அறை எண் 15.
என் அன்பு சாம்ராஜ்யம்.
வகுப்புவாரி பிரிவினை பார்க்காமல்
அங்கிருக்கும்
77 பேரும் எம் மக்கள்..
இது என் உலகம்.
நானே வடிவமைத்த
சின்னஞ்சிறு சொர்க்கம்.
நேரம் ஒதுக்கி
நேசம் குழைத்து
நானே வடிவமைத்த
சின்னஞ்சிறு மனிதர்களுக்கான
கனவுலகம்.
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் புன்னகை
என்று எனக்குத் தெரிந்த
பாஷையில்
அன்பு பகிர்ந்த இடம்.
இது எனக்கான உலகம்.
எனக்கான வரம்புகள் ஏராளம்
என்பதால்
பாசத்தை மறைத்தே
வைத்த இடம்.
இங்குள்ள சிறிய மனிதர்களை
வெறும் புத்தக புழுவாக
மாற்றாமல்
யதார்த்தையும்
பயின்றுவித்திருக்கிறேன்.
தங்கம் எனக்கு வேண்டாம்;
என நான் மறுத்ததால்
தங்கப்புதையலை எனக்கு
பரிசளிக்க காத்திருக்கிறார்கள்.
எனக்கு மதிப்பெண் மூலம்
மதிப்பளிக்க
காத்திருக்கிறார்கள்.
என்னிடமிருந்து
எட்டி போகும்
இவர்கள்;
ஜெயிக்க
வாழ்த்து சொல்லும் நேரம் இது.
பரீட்சைக்கு மட்டுமல்ல
வாழ்க்கையிலும்
என் மக்கள்
ஜெயிக்க...
"இறைவன் அருள்
துணை நிற்க"
வாழ்த்தி சந்தோஷிக்கும்...
- தாயுமானவன்.
********************************************************************************
இன்று தனித்திருப்பவன்.
தம் மக்களை தேர்வு களத்திற்கு அனுப்பிவிட்டு
தனித்திருப்பவனின் வீதி வழி உலா வந்ததற்கு நன்றிகள்.
அடைக்கும் தாழ் தாண்டி மெல்லிய மௌனம் கசிந்திருப்பதை கணிக்க இயலாதவர்க்கு இது வெற்று வார்த்தைகளின் கோர்வையாக இருக்கலாம்.
எல்லாவற்றையும் எல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு தானே. எனினும் ஒரு சிலரேனும் புரிந்துக்கொள்ளக்கூடும் மக்களற்ற தனிமையின் வலியை.
29 கருத்துரைகள்:
முதல் இடம்
நானும் பிரார்த்திக்கின்றேன்
உங்களின் வலியின் வலிமை எங்களுக்கு புரிகிறது.
தென்னைங்கீற்று வீழ்வது வளர்ச்சிக்காகத்தான்.
உங்களின் நிழல் வேண்டி இன்னும் நிறைய தென்னங்கீற்றுகள் காத்திருக்கின்றன.
Varigal Anaithum Arumai...! Vaazhthukkal.
அருமையான வரிகள்
தூக்கி விடும் ஆசான் ஏணிப்படிகள்!
ஆனால், உங்கள் வலியை உணர முடிகிறது. என் பிரார்த்தனைகளும்...
Good Post....
அதே மன நிலையுடன் தான் நானும் தவித்துக் கொண்டு வருகிறேன்..
போர்களம் அனுப்பிவிட்டு அடுப்படியில் அழுகின்ற அன்னையைப் போல்...
எனக்குள்ளும் ஒரு தவிப்பு..
ஓ.. மொட்டுக்களே..
மலர்ந்து விட்டு மனம் வீசுங்கள்..
நாளை உலகம் உங்களை சுவாசிக்கட்டும்..
வாழ்த்துக்கள்..
best of luck..
NICE.... HEART TOUCHED
வாழ்த்துகள்!
நெகிழ்ச்சி!
தங்கம் எனக்கு வேண்டாம்;
என நான் மறுத்ததால்
தங்கப்புதையலை எனக்கு
பரிசளிக்க காத்திருக்கிறார்கள்.//
வைரப்புதையலே கொண்டுவர வாழ்த்துக்கள்!
/எனக்கான வரம்புகள் ஏராளம்
என்பதால்
பாசத்தை மறைத்தே
வைத்த இடம்.//
அருமையான வரிகள்
நானும் பிரார்த்திக்கின்றேன்
வாழ்த்துக்கள்..
அனைவருக்கும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...
:)
வணக்கம் சகோதரம், முதலில் இன்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு - அவர்கள் அனைவரும் நல்ல பெறுபேற்றினைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், உங்களின் கவிதையில் வேர் விட்ட ஓர் விழுதின் முதிர்ச்சியும் கிளைகளைத் தாங்கும் பக்குவமும் புலப்படுகிறது.
>>>>வாழ்க்கையிலும்
என் மக்கள்
ஜெயிக்க...
"இறைவன் அருள்
துணை நிற்க"
வாழ்த்துக்கள்
எல்லோரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நானே வடிவமைத்த
சின்னஞ்சிறு சொர்க்கம்.
நேரம் ஒதுக்கி
நேசம் குழைத்து
நானே வடிவமைத்த
சின்னஞ்சிறு மனிதர்களுக்கான
கனவுலகம்.
.....ஒவ்வொரு ஆசிரியரும் இப்படி அன்போடு மாணவர்களை நல்லபடியாக வழிநடத்தி, உருவாக்க பிரார்த்திக்கிறேன். உங்களின் தொண்டு என்றும் சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
உங்களின் வலி புரிகிறது, பரவாயில்லை அடுத்த புது மாணவர்களுக்காக உங்களை நீங்களே புதுப்பியுங்கள், வழக்கத்திற்கு மாறாக பாடங்களை எவ்வாறு புதுவிதமாக கற்றுக்கொடுக்கலாம் என சிந்தியுங்கள், அதற்கான நேரமாக எடுத்து கொள்ளுங்கள்...
வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள்...
இதெல்லாம் இப்போ வெளில சொல்லாதீங்க தல..குழந்தைங்க ஃபீல் ஆகி பரிட்சைக்கு ஜூட் விட்றப் போகுது!
எல்லோருக்கும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களும் . ... பாராட்டுகளும்
பரீட்சைக்கு மட்டுமல்ல
வாழ்க்கையிலும்
என் மக்கள்
ஜெயிக்க...
"இறைவன் அருள்
துணை நிற்க"
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!.
ungal pothanaiyaal
engal vizhli thiranthu,
vaalkaiel olithantha,
ungal pathangalai,
vanagigrom.....
ungal,
Manavi Sudha..
Post a Comment