ஏமாற்றாதே... ஏமாறாதே.... எம்.பிரியங்கா. 12-A

   
காம்பு பூக்களை நம்புகிறது! ஆனால்
பூக்கள் உதிர்ந்து    ஏமாற்றுகிறது.

கிளைகள் இலைகளை நம்புகிறது! ஆனால்
இலைகள் உதிர்ந்து ஏமாற்றுகிறது!

மனிதன் இதய துடிப்பை நம்புகிறான்; ஆனால்
இதயமும் ஒரு நாள் நின்று விடுகிறது..

-எம்.பிரியங்கா..
பன்னிரெண்டாம் வகுப்பு அ பிரிவு...

இன்றைய தகவல்:

இந்தியாவில்  8 பேரில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு ஆள்பட்டுள்ளனர். உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது.
(இனிக்கற  சக்கர, கசக்கிற செய்தி...
மக்களே ஹெல்த்த "ரைஸ்" பண்ணுங்க...)

இன்றைய கருத்து:

 
இலக்கியத்தில் எதிர்பார்க்கக் கூடிய ஒரே பரிசு, தோற்றால் கேலியும், ஜெயித்தால் பொறாமையும்...
- வால்டேர்.

இன்றைய கேள்வி...
(தெரிந்து கொள்வதற்காக கேட்கிறோம்).

வழக்குரைஞர் என்பதற்கும் வழக்கறிஞர் என்பதற்கும் என்ன வேறுபாடு?


தட்ஸ் ஆல் ; யுவர் ஹானர்...

24 கருத்துரைகள்:

ம.தி.சுதா said...

நல்லாக வந்திருக்கு அதிலும் இந்த வரிகள் இன்னும் அருமை...

ஃஃஃஃஃஃஇலக்கியத்தில் எதிர்பார்க்கக் கூடிய ஒரே பரிசு, தோற்றால் கேலியும், ஜெயித்தால் பொறாமையும்...
- வால்டேர்.ஃஃஃஃஃ

ம.தி.சுதா said...

அட எனக்குத் தன் சுடு சோறு ...

Unknown said...

வழக்கமா சாப்பிட்டு வந்து தானே, பின்னூட்டத்தில பின்னுவீங்க....
நன்றி..

Unknown said...

தினேஷ்: ஏமாற்றம்.
ம.தி.சுதா: முன்னேற்றம்..

Riyas said...

உங்கள் தளத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.. நல்லாயிருக்கு

அப்படியே பின் தொடர்ந்தும்விட்டேன்

Unknown said...

சென்ற பதிவு எங்களுடைய 75 வது பதிவு..

அன்பு காட்டி, ஆதரவு, பின்னூட்டம், வாக்கு அளித்த அனைவருக்கும் நன்றி...

எண்ணிக்கையை மறந்தாலும், நன்றி மறக்க மாட்டோம்...

Unknown said...

//உங்கள் தளத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.. நல்லாயிருக்கு

அப்படியே பின் தொடர்ந்தும்விட்டேன்//
நன்றி ரியாஸ் ...
தொடர்ந்து வாங்க...

பவள சங்கரி said...

நல்லாயிருக்கு கவிதை. வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

உங்கள்தளத்திற்கு இன்றுதான் வந்தேன்.
நல்லா இருக்கு.

வினோ said...

கவிதை அருமை... வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
தினேஷ்: ஏமாற்றம்.
ம.தி.சுதா: முன்னேற்றம்..

கொஞ்சம் வேலைல இருந்துட்டேன் மன்னிப்பு கேட்க்க மாட்டேன் என்றும் நட்பை மறக்க மாட்டேன்

ம.தி.சுதா said...

dineshkumar said...
வாங்க செர்ந்தே சாப்பிடுவோம்...

தினேஷ்குமார் said...

இனி நம்பி வீன்போகவேண்டாம்

பூக்களை நம்புவதோடு காம்பு கிளைகளை நம்பலாம்
இலைகளை நம்புவதோடு கிளைகள் மர வேர்களை நம்பலாம்
இதய துடிப்பை நம்புவதோடு மனிதன் நம்பிக்கையை நம்பலாம் தன்னம்பிக்கையை

தினேஷ்குமார் said...

ம.தி.சுதா said...
dineshkumar said...
வாங்க செர்ந்தே சாப்பிடுவோம்...

சுடுசோரும் பகிர்ந்தளித்த நண்பா இனி சேர்ந்தே உண்ணுவோம்

தினேஷ்குமார் said...

பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

வழக்குரைஞர் சூனியர்
வழக்கறிஞர் சீனியர்

எனக்கு தெரிந்த்தது இவ்வளவுதான் சாமி
முன்ன பின்ன வாய்தா வாங்கி இருந்தா தெரிஞ்சிருக்குமோ என்னமோ

அன்புடன் மலிக்கா said...

காம்பு பூக்களை நம்புகிறது! ஆனால்
பூக்கள் உதிர்ந்து ஏமாற்றுகிறது.//

அப்பூ உதிர்ந்தால்தான்
மறுப்பூ பூக்க இயலும்
இது இயற்க்கை

//கிளைகள் இலைகளை நம்புகிறது! ஆனால்
இலைகள் உதிர்ந்து ஏமாற்றுகிறது!//

அவ்விலைகள் உதிர்ந்தால்தான்
வேறிலைகள் உருவாகும்.
அதுவும் இயற்க்கை.

//மனிதன் இதய துடிப்பை நம்புகிறான்; ஆனால்
இதயமும் ஒரு நாள் நின்று விடுகிறது.//

நம்பவேண்டியவை
நம்ப மறுத்து
நம்மக்கூடாததை
நம்பித் தொலைக்கிறோம்.
அதனால்தான்
இதயம்கூட
இயங்க மறுத்துவிடுகிறது
இதுவும் இயற்கைதான்

என்ன சரியா சீமாட்டி..

ஆனாலும் கவிதை அருமை.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை
ஏமாற்றுபவர்கள் அதிகரிப்பார்கள்..
இது இயற்கையல்ல..
இதில் வேடிக்கையெனெவெனில் அறிவுடையோர்களே அதிகம் ஏமாறுவதும் ஏமாற்றுவதும்.

ஆமினா said...

அழகான கவிதை

என்னது? சந்தேகமா? இருங்க போன் வருது பேசிட்டு வரேன் (எஸ்கேப்பூ...)

Dhanalakshmi said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்றுதான் உங்கள் பதிவை படித்தேன் மிகவும் அருமை.........

எஸ்.கே said...

வித்தியாசமான சிந்தனை! வாழ்த்துக்கள்!

அந்நியன் 2 said...

//அவ்விலைகள் உதிர்ந்தால்தான்
வேறிலைகள் உருவாகும்.
அதுவும் இயற்க்கை//

இலைகள் உதிர்வது வேருவின் உரத்திர்க்காக......மறு இல்லை முளைப்பது இயற்க்கை.

இன்றைய கேள்வி...
(தெரிந்து கொள்வதற்காக கேட்கிறோம்).

வழக்குரைஞர் என்பதற்கும் வழக்கறிஞர் என்பதற்கும் என்ன வேறுபாடு?

ஒரே ஒரு எழுத்துதான் வேறுபாடு (கு) (க)

அந்நியன் 2

ஆமினா said...

//ஒரே ஒரு எழுத்துதான் வேறுபாடு (கு) (க)//

கடமையை மறந்து ஜோக் அடிச்சா அந்நியன் சட்டத்தில் என்ன தண்டனை?

:))

கோலா பூரி. said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

Unknown said...

இது கொஞ்சம் நல்லாருக்கு ...

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்