நான் விண்வெளியில் மிதந்துக் கொண்டுருந்தேன். ஆச்சர்யமாக அனைத்தையும் பார்த்து மகிழ்ந்து, நிலவில் திடீரென பறக்கும் தட்டுக்கள் என்னை சூழ்ந்துக் கொண்டன.
அதிலிருந்து ஏலியன்ஸ், அதாங்க
வேற்றுகிரக வாசிகள் இறங்கினர். உயரமாக இரு கொம்புகளுடன், பெரிய கண்களும் , பருமனான உடலும் கொண்டு வினோதமாக இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் காலையில் சாப்பிட்ட உப்புமா ஜீரணமாக மறுத்தது.
என் கண்கள் இமைக்க மறுத்தன. ஆச்சர்யமாக அவர்களைப் பார்க்க, அதைத் தாண்டி, மண்டைக்குள் "எச்சரிக்கை பல்ப்" எரிந்தது. பின்பு நான் எதிர்பார்த்த அது சுலபமாய் நடந்தேறியது. அவர்கள் என்னை சிறைப் பிடித்து, அவர்களின் அரசனிடம் அழைத்துச் சென்றனர், இல்லையில்லை பிடித்துச்சென்றனர்.
அரசன் வழவழப்பான உடலும்,ஒளிரும் கொம்புகளுடனும் இருந்தான். அவனை நான் உற்றுப்பார்க்க, பார்க்க எனக்கும் கொம்பு முளைப்பது போன்று இருந்தது.
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அரசனின் இரு கரங்கள், நான்காக மாறியது. ஒன்றில் லேசர் துப்பாக்கி நிமிர்ந்தது. எனக்கு கண்கள் கூசியது.
கூசும் அந்த வெளிச்சத்தில், எனக்கு இருட்டிக்கொண்டு வந்தது, இருப்பினும் யாரோ மெல்லியதாய் என் பேர் சொல்லி அழைத்ததுப் போன்றிருந்தது.
"ஸ்டெல்லா.... ஏஏ...ஸ்டெல்லா..."
"எந்திரி,எந்திரி... நா(ன்) பாடம் நடத்துறது உனக்கு தாலாட்டு பாடறது மாதிரி இருக்கா...
மத்தியானம் பிஸிக்ஸ் கிளாஸ் வெக்கக்கூடாதுனா கேக்கறாங்களா...
"ஆ.. பிஸிக்ஸ் மிஸ்...."
அப்புறம் என்ன, எனக்கு எல்லாமே பிச்சுகிச்சு....
வி.ஸ்டெல்லா.
பன்னிரெண்டாம் வகுப்பு அ1 பிரிவு.
படம்:
mujeebu.blogspot.com
20 கருத்துரைகள்:
ஹய்யா வட எனக்கு
நல்ல கற்பனை.. பாராட்டுக்கள்...
//ஹய்யா வட எனக்கு//
வட, பாயாசம் எல்லாம் உங்களுக்கு தான்....
சாப்பிட்டு (மறக்காமல்) கை கழுவிவிட்டு, பின்னூட்டமும் , ஓட்டும் தருக..
தினேஷ் குமார், செந்தில் சார் அவர்களுக்கும்
மிக்க நன்றிகள்..
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது..
//நல்ல கற்பனை..//
ஒரு வேளை உண்மையாக கூட இருக்கலாம்.
நல்ல கன...
படம் கலக்கலா இருக்கு மேட்டர் இன்னும் சூப்பர்
கற்பனை என்றாலும் நல்லாருக்கு
:-))
கனவுலகும் கற்பனையா
நல்ல கனவு
பாராட்டுக்கள் ஸ்டெல்லா
கற்பனை என்றாலும் நன்றாக உள்ளது.
எது எப்படியோ...நடப்பவை நல்லதாகவே நடக்கட்டும்,இதுலே குறுக்கே நந்தி மாதுரி நான் நிற்க்க விரும்பலை.
நீங்கள் கண்ணாமூச்சி விளையாடுங்கள்.பள்ளிப் பருவக் குசும்புகளை எந்தக் கொம்பனாலையும் வெல்ல முடியாது.
அதுக்காக படிக்கும் பள்ளிக் கூடத்தில் போயி கனவு கண்டீர்களே..இதுலாம் ரொம்ப ஓவரு.சின்னபுள்ளைத் தனமாவுலே இருக்கு.
அந்நியன் 2
ஆஹா சூப்பரு
வாழ்த்துகள் நல்லா முயற்சிகள்
தொடர்க !
கற்பனை கலந்ததுதான் கனவு.
மிக அருமை பாராட்டுக்கள்..
தொடர்பதிவு எழுதிவிட்டேன் கீழே உள்ள லிங்கில் பார்க்கவும்
http://kuttisuvarkkam.blogspot.com/2010/11/blog-post_23.html
உண்மைலேயே அருமையான கற்பனைங்க..!!
அதிலும் நடை அருமையா இருக்கு .. அவுங்க என்ன அழித்து சென்றாங்க அப்படின்னு சொல்லிட்டு இல்லை இல்லை இழுத்து சென்றாங்க அப்படின்னு சொன்னது அருமை .. அதே மாதிரி அந்த லேசர் துப்பாக்கி இன்னும் நிறைய மொத்ததுல ரொம்ப நல்லா இருக்கு ..!!
நான் ஒரு பெண்
http://maattru.blogspot.com/2010/11/blog-post_23.html
ஹாஹாஹா க்ளாசில் தூங்கிட்டு அதை சூப்பரா பதிவா வேறயா.. நடத்துங்க,,:))
Post a Comment