? ( செல்வி ஜெயா)

வைகை said...

இந்த அம்மையாரும் கடிதம் எழுத தொடங்கியிருப்பது நியாயமா? முறையா? சரியா?///

அதானே? காப்பி ரைட் ஐயாகிட்ட இருக்கும்போது அம்மா எப்பிடி அனுமதி இல்லாமல் எழுதலாம்?

வைகை said...

அன்பு கம்பி ஆ.ராசா அனைவரிடமும் அலைப்பேசி இருக்கவேண்டும் //

இன்னுமா எண்ணி முடிக்கல?

சென்னை பித்தன் said...

கடிதம் எழுதுவது ஒரு தொற்று வியாதியாகி விட்டது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அரசியல் கடிதம் எழுதுவதில் ஐ.எஸ்.ஓ. 2012 தரச்சான்றிதழை பெறுவதற்காக, நானும், துரைமுருகனும் வியன்னாவிற்கு பயணப்பட்ட இந்த நேரத்தில் ஜெயலலிதா செய்திருப்பது அரசியல் அநாகரீகமான செயல் என்பதை ஒட்டுமொத்த தமிழினமும் கண்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

நக்கல் நையாண்டியுடன் உண்மையும் கலந்து..........!

MANO நாஞ்சில் மனோ said...

//அன்பு கம்பி ஆ.ராசா அனைவரிடமும் அலைப்பேசி இருக்கவேண்டும் என்றும் அரும்பாடுபட்டதை ஜெயலலிதா இழிவு செய்தது சரியா என தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

சக்தி கல்வி மையம் said...

வை.கோ... நிலைதான் பாவம்..
ஆனால் அவர் யானை அல்ல குதிரை என நிருபிக்க வேண்டும்..

சி.பி.செந்தில்குமார் said...

அரசியல்ல நாகரீகம் என்பது காமராஜர் காலத்தோடு சரி

Anonymous said...

அரசியல் நாகரீகம் பேசற மூஞ்சிய பாரு

சக்தி கல்வி மையம் said...

இதுதான் அரசியல்...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/2_21.html

middleclassmadhavi said...

'முக்கியச் செய்தி- வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்!'
கேப்டன் டிவியில்...

ரஹீம் கஸ்ஸாலி said...

அட.....என்ன நீங்களும் அரசியல் பதிவுல இறங்கிட்டீங்க

arasan said...

அந்த அறிக்கை வாழ்துகிறதா

இல்லை தூற்றுகிறதா \>>>\

இப்பவே கண்ணை கட்டுதே ...

ரொம்ப ரசிதேனுங்க

அஹோரி said...

வீரமணியே ஒரு காமெடி பீசு .. அதுக்கெல்லாம் ஒரு பின்னூட்டம் போடா வேண்டி இருக்கு. தூக்கி குப்பதொட்டில போடுங்க ...

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்