B.நந்தினி - பிளஸ் டூ மாணவியுடன் ஒரு சந்திப்பு.


பெயர் & வகுப்பு : B.நந்தினி 12-1 

செல்லப்பெயர் : நந்து. 

பொழுது போக்கு : வகுப்பறை நினைவுகள், கவிதை எழுதுதல். 

பிடித்த விஷயங்கள்: இயற்கை, புதிய  புத்தக வாசம், அழகான பூக்கள். 

பிடித்த புத்தகம்: ஜெயகாந்தன் எழுதிய அனைத்தும். 

பிடித்த பாடல்: காற்றே பூங்காற்றே ஒரு கவிதை... 

பிடித்த தமிழ் வரிகள் :"மாய்ந்து போன இதயங்களுக்கு உயிரூட்டுபவள் பெண்" 

பிடித்த தோழிகள்: தனிமைக்கு ஈடான தோழியை கண்டதில்லை. 

எதிரிகள்: எனக்கு நானே.
எதிர்கால லட்சியம்
எனது தேவைகளுக்கு மற்றவர்களை நாடாதிருத்தல். 


பிளஸ் டூ-வில் லட்சியம்: எனது திறமைகளை உலகிற்கு உணர்த்த வேண்டும். 

சமீபத்திய சந்தோஷம்: என் இயற்பியல் மதிப்பெண்னை கண்டு மகிழ்ந்தேன். 

சமீபத்திய வருத்தம்: என்னை மற்றவர்கள் புரிந்துக் கொள்ளாதிருத்தல். 

வாழ்க்கை என்பது: அனுபவம்.( வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும். 

வகுப்பறை என்பது: நான் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளும் சொர்க்கம். 

உங்களிடம் உங்களுக்கு பிடித்தது: நான் ஒரு போதும் எனக்கு பிடித்தவர்களை ஏமாற்ற மாட்டேன். 

உங்களிடம் உங்களுக்கு பிடிக்காதது: ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத மனம், பயம். 

உங்களைப் பற்றி ஒரு வரி: நான் நானாக இருப்பேன். யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்.

15 கருத்துரைகள்:

Unknown said...

இது குழந்தைகள் தின சிறப்புப் பேட்டி..

இந்த மாணவிக்கு நாளை 14-11-2010 பிறந்த நாள் என்பது இன்னுமொரு சிறப்பு.

தமிழ் அமுதன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

அருண் பிரசாத் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

All the Best For your Future....

யதார்த்தமான பதில்கள்

அருண் பிரசாத் said...

@ பாரத்...பாரதி...

கேள்விகள் சாதாரணமாக இருப்பது போல ஒரு உணர்வு (slam book questions)

உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்

Unknown said...

நன்றிகள் அருண் பிரசாத், தங்களின் வருகையை பெருமிதமாக கருதுகிறோம்.. தொடர்ந்து வழிகாட்டவும்.

//உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்//
நன்றிகள். முயற்சிக்கிறோம்..

Unknown said...

வாழ்த்திய தமிழ் அமுதன் அவர்களுக்கு நன்றிகள்..

அந்நியன் 2 said...

பாராட்டுக்கள் !

கேள்வி கேட்ட விதமும், அதற்க்கு பதில் அளித்த விதமும்.

நிறைய தடைகளைத் தாண்டி வலையுலகத்திற்கு வந்திருக்கிறோம்.உங்கள்வாழ்த்துக்கள் எங்களுக்கு பூஸ்ட்.

இதற்க்கு விளக்கம் அளிக்கவும்.

அந்நியன் :

நிலாமதி said...

நந்தினிக்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

இலங்கையில் இருந்து யாதவன் . . .

தினேஷ்குமார் said...

நந்தினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

அனைவர் மனதையும் அறிந்து நடந்துகொள்ளும் ரோசாப்பூந்தோட்டமே

பதிவுலகில்
தனிவுலகாம்
தமிழுலகு
தரணியெல்லாம்
வலம்வரட்டும்
எப்போதும்..........

நேற்று பறித்த
முல்லை
வாடிவிடும்
இன்று
இன்று கொய்த
ரோசா உதிர்ந்துவிடும்
காலை
நாளை மலரும்
வாழ்வு நகைத்து
மலரட்டும் என்றும்...........

ஹரிஸ் Harish said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்து...!


கேள்விகள் சாதாரணமாக இருப்பது போல ஒரு உணர்வு//

ஆனால் பதில்கள் அருமை..

அன்பரசன் said...

//உங்களைப் பற்றி ஒரு வரி: நான் நானாக இருப்பேன். யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்.//

ஓகே.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Unknown said...

beiated birthday wishes dear Nandhini. u r very clear in ur views

by
Leela Maheshwari
Chemistry miss

Unknown said...

அன்பின் நந்து,

வாழ்வின் லட்சியங்களை சந்தர்ப்பங்கள் மாற்றிவிடும். எனவே சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நடந்து கொள்வது எப்படி என ஆராயுங்கள். இதுதான் ஐ.ஏ.எஸ், எம்.பி.ஏ போன்ற துறைகளுக்கு தேவைப்படும் அடிப்படை பயிற்சியும் கூட. தொலைநோக்குள்ள லட்சியங்களை உங்களுக்குள் உருவாக்கி கொள்ளுங்கள். அதாவது இன்னும் பத்து வருடங்கள் கழித்து நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என. ஆனால் அதனை யாரிடத்தும் சொல்லாது. அதனை ஒரு புராஜெக்டாக எடுத்துக்கொண்டு அதற்கான ஆலோசனைகளை தேடுங்கள். உங்களை எப்போதும் முன்னிலைபடுத்தாதீர்கள். இதனால்தான் யாரும் ஏன் என்னைப்பற்றி புரிந்து கொள்ளவில்லை என வருத்தப்படும் விசயம் உங்களுக்கு நிகழ்ந்து இருக்கிறது.

உங்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருப்பதை உங்கள் எழுத்து எனக்கு உணர்த்துகிறது. ஜெயகாந்தனை பிடிக்கும் என்று சொல்கிறபோதே நீங்கள் எப்படிபட்டவர் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் இந்த வயது வாழ்க்கையை உணர்வுபூர்வமாக பார்க்கும் வயதல்ல. அறிவுப் பூர்வமாய் அணுகும் வயது. எனவே உங்கள் கேள்விகளை முதலில் உங்களுக்குள் கேட்க பழகுங்கள். விவாதங்களை நண்பர்களுடன் ஏற்ப்படுத்தி சரியான கருத்தை யார் தெரிவித்தாலும் பாராட்டுங்கள். முக்கியமாக யார் குறைகளையும் மற்றவர்களிடம் பகிரவே கூடாது. அதனை அவர்களிடத்து மட்டும் பேசி தெளிவாகுங்கள். நிறைய வாசியுங்கள் ...

உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....

All the best...

இராஜராஜேஸ்வரி said...

அனுபவம்.( வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும். //
அனுவமே வாழ்க்கை. வாழ்ந்து பார்க்க வேண்டும்.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்